2003 - 2011வரை வெவ்வேறு பத்திரிகையில் வெளிவந்த அவரின் பன்னிரண்டு கதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பு .
எந்த ஒரு சிறுகதை தொகுப்பை படிக்க ஆரமித்தாலும் ஒரு கதை முடிந்ததும் சிறிய இடைவேளை எடுத்து கொண்டு தான் அடுத்த கதைக்கு செல்வேன். பன்னிரண்டு கதைகளை படிக்க இரண்டு நாட்கள் ஆனது.
கோட்டி முத்து தொடங்கி நகரம் வரை ஒவ்வொரு கதையிலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு வலியை சுமந்து கொண்டு செல்லும் கதைகள்.
கதைகளின் களம் ஒன்று மும்பையாக இருக்கிறது அல்லது ரமேஸ்வரமாக இருக்கிறது. பன்னிரெண்டில் எனக்கு மிகவும் பிடித்தது பாரதி பாட்டு, துரைப்பாண்டி, பேய் வீடு, நம்பிக்கை, சாமியாட்டம், வேண்டுதல், விடிவெள்ளி.
இதில் சாமியாட்டம் கதைக்குள் செல்லும் போது ஏதோ கட்டுரையை படிக்கிறது போல இருந்தது. கதைக்கு செல்லும் போது தான் உறைகிறது அட முதலில் வருவது எல்லாம் சரியாதான் சொல்லி இருக்காரு. அதே போல நம்பிக்கை பெரிய பிரச்னையை சமாளிக்க சின்னதாக ஒரு பொய் போதும். பாரதி பாட்டு கதை சொல்லிய விதம் அருமை, கதைக்குள் பாரதியார் பாடலையும் சேர்த்து கதையின் முடிவும் பாரதியார் பாடலின் முடிவும் சூப்பர்.
பேய் வீடு கதையில் அந்த தெருவை வர்ணித்து இருப்பது அருமையாக இருக்கிறது. இன்னும் பாதி பக்கம் தானே மீதம் இருக்கிறது கதையை எப்படி முடிக்க போகிறார் என்கிற ஆவல் அதிகமா கடைசி நான்கு வரியில் கதையை அளவாக முடித்துவிடுகிறார். மும்பை வாழ்க்கை பற்றி சொல்லும் நகரம் படித்த பிறகு அந்த நகரம் நரகமாக தான் தெரிந்தது.
முழு தொகுப்பில் ஏற்கனவே அவரது வலைத்தளத்தில் படித்த இரண்டு முன்று கதைகள் இருக்கிறது. ஏற்கனவே படித்ததால் சுவாரஸ்யம் கம்மிதான். எளிமையான நடை என்பதால் வேகமாகவும் ஈஸியாக புரிந்து கொண்டு படிக்கவும் எதுவாக இருக்கிறது.
ஒவ்வொரு கதையாக எடுத்து அதை விமர்சனம் செய்தால் மற்றவர்கள் அதை படிப்பதில் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் தனியா எழுதுவதை தவிர்த்துவிட்டேன். ஒரு நல்ல வாசகனுக்கு என்ன முக்கியம்?? தான் படிக்கும் புத்தகம் எந்த வகையிலும் ஏமாற்ற கூடாது என்பதே அது இந்த புத்தகத்தில் உள்ளது. எந்தவகையிலும் ஏமாற்றவில்லை என்றாலும் கதையில் களம் இரண்டு நகரத்தை விட்டு வெளியே வந்து இருந்தால் வேறு ஒரு கதை வேறு ஒரு வாசிப்பனுபவம் கிடைத்து இருக்கும். இரண்டு நகரங்களை மட்டுமே கதைகள் சுற்றுவதால் கதையின் களம் நெருக்கத்தை விட வேறு இடமே இவர் பார்க்கவில்லையோ என்று நினைக்க தோன்றுகிறது.
சாமியாட்டம் சிறுகதையை குறும்படமாக எடுத்தால் நிச்சயமாக தனி முத்திரை படைக்கும்.
--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

ஆமாம் அருண்மொழித்தேவன்.
ReplyDelete