Thursday, July 21, 2011

சங்கதிகள் - 21 ஜூலை 2011

கல்வி 

சமச்சீர் கல்வி பற்றி எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிற இந்த சமயத்தில் CBSE கல்வி பற்றி யாருமே பேசாதது வருத்தம் அளிக்கிறது. கரூரில் இருக்கும் என்னோட தங்கச்சி பையன் முதலில் மெட்ரிகில் தான் படித்தான் சமச்சீர் கல்வி பற்றி செய்தி வந்த போது அவனை CBSE பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். முதலில் சேர்ந்த பள்ளியை விட்டுவிட்டு இப்போது புதியதாக அங்கு கிளையை பரப்பி இருக்கும் வேலம்மாள்  பள்ளியில் சேர்த்து விட்டார்கள். அவன் படிப்பது இரண்டாவது அதற்கே அவர்கள் அரை லட்சத்திற்கு செலவு செய்துவிட்டார்கள். கடந்த இரண்டு வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் CBSE கல்வி நிலையமாக மாற்ற விண்ணப்பித்து உள்ளார்கள் என்பது செய்தி. ஒரு கதவு மூடினால் என்ன இன்னொரு கதவு மூலமாக வெளியே சென்று விடலாமே.



மே மாதத்தில் கரூர் சென்றிருந்த போது லோக்கல் சேனலில் முக்கால் வாசி பள்ளிகள் தங்கள் கல்வி நிலையத்தை பற்றி பெருமையாக பேசி விளம்பரம் செய்து கொண்டு இருந்தது. இதற்கென்று ரோஸ் பவுடர் போட்ட அழகிகள் நிறைய பேரை இறக்குமதி செய்திருந்தார்கள்.  கரூரில் இருந்து கோவை வரும் வழியில் வெள்ளகோவில், காங்கேயம், பல்லடம் போன்ற இடங்களில் பெரிய பெரிய டிஜிட்டல் பேனரில் தங்கள் பள்ளி பற்றி விளம்பரம் செய்திருந்தார்கள். வெள்ளகோவில் பேருந்து நிறுத்தத்தில் தங்கள் பள்ளியில் படித்த மாணவன் IAS பரிச்சையில் வென்றதை கூட விளம்பரம் செய்தது எல்லாம் ரொம்பவே ஓவர்.  நகரம் என்று சொல்லுவதற்கு அப்படி ஏதும் இல்லை என்றாலும் கல்வியை காசாக மாற்றும் வித்தையில் சென்னையை விட தென் மாவட்டம் முன்னேறி கொண்டு தான் இருக்கிறது.



புத்தகம் 

மொழிபெயர்ப்பு புத்தகங்களை படிப்பதற்கு ரொம்பவே மெனகெட வேண்டியதாக இருக்கிறது. அதும் மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்படும் புத்தகங்கள் மலையாளத்தில் எப்படி எழுதி இருக்கோ அதை தமிழில் எழுதி இருக்கிறார்கள். 

குளச்சல் மு. யூசுப் அவர்கள்  வைக்கம் முகம்மது  பஷீர்  அவர்களின் புத்தகங்களை மொழிபெயர்த்து இருக்கிறார் அதில் ஒன்று எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது.  புத்தகத்தின் தலைப்பை வைத்தே ரொம்ப நேரம் யோசித்து கொண்டு இருந்தேன்,  உப்பப்பா என்றால் என்ன உறவுமுறையில் வருகிறது?? தமிழில் ஏதேனும் உள்ளதா என்று தேடினேன் ஒன்றும் கிடைக்கவில்லை. தலைப்பே இப்படி என்றால் உள்ளே?? இதே போல இருக்கிறது, மலையாளத்தில் உள்ளதை தமிழ் மாற்றி எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் முழுக்க முழுக்க இஸ்லாமிய சமுதாயத்தை பின்னணியாக வைத்து எழுதப்பட்டு இருக்கிறது. இருபத்தி ஐந்து பக்கங்கள் தாண்டுவதற்குள் பல கேள்விகள். 

