Wednesday, February 15, 2012

தெர்மக்கோல் தேவதைகள் - சங்கர் நாராயண்

கேபிள் சங்கர் என்கிற அடைமொழியுடன் தான் இவர் எனக்கு அறிமுகமானார். சினிமா விமர்சனங்கள் தான் இவரது களம் என்று நினைத்து கொண்டு இருந்த காலத்தில் முதல் புத்தகமான லெமன் ட்ரீ படித்த போது தான் கதைகள் எழுதுவதிலும் வல்லவர் என்று தெரிந்து கொண்டேன். அந்த சிறுகதை தொகுப்பு அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. அதற்கான காரணங்கள் பல உண்டு நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் சிறுகதைகளை படிப்பதில் நாட்டமே இருந்ததில்லை. இப்போது வரை சிறுகதைகளை அவ்வளவாக நேசித்து படிப்பதில்லை, குறிப்பிட்ட காரணங்கள் என்று சொல்ல முடியவில்லை இதை முன்பே எனது பதிவுகளில் சொல்லிருக்கிறேன்.  சீரியஸ் புத்தகங்களை படித்து கொண்டு இருந்த நேரத்தில் ஒரு சின்ன மாறுதலுக்காக தெர்மக்கோல் தேவதைகள் படிக்கச் ஆரமித்தேன். சும்மா சொல்ல கூடாது விறு விறு என்று எல்லா கதைகளும் சீரான வேகத்தில் சென்றதால் முழு தொகுப்பையும் படித்து முடித்து தான் புத்தகத்தை கீழே வைத்தேன். 




முதல் தொகுப்பில் வந்த கதைகளுக்கும் இந்த தொகுப்பில் வந்த கதைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள். மனதில் படியாமல் சென்ற முதல் தொகுப்பு கதைகளை போல இல்லாமல் சுந்தர் கடை, கருணை, காளிதாஸ், பிரியாணி, சேச்சு பாட்டி, ராஜலட்சுமி  கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் உள்ளுக்குள் விஷுவலாக உருமாறும் போது அதன் வீச்சம் அதிகம். சேச்சு பாட்டியின் முடிவு மசாலா சினிமா படத்தின்  கிளைமாக்ஸ் போல இருந்தாலும் அதற்கு முன்பு வரை பாட்டியை ரசிக்க முடிகிறது. 

மாதவன் கதாபாத்திர படைப்பு சராசரி ஒரு டிராபிக் போலீஸ்காரரை  கண்ணில் காட்டுகிறது. ஒன்றும் செய்ய முடியாத இடத்தில இதாவது கிடைச்சுதே என்று நினைக்கும் சராசரி மிடில் கிளாஸ் மாதவனை  நினைவுபடுத்துகிறது. .



காளிதாஸ் கதையின் கடைசியில் வரும் காரணத்தை படிக்கும் போது எல்லாமே இருக்கு அனுபவிக்க தான் ஆளில்லை என்று கூறும் பெரும் பணக்காரனுக்கும், காளிதாசுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. கிளைமாக்ஸ் படித்து விட்டு கதையை திரும்ப படிக்கும்போது வலிகளை உள்ளுக்குள் வைத்து கொண்டு அந்த தகப்பன் எப்படி வாழ்த்து கொண்டு இருக்கிறான் என்று கற்பனை செய்து பார்த்தேன் இன்னும் மனதை பாரம் ஏறியதை போல உணர்ந்தேன். இந்த கதையின் இன்ஸ்ப்ரேஷன்   நான் கடவுளாக இருக்கலாம். 


மகாநதி கதையின் முடிவை எப்படி ஏற்றுகொள்வது என்று தெரியவில்லை. இதற்காகத்தான் அழுகிறாள் இல்லை இதற்காக இருக்குமோ  என்று இரண்டு முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது. 


ராஜலட்சுமி, ஜெயா,  ராஜி , பிரியா (எ) பிரியதர்ஷினி கதைகள் அருமை. அட்வைஸ் பண்ணுவதில் கொஞ்சம் அமுக்கி வாசித்திருந்தால் இன்னும்  நன்றாக இருக்கும். 

ராஜலட்சுமி கதை களம் நமக்கு அறிமுகமானது தான். ராஜலட்சுமி போல நிறைய பெண்கள் தங்கள் வாழ்கையை அதிரடியாக வாழ்வதாக நினைத்து  கொண்டாலும் அவர்களுக்குள் இருக்கும் ஆசைகளை அவ்வளவாக வெளிக்காட்டி கொள்வதில்லை. அவ்வாறு காட்டி கொண்டு அதில் ஏற்படும் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் மிகுந்த மனஉளைச்சலையும்  எதிர் கொள்ளமுடியாமல் தவறான முடிவு எடுத்துவிடுகிறார்கள்.  அடிகடி நாமும் செய்தி தாள்களில் படித்து கொண்டு தான் இருக்கிறோம், இளம்பெண் வயிற்று வலியால் தற்கொலை செய்து  கொண்டார் என்று யாருக்கு தெரியும் அது தான் உண்மையென்று !!!


