Thursday, April 22, 2010

கேஜிபி - அடி, அல்லது அழி
        USSR என்கிற அமைப்பில் இருந்து மற்ற நாடுகள் எல்லாம் பிய்த்து கொண்டு போவதற்கு முன்னால் உலக நாடுகள் பல பயத்துடன் அதிகமுறை உச்சரித்த பெயர் "கேஜிபி" .

இவர்கள் ஊடுருவாத  இடமே இல்லை என்று சொல்கிற அளவிற்கு அனைத்து இடத்திலும் ஊடுருவி எல்லா தகவல்களையும் விரல் நுனியில் வைத்து இருப்பார்கள் என்கிற அச்சம் அனைத்து நாடுகளிலும் ஒரு சேர பிரதிபலித்தது. 

திரு.என்.சொக்கன் எழுதி இருக்கும் இந்த புத்தகத்தை வெறும் சாகச பதிவாக எழுதாமல் உளவு நிறுவனத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து இருக்கிறார். 

இவான்IV ஆட்சியில் அவனுக்காக  தொடங்கப்பட்ட ஒப்ரிசினிகி என்கிற பாதுகாப்பு படை தான் கேஜிபியின்  கொள்ளு+++தாதா. ஒப்ரிசினிகியின் வேலை மன்னரை யாரும் நெருங்கி தொந்தரவு செய்யாமல் பார்த்து கொள்வதே. இவர்களுக்கு பிறகு ஒக்ரானா என்று புதிய பெயருடன் அதே வலுவுடன் ரஷ்யாவில் ஆச்சிபுரிந்து வந்த ஜார் மன்னர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு படையையே வைத்து இருந்தார்கள். 

             

உளவுத்துறை என்கிற பெயருக்கு ஏற்றவாறு நாட்டுக்குள் நடக்கும் சதிதிட்டங்கள் எல்லாம் மன்னருக்கு தெரியபடுதுவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. 

மன்னர் ஆட்சி முடிந்து போஷ்விக் அரசு நாட்டை கைப்பற்றியவுடன் உள்நாட்டு கலவரத்தை அடக்க செக்கா என்கிற ஒரு படையை உருவாகிறார்கள் அதாவது ஒக்ரானாவின் அடுத்த வெர்ஷன் என்று சொல்லலாம். இப்படியே GPU, OGPU, GUGB,NKGB,GUGB,MGB,KI,MUD,KGB என்று ஒவ்வொரு கட்டதிலும் பெயர்மாற்றம் பெறுகிறது.  பின்னர் அவர்களின் வேலை மற்றும் உளவு செய்ததை விரிவாக எழுதி இருக்கிறார். 


KGB என்கிற தலைப்பிற்கு பதில் வேறு எதாவது பெயர்வைத்து இருக்கலாம். புத்தகத்தில் KGP என்கிற அத்தியாமே 100 பக்கங்களை தாண்டிதான் வருகிறது (மொத்த பக்கங்கள் 190). 

KGBக்கு முன்னால் இருந்த மற்ற உளவு நிறுவனங்களை பற்றி அலசி, ஆராய்ந்து எழுதுவதிலையே முக்கள் வாசி பக்கங்கள் முடிந்துவிடுகிறது. உளவு நிறுவனத்தின் செயல்பாடுகளின் பட்டியல், அவர்களின் நோக்கம், அரசுக்கு சாதகமாகவும், எதிரிகளுக்கு பாதகமாகவும் செயல்பட்டது ,   இத்யாதி இத்யாதி என்று எழுதியதை பாதி பக்கங்கள் படித்து தாண்டுவதற்குள் கொட்டாவி வருவதை நிறுத்தமுடியவில்லை. 

உளவு நிறுவனத்தை பற்றி எழுதும் போது கண்டிப்பாக அவர்களின் சாகசங்களை அங்கே இங்கே என்று சொருகி இருந்தால் சுவாரசியம் கண்டிப்பாக கூடி இருக்கும் .. பச் புத்தகத்தில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.   உள்ளங்கையில் உலகம் என்கிற அத்தியாத்தில் இவர்களின் உளவு வேலை எப்படி எல்லாம் நடந்த்து என்று விரிவாக எழுதி இருக்கிறார், கொஞ்சம் ஆறுதலான பகுதி அது. 

விரிவாக எழுதியதில் சிலவற்றை சேர்த்து எழுதி இருந்தால் நன்றாகயிருந்து  இருக்கும். 

KGBயின் உளவு வேலை அனைத்து நாடுகளிலும் பரவி இருந்ததா ? 
KGBயால் செய்யமுடியாத வேலை என்று ஏதாவது இருந்தா? 
உளவு நிறுவனத்தினால் ஒரு நாட்டில் ஆட்சி  மாற்றம் கொண்டு வரமுடிந்ததா?

