Friday, April 27, 2012

சங்கதிகள் 27 Apr 2012

புத்தகம் 

பதிவர் மேவி அவர்களின் அருளால் ஆதவன் அவர்களின் என் பெயர் ராமசேஷன் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்பே அவரின் குறுநாவல் மற்றும் சிறுகதைகள் தாங்கி வந்த இரவுக்கு முன் வருவது மாலை என்கிற தொகுப்பை கிழக்கில் தள்ளுபடியில் வாங்கி படித்த போது ஏனோ கதைகள் மனதில் ஒட்டாமலே சென்றது. இந்த புத்தகத்தை பற்றி பலர் நன்றாக இருக்கிறது என்று சொன்னதால் படித்தேன். ஆரம்பத்தில் இருந்தே கதையின் உள்ளே செல்ல முடியவில்லை. காலேஜ் படிக்கும் ராமசேஷன் மனதில் தோன்றுவதை வைத்து பார்க்கும் போது மனநலம் சரியில்லாவதர் போலவே இருந்தது. எதற்கு எடுத்தாலும் பத்தி பத்தியா யோசித்து கொண்டு இருக்கிறார். நாவலின் உள்ளே அதிகபடியான ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து உள்ளதால் பல இடங்களில் தடுமாறி கொண்டே செல்லவேண்டி இருக்கிறது. எதை போன்ற நாவல் இது என்கிற கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை. நாவலை படிக்கும் போது மனுஷன்படுத்தி எடுக்கிறார் என்கிற வார்த்தை வெளியில் வருதை நிறுத்தமுடியவில்லை. 


சினிமா 

OK OK 

           ஹீரோ சந்தானம் என்பதா இல்லை உதயநிதி ஸ்டாலின் என்பதா!!! சிரிப்பு சிரிப்பு அதை தவிர ஒன்றும் இல்லை. உதயநிதி சைடு அக்ட்டராக அளவாக நடித்து நல்ல பெயர் வாங்கிவிட்டார். சந்தானத்தின் ராஜ்ஜியம் தான் தியேட்டர் முழுவதும் அடிதூள் பறக்கிறது. கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் படம் பார்த்த திருப்தி. சந்தானத்தின் பாடி லங்குவாஜ் செம,அடிகடி ரியாக்க்ஷன் மாற்றுவது, டயலாக் டெலிவரி எல்லாம் ரொம்ப வித்தியாசமா செய்திருக்கிறார். வடிவேல் இல்லாத இந்த நாட்களில் அந்த இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டார் மனுஷன். கதையே இல்லாமல் திரைகதையை நம்பி ஹட்ரிக் அடித்து இருக்கும் ராஜேஷ் ஆல் இன் ஆல் அழகு ராஜாவிலும்  ஜெயிக்க வாழ்த்துக்கள் :).


  
கழுகு 

     வித்தியாசமான கதை களம், அருமையான பாடல்கள், மிகை இல்லாத நடிப்பு  எல்லாம் சேர்ந்து படத்தை பார்க்க வைத்துவிட்டது. கிருஷ்ணா, கருணாஸ், தம்பி ராமையா, பிந்துமாதவி நடிப்பு எல்லாம் ஓகே. ஜெயப்ரகாஷ் தேவையில்லாமல் திணித்தது போல இருக்கு. படத்தின் கிளைமாக்ஸ் பார்க்கும் போது குணா கிளைமாக்ஸ் தான் கடைசில் நினைவுக்கு வருது. படத்தின் பட்ஜெட்டில் ஒரு பகுதியை பீடிகாகவே ஒதுக்கி இருப்பாங்க போல கிருஷ்ணா எப்பொழுதும் பீடி பிடித்து கொண்டு இருப்பதை பார்கையில் நமக்கு காதில் புகை வருது. மத்தபடி படம் ஓகே. 