சங்கர் என்கிற கேரக்டர் ஒவ்வொரு கதையிலும் நண்பனாக வந்து மற்றவர்களுக்கு அறிவுரைகளை வாரி வழங்குகிறார். பிரச்சனைகளை சமாளிக்க தீர்வுகளை சொல்கிறார். ஆகா மொத்தம் சங்கர் என்கிற கதாபாத்திரம் இல்லை என்றால் நான்கு ஐந்து கதைகள் முழுமை அடையாமல் சொதப்பி இருக்கும். அதே சமயம் எல்லா கதைகளிலும் இந்த நண்பன் என்கிற கேரக்டர் வருவதை அதிகமாக ரசிக்க முடியவில்லை. அரசர்களுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அரசவையில் இருக்கும் ராஜதந்திரி ஆட்களில் அறிவுரைகளை கேட்பது போல சங்கரை இவர்கள் உபயோகிதுள்ளார்.



தேவதைகள் என்கிற தலைப்பு ஏற்றது போல முக்கால்வாசி கதைகளில்  தேவதைகளே உலாவுகிறார்கள். புத்தகத்தை ரொம்பவும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட முடியாது என்றாலும் படிப்பதற்கும் ஒரு சின்ன செஞ் வேண்டும் என்று நினைத்து படிக்கும் போது ஏமாற்றம் தரவில்லை..



-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Wednesday, February 8, 2012

சாமியாட்டம் - எஸ்.பாலபாரதி


2003 - 2011வரை வெவ்வேறு பத்திரிகையில் வெளிவந்த அவரின் பன்னிரண்டு கதைகள்  கொண்ட சிறுகதை தொகுப்பு .

எந்த ஒரு சிறுகதை தொகுப்பை படிக்க ஆரமித்தாலும் ஒரு கதை முடிந்ததும் சிறிய இடைவேளை எடுத்து கொண்டு தான் அடுத்த கதைக்கு செல்வேன்.  பன்னிரண்டு கதைகளை படிக்க இரண்டு நாட்கள் ஆனது.

கோட்டி முத்து தொடங்கி நகரம் வரை ஒவ்வொரு கதையிலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு வலியை சுமந்து கொண்டு செல்லும் கதைகள்.

கதைகளின் களம் ஒன்று மும்பையாக இருக்கிறது அல்லது ரமேஸ்வரமாக இருக்கிறது.  பன்னிரெண்டில் எனக்கு மிகவும் பிடித்தது பாரதி பாட்டு, துரைப்பாண்டி, பேய் வீடு, நம்பிக்கை, சாமியாட்டம், வேண்டுதல், விடிவெள்ளி.

  
இதில் சாமியாட்டம் கதைக்குள் செல்லும் போது ஏதோ கட்டுரையை படிக்கிறது போல இருந்தது. கதைக்கு செல்லும் போது தான் உறைகிறது அட முதலில் வருவது எல்லாம் சரியாதான்   சொல்லி இருக்காரு. அதே போல நம்பிக்கை பெரிய பிரச்னையை சமாளிக்க சின்னதாக ஒரு பொய் போதும். பாரதி பாட்டு கதை சொல்லிய விதம் அருமை, கதைக்குள் பாரதியார் பாடலையும் சேர்த்து கதையின் முடிவும் பாரதியார் பாடலின் முடிவும் சூப்பர்.

பேய் வீடு கதையில் அந்த தெருவை வர்ணித்து இருப்பது அருமையாக இருக்கிறது. இன்னும் பாதி பக்கம் தானே மீதம் இருக்கிறது கதையை எப்படி முடிக்க போகிறார் என்கிற ஆவல் அதிகமா கடைசி நான்கு வரியில் கதையை அளவாக முடித்துவிடுகிறார். மும்பை வாழ்க்கை பற்றி சொல்லும் நகரம் படித்த பிறகு அந்த நகரம் நரகமாக தான் தெரிந்தது.


முழு தொகுப்பில் ஏற்கனவே அவரது வலைத்தளத்தில் படித்த  இரண்டு முன்று கதைகள் இருக்கிறது. ஏற்கனவே படித்ததால் சுவாரஸ்யம் கம்மிதான்.  எளிமையான நடை என்பதால் வேகமாகவும் ஈஸியாக புரிந்து கொண்டு படிக்கவும் எதுவாக இருக்கிறது.
   


