Tuesday, August 17, 2010

0° (ஜீரோ டிகிரி) - சாரு நிவேதிதா






நான் கோவையில் வேலைவெட்டி இல்லாமல் கம்யூனிஸ்ட் சங்கத்தில் உட்கார்ந்துகொண்டு அங்கு வரும் தினமணி பத்திரிகையை பெருசுகளுடன் போட்டி போட்டு கொண்டு படிப்பேன். ஒரு முறை அங்கு இருந்த இணைப்பு புத்தகத்தில் (தினமணியா அல்லது தினமலரா என்று தெரியவில்லை)  ஜீரோ டிகிரி பற்றி காட்டமான விமர்சனம் வந்தது. அப்போது எல்லாம் சாரு என்றால் யார் என்றே எனக்கு தெரியாது.   கவியரசர் வைரமுத்துவை தவிர மற்ற இலக்கியவாதிகள் தெரியாது என்பதே உண்மை (வைரமுத்து இலக்கியவாதியா!!!). பதிவுலகம் வந்த சமயத்தில் நான் அதிகம் படித்தது www.charuonline.com தான். சாருவின் கோணல் பக்கங்கள் எவ்வளவு அருமை, நானும் ஒவ்வொரு நாளும் அவரின் வலைதளத்தை சென்று இன்று ஏதாவது எழுதி இருக்காரா என்று அடிகடி எட்டி பார்ப்பேன். ஜீரோ டிகிரி பற்றி நிறைய விவாதங்கள் வந்த போது சரி இந்த புத்தகத்தில் என்ன தான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று தான் வாங்கினேன். எனது அறிவுக்கு எட்டியது வரை முதல் வாசிப்பில் புரிந்து கொள்ள கொஞ்சம் அல்ல ரொம்பவே தடுமாறினேன். 



0° (ஜீரோ டிகிரி)

0° என்கிற இந்த நாவலை நான் பிரதியெடுக்க துவங்கி இருக்கும் இந்த கணத்தில் வாசுகியான நீ

- குப்புற கவிழ்ந்தபடி திருமண கனவுகளில் முழ்கியருக்கலாம்.

- கவிதை எழுத்துகொண்டு இருக்கலாம் அல்லது கடிதம் அல்லது

- காலையில் இருந்து ஒன்பதாவது நபருடன் படுக்க வேண்டி வர முந்தின தினம் பதினெட்டு நபர்களுடன் படுக்க நேர்ந்ததை நினைத்து கோபமும் சலிப்பும் எரிச்சலுமாக இந்த ஒன்பதாவது நபர் பார்ப்பதற்கு படித்தவனைப் போலவும் நல்ல வேலையில் இருப்பவனைப் போலவும் மீசையும் முகத்தையும் வழவழவென நன்கு மழித்தவனாகவும் இருப்பதால் இவனுக்கு குழியைக் காட்டாமல் வெறும் தொடையை மட்டும் காட்டி அதற்குள் செலுத்தச் செய்து எமாற்றிவிடலாமவென திட்டம் திடிக்கொண்டுடிருக்கலாம்.

- கஞ்சா அடித்துக்கொண்டு இருக்கலாம்

- கறுப்பில் சினிமா டிக்கெட் விற்றுக்கொண்டுட்ருக்கலாம் 



இது போன்று எண்ணற்ற செயல்களில் ஏதாவது ஒன்றை செய்துகொண்டு இருக்கலாம் இந்த வாசுகி. சரி யார் இந்த வாசுகி??  இந்த புத்தகத்தை படிக்கும் ஆண் பெண் என்கிற பாகுப்பாடு எல்லாம் இல்லாமல் அனைவரையும் வாசுகி என்று அழைக்கிறாரா?? பதிலை நீங்களே யூகித்து கொள்ளுங்கள் என்று முதலிலே ஆசிரியர் சொல்லாமல் சொல்லிவிடுகிறர்ர். 


இந்த புத்தகத்தை என்ன வகையில் கொண்டுவருவது என்று தெரியவில்லை. இது நாவல் வடிவத்தில் இல்லை ஆனால் நாவலை போல இருக்கிறது. சிறுகதை போல இல்லை ஆனால் சிறுகதை போல இருக்கிறது. கட்டுரை போல இருக்கிறது ஆனால் கட்டுரை இல்லை!!! அதாவது இருக்கு ஆனா இல்ல .. 