  முதல் பாதி படம் சான்சே இல்ல சூப்பர், ஸ்ருதி எக்ஸ்ப்ரஷன், ரெண்டு பேருக்குள்ள செட் ஆகி இருக்கும் செமிஸ்ட்ரி செம  செம, தனுஷ் ஸ்கூல் பையன் காலேஜ் பையன் கணவனாக நல்லாவே செட் ஆகி இருக்காரு. ஸ்கூல் காதல் எல்லாம் ஜாலியா ரசிக்க முடியுது. இரண்டாம் பாதியில் தனுஷ் நன்றாகவே  நடித்துள்ளார், இருந்தாலும் கதை மற்றும் திரைகதையில் சம்திங் இஸ் மிஸ்ஸிங்.   கதையில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டால் இதை விட நல்ல படத்தை ஐஸ்வர்யா தரமுடியும். கொலைவெறியை கொத்தோ கொத்தென்று கொத்தி விட்டதால் விஷுவலாக பார்ப்பதில் கூட ஆசையில்லாமல் போய்விட்டது. செல்வராகவன் அவர்களிடம் பணியாற்றியதால் அவரின்  பாதிப்பு அப்பட்டமாக தெரிகிறது.



மெட்ரோ ரயில்


சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான வேலைகள் அசுரவேகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். முக்கிய சாலைகளை சுத்தோ சுத்து என்று சுற்றி கொண்டு வரவேண்டி இருக்கிறது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை எல்லாம் ஓரளவுக்கு பெரிய சாலைகள் இதுக்கே இந்த கதி என்றால் தண்டையார்பேட்டை நிலைமையை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. வடசென்னையில்  மிகவும் நெரிசலான சாலைகளில் தண்டையார்பேட்டையும் ஒன்று. அதுவும் மகாராணி பஸ் ஸ்டாப் முதல் பாண்டியன் தியேட்டர் வரையிலான  சாலை முழுக்க மைதாமாவு ஆளூங்க நகைகடையாகவே இருக்கும், இருபதடி சாலை என்பதே அரிதான ஒன்று. ஒன்வே என்றாலே அந்த ரோடில் வண்டி ஓட்ட திக்கி திணறவேண்டும். அந்த ரோட்டில் மெட்ரோ ரயில் பணிகள் ஆரமித்தால் நினைச்சி பார்த்தாலே  பேஜாராதான் இருக்கிறது.



ஸ்பான்சர் 

 விளையாட்டுக்கு, ஒரு நிகழ்ச்சியை நடத்த, கல்லூரியில்  நடத்தப்படும் கலைநிகழ்ச்சி இப்படி எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர் தேவைப்படுகிறது. இப்பொழுது அதன் தாகம் தான் புரியாமல் இந்த ஸ்பான்சர்களுக்கு ஒரு பெயரை கொடுத்து அவர்களை படுத்தும்பாடு இருக்கிறதே சொல்லிமாளவில்லை. உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை பற்றி வானொலியில் ஒலிபரப்ப தனியார் பண்பலை உதவுவதாக இருக்கிறது என்றால் அதை ரேடியோ பார்ட்னர் என்று சொல்லுவார்கள். இதில் இருக்கும் உள்ளர்த்தம் எல்லாவற்றுக்கும் பொருந்தி போகும் அதுவே Strength பார்ட்னர் என்றால்?. சைதாபேட்டை ரயில்வே நிலையத்தில் இருந்த ஒரு தனியார் பண்பலை நிகழ்ச்சி பற்றிய பேனரின் கடைசில் இருந்த வாசகங்கள் இவை.

Title Sponsor
Associate Sponsor
Style Partner
TV Partner
Print Partner
Online Partner
F&B Partner
Fashion Partner
Mobile Partner
Multiplex Partner

ஒரு நிகழ்சிக்கு இத்தனை ஸ்பான்சர், பார்ட்னர்களா?? விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் சில நிகழ்ச்சிகள் Powered by என்று சொல்கிறார்கள் அதற்கு என்ன அர்த்தம் ?? என்னமோ போடா நாராயணா.       



திருவொற்றியூர் அப்டேட்ஸ்

 தானே தலைவி , தங்க தலைவி , தங்க தாரகை, அடுத்த ஜனாதிபதி இன்றைய தமிழகத்தின் முதல்வர் ஜெ.ஜெயலலிதா சென்ற வாரம் அறிவித்த ஒரு செய்தி திருவொற்றியூர் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. திருவொற்றியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதிதுள்ளார் என்பது தான் அந்த நியூஸ். ரொம்பவே வரவேற்கதக்க செய்தி இது.  சரி மேட்டர் என்னன்னா இந்த செய்தியை வாழ்த்தி ரரக்கள் வைத்திருக்கும் பேன்னர்கள் தான், கொஞ்சம் நஞ்சம் இல்லை எங்கே திரும்பினாலும் அம்மாவை வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களின் தொல்லை தான் தாங்க முடியவில்லை. இதை எல்லாம் பார்த்த பிறகு எனது அண்ணனிடம் அவன் டிஜிட்டல் பேனர்  கடையை இந்த பக்கமாக மாற்றி கொண்டு வந்துவிடு என்று  ஒரு கோரிக்கை வைத்துள்ளேன்.



