சென்ற வாரமே இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் அந்த பக்கத்தை திருப்பும் போது எல்லாம் எனது மகனின் முகம் தான் நினைவுக்கு வந்தது.
ஸ்ரீஹித்க்கு (எனது மகன் பெயர்) உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டி இருந்தது. மருத்துவமனையில் சேர்த்த பொழுது அவன் கையில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கு வலது கையில் உள்ள நரம்பில் ஒரு ஊசி ஏற்றினார்கள். அதை ஏற்றும் முன் என்னையும் எனது மனைவியையும் வெளியே இருக்க சொன்னார்கள். கையில் ஏற்றப்பட்ட ஊசியின் வலிதாங்கமல் அவன் அழுத அழுகையை கேட்க முடியாமல் நானும் எனது மனைவியும் ரொம்ப தவித்து போய்விடும். அந்த அழுகை குரலை கேட்பதற்கு முடியாமல் நான் அங்கு இருந்து வந்துவிட்டேன், சிறிது நேரம் கழித்து குழந்தையை சமாதனம்படுத்த சொல்லி செவிலியர்கள் சொன்னார்கள். உள்ளே சென்றதும் வலியின் தீவிரத்தால் அவன் அழுவதை பார்க்க முடியாமல் எங்கள் கண்களில் கண்ணீர் வருவதை கட்டுபடுத்த முடியவில்லை. எனது மனைவிக்கு ஆறுதல் சொல்ல தெரியாமல் நானும் அழுது கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் அவனுக்கு வலி நின்று அழுகையை நிறுத்தினான். எங்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
இது ஒரு சின்ன விஷயம் தான் ஆனால் அதை கூட எங்களால் தாங்க முடியவில்லை. ஆனால் இந்த பத்தியில் இருக்கும் அடுத்த செய்திகளை படித்து பாருங்கள். எவ்வளவு கொடூரமான மக்கள் இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டு இருகிறார்கள் என்று புரியும். இதை படித்த பார்த்த போது ஐயோ பாவம் அந்த குழந்தை என்று எங்கோ இருக்கும் அந்த குழந்தைக்கு பரிதாப்படுகிறேன்.
சென்ற வார ஜூனியர் விகடன் பத்திரிகையின் வெளிவந்த செய்தி இது
(படத்தை சொடுக்கி பெரிதுப்படுத்தி பார்க்கவும்)
1
2
3
(நன்றி ஜூனியர் விகடன்)
சாதாரண ஊசிக்கே எங்கள் மகனின் அழுகையை தாங்க முடியாமல் நாங்கள் எவ்வளவு அவதிபட்டோம் ஒன்றுமே அறியாத அந்த பிஞ்சு குழந்தையின் மேல் கொதிக்கும் பாயசத்தை ஊற்றி அதன் சுடு தாங்காமல் எங்கும் ஓட முடியாமல் புரண்டு படுக்க வழியில்லாமல் அவதிப்படும் வேதனையை நினைக்கும் போது பூசாரி என்கிற அந்த நாதேரியின் வாயில் ஈயத்தை காய்ச்சி ஊற்றி பழிவாங்க வேண்டும் என்கிற வெறி ஏற்ப்படுகிறது. .
சாதாரண ஊசிக்கே எங்கள் மகனின் அழுகையை தாங்க முடியாமல் நாங்கள் எவ்வளவு அவதிபட்டோம் ஒன்றுமே அறியாத அந்த பிஞ்சு குழந்தையின் மேல் கொதிக்கும் பாயசத்தை ஊற்றி அதன் சுடு தாங்காமல் எங்கும் ஓட முடியாமல் புரண்டு படுக்க வழியில்லாமல் அவதிப்படும் வேதனையை நினைக்கும் போது பூசாரி என்கிற அந்த நாதேரியின் வாயில் ஈயத்தை காய்ச்சி ஊற்றி பழிவாங்க வேண்டும் என்கிற வெறி ஏற்ப்படுகிறது. .
அப்போதாவது இந்த மாதிரியான காட்டு மிராண்டி தனத்துக்கு ஒரு முற்றுபுள்ளி கிடைக்குமா ???
ஆத்திகம் என்கிற பெயரால் நடக்கும் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் என்று தீர்வு கிடைக்கும்?? அந்த சின்ன குழந்தையின் வேதனை புரியுமா அந்த காவி வேட்டி அணிந்த நாதேரிக்கு??
ஏழு மாத குழந்தை எப்படி அவதிப்படும் என்று ஐந்து மாத குழந்தையின் அப்பா என்கிற முறையில் எனக்கு தெரியும்
ஆத்திரத்தை கட்டுபடுத்த முடியவில்லை.
WITH ANGER
ROMEO
சொன்ன மட்டும் கோபம் வந்திரும். எல்லாம் சோத்த தான் திங்கறானுகளா, இல்ல ஸ்பெஷல் சதாவான்னு தெரியல ?