கஸர்மேனியா, பகாரக், நஸோர்னோ, கஸர்மேனியர்கள், கார்மேனியர்கள், பெயர் இல்லாத ஊரில் பெயர் இல்லாத பகுதியில் இறந்துகிடந்த அல்லது கொலைசெய்யப்பட பலரின் உடல்கள் தென்ப்படுகிறது, ஆத்தா உன் கோவிலிலே, கலாஸ்ரீ, பன்றி, அம்மு, ப்ரியஸ்ரீ, நீலாஸ்ரீ, முனியாண்டி, மிஸ்ரா,ப்ரஸில், அர்ஜென்டினா, ஆப்பிரிக்கா கண்டம், நேநோ, ஜலஜலஸ்ரீ, அந்தோஸ் மலை, இன்கா அரசு, நெருதா, ரில்கே, etc,etc,etc...,


இந்த பெயர்களில் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா?? இருக்கும் பெயர்களில் உங்களுக்கு புலப்படாத அல்லது இதுவரை தெரிந்து கொள்ளாத பெயர்கள் உள்ளதா ?? கண்டிப்பாக பலது இருக்கும் கஸர்மேனியாக்கும்,  ஜலஜலஸ்ரீக்கும் என்ன சம்பந்தம்?? படிக்கும் எல்லோருக்கும் இந்த சந்தேகம் வரத்தான் செய்யும். எழுதிய எல்லாவற்றையும் ஒரு பெரிய டப்பாவில் குலுக்கி  போட்டு ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த அடுத்த பத்தி அல்லது பக்கத்தில் இணைத்து உள்ளார் ஆசிரியர். எதற்கு என்று நாம் யோசிக்கும் போதே ஆசிரியர் சொல்லிவிடுகிறார் ஜெனஸிஸ்க்கு பிரதியெடுக்கும் போது உற்சாகத்தில் அத்தியாங்கள் கலைந்துபோயவிட்டன என்று. 

சாருவின் எழுதகளை ப்ளாக்கில் மட்டும் படித்தவர்களுக்கு இது வேறு மாதிரியான உலகத்தை கண்முன் நிறுத்தும். 

மீள் வாசிப்பு என்பது சிலருக்கு வேறுமாதிரி இருக்கலாம், அதாவது அந்த புத்தகம் மிகவும் பிடித்து போய் படிக்கலாம் அல்லது இன்னும் வேறுமாதிரி புரிந்துகொள்ள படிக்கலாம். எனது மீள் வாசிப்பு எல்லாம் ஒவ்வொரு பக்கங்களும் வேறு ஒரு கண்ணோட்டத்தை காமிக்கும் அதை நான் மிகவும் ரசிப்பேன். முதல் வாசிப்பில் இருக்கும் போதை என்பது டாஸ்மாக் கடை சரக்கு போன்றது, ஒரிஜினல் எது டுப்பிகெட் எது என்று புரியாமல் இருக்கும், ஆனால் மீள் வாசிப்பு என்பது வெகுநாட்கள் பூமிக்கு அடியில் புதைத்து வைத்த இருந்த வைன் போன்றது. குடிக்க குடிக்க சொர்கத்தை அருகில் காட்டும்.  அது சில வைன்களுக்கு மட்டுமே. 

ஜீரோ டிகிரி நாவலை எத்தனையோ முறை படித்துவிட்டேன், ஒவ்வொரு முறையும் எல்லா பக்கங்களும் புதியதுபோலவே இருக்கிறது. அவந்திகாவின் பகுதியை படித்த போது என்னை அறியாமலே அவர்மீது அனுதாபம் ஏற்ப்பட்டது. குமுதம் பதிரிகையில் வெளிவந்த அவரின் புகைப்படத்தை பார்த்து இவருக்கா இந்த நிலைமை வந்தது என்று நொந்துகொண்டேன். 



எல்லா உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய புத்தகம். காமம், காதல், அடிதடி, கெஞ்சல் இன்னும் பிற சங்கதிகள் என்று எல்லாமே உள்ளது. 


சாருவின் பலமே உண்மையை பட்டவர்த்தமாக சொல்லிவிடுவது தான். இந்த புத்தகத்தில் அவர்   சொல்லி இருக்கும் பலவிஷயங்கள் எதில் ஒன்றாவது நாம் சம்பந்தம்ப்பட்டு இருப்போம். 




புத்தகத்தை படித்து பாருங்கள் புதியதோர் உலகத்தில் நுழைந்தது போல இருக்கும் . 






With Love
Romeo ;)

14 comments:

  1. நைஸ் ரிவ்வியூ.. ரோமியோ..

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க மக்கா,வாழக உங்கள் சேவை

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம் ரோமியோ!

    ReplyDelete
  4. வாசுகி யாருன்னு சொன்ன விதத்துலயே டெரர் ஆகிட்டேன். மீ த எஸ்கேப் ரோமியோ

    ReplyDelete
  5. Well said. Well said. Well said. Well said. Well said. Well said. Well said.

    ReplyDelete
  6. சாரு உருப்படியா எழுதுனது இந்த ஒன்னைத்தான்!