ஈழம்

 
 
 விகடன் மேடையில் பழ.நெடுமாறன் அவர்களின் கேள்வி பதில் படித்து கொண்டு இருந்தேன். இதுவரை வந்த கேள்விகளில் 90 சதவிதம் ஈழம் பற்றியே கேள்விகள் வந்துள்ளதை பார்க்கும் போது, அவர் வேறு எதுவும் செய்யவில்லையோ என்று நினைக்க தோன்றுகிறது. ஈழம் தவிர்த்து அவரிடம் கேள்வி கேட்க நிறைய இருந்தாலும் அதை பற்றி பேச மற்றவர்களுக்கு ஏன் தயக்கம் . ஈழம் என்கிற வட்டத்துக்குள் அவரை சிக்க வைத்துவிட்டர்களோ அல்லது அவரே அந்த வட்டத்தை உருவாக்கி கொண்டாரா?



குறும்படம்

 
 ரொம்ப நாள் கழித்து அருமையான குறும்படத்தை பார்த்த திருப்தியை தந்தது இந்த படம் :)

 







--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Tuesday, April 17, 2012

கூகுள்+


கூகுள்+சில் பகிர்ந்து கொண்டவற்றில் சிலது இங்கே  :)


 

ஹெலிகாப்ட்டர் ஷாட்

    இந்த ஹெலிகாப்ட்டர் ஷாட் அடிகிறத்தில் டோனி செம கில்லாடி. தோனிக்கு முன்னாடியே டெண்டுல்கர் இந்த ஷாட் யூஸ் பண்ணி இருந்தாலும் இந்த டோனி பையன் அடிச்சதை தான் எல்லாருமே பேசிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரமா இந்த ஷாட் எப்படி அடிச்சான்னு நான் அந்த வீடியோவை பார்த்துட்டு இருக்கேன் காரணம் ஏன்னு பின்னே வருவதை படியுங்கள்.

போன வியாழகிழமை மதியத்துக்கு மேல லீவ். அடுத்த நாள் அரசு விடுமுறை அதுக்கு அடுத்த ரெண்டு நாள் வீக்லி ஆப். அடுத்தது ஷிபிட்  திங்ககிழமை நைட் பத்து மணிக்கு தான். அதாவது நாலு நாள் லீவ் கணக்குல வருது. வியாழக்கிழமை மகா கிட்ட பேசிட்டு இருக்கும் போது சனிக்கிழமை வண்டலூர் மிருக காட்சிக்கு போகலாம்ன்னு சொன்னேன். ஏற்கனவே அங்க தான் போயிருக்கோம்ல  எதுக்கு திரும்பன்னு ஒரு கேள்வி,  உங்க சொந்தகாரங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அதனால வா போயிட்டு வரலாம்ன்னு சொன்னதுக்கு ரெண்டு மொத்து விழுந்தது. பிளான் எல்லாம் ஓகே தான் ஆனா வியாழகிழமைக்கும் சனிக்கிழமைக்கும் நடுவுல வெள்ளிகிழமை இருக்குல அங்க வந்து நின்னான் பகவான் சனி. 

