புத்தகம்
பதிவர் மேவி அவர்களின் அருளால் ஆதவன் அவர்களின் என் பெயர் ராமசேஷன் படிக்க
வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்பே அவரின் குறுநாவல் மற்றும் சிறுகதைகள் தாங்கி
வந்த இரவுக்கு முன் வருவது மாலை என்கிற தொகுப்பை கிழக்கில் தள்ளுபடியில் வாங்கி படித்த போது ஏனோ கதைகள்
மனதில் ஒட்டாமலே சென்றது. இந்த புத்தகத்தை பற்றி பலர் நன்றாக இருக்கிறது என்று
சொன்னதால் படித்தேன். ஆரம்பத்தில் இருந்தே கதையின் உள்ளே செல்ல முடியவில்லை. காலேஜ் படிக்கும் ராமசேஷன் மனதில் தோன்றுவதை வைத்து
பார்க்கும் போது மனநலம் சரியில்லாவதர் போலவே இருந்தது. எதற்கு எடுத்தாலும் பத்தி
பத்தியா யோசித்து கொண்டு இருக்கிறார். நாவலின் உள்ளே அதிகபடியான ஆங்கில
வார்த்தைகளை உபயோகித்து உள்ளதால் பல இடங்களில் தடுமாறி கொண்டே செல்லவேண்டி இருக்கிறது.
எதை போன்ற நாவல் இது என்கிற கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை. நாவலை படிக்கும்
போது மனுஷன்படுத்தி எடுக்கிறார் என்கிற வார்த்தை வெளியில் வருதை நிறுத்தமுடியவில்லை.
சினிமா
OK OK
ஹீரோ சந்தானம் என்பதா இல்லை உதயநிதி ஸ்டாலின் என்பதா!!! சிரிப்பு சிரிப்பு
அதை தவிர ஒன்றும் இல்லை. உதயநிதி சைடு அக்ட்டராக அளவாக நடித்து நல்ல பெயர்
வாங்கிவிட்டார். சந்தானத்தின் ராஜ்ஜியம் தான் தியேட்டர்
முழுவதும் அடிதூள் பறக்கிறது. கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் படம் பார்த்த திருப்தி. சந்தானத்தின்
பாடி லங்குவாஜ் செம,அடிகடி ரியாக்க்ஷன் மாற்றுவது, டயலாக் டெலிவரி எல்லாம் ரொம்ப வித்தியாசமா செய்திருக்கிறார். வடிவேல் இல்லாத
இந்த நாட்களில் அந்த இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டார் மனுஷன். கதையே இல்லாமல் திரைகதையை நம்பி ஹட்ரிக் அடித்து இருக்கும்
ராஜேஷ் ஆல் இன் ஆல் அழகு ராஜாவிலும் ஜெயிக்க
வாழ்த்துக்கள் :).
கழுகு
வித்தியாசமான கதை களம், அருமையான
பாடல்கள், மிகை இல்லாத நடிப்பு எல்லாம் சேர்ந்து படத்தை பார்க்க வைத்துவிட்டது. கிருஷ்ணா, கருணாஸ், தம்பி ராமையா, பிந்துமாதவி நடிப்பு எல்லாம் ஓகே.
ஜெயப்ரகாஷ் தேவையில்லாமல் திணித்தது போல இருக்கு. படத்தின் கிளைமாக்ஸ் பார்க்கும் போது குணா கிளைமாக்ஸ் தான் கடைசில்
நினைவுக்கு வருது. படத்தின் பட்ஜெட்டில் ஒரு பகுதியை பீடிகாகவே ஒதுக்கி இருப்பாங்க
போல கிருஷ்ணா எப்பொழுதும் பீடி பிடித்து கொண்டு இருப்பதை பார்கையில் நமக்கு
காதில் புகை வருது. மத்தபடி படம் ஓகே.
3
முதல் பாதி படம் சான்சே இல்ல சூப்பர், ஸ்ருதி
எக்ஸ்ப்ரஷன், ரெண்டு பேருக்குள்ள செட் ஆகி இருக்கும்
செமிஸ்ட்ரி செம செம, தனுஷ்
ஸ்கூல் பையன் காலேஜ் பையன் கணவனாக நல்லாவே செட் ஆகி இருக்காரு. ஸ்கூல் காதல்
எல்லாம் ஜாலியா ரசிக்க முடியுது. இரண்டாம் பாதியில் தனுஷ் நன்றாகவே நடித்துள்ளார், இருந்தாலும் கதை மற்றும் திரைகதையில் சம்திங் இஸ் மிஸ்ஸிங்.
கதையில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டால் இதை விட நல்ல படத்தை ஐஸ்வர்யா
தரமுடியும். கொலைவெறியை கொத்தோ கொத்தென்று கொத்தி விட்டதால் விஷுவலாக பார்ப்பதில்
கூட ஆசையில்லாமல் போய்விட்டது. செல்வராகவன் அவர்களிடம் பணியாற்றியதால் அவரின்
பாதிப்பு அப்பட்டமாக தெரிகிறது.