    ReplyDelete
  7. சாரு ஜீரோ டிகிரிக்கு பின் சாரு எழுதியது எதுவும் ஏன் நன்றாக இல்லை என்றால் ஜீரோடிகிரி முழுவதும் சாருவுடையது அல்ல என்பதுதான் , ரமேஷ்-பிரேமால் முழுக்க திருத்தி எழுதப்பட்ட படைப்பு அது , அதற்க்கு பின் ரமேஷ்பிராமிடமிருந்து சாரு விலகிவிட்டதால் அவரது படைப்புகள் எந்த படிப்பூக்கமோ தெளிவோ இல்லாமல் சரோஜாதேவி கதைகள் போல உள்ளன,

    மேலும் விவங்கள் இங்கே : http://naayakan.blogspot.com/2010/01/blog-post_29.html

    ReplyDelete
  8. சீக்கிரம் வாங்கிடறேன் :)

    நல்ல விமர்சனம்

    ReplyDelete
  9. கூப்பிட்டீங்களா ரோமி? :)

    ஒரு வழியா விமர்சனம் போட்டாச்சு போல! :)

    ReplyDelete
  10. //ரமேஷ்-பிரேமால் முழுக்க திருத்தி எழுதப்பட்ட படைப்பு அது , அதற்க்கு பின் ரமேஷ்பிராமிடமிருந்து சாரு விலகிவிட்டதால் அவரது படைப்புகள் எந்த படிப்பூக்கமோ தெளிவோ இல்லாமல் சரோஜாதேவி கதைகள் போல உள்ளன,//

    சார் யார் இந்த ரமேஷ் பிரேம்,ஏன் இந்த மொட்டை விளம்பரம்,இவர்கள் இளையராஜா பற்றி எழுதிய புத்தகம் எவ்வளவு படித்தும் ஒட்டவில்லை,பதியவில்லை,ஒரு ஈர்ப்பு இல்லை,எப்படி ஒரு புத்தகம் இருக்கக்கூடாது என்பதற்கு அந்த புத்தகம் ஒரு சான்று,எப்படி இசைஞானியின் பொன்னான நேரத்தை இந்த இரண்டு வீணர்கள் விரயம் செய்துள்ளனர் என்றே எண்ணத்தோன்றியது,நல்ல வேளை அந்த இருவரை வேறு எங்கும் கேள்விப்படவில்லை,
    வலைப்புக்களில் இந்த இருவரைவிட மிக அருமையாக எழுதும் நல்ல எழுத்தாளர்களை தெரியும்.வீண்ர்களுக்கு வெட்டி விளம்பரம் செய்யாதீர்கள்,loosers

    ReplyDelete
  11. //ரமேஷ்-பிரேமால் முழுக்க திருத்தி எழுதப்பட்ட படைப்பு அது , அதற்க்கு பின் ரமேஷ்பிராமிடமிருந்து சாரு விலகிவிட்டதால் அவரது படைப்புகள் எந்த படிப்பூக்கமோ தெளிவோ இல்லாமல் சரோஜாதேவி கதைகள் போல உள்ளன,//

    ;-) செம காமெடி இது ;-) .. அந்தப் பைத்தியக்காரன் லின்க் போயி பார்த்தேன் ;-).. இந்தப் பைத்தியக்காரன், சாருவாண்ட பல புக்கு திருடிக்கினு போயி, ஃபூக்கோ தெரிதான்னு பீலா உட்டுக்கினு இருக்கிறதா நானு படிச்சிருக்கேன் ;-) ஸோ, இந்த பஜனையெல்லாம் இங்க வேணாம் பாஸ் ;-) ..

    மேலே கீதப்ரியன் போட்ருக்காரே - வீணர்களுக்கு வெட்டி வெளம்பரம் செய்யாதிங்கன்னு - அது சில பைத்தியங்களுக்கும் சேர்த்துத்தான் ;-) .. இந்த மாதிரி மெண்டல்களுக்கு எதுக்கு வீண் விளம்பரம் ;-) இதையெல்லாம் விட காமெடி என்னன்னா, பைத்தியம், எப்புடி வளைஞ்சி நெளிஞ்சி அஷ்டகோணலா வணக்கம் போடும்னு எனக்குத் தெரியும் ;-)

    கொஞ்ச நாள் முன்னாடி, ஏதோ பிரச்னைல மாட்டிக்கினு தர்ம அடி வாங்குன ஆள் பேரும் பைத்தியக்காரன்னு எங்கியோ படிச்சேன் ;-) அதாவது, ஏதோ கட்டுரை ராவோட ராவா திருட்டுத்தனமா அடிச்சி, யாருக்கோ அனுப்பி, பப்ளிஷ் பண்ணி, செம மாத்து வாங்கினாருன்னு படிச்சேன் .. ;-) அது இந்தப் பைத்தியம் தானா? ;-) மதி இண்டியா தெளிவு படுத்தவும் ;-)

    பி.கு - சும்மா எல்லாரையும் வெட்டித்தனமா தாக்கிக்கினு இருந்தா, அடி விழத்தான் செய்யும்.. ;-)

    ReplyDelete
  12. நல்லதொரு பகிர்வு ரோமியோ.தேளு கூல்...டவுன் கூல் டவுன்..

    ReplyDelete
  13. நிஜமாவே இவ்ளோ நல்லாவா இருக்கு அந்தப் புத்தகம். உங்களை நம்பி வாங்கறேன். என் காசு வீணாச்சுன்னா அப்புறம் கவனிச்சுக்கறேன் ரோமியோ. :)

    ReplyDelete