நாலு நாள் நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடையிலான 3மணிக்கு ஆபிஸ் கிளம்பி போயிட்டு இருந்ததால் வியாழக்கிழமை நைட் நல்லா தூங்கினாலும் மகாவுக்கும் ஜுனியருக்கும் முன்னாடியே அதாவது 7 மணிக்கே எழுந்துட்டேன் அவங்க சாவகாசமா எப்பயும் போல 8மணிக்கு எழுந்து விடிஞ்சிடுச்சான்னு ஒரு கேள்வி கேட்டாங்க. பத்து மணி இருக்கும் எங்க வீடு டாமி எவனோ வீட்டு வாசலில் நிக்கிறவனை பாத்து சவுண்ட் உட்டுன்னு இருக்கிறது போல கத்திட்டு இருந்துச்சு.  என்னடா எழவு உயிரை வாங்குதேன்னு கேட் கிட்ட போனா தலைவரு அங்க இல்ல. ஷு ஸ்டாண்ட் பார்த்து சவுண்ட் கொடுத்துட்டு இருந்தான். என்னாடான்னு உள்ள பார்த்தா ஒரு எலி!!! ரைட் இன்னைக்கு காலைலே ஒரு காவு கொடுக்க வேண்டி வந்துடுச்சேன்னு கட்டை ஏதாவது இருக்கானு தேடிட்டு இருந்தேன்,, ஒண்ணுமே அகப்படுல ஒரு மூலைல  மகா  தூக்கி போட்ட பிஞ்சி போன துடப்பம் தான் இருந்துச்சு. அதுல கைபுடி மட்டுமே இருந்துச்சு அடி பாகத்துல பேருக்கு இதுவும் ஒரு காலத்தில் துடப்பமா இருந்துச்சுன்னு சொல்லிக்கிற மாதிரி சில நாருங்க தெரிஞ்சிது. முறத்தால் புலியை  விரட்டினாள்  தமிழச்சி என்பதை போல துடப்பத்தால் எலியை அடித்து கொன்றான் ஒரு தமிழன் என்கிற பெயர் கிட்டட்டும் அதை எடுத்துட்டு போனேன். அந்த நேரம் எலி சமையல் ரூம் ஜன்னல் கட்டு வழியா உள்ளே போயிடுச்சு. அங்க சமையல் செஞ்சிட்டு இருந்த அண்ணி அஞ்சு அடி பின்னாடி போயி எலி இங்க இருக்குனு சவுண்ட் கொடுக்க. சமையல் கட்டுக்குள்ள அதிரடியா போயி அதை அடிக்க பார்த்த நேரத்தில் எல்லாம் அது எஸ்கேப் ஆகி அங்கே இங்கேன்னு வீடுகுள்ளேயே சுத்துது. இந்த பக்கம் போனா அந்த பக்கம் அது போகுது நான் அந்த பக்கம் போனா எலி இந்த பக்கம் போகுது. நான் பண்ணிய வேலையை பார்த்து அண்ணன் பொண்ணு சிரிக்கிற பாருங்க அப்படி சிரிக்கிற. அந்த நேரம் பார்த்து அண்ணனும் மகாவும் வீட்டுக்கு வெளியே நிக்க எலி எங்கேயும் போக வழி இல்லாம  வாசல் வழியா போக அங்க நின்னுட்டு இருந்த அண்ணன் காலு நடுவுல ஓட அவன் துள்ளி குதிக்கிறான்.  இந்த ரணக காலத்திலும் அண்ணன் பொண்ணும் எங்க வீட்டுக்கு  ஜுனியருக்கும் அவ்வளவு சிரிப்பு. ஒரு வழியா எலி வெளிய ஓடி போயிடுச்சு.  இந்த ரெண்டு வாண்டுகளும் எலியை பார்க்க ஆசைப்பட்டு வெளியே போயி நிக்கிறாங்க, வெளியே ஓடி போன எலி வேற எங்கேயாவது போயிருக்க வேண்டாமா. எழவு திரும்ப வீடுக்குள்ள  வரவா  ட்ரை பண்ணனும், இந்த தடவை என்னோட காலுக்குள்ள புகுந்து எஸ்கேப் ஆகா பார்த்ததை ஹெலிகாப்ட்டர் ஷாட் போல ஒரு அடிவச்சேன் அதோட மண்டைல. சுர்ர்ர்ர்ன்னு முதுல ஒரு வலி, ஒரு செகண்ட் தான்  எசக்கு புசுக்கா முதுகுல  நரம்பு  எங்கேயோ போயி சுளுக்கிச்சு. எலி அடிக்க போயி வலி வந்துடுச்சு,  முணு  நாளா  உட்கார முடிய, நடக்க முடியல முக்காவாசி நேரம் படுத்துட்டே இருந்தேன். நான் நடக்கிறதை பார்த்து  பேரழகன் படத்துல வரும் சூர்யா போல நடக்குறீங்கன்னு மகா வேற கமெண்ட் கொடுக்குறா. சுளுக்கு எடுக்குறவங்க யாராவது இருப்பாங்களான்னு தேடி பார்த்தா ஒருத்தரும் இல்ல. இன்னைக்கு பிசியோதெரபி கிளினிக் போனேன் ஓரளவு பரவால.  எல்லாத்தையும் விட ஒரே ஒரு கவலை அந்த எலி உயிரோட  இருக்குதா இல்ல செத்துச்சான்னு தான். ஒரு ஹெலிகாபட்டர் ஷாட் அடிச்சதுகே இந்த நிலைமைல இருக்கேன் இந்த டோனி எப்படி சளைக்காம யார்கர் பால் எல்லாம் அந்த வாங்கு வாங்குறான்னு தெரியல..