மெட்ரோ ரயில்
சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான வேலைகள்
அசுரவேகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். முக்கிய சாலைகளை சுத்தோ சுத்து என்று சுற்றி கொண்டு வரவேண்டி இருக்கிறது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை எல்லாம் ஓரளவுக்கு பெரிய சாலைகள் இதுக்கே இந்த கதி
என்றால் தண்டையார்பேட்டை நிலைமையை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. வடசென்னையில்
மிகவும் நெரிசலான சாலைகளில் தண்டையார்பேட்டையும் ஒன்று. அதுவும்
மகாராணி பஸ் ஸ்டாப் முதல் பாண்டியன் தியேட்டர் வரையிலான சாலை முழுக்க மைதாமாவு ஆளூங்க நகைகடையாகவே இருக்கும், இருபதடி சாலை என்பதே அரிதான ஒன்று. ஒன்வே என்றாலே அந்த ரோடில் வண்டி ஓட்ட திக்கி
திணறவேண்டும். அந்த ரோட்டில் மெட்ரோ ரயில் பணிகள் ஆரமித்தால் நினைச்சி பார்த்தாலே பேஜாராதான் இருக்கிறது.
ஸ்பான்சர்
விளையாட்டுக்கு, ஒரு நிகழ்ச்சியை நடத்த, கல்லூரியில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சி இப்படி எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர்
தேவைப்படுகிறது. இப்பொழுது அதன் தாகம் தான் புரியாமல் இந்த ஸ்பான்சர்களுக்கு ஒரு பெயரை கொடுத்து அவர்களை
படுத்தும்பாடு இருக்கிறதே சொல்லிமாளவில்லை. உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை பற்றி
வானொலியில் ஒலிபரப்ப தனியார் பண்பலை உதவுவதாக இருக்கிறது என்றால் அதை ரேடியோ
பார்ட்னர் என்று சொல்லுவார்கள். இதில் இருக்கும் உள்ளர்த்தம் எல்லாவற்றுக்கும்
பொருந்தி போகும் அதுவே Strength பார்ட்னர் என்றால்?.
சைதாபேட்டை ரயில்வே நிலையத்தில் இருந்த ஒரு தனியார் பண்பலை
நிகழ்ச்சி பற்றிய பேனரின் கடைசில் இருந்த வாசகங்கள் இவை.
Title Sponsor
Associate Sponsor
Style Partner
TV Partner
Print Partner
Online Partner
F&B Partner
Fashion Partner
Mobile Partner
Multiplex Partner
ஒரு நிகழ்சிக்கு இத்தனை ஸ்பான்சர், பார்ட்னர்களா?? விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் சில
நிகழ்ச்சிகள் Powered by என்று சொல்கிறார்கள் அதற்கு
என்ன அர்த்தம் ?? என்னமோ போடா நாராயணா.
திருவொற்றியூர் அப்டேட்ஸ்
தானே தலைவி , தங்க தலைவி , தங்க தாரகை, அடுத்த ஜனாதிபதி இன்றைய தமிழகத்தின் முதல்வர் ஜெ.ஜெயலலிதா சென்ற வாரம் அறிவித்த ஒரு செய்தி திருவொற்றியூர் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. திருவொற்றியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதிதுள்ளார் என்பது தான் அந்த நியூஸ். ரொம்பவே வரவேற்கதக்க செய்தி இது. சரி மேட்டர் என்னன்னா இந்த செய்தியை வாழ்த்தி ரரக்கள் வைத்திருக்கும் பேன்னர்கள் தான், கொஞ்சம் நஞ்சம் இல்லை எங்கே திரும்பினாலும் அம்மாவை வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களின் தொல்லை தான் தாங்க முடியவில்லை. இதை எல்லாம் பார்த்த பிறகு எனது அண்ணனிடம் அவன் டிஜிட்டல் பேனர் கடையை இந்த பக்கமாக மாற்றி கொண்டு வந்துவிடு என்று ஒரு கோரிக்கை வைத்துள்ளேன்.
ஈழம்
விகடன் மேடையில் பழ.நெடுமாறன் அவர்களின் கேள்வி பதில் படித்து கொண்டு இருந்தேன்.
இதுவரை வந்த கேள்விகளில் 90 சதவிதம் ஈழம் பற்றியே கேள்விகள் வந்துள்ளதை
பார்க்கும் போது, அவர் வேறு எதுவும் செய்யவில்லையோ என்று நினைக்க
தோன்றுகிறது. ஈழம் தவிர்த்து அவரிடம் கேள்வி கேட்க நிறைய இருந்தாலும் அதை பற்றி
பேச மற்றவர்களுக்கு ஏன் தயக்கம் . ஈழம் என்கிற வட்டத்துக்குள் அவரை சிக்க
வைத்துவிட்டர்களோ அல்லது அவரே அந்த வட்டத்தை உருவாக்கி கொண்டாரா?
குறும்படம்
ரொம்ப நாள் கழித்து அருமையான குறும்படத்தை பார்த்த திருப்தியை தந்தது இந்த படம் :)
--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)
சைனா டீ.. தமாசு.. தமாசு..
ReplyDelete