இவைகளை பற்றிய உண்மை சம்பவங்களை கொஞ்சம் விரிவாக எழுதி இருந்தால் சுவாரசியம் கூடி இருக்கும். 

KGB பற்றி ரஷ்சியர்கள் சொல்லும் அந்த நகைச்சுவை படிக்க தமாஷாகவும் அதே சமயம் தும்புறுத்தல் என்கிற பெயரால் நடக்கும் கொடுமைகளை வெளிபடுத்துகிறது. 
KGB -  ரொம்ப எதிர்ப்பார்த்து சிறிது ஏமாற்றத்துடன் முடிவதை எழுதாமல் இருக்க முடியவில்லை. சுவாரசியம் கம்மியே தவிர உலகையே முணுமுணுக்க வைத்த ஒரு உளவு நிறுவனத்தின் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்ளலாம். 
புத்தகம் கிடைக்கும் இடம் 

கேஜிபி - அடி, அல்லது அழி
என்.சொக்கன்
விலை: ருபாய்: 120
New Horizon Media Private Limited
33/15, Eldams Road, 
Alwarpet, Chennai 600018, 
Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601
Fax: 91 44 4300 9701
With Love
Romeo ;)

11 comments:

 1. நல்ல விமர்சனம் நண்பா சொக்கனுக்கும் ஒரு இணைப்பு பார்சல் செய்துவிட்டேன்..

  ReplyDelete
 2. எங்க மக்கா.. புடிக்கிறீங்க.. இப்படி நல்ல தகவல்களை?

  ReplyDelete
 3. அறிமுகம், விமர்சனத்துக்கு நன்றி நண்பரே.

  நீங்கள் சொல்லும் குறைகளை ஏற்கிறேன் - KGB எழுதும்போது அதை ஓர் அறிமுகப் புத்தகம் என்ற அளவில் நிறுத்தவேண்டியிருந்தது. இப்போது எழுதிவரும் ‘கண்ணைப் பார், சிரி’ புத்தகத்தில் உலக உளவுத்துறை நிறுவனங்கள் அனைத்தின் முழுமையான சரித்திரத்தைக் கோண்டுவர முயற்சி செய்கிறேன். அதில் கேஜிபி சாகசங்களையெல்லாம் தேவையான விகிதத்தில் சேர்த்துச் சரி செய்துவிடுகிறேன். நன்றி :)

  - என். சொக்கன்,
  பெங்களூரு.

  ReplyDelete
 4. அருமையான அரிமுகம்

  ReplyDelete
 5. @பிரேமா மகள்
  எல்லாம் கிழக்கு பதிப்பகத்தின் தயவால் தான் .

  @அதிஷா
  நன்றி நண்பா

  @nchokkan
  கண்ணைப் பார், சிரி - சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க பாஸ் .

  @யுவகிருஷ்ணா
  நன்றி நண்பா

  ReplyDelete
 6. உளவு நிறுவனங்களை பற்றி, நீங்கள் உளவு வேலை செய்து (படித்து) எங்களுக்கு கொடுத்த தகவல்களுக்கு நன்றி. அந்த தகவல்கள் அடிப்படையில், மேற்கொண்ட நடவெடிக்கைகள் எடுக்கப்படும்....... (This message/comment will self-distruct in few seconds..... 5, 4, 3, 2, 1....)

  ReplyDelete
 7. பதிவு நல்லாக்கீது பாஸு . . . படிச்சிர்ரோம் . . அடிக்கடி இப்படி நல்ல விஷயங்களை எழுதவும் . . மேலே சித்ராவின் கமெண்ட் ஜோர் . . :-)

  ReplyDelete
 8. நல்ல தகவல். இது PDF ல கிடைச்சா சொல்லுங்க...!

  ReplyDelete
 9. இந்திராவையே அவர் அறியாமல் கேஜிபி தங்கள் ஆளுமையில் வைத்து இருந்ததாகச் சொல்வார்கள்.

  ReplyDelete
 10. @Chitra
  என்ன கொடுமை சித்ரா இது ...

  @கருந்தேள் கண்ணாயிரம்
  நன்றி பாஸ் ..

  @ஸ்ரீராம்
  கிடைக்கும் என்று தெரியல பாஸ் . கிழக்குல இருந்து PDF ஏதும் வரவில்லை என்று நினைக்கிறன் ..

  @எம்.எம்.அப்துல்லா
  ஆமாம் அண்ணே அதை பற்றி கூட கொஞ்சம் சொல்லி இருக்காரு. காங்கிரஸ் அரசு இவர்களிடம் இருந்து பணம் வாங்கியது என்பதற்கு நிறைய சான்று இருக்கிறதுன்னு சொல்லுறாங்க ..

  ReplyDelete
 11. நல்லதொரு பகிர்வு ரோமியோ...

  ReplyDelete