ஒவ்வொரு கதையாக எடுத்து அதை விமர்சனம் செய்தால் மற்றவர்கள் அதை படிப்பதில் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் தனியா எழுதுவதை தவிர்த்துவிட்டேன்.  ஒரு நல்ல வாசகனுக்கு என்ன முக்கியம்?? தான் படிக்கும் புத்தகம் எந்த வகையிலும் ஏமாற்ற கூடாது என்பதே அது இந்த புத்தகத்தில் உள்ளது. எந்தவகையிலும் ஏமாற்றவில்லை என்றாலும் கதையில் களம் இரண்டு நகரத்தை விட்டு வெளியே வந்து இருந்தால் வேறு ஒரு  கதை வேறு ஒரு வாசிப்பனுபவம் கிடைத்து இருக்கும். இரண்டு நகரங்களை மட்டுமே கதைகள் சுற்றுவதால் கதையின் களம் நெருக்கத்தை விட வேறு இடமே இவர் பார்க்கவில்லையோ என்று நினைக்க தோன்றுகிறது.   


சாமியாட்டம் சிறுகதையை குறும்படமாக எடுத்தால் நிச்சயமாக தனி முத்திரை படைக்கும்.




--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)






Monday, February 6, 2012

சங்கதிகள் 06/Feb/2012

புத்தகம் 

இந்த முறை வாங்கிய புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக படிக்காமல் கலந்து கட்டி படித்து கொண்டு இருக்கிறேன். ஒருநாள் நெடுஞ்சாலை என்றால் அடுத்த நாள் சாமியாட்டம் அடுத்த நாள் திரைச்சிலை. இப்படி படிப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது :). படித்த புத்தகங்களை பற்றி விமர்சனம் எழுத வேண்டும்.


படம்
 
நண்பன்  


சத்யன் சான்சே இல்ல படத்தின் ஹீரோவே அவருதான். இப்படி காபி செய்வதற்கு ராஜா, கண்ணன் போன்ற ஆட்கள் இருக்கும் போது ஷங்கர் ஏன் வந்தார் என்று தெரியவில்லை. விஜய் தனது இமேஜ் பார்க்காமல் அடிவாங்கி நடித்ததை தான் நம்ப முடியவில்லை.  ஆல் இஸ் வெல். 


வேட்டை 


அதிஷாவின் விமர்சனத்தில் சமிரா ரெட்டியை ரொம்பவே வாரி இருந்தார். படித்துவிட்டு எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.  வாரணம் ஆயிரம் படம் வந்த சமயத்தில் சமிராவை பார்த்து எப்படி ஜொள்ளு விட்டு கொண்டு இருந்தேன் என்று எனக்கு தான் தெரியும். இங்கே சின்ன பிளாஷ்பேக்  எனக்கு  கல்யாணம் ஆனா புதியதில் நானும் மகாவும் பார்த்த முதல் படம் வாரணம் ஆயிரம். மனைவியை பக்கத்தில் வைத்து கொண்டே சமிராவை பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டு இருந்தேன் என்பது தனி வரலாறு. அப்படி இருந்த சமிராவா இப்படி !!! சத்தியமா பார்க்கவே சகிக்கவில்லை, சரி விடுங்க சொந்த கதையை அப்பறம் பேசலாம் நொந்த கதையை சொல்லுறேன் கேளுங்க. படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை அடுத்து என்ன நடக்கும்ன்னு நான் மனதுக்குள் என்ன நினைத்தேனோ அது அது அப்படியே நடந்தை கண்டு அப்படியே ஆச்சரியப்பட்டேன். செம காமெடி சீன் கிளைமாக்ஸ்ல  மாதவன் சிங்கம் வந்துடுச்சு சொல்லுவாரு அப்போ ஆரியா கொடுக்குற என்ட்ரி சாமி சத்தியமா முடியல, ஆரியா செம கிளாப்ஸ் வாங்கிய இடம் அதுவா தான் இருக்கும். சிரிப்பை தவிர வேறு ஒன்றும் நினைவுக்கு வரவேல்லை. ஆரியாவிற்கு இந்த மாதிரி மாஸ் படம் எல்லாம் ஒத்தே வராது பாஸ்.