17 Apr 2012


சுனாமி

சுனாமி வந்ததோ இல்லையோ அதை பார்க்க ஒரு கூட்டம் பீச்க்கு போனது தான் பெரிய காமெடி . நேத்து சன் டிவில ரெண்டு முணு குரூப் பேட்டி கொடுத்துச்சு. சுனாமி வருதான்னு பார்க்க வந்தோம் இதுவரைக்கும் வரலன்னு. அட நாதேரிகளா நீங்க பார்க்க வந்த நேரத்துல சுனாமி வந்தா என்ன பண்ணுவீங்க!!! மூளையை வீட்டுலே கழட்டி வச்சிட்டு வந்துடீங்களா ? நிலநடுக்கம் வந்த போது நான் சாப்பிட்டு இருந்தேன், தூங்கி இருந்தேன், நடந்துட்டு இருந்தேன்னு வேற சொல்லிட்டு இருந்தாங்க, ரெண்டு செகண்ட்ல உலகமே மாறிட்ட மாதிரி ஒரு பீலிங் காமிகிறாங்க பாருங்க அங்க நிக்கிறான்டா தமிழன் :)). எங்க வீடு கடற்கரைல இருந்து ஒரு கிலோமீட்டர் இருக்கும் . பிரபாகர் வீடு பீச் பக்கத்துல இருக்கு, நேத்து மதியம் அவனுக்கு போன் பண்ணி மச்சி சுனாமி வந்த சொல்லுடா நான் எஸ்கேப் ஆகா வசதியா இருக்கும்ன்னு சொன்னேன். அவன் எனக்கு மேல பயந்துட்டு இருக்கான் போல நானே உன் வீட்டுக்கு வரலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்னு சொல்லுறான். ஆகா மொத்தத்தில் எல்லோரும் பயந்துட்டு இருந்தது தான் மிச்சம் சுனாமியின் எச்சம் கூட பார்க்கல.

12 Apr 2012

டயட்

தொப்பை பெருத்துட்டு வருதேன்னு ஒரு கவலை.. இதுக்கு அதிரடியா ஒரு நடவடிக்கை எடுக்கணும்னு ரெண்டு நாளைக்கு முன்னால இருந்து டயட்ல இருக்க ஆரமிச்சேன். ஆபீசில் இருக்கும் ஒரு நண்பர் என்ன என்ன சாப்பிடனும் எப்போன்னு அரைமணி நேரம் கிளாஸ் எடுத்தாரு. இதை அப்படியே மகா கிட்ட சொல்லி அதன்படி தான் இனி சாப்பாடு மதியம் சாதத்தை கம்மி பண்ணி நார் சத்துள்ள காய்கறிகள் ரெண்டு முணு ரெடி பண்ண சொல்லி அதை அவ பாலோ பண்ண ஆரமிச்சா. போன சண்டே ரிலையன்ஸ் பிரெஷ்ல வாங்கிய மஷ்ரூம் டைம் முடிய போகுது அதனால அதை ஏதாவது பண்ணுன்னு நேத்து சாயந்திரம் சொன்னேன், கூடவே மலபார் பரோட்டா வேற அங்க இருந்து வாங்கி வந்து இருந்தோம். சரி ரெண்டே ரெண்டு மட்டும் சாப்பிடலாம்ன்னு ஆரமிச்சேன். மகா சோதனை முயற்சியா செய்யுற எதுவும் உருப்படியா இருந்தது இல்ல, செய்ய செய்ய தான் அது நல்லா வரும். நேத்துன்னு பார்த்து அவ செஞ்ச மஷ்ரூம் கிரேவி அட்டகாசமா இருந்துச்சு. முதலில் ரெண்டு பரோட்டாவை உள்ளே தள்ளியாச்சு, ருசி கண்ட பூனை போல இன்னும் வேணும்னு நாக்கும் வயிறும் கேக்குது. மகாவை ஒரு லுக்கு விட்டேன், சிரிச்சிட்டே இருந்தவ ஒரு பரோட்டா தந்தா, என்ன ஆச்சோ தெரியல இன்னும் ரெண்டு பரோட்டாவையும் ரெடி பண்ணி வச்சிகிட்டா, முணாவது பரோட்டா உள்ளே போனதும் எனக்கு முன்னாடி இன்னும் ரெண்டு பரோட்டா.. அப்பறம் என்ன நடந்துச்சுன்னு சொல்லனுமா என்ன :))) ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காதுன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க :)))........

