Thursday, July 21, 2011

சங்கதிகள் - 21 ஜூலை 2011

கல்வி 

சமச்சீர் கல்வி பற்றி எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிற இந்த சமயத்தில் CBSE கல்வி பற்றி யாருமே பேசாதது வருத்தம் அளிக்கிறது. கரூரில் இருக்கும் என்னோட தங்கச்சி பையன் முதலில் மெட்ரிகில் தான் படித்தான் சமச்சீர் கல்வி பற்றி செய்தி வந்த போது அவனை CBSE பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். முதலில் சேர்ந்த பள்ளியை விட்டுவிட்டு இப்போது புதியதாக அங்கு கிளையை பரப்பி இருக்கும் வேலம்மாள்  பள்ளியில் சேர்த்து விட்டார்கள். அவன் படிப்பது இரண்டாவது அதற்கே அவர்கள் அரை லட்சத்திற்கு செலவு செய்துவிட்டார்கள். கடந்த இரண்டு வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் CBSE கல்வி நிலையமாக மாற்ற விண்ணப்பித்து உள்ளார்கள் என்பது செய்தி. ஒரு கதவு மூடினால் என்ன இன்னொரு கதவு மூலமாக வெளியே சென்று விடலாமே.



மே மாதத்தில் கரூர் சென்றிருந்த போது லோக்கல் சேனலில் முக்கால் வாசி பள்ளிகள் தங்கள் கல்வி நிலையத்தை பற்றி பெருமையாக பேசி விளம்பரம் செய்து கொண்டு இருந்தது. இதற்கென்று ரோஸ் பவுடர் போட்ட அழகிகள் நிறைய பேரை இறக்குமதி செய்திருந்தார்கள்.  கரூரில் இருந்து கோவை வரும் வழியில் வெள்ளகோவில், காங்கேயம், பல்லடம் போன்ற இடங்களில் பெரிய பெரிய டிஜிட்டல் பேனரில் தங்கள் பள்ளி பற்றி விளம்பரம் செய்திருந்தார்கள். வெள்ளகோவில் பேருந்து நிறுத்தத்தில் தங்கள் பள்ளியில் படித்த மாணவன் IAS பரிச்சையில் வென்றதை கூட விளம்பரம் செய்தது எல்லாம் ரொம்பவே ஓவர்.  நகரம் என்று சொல்லுவதற்கு அப்படி ஏதும் இல்லை என்றாலும் கல்வியை காசாக மாற்றும் வித்தையில் சென்னையை விட தென் மாவட்டம் முன்னேறி கொண்டு தான் இருக்கிறது.



புத்தகம் 

மொழிபெயர்ப்பு புத்தகங்களை படிப்பதற்கு ரொம்பவே மெனகெட வேண்டியதாக இருக்கிறது. அதும் மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்படும் புத்தகங்கள் மலையாளத்தில் எப்படி எழுதி இருக்கோ அதை தமிழில் எழுதி இருக்கிறார்கள். 

குளச்சல் மு. யூசுப் அவர்கள்  வைக்கம் முகம்மது  பஷீர்  அவர்களின் புத்தகங்களை மொழிபெயர்த்து இருக்கிறார் அதில் ஒன்று எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது.  புத்தகத்தின் தலைப்பை வைத்தே ரொம்ப நேரம் யோசித்து கொண்டு இருந்தேன்,  உப்பப்பா என்றால் என்ன உறவுமுறையில் வருகிறது?? தமிழில் ஏதேனும் உள்ளதா என்று தேடினேன் ஒன்றும் கிடைக்கவில்லை. தலைப்பே இப்படி என்றால் உள்ளே?? இதே போல இருக்கிறது, மலையாளத்தில் உள்ளதை தமிழ் மாற்றி எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் முழுக்க முழுக்க இஸ்லாமிய சமுதாயத்தை பின்னணியாக வைத்து எழுதப்பட்டு இருக்கிறது. இருபத்தி ஐந்து பக்கங்கள் தாண்டுவதற்குள் பல கேள்விகள். 

திருமதி ஷைலஜா மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்து இருக்கும் சிதம்பர நினைவுகள், முன்றாம் பிறை  புத்தகங்களை படித்து பாருங்கள், அவை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லவே முடியாது.  






பதிவர்கள் சந்திப்பு 


படங்கள் உதவி ஜாக்கி சேகர்

பதிவர் சந்திப்பு என்று தெரிந்ததும் ரொம்ப சந்தோஷாமாக இருந்தது. நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள், நான் கொஞ்சம் லேட்டாக சென்றதால் எல்லோரிடமும் பேசமுடியாமல் போய்விட்டது முக்கியமாக ராம்ஜி யாஹூ.  பதிவர் சந்திப்பு பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் பஸ்சில் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டதால் வேறு விஷயம் ஏதும் இங்கு பகிர்ந்து கொள்ள சரக்கு இல்லை. பதிவர் சந்திப்பு பற்றி எழுதிய பஸ்சை இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
 





படம்

வெயில் படம் வந்த சமயம் கண்களை கசக்கி கொண்டு தியேட்டர்விட்டு வெளியே வந்தேன். நான் மட்டும் அல்ல எனது அருகில் இருந்த சில அன்பர்களும் கண்களை துடைத்து கொண்டு வந்தார்கள். தெய்வதிருமகள் படத்தை பார்த்த பிறகு அதே போல கண்கள் கலங்கி வெளியே வந்தேன். I Am Sam படத்தில் தழுவல் என்றாலும் தமிழ் படத்திற்கு ஏற்றது போல நிறைய மாற்றங்களுடன் படம் இருக்கிறது. அனுஷ்காவின் அந்த கனவு பாடல் தேவையில்லாத ஒன்று அதே போல கிளைமாக்ஸ் சீன். 




குட்டி தேவதை சாரா.. சான்ஸ் இல்ல என்ன அக்டிங் கடைசி கட்டத்தில் விக்ரமும் சாராவும் சைகை பாஷையில் பேசிக்கொள்ளும் அந்த காட்சியை கண்ணீரோடு தான் பார்த்தேன், கண்ணீர் வர இன்னும் ஒரு காரணம்  ஜி.வி. பிரகாஷின்  இசை. இப்போது எனது மொபைல் ரிங்டோன்  அந்த தீம் மியூசிக் தான். 


போடோஸ்

பஸ்ஸில் இந்த இரண்டு தளத்தை அன்பர்கள் ஷேர் செய்து இருந்தார்கள். திருமணத்தை இவ்வளவு நெருக்கமாக பதிவு செய்ததை பார்க்கும் போதும் கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கிறது.  கல்யாணம் செய்ய போகும் பேச்சலர்கள் இவர்களை அணுகவும். 


AnRb Studios



    




பண்பலை ரேடியோ 

சென்னையில் ஒலிபரப்பாகும்  தனியார் பண்பலை ரேடியோகளில் நான்கில் மட்டும்  இருபத்திநான்கு மணிநேரமும் பாடல்கள் ஒலிபரப்பு ஆகி கொண்டு இருக்கும். இந்த நான்கில் இருக்கும் ஒரு ஒற்றுமை ரோஜா மற்றும் இந்திரா படத்தின் பாடல்களை ஒலிபரப்பு செய்வது. இரவு 1 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் கண்டிப்பாக இந்த இரு படங்களின் பாடல்களை கேட்கலாம். வேறு எந்த நேரத்திலும் இந்த படத்தின் பாடல்களை நீங்க எந்த பண்பலையிலும்  கேட்கமுடியாது. கடந்த இருவாரங்களாக இந்த ரோதனையில் கிடந்தது சாவுகிறேன், இளையராஜாவின் பாடல்களை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது , ஆனால் ரஹ்மான் இசையில் அப்போதைக்கு கேட்க  நன்றாக இருக்கிறதே   தவிர பெரும்பாலான பாடல்கள் ஒரு கட்டத்துக்கு மேல் திரும்ப  கேட்க முடிவதில்லை. 


பாடல்


இந்த இரு பாடல்களை கேட்டு பாருங்களே  ரொம்ப அருமையா இருக்கும். ரெண்டு பாட்டுக்கும் வித்யாசாகர் தான் இசையமைச்சு இருக்காரு.














--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

4 comments:

  1. நல்லா கோர்வையா நெறையா சங்கதிகள் இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. // அவன் படிப்பது இரண்டாவது அதற்கே அவர்கள் அரை லட்சத்திற்கு செலவு செய்துவிட்டார்கள்.//
    இது ரொம்ப கவலை தரும் டிரென்ட்.

    ReplyDelete
  3. நிறைய வெரைட்டி நியூஸ்.. நன்றி ரோமியோ பகிர்வுக்கு..

    அருண்மொழித்தேவன் என்ற பேரே அழகா இருக்கிறதே..:)

    ReplyDelete
  4. கேரளாவில் அப்பாவை உப்பா என்று இஸ்லாமிய சமுதாய சகோதர்கள் அழைப்பார்கள்

    ReplyDelete