திருவொற்றியூர் அப்டேட்ஸ்

திருவொற்றியூர் பஸ் ஸ்டாண்ட் முதல் டோல்கேட் வரை 65 அடி சாலையா மாத்த ரொம்ப நாளா நெடுஞ்சாலைதுறை எடுத்த நடவடிக்கைகள் இப்போ தான் பலன் தர ஆரமிச்சு இருக்கு. எந்த எந்த இடம் இடிக்க போறாங்க அவங்களுக்கு நஷ்டஈடு எல்லாம் கொடுத்த பிறகு டிசம்பர் மாசம் இடிக்க போன நேரத்துல வியாபாரிகள் சங்கம் எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குப்பனிடம் முறையிட்டு அவங்க இடிச்சா எல்லாமே போயிடும் மார்க் மட்டும் பண்ணி தர சொல்லுங்க நாங்களே இடிச்சிகிறோம்ணு சொன்னங்க. அவரும் அதிகாரிகள் கிட்ட பேசி ஒரு மாசம் டைம் வாங்கி கொடுத்தாரு. சிலர் அதை முறையா செஞ்சாங்க கட்டிடம் முழுவதுமாக இடிக்க வேண்டியவங்க அதை கண்டுக்கவே இல்லை. பிரச்சனை இங்க தான் கிளம்புச்சு, டைம் கொடுத்து ஒரு மாசத்துக்கு மேல ஆகியும் நிறைய கட்டிடங்கள் அப்படியே இருக்கிறதை பார்த்து இனியும் இவங்களுக்கு டைம் கொடுக்க முடியாதுன்னு எந்த ஒரு முன்னறிவிப்பு செய்யாமல் ஒரு நாள் எல்லாத்தையும் இடிச்சி தரைமட்டம் ஆகிட்டாங்க.விஷயம் என்னவென்று தெரியாமல் அவங்க எதுவும் சொல்லாமலே வந்து இடிச்சிடாங்கன்னு சொல்லுறது எல்லாம் சரியில்ல.  டிராபிக் அதிகமா இருந்த நிலைமை போயி இப்போ தூசி அதிகமா இருக்கு.


ரேஷன் கார்டில் இருந்து என்னோட பெயரை நீக்க வேண்டி திருவொற்றியூரில் இருக்கும் உணவு பொருள் வழங்கல் துறையிடம் ஒரு விண்ணப்பம் கொடுக்க போனேன். ஒரு மணி நேரமா வருசையில் நின்று அவங்க கிட்ட என்னோட விண்ணப்பத்தில் கொடுக்குறேன் முணு மாசத்துக்கு எதுவும் பண்ண முடியாது மார்ச் மாசம் முடிஞ்சா பொறவு வாங்கன்னு திருப்பி அனுப்பிட்டாங்க. கல்யாணம் ஆகி முணு வருஷமா பண்ணாததை இப்போ பண்ண போனா  இப்படி ஆகிடுச்சு :(.



கொஞ்ச நாட்களாக ஏரியாவில் I.P யேசுதாஸ் என்பவரின் திருமுகத்தை தாங்கிய போஸ்டர்கள் எங்கெங்கு காணினும் நமது கண்களில்  தென்படுகிறது. அஃப்ரோ குழுமம் அஃப்ரோ அறக்கட்டளையின் தலைவர்   தனது தந்தையின் முதலாம் ஆண்டு காரியத்துக்கு அன்னதானம் செய்வதாக புறநகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளார். அப்பாவின் திதிக்கு இப்படி போஸ்டர் அடித்து அன்னதானம் செய்பவர் இவராக தான் இருக்கும். அந்த போஸ்டரில் அவர் முகம் தான் பிரதானமாக இடம் பெற்று இருக்கிறது. அன்னதானம் நடை பெற காரணமான அவரின் தந்தை  பாஸ்போர்ட் சைஸில் புகைபடத்தில் போஸ் தருகிறார். 

இதே போல நகரில் புதுசு புதுசாக , தினுசு தினுசா போஸ்டர்களில் டெர்ரர் லுக் கொடுத்து நம்மை திகிலடையவும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். நாற்பதாவது வயதில் காலடி எடுத்து வைப்பவருக்கு ஐம்பதை நெருங்கி  கொண்டு இருக்கும் இளைஞர் ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறார். இதில் ஆவியை எழுப்புவோம் , துதி பாடுவோம், துண்டை போடுவோம் என்று சில மலை விழுங்கி மகாதேவங்கள் ஜீசஸை வைத்து கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். 



விழிப்புணர்வு


ரொம்ப நாளைக்கு முன்னாடி மாலதீவ்ஸ் நாட்டில் கடலுக்கு அடியில் பாராளுமன்றம் கூட்டத்தை நடத்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்களே நியாபகம் இருக்கிறதா. அதன் பின்னணி என்ன என்பதை விளக்கும் டாக்குமெண்டரி   படம்  The Island President .. 






--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)