இன்னைல இருந்து நான் டயட் :)))))

11 Apr 2012

பிரெஞ்சு கிஸ்

இந்த வாரம் KFC போகணும்னு நினைச்சேன், இன்னைக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. டி.நகர்ல இருக்கும் KFC போயி ஒரு பர்கர், ஒரு பிரைடு சிக்கன், கொஞ்சம் பிரெஞ்சு ப்ரைஸ் வாங்கி சாப்பிட்டு வந்தேன். மெயின் ரோடுல போனா சுத்திட்டு போகணுமேன்னு வெஸ்ட் சைதாபேட் புகுந்து ஆலந்தூர் ரோடுல போயி கிண்டி போகலாம்ன்னு தினக் பண்ணிட்டே வண்டியை மெதுவா உருட்டிட்டு போனேன். KFCல இருந்து கிளம்பி கொஞ்ச தூரம் வந்து இருப்பேன், லெப்ட் சைடுல நின்னுட்டு இருந்த காருக்கு பக்கத்துல ஒரு பையன் யமஹா பைக்ல இருந்து உள்ளே இருந்த யாரோ ஒருத்தங்க கிட்ட பேசிட்டு இருந்தான். என்ன ஆச்சுன்னு தெரியல காரில் இருந்து செம பிகர் வெளியே வந்து ரோடுன்னு கூட பார்க்காம அந்த பையனுக்கு நச்சுன்னு பிரெஞ்சு கிஸ் கொடுத்துட்டு வண்டியை எடுத்துட்டு போயிட்டே இருக்கா. ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகிடுச்சு எனக்கு, சென்னை ரொம்பவே முன்னேறிட்டு வருதுடேய் :)))

 2 Apr 2012


Use the Technology :)

கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஜூனியர் ரைம்ஸ் ரசிச்சி பார்க்கிறான்னு சொல்லி இருந்தேன்ல அதுல இன்னொன்னும் சொல்லி இருந்தேன் அண்ணன் அவன் லேப்டாப் எடுத்துட்டு போயிடுறதுக்குள்ள ஒரு டப்பா கம்ப்யூட்டராச்சும் வாங்கிடனும் இருந்தேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி அவன் லேப்டாப் எடுத்துட்டு போயிட்டான். இதனால ஜூனியர் கொஞ்சம் அப்செட், இனி ரைம்ஸ் எப்படி எதுல பார்க்கிறது.. எல்லா ரைம்சையும் மொபைலில் தெரிவது போல 3g பார்மெட்டுக்கு மாத்தி கொடுத்தேன். அதும் மகா மொபைல மட்டுமே தெரியும் என்கிட்ட இருக்கிறது ரொம்ப பேசிக் மொபைல். இப்போ அடுத்த பிரச்சனை ஆரமிச்சிடுச்சு, மகா யார் கிட்டையாவது போன்ல பேசும் போது கரெக்டா பாட்டு போடு பாட்டு போடுன்னு ஒரே ரகளை. ரெண்டு நாளா தலைவரு தான் போன் யூஸ் பண்ணுறாரு , இதில் ஒரு நல்ல செய்தி எனக்கு அடிக்கடி வீட்டில் இருந்து போன் வருவது தவிர்க்கப்பட்டுள்ளது
:)) .

22 Mar 2012