திருமதி ஷைலஜா மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்து இருக்கும் சிதம்பர நினைவுகள், முன்றாம் பிறை  புத்தகங்களை படித்து பாருங்கள், அவை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லவே முடியாது.  






பதிவர்கள் சந்திப்பு 


படங்கள் உதவி ஜாக்கி சேகர்

பதிவர் சந்திப்பு என்று தெரிந்ததும் ரொம்ப சந்தோஷாமாக இருந்தது. நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள், நான் கொஞ்சம் லேட்டாக சென்றதால் எல்லோரிடமும் பேசமுடியாமல் போய்விட்டது முக்கியமாக ராம்ஜி யாஹூ.  பதிவர் சந்திப்பு பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் பஸ்சில் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டதால் வேறு விஷயம் ஏதும் இங்கு பகிர்ந்து கொள்ள சரக்கு இல்லை. பதிவர் சந்திப்பு பற்றி எழுதிய பஸ்சை இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
 





படம்

வெயில் படம் வந்த சமயம் கண்களை கசக்கி கொண்டு தியேட்டர்விட்டு வெளியே வந்தேன். நான் மட்டும் அல்ல எனது அருகில் இருந்த சில அன்பர்களும் கண்களை துடைத்து கொண்டு வந்தார்கள். தெய்வதிருமகள் படத்தை பார்த்த பிறகு அதே போல கண்கள் கலங்கி வெளியே வந்தேன். I Am Sam படத்தில் தழுவல் என்றாலும் தமிழ் படத்திற்கு ஏற்றது போல நிறைய மாற்றங்களுடன் படம் இருக்கிறது. அனுஷ்காவின் அந்த கனவு பாடல் தேவையில்லாத ஒன்று அதே போல கிளைமாக்ஸ் சீன். 




குட்டி தேவதை சாரா.. சான்ஸ் இல்ல என்ன அக்டிங் கடைசி கட்டத்தில் விக்ரமும் சாராவும் சைகை பாஷையில் பேசிக்கொள்ளும் அந்த காட்சியை கண்ணீரோடு தான் பார்த்தேன், கண்ணீர் வர இன்னும் ஒரு காரணம்  ஜி.வி. பிரகாஷின்  இசை. இப்போது எனது மொபைல் ரிங்டோன்  அந்த தீம் மியூசிக் தான். 


போடோஸ்

பஸ்ஸில் இந்த இரண்டு தளத்தை அன்பர்கள் ஷேர் செய்து இருந்தார்கள். திருமணத்தை இவ்வளவு நெருக்கமாக பதிவு செய்ததை பார்க்கும் போதும் கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கிறது.  கல்யாணம் செய்ய போகும் பேச்சலர்கள் இவர்களை அணுகவும். 


AnRb Studios



    




பண்பலை ரேடியோ 

சென்னையில் ஒலிபரப்பாகும்  தனியார் பண்பலை ரேடியோகளில் நான்கில் மட்டும்  இருபத்திநான்கு மணிநேரமும் பாடல்கள் ஒலிபரப்பு ஆகி கொண்டு இருக்கும். இந்த நான்கில் இருக்கும் ஒரு ஒற்றுமை ரோஜா மற்றும் இந்திரா படத்தின் பாடல்களை ஒலிபரப்பு செய்வது. இரவு 1 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் கண்டிப்பாக இந்த இரு படங்களின் பாடல்களை கேட்கலாம். வேறு எந்த நேரத்திலும் இந்த படத்தின் பாடல்களை நீங்க எந்த பண்பலையிலும்  கேட்கமுடியாது. கடந்த இருவாரங்களாக இந்த ரோதனையில் கிடந்தது சாவுகிறேன், இளையராஜாவின் பாடல்களை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது , ஆனால் ரஹ்மான் இசையில் அப்போதைக்கு கேட்க  நன்றாக இருக்கிறதே   தவிர பெரும்பாலான பாடல்கள் ஒரு கட்டத்துக்கு மேல் திரும்ப  கேட்க முடிவதில்லை. 


பாடல்


இந்த இரு பாடல்களை கேட்டு பாருங்களே  ரொம்ப அருமையா இருக்கும். ரெண்டு பாட்டுக்கும் வித்யாசாகர் தான் இசையமைச்சு இருக்காரு.














--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Thursday, July 14, 2011

பாண்டவபுரம் - சேது (தமிழில் - குறிஞ்சிவேலன்)

கற்பனையா அல்லது நிஜமா என்று யூகிக்கமுடியாத ஒரு முடிவை கொடுத்து படித்த நம்மை நட்டாற்றில் விட்டு செல்லும் ஒரு புத்தகம். 



தேவி தனது கணவன் குஞ்ஞுகுட்டனால் கைவிடப்பட்டவள்,  இது வரை அந்த ஊரைவிட்டு எங்கும் செல்லாமல் ஒவ்வொரு நாள் மாலையிலும் அந்த ஊரில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ஒருவரின் வருகைகாக காத்துகொண்டு இருக்கிறாள். யாருக்காக என்று எவருக்கும் தெரிவில்லை, ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு நாள் அவளிடம் தயங்கி தயங்கி யாருக்காக காத்துகொண்டு இருக்கிறாள் என்பதையும் கேட்கிறார்,  புன்னகையை மட்டுமே பதிலாக தந்துவிட்டு நகர்ந்துவிடுகிறாள்.

ஒருநாள் குஞ்ஞுகுட்டனுடன் வேலைசெய்பவன் என்று ஒருவன் வருகிறான். அந்த ஊரில் இருக்கும் உன்னிமேனன் என்கிற களரி மாஸ்டர் முலம் அவன்  குஞ்ஞுகுட்டனுடன் பாண்டபுரத்தில் வேலை செய்ததாகவும் தற்போது அவன் வீட்டுக்கு வந்ததாகவும் கூருகிறான்.  வீட்டை காட்டும் உன்னி மாஸ்டர் தேவியிடம் அவனை ஒப்படைத்துவிட்டு அங்கு இருந்து நகர்ந்துவிடுகிறார்.


தேவியிடம் பாண்டவபுரத்தில் அவளை சந்தித்த நாட்கள் மற்றும்  சில சம்பவங்களை கூருகிறான். இதை எல்லாம் நம்ப மறுக்கும் தேவி தான் இந்த ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என்றும் தாங்கள் கூறுவது அனைத்தும் பொய் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறாள். அடுத்த அடுத்த நாட்களில் அவனும் அந்த வீட்டில் ஒருவனாக உலாவருகிறான், தேவியில் மகன் ரகுவுடன் ஊர் சுற்றுகிறான். அவன் அந்த வீட்டில் இருப்பதை உன்னி மாஸ்டர் விருபவில்லை ஆண் துணையில்லாத வீட்டில் யாரோ ஒருவன் வந்து தங்கி இருக்கிறது இந்த ஊர் ஏற்காது என்று சொல்லி அவனை வீட்டில் இருந்து கிளம்ப சொல்லுகிறார், முடியாது என்று அவரிடம் சொல்லிவிட்டு இவன் தேவி வீட்டுக்கு வந்துவிடுகிறான். குஞ்ஞுகுட்டன் தங்கை ஷாமளாவும்  அவனை வெளியேற சொல்லுகிறாள்.  தேவி சொன்னால் தான் அங்கு இருந்து செல்வதாக சொல்லும் இவனை தேவி தன்னால் அவ்வாறு சொல்ல முடியாது என்று சொல்லி விடுகிறாள்.  


ஒரு நாள் இரவில் அவனின் அறைக்கு வரும் தேவி தான் பாண்டவபுரத்தில் வாழ்ந்ததை ஒப்பு கொள்கிறாள், அவனுக்கு தான் வந்த காரியம் நிறைவேறியதாக நினைக்கிறான்.  அடுத்த நாள் தான் செய்தது தவறு என்று நினைக்கும் அவனிடம் தேவி பாண்டவபுரத்து நாட்களை சொல்லுகிறாள் இப்போது அவன் இது அத்தனையும் பொய் என்று சொல்லுகிறான். உங்களுக்காகத்தான் தினமும் ரயில்வே ஸ்டேஷனில் காத்துகொண்டு இருந்ததாகவும்  ஒரு நாள் நீங்கள் வருவீர்கள் என்று தெரியும் என்கிறாள். 

அவன் எதுக்கு அங்கு வந்தான் ?? தேவி சொல்வது பொய்யா அல்லது அவன் சொல்லுவது பொய்யா ??
குஞ்ஞுகுட்டன் என்ன ஆனான் ?? இப்படி எல்லா கேள்விகளுக்கும் கடைசில் பதில் இருக்கிறது.
மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்த நூல். இந்த நூலுக்காக  கேரளா அரசின் சாகித்திய அகாடமி விருது வாங்கி இருக்கிறார், விருது வாங்க தகுதியான புத்தகம்.

இந்த புத்தகத்தை முதலில் வாசிக்கும் போதும் எனக்கு குழப்பமே மிஞ்சியது :-(. முதல் பத்து பக்கங்களை படிக்கும் போது குழப்பமோ குழப்பம் தான். முரளி ட்விஸ்ட் போல போல எழுதி இருந்தாரே ஒண்ணுமே காணோம் என்று சந்தேகத்துடனே படித்தேன் உள்ளே செல்ல செல்ல தான் நாவலின் வீரியம் அகப்பட்டது. முதல் வாசிப்பில் ஏற்பட்ட குழப்பம் எல்லாம்  இரண்டாம் வாசிப்பில் தான் அகலும், புதியதொரு எழுத்துநடை பாதி பக்கங்களுக்கு பிறகு வாசிக்க வாசிக்க எது உண்மை  எது புனைவு என்கிற தடுமாற்றம் வருகிறது. 

நாவலில் அந்த விருந்தாளி முக்கிய கதாபாத்திரம் ஆனால் அவருக்கு பெயர் இல்லை, யாருமே பெயர்  கேட்டகவும் இல்லை  சொல்லி அழைக்கவும் இல்லை  ரகு மட்டுமே அவனை மாமா என்று அழைக்கிறான்.  நாவல் முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரத்தின் வாயிலாக சொல்லபட்டு இருக்கிறது. பெயரில்லாமல் ஒரு கதாபாத்திரம் நாவல் முழுக்க வருவதை இப்போதான் படிக்கிறேன், பிரமிப்பு தரும் படைப்பு இது. 
கண்டிப்பாக வாசிக்கவேண்டிய புத்தகம்.


 
பாண்டவபுரம்
ஆசிரியர் -  சேது
கிழக்கு பதிப்பகம்
சென்னை



--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)




Monday, July 11, 2011

Conviction - (2010)

ஆறு மாசத்துக்கு முன்னாலே இந்த படத்தை பத்தி எழுத நினைத்தேன். எனக்கு தான் நியாபகமறதி அதிகமாச்சே அதனால அதை அப்படியே மறந்துட்டேன்,போன வாரம் ரகு பஸ்ல இந்த படத்தை பத்தி எழுதி இருந்தாரு அப்ப தான் அடடா இத்தனை நாளா இந்த படத்தை மறந்துட்டோமேன்னு நியாபகமே வந்துச்சு.

Conviction - (2010) 





சிறுவயது முதலே ஆன்னியும் அவள் சகோதரன் கென்னியும் ரொம்ப பாசத்துடன் வளருகிறார்கள். இந்த பாசம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றி பிணைந்து வருகிறது. ஒரு நாள்  கென்னியின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் கேத்ரினா என்கிற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். பக்கத்துக்கு வீட்டில் வசிப்பதால் கென்னியை சந்தேகிக்கும் போலீஸ்காரர்கள் ஒரு கட்டத்தில் அவன்தான் கொலை செய்ததாக முடிவு செய்து கைது செய்கிறார்கள்.  தான் அந்த கொலையை செய்யவில்லை என்று எவ்வளவோ முயற்சி எடுக்கிறார், அவருக்கு துணையாக ஆன்னியும் எல்லா விதமான முயற்சி எடுத்தும் கொலை செய்யபட்ட இடத்தில இருந்த ரத்தமும் கென்னியின் ரத்தமும் ஒரே வகையை சார்ந்து என்கிற அபத்த முடிவால் கென்னிக்கு சிறைத்தண்டனை கிடைகிறது. தனது சகோதரனை காப்பாற்ற தானே வக்கீலாக ஆக ஆன்னி சட்டம் பயின்று தனது தோழி ஆப்ரா ரைஸ் முலம் அங்கு கிடைத்த ரத்த மாதிரியை டின்ஏ பரிசோதனையின் முலம்  கென்னி அந்த கொலையை செய்யவில்லை என்று நிருபிக்கிறார். பதினெட்டு வருடங்கள் கழித்து கென்னிக்கு விடுதலை கிடைகிறது. 


   இது டுப்ளிகேட் 

 
 
 இது ஒரிஜினல்


படம் கொஞ்சம் மெதுவாக சென்றாலும் எந்த காட்சியையும் விட்டு செல்லமுடியாத வண்ணம் எல்லாவற்றுக்கும்  முக்கியத்தும் கொடுத்துள்ளர்கள். ஆன்னி எவ்வளவு சிரமத்துக்கு இடையில் படித்தாள் எப்படி வக்கீலானாள், இதனால் அவள் குடும்பம் எப்படி நிலைகுலைந்து போனது. பொய் சாட்சி சொன்னவர்களை எப்படி வழிக்கு கொண்டுவந்தாள் என்று படம் முழுக்க ஆன்னியே தாங்கி பிடிக்கிறாள் உண்மையும் அதுவே என்பதால் அந்த கதாபாத்திரமே படத்தின் முதுகெலும்புபாக செயல்படுகிறது.
அதை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார் Hilary Swank.

இதில் ஆன்னியாக நடித்திருக்கும்  Hilary Swank ,  கென்னியாக நடித்திருக்கும் Sam Rockwell,  ஆப்ரா ரைஸ்சாக நடித்திருக்கும் Minnir Driver நடிப்பு அருமை.

 


எத்தனையோ படம் இருக்கும் போது ஏன் இந்த படத்தை பற்றி எழுதினேன் தெரியுமா.. இங்க தான் பாயிண்ட் இருக்கு, எந்த படத்தை பார்த்தாலும் அதை பற்றி நெடில் தேடுவது என்னோட வழக்கம், இது உண்மைய கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் உண்மையான ஆன்னி , கென்னி எப்படி இருப்பாங்கன்னு தேடினேன் அப்பதான் கென்னியின் சோகமான ஒரு முடிவு தெரிஞ்சது. கென்னி ஜெயிலை விட்டு வெளியே வந்த ஆறது மாதத்தில் வீட்டில் நடந்த ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு உயரிழந்துவிட்டார். பாருங்க சாவு எப்படி தேடி வந்து இருக்குன்னு. பதினெட்டு வருஷம் ஜெயில்ல  இருந்து வெளியவந்தவரு ஆறு மாசத்துல உலகத்தைவிட்டே போயிட்டாரு,
என்ன ஒரு சோகமான முடிவு :-( .




 
--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)





Friday, July 8, 2011

சங்கதிகள் ஜூலை 08 2011


சர்ச்சை 

   இது சர்ச்சை என்று சொல்ல முடியல இருந்தாலும் இது சர்ச்சை.. லதானந்த் என்கிற பதிவர் (சத்தியமா இவரை நான் பார்த்து கூட இல்லை முக்கியாமாக இவரின் பதிவுகளை படித்து  இல்லை)  காமெடிகாக (இருக்கலாம்) செய்த ஒரு விளையாட்டை(அல்லது சீரியஸ்) இப்படி சர்ச்சையை கிளப்பும் என்று நினைக்கவில்லை.. சஞ்சய், விஜி, செல்வேந்திரன் என்று நிறைய பேரு செம கடுப்பில் இருக்கிறார்கள் அவர் அவர் கஷ்டம் அவர் அவர்களுக்கு.  எனக்கு ஒன்றே ஒன்றில் தான் வருத்தம் (அல்லது கடுப்பு) ம‌ணற்கேணி விருதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??  விருது வாங்குவதற்கு இந்த மாதிரியான ஏதாவது தகுதி இருக்கா ??? படைப்புக்களை வைத்து தானே விருதுகள் தறாங்க.  அடுத்த வருடம் யாருக்காவது விருது குடுக்கும் போது