ReplyDeleteபக்தி இருக்கற அளவுக்கு இந்த பதர்களுக்கு மனிதாபிமானம் இருந்தா போதும், எல்லாம் நல்லாவே நடக்கும்
மூடநம்பிக்கைகள் ஒழியனும். என்ன செய்ய? அவசியமான பதிவு ரோமியோ.
ReplyDeleteஉயிரோட பழி கொடுக்கும் முண்டங்கள் கூட நம் நாட்டில் உண்டு! அதனால் தான் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நாங்கள் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறோம்!
ReplyDeleteஅவசியமான பதிவு!
படிப்பதற்கே டார்ச்சராக இருந்தது . . இந்த அடிமுட்டாள்களை, படுக்க வைத்து, அம்மணமாக்கி, அவர்களின் உறுப்பின் மீது, பஜ்ஜி மாவைத் தடவி, கொதிக்கும் எண்ணையை அதன் மீது ஊற்ற வேண்டும் என்றும், அது பொறியும்போது, அவர்கள் அலறுகையில், இதே ‘ஷீத்லு’ கோஷத்தை நாம் எழுப்பவேண்டும் என்றும் பிரியப்படுகிறேன் . . இதே தண்டனையை, இவர்களிடம் குழந்தையைக் கொடுப்பவர்களுக்கும் செய்யலாம் . .
ReplyDelete:((
ReplyDeleteஅவங்கள விடுங்க.. வீல் பாயாசம்னு ரசிச்சு டைட்டில் வச்சிருக்கானே, அவனை என்ன செய்யலாம்?
ReplyDeleteஎன்னையா இது இவ்ளோ கொடுமையா இருக்கு?
ReplyDeleteஇதையெல்லாம் எப்படி போட்டோ எடுத்து போடறாங்க?
........... :-(
யோவ் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
க்ர்ர்ர்ர்ர்.. :((
ReplyDeleteரொம்ப கஷ்ட்டமாயிருக்குங்க, வேதனையும் ...
ReplyDeleteச்சே..!
ReplyDelete:-(
அந்த பூசாரி மட்டும் கைல கிடைக்கட்டும்,நான் அவன் மேல ஊத்துறேன்.அப்பதான் அவனுக்கு தெரியும்.எவநலம் துப்பாக்கி எடுத்து சுடனும்.
ReplyDeleteரொம்பவே கஷ்டமாயிருக்குங்க...இந்த மாதிரி மூடனுங்க வாழுர நாட்டுலத்தான் நாமும் வாழனும்மான்ன தோணுது...
ReplyDeleteகொடுமை..:(
ReplyDeleteபூசாரி மேல ஆசிட் ஊத்தினா குழந்தைக்கு சரியாகும்னு மாத்திட்டா போதும்!
:(
ReplyDeleteரொக்கெட்டே விண்வெளிக்கு அனுப்பினாலும் கீழே இரண்டு எலுமிச்சை பழம் வைத்து அனுப்புபவன்தான் உண்மையான தமிழன். விஞ்ஞானிகள் என்று தம்மை அழைப்பவர்கள் கூட தமது விஞ்ஞான அறிவுக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல், மூட நம்பிக்கைச் சேற்றை தமது முகத்தில் பூசிக் கொள்கின்றார்கள் .
ReplyDeleteஅண்மையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ள சட்டக் சி.ஜி 820 புதிய ஹெலிகொப்டரை கடலோர காவல் படைக் காவல்துறைத் தலைவர் ஜெனரல் ராஜசேகர் மாலை அணிவித்துத் தொடங்கி வைத்தபோது, புதிய வாகனங்களுக்குப் பூஜை போடும்போது சில்லுக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவதுபோல ஹெலிகொப்டரின் கீழ் எலுமிச்சம் பழங்கள் வைத்து நசுக்கப்பட்டன.
புதிதாக ராதாகிருஷ்ணன் என்பவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராகப் பதவியேற்றவுடன் அவசர அவசரமாக குருவாயூரப்பன் கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க்கரை கொடுத்தார். அதன்பின் ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட் விண்வெளிக்கு ஏவப்படுவதாக இருந்தது. அதற்குமுன் இஸ்ரோவின் புதிய தலைவரான ராதாகிருஷ்ணன் தமது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்து ஜி.எஸ்.எல்.வி. பி 3 ரொக்கெட்டுக்கான திட்டத்தை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டார். திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட் வெற்றிகரமாக ஏவப்படுவதற்காக ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறினார்.
விண்வெளிக்கு ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட்டோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்ததற்கு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ரொக்கெட்டின் கிரையோஜெனிக் இயந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டதா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ரொக்கெட் திசை மாறியதற்கான காரணம் ஓரிரு நாள்களில் கண்டு அறியப்படும் என்றுதான் சொன்னாரே தவிர, திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துப் பயன் இல்லை என்று நேர்மையாக நாணயத்துடன் ஒப்புக்கொள்ளவில்லை.
நல்லையா தயாபரன்
சிறப்பான பதிவு.
ReplyDeleteமிகவும் நன்று ...
For Tamil News Visit..
https://www.maalaimalar.com/ | https://www.dailythanthi.com/