ஆறு மாசத்துக்கு முன்னாலே இந்த படத்தை பத்தி எழுத நினைத்தேன். எனக்கு தான் நியாபகமறதி அதிகமாச்சே அதனால அதை அப்படியே மறந்துட்டேன்,போன வாரம் ரகு பஸ்ல இந்த படத்தை பத்தி எழுதி இருந்தாரு அப்ப தான் அடடா இத்தனை நாளா இந்த படத்தை மறந்துட்டோமேன்னு நியாபகமே வந்துச்சு.
Conviction - (2010)
சிறுவயது முதலே ஆன்னியும் அவள் சகோதரன் கென்னியும் ரொம்ப பாசத்துடன் வளருகிறார்கள். இந்த பாசம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றி பிணைந்து வருகிறது. ஒரு நாள் கென்னியின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் கேத்ரினா என்கிற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். பக்கத்துக்கு வீட்டில் வசிப்பதால் கென்னியை சந்தேகிக்கும் போலீஸ்காரர்கள் ஒரு கட்டத்தில் அவன்தான் கொலை செய்ததாக முடிவு செய்து கைது செய்கிறார்கள். தான் அந்த கொலையை செய்யவில்லை என்று எவ்வளவோ முயற்சி எடுக்கிறார், அவருக்கு துணையாக ஆன்னியும் எல்லா விதமான முயற்சி எடுத்தும் கொலை செய்யபட்ட இடத்தில இருந்த ரத்தமும் கென்னியின் ரத்தமும் ஒரே வகையை சார்ந்து என்கிற அபத்த முடிவால் கென்னிக்கு சிறைத்தண்டனை கிடைகிறது. தனது சகோதரனை காப்பாற்ற தானே வக்கீலாக ஆக ஆன்னி சட்டம் பயின்று தனது தோழி ஆப்ரா ரைஸ் முலம் அங்கு கிடைத்த ரத்த மாதிரியை டின்ஏ பரிசோதனையின் முலம் கென்னி அந்த கொலையை செய்யவில்லை என்று நிருபிக்கிறார். பதினெட்டு வருடங்கள் கழித்து கென்னிக்கு விடுதலை கிடைகிறது.
இது டுப்ளிகேட்
இது ஒரிஜினல்
படம் கொஞ்சம் மெதுவாக சென்றாலும் எந்த காட்சியையும் விட்டு செல்லமுடியாத வண்ணம் எல்லாவற்றுக்கும் முக்கியத்தும் கொடுத்துள்ளர்கள். ஆன்னி எவ்வளவு சிரமத்துக்கு இடையில் படித்தாள் எப்படி வக்கீலானாள், இதனால் அவள் குடும்பம் எப்படி நிலைகுலைந்து போனது. பொய் சாட்சி சொன்னவர்களை எப்படி வழிக்கு கொண்டுவந்தாள் என்று படம் முழுக்க ஆன்னியே தாங்கி பிடிக்கிறாள் உண்மையும் அதுவே என்பதால் அந்த கதாபாத்திரமே படத்தின் முதுகெலும்புபாக செயல்படுகிறது.
அதை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார் Hilary Swank.
இதில் ஆன்னியாக நடித்திருக்கும் Hilary Swank , கென்னியாக நடித்திருக்கும் Sam Rockwell, ஆப்ரா ரைஸ்சாக நடித்திருக்கும் Minnir Driver நடிப்பு அருமை.
எத்தனையோ படம் இருக்கும் போது ஏன் இந்த படத்தை பற்றி எழுதினேன் தெரியுமா.. இங்க தான் பாயிண்ட் இருக்கு, எந்த படத்தை பார்த்தாலும் அதை பற்றி நெடில் தேடுவது என்னோட வழக்கம், இது உண்மைய கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் உண்மையான ஆன்னி , கென்னி எப்படி இருப்பாங்கன்னு தேடினேன் அப்பதான் கென்னியின் சோகமான ஒரு முடிவு தெரிஞ்சது. கென்னி ஜெயிலை விட்டு வெளியே வந்த ஆறது மாதத்தில் வீட்டில் நடந்த ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு உயரிழந்துவிட்டார். பாருங்க சாவு எப்படி தேடி வந்து இருக்குன்னு. பதினெட்டு வருஷம் ஜெயில்ல இருந்து வெளியவந்தவரு ஆறு மாசத்துல உலகத்தைவிட்டே போயிட்டாரு,
என்ன ஒரு சோகமான முடிவு :-( .
--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)
நான் ஆங்கில படங்களை IMDB Rating மூலம் தேர்ந்தெடுத்து பார்ப்பவன்.. அப்படி தான் இந்த படத்தையும் பார்த்தேன்..
ReplyDeleteஅருமையான படம்.. My Sister's Keeper, Kite Runner, Changeling போன்ற இன்ன பிற படங்களுக்கு பிறகு மிகவும் திருப்தியுடன் பார்த்த படம் இது :)
மச்சி டவுன்லோடி நாளாச்சு, இன்னும் பார்க்கலை. இப்போ இப்போ பார்த்திடறேன்
ReplyDelete:-)