Friday, December 23, 2011

ராஜபாட்டை

சியான் விக்ரம் நடிப்பில், சுசிந்தரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம். பதிவுலகம் வந்தபிறகு எந்த ஒரு படத்தையும் விமர்சனம் படித்த பிறகு தான் தியேட்டர் பக்கமே போவது என்றாகி போன இந்த நாட்களில். Indiaglitz என்கிற வலைத்தளம் நடத்திய ஒரு போட்டியில் வெற்றி பெற்று முதல் நாள் முதல் காட்சியை காணும் வாய்ப்பு கிடைத்தது. 




படத்தின் கதை 

விக்ரம் ஒரு ஸ்டான்ட் ஆர்டிஸ்ட். ஒரு நாள் விஸ்வநாதன் அவர்களை கொலை செய்ய முயன்ற ஒரு கும்பலிடம் இருந்து அவரை காப்பாற்றுகிறார். தனது மகன் தான் தன்னை கொலை செய்ய பார்ப்பதாகவும். தனது மனைவி நினைவாக நடத்தப்பட்டு வரும் ஆசிரமத்தை தான் எம்எல்ஏ ஆவதற்கு தேவை என்கிற காரணத்தால் தான் கொலை செய்ய ஆள் அனுப்பி இருப்பதாக சொல்கிறார். அவரை தான் தங்கி இருக்கும் மேன்ஷனில் வைத்து பார்த்து கொள்கிறார் விக்ரம். அப்பறம் என்ன ஆச்சு என்பதை மீதி வெள்ளி திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும் (அது உங்கள் விருப்பம்)


படம் ஆரமிக்கும் போதே நிலத்தை அடித்து பிடுங்கும் கும்பலை காண்பித்து  இது தான் கதை களம் என்று முதலில் சொல்லிவிடுகிறார். படம் முழுக்க அதன் பின்னணியில் தான் செல்கிறது. ஆனால் நிலம் எப்படி அபகரிகிறது என்பதையும்  ரெஜிஸ்டர் ஆபிஸ் உள்ளே நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எதுவும் சொல்லாமல் அடிதடியில் எழுதி வாங்குவதை மட்டும் சொல்லி இருகிறார்கள். 

விக்ரம் நடித்ததில் மரண மொக்கையான படம் பீமா. அதன் அடுத்த பார்ட் என்று இதை சொல்லலாம். பாடியை ஏற்றி ஜிம் பாயாக வருகிறார். உடம்பை முருகேன்று ஏற்றி வைத்துள்ளார். கண்களில் தெரியும் சுருக்கம் அவருக்கு  வயது ஏறி கொண்டு இருப்பதை பளிச்சென்று காட்டுகிறது. முடியில் அடிகடி கலரிங் செய்து கொண்டே இருக்கிறார். கண்கள் கூசும் விதத்தில் டிரஸ் போடுகிறார், அதே போல கலர் கலராக ஷு. ஒரே பாடலுக்கு வித விதமாக மேக்-அப் போட்டு டான்ஸ் ஆடுகிறார். CBI அதிகாரிகள் போல பல வேடத்தில் வந்து நன்றாக நடித்து இருக்கிறார். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை இருபது நபர்களை பந்தாடுகிறார்.  நன்றாக சண்டை போடுகிறார் தனது வேலையை கச்சிதமாக செய்து விட்டார்.ஸ்டைலாக சவால் விட்டு  இடைவேளை விடும் இடம் சூப்பர். 



ஹீரோயின் தீக் ஷா பார்கிறார், பேசுகிறார், நடக்கிறார், சிரிக்கிறார் கடைசியில் அவர் இருந்ததையே நாம் மறந்துவிடும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். இந்த மாதிரியா மாஸ் படங்களில் ஹீரோயின் லெவலை இதற்கு மேல் எதிர்பார்க்க கூடாது தான்.  நேரில் சந்தித்தேன் செக்க செவப்பாக இருக்கிறார்.   விஸ்வநாதன் அவர்களை இப்படி காமெடி பீஸ் ஆகி நாறடித்து  விட்டார்கள். காமெடி என்கிற பெயரில் நடக்கும் மொக்கையை ஓரளவிற்கு மேல் சகித்து கொண்டு இருக்க முடியவில்லை. யுவனின் பின்னணி நன்றாக இருக்கிறது பாடல்கள் தான் மனதில் ஒட்டவில்லை. சண்டை காட்சிகள் நன்றாக இருக்கிறது அதற்காக இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி ஒரே அடியில் மண்ணை கவ்வுவது காட்டுவார்களோ. 

  
கதையை வேறு ஒருவர் எழுத, வசனத்தை பாஸ்கர் சக்தி எழுத, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் சுசிந்தரன். தமிழ் சினிமாவில் சுசிந்தரன் அவர்களுக்கு  நல்ல பெயர் இருக்கிறது, அதை முன்று படங்களில் தக்கவைத்து கொண்டவர் இதில் கோட்டை விட்டுவிட்டார். முதல் பாதியில் விஸ்வநாதன் அவர்களை வைத்து காமெடி செய்கிறேன் என்று மரண மொக்கையை போட்டுவிட்டார், இரண்டாம் பாதியில் படத்தை முடிக்கவேண்டிய அவசரத்தில் கதையை நகர்த்தி கொண்டு செல்கிறார். என்ன படம் முடிஞ்சதா என்று ஒருகணம்  நம்மையே சந்தேகிக்க வைத்து விடுகிறார். அக்கா என்கிற கதாபாத்திரம் அடுத்த சொர்ணலதா மாதிரி கொண்டு வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் அடக்கி வாசிக்கிறேன் என்று அந்த கதாபாத்திரத்தை புஸ் ஆகியது தான் மிச்சம். ஆனா அந்த அக்கா நச்சென்று இருக்கிறார். ரீமாசென் & ஸ்ரேயா ஆடிய லட்டு லட்டு பாட்டு கடைசியில் வந்ததால் இருவரின் தரிசனத்தை சரியாக காண முடியவில்லை. இன்றைய சந்திப்பில் விக்ரம் வேற அதை தனது போல்ட் வாய்சில் லட்டு  லட்டு  என்று  அடிகடி பாடி காமித்தார். ஸ்ஸ்ஸ் முடியல சியான்.  

ஒரு விஷயத்துக்காக சுசிந்தரனை பாராட்டியே தீரவேண்டும். வாப்பா என்கிறவர் தற்கொலை(கொலை). நிஜத்தில் நடந்ததை படத்தில் கொண்டு வந்துள்ளார். இன்று அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது, இந்த ஷாட் வைக்க எப்படி தில் வந்தது என்று கேட்டேன். அந்த ஷாட் வைத்ததில் தனக்கு எந்த சங்கடமும் பயமும் இல்லை என்றார். 




ராஜபாட்டை- மரண மொக்கை 




-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

1 comment:

  1. நல்லாதான் விமர்சனம் பண்ணியிருக்கீங்க

    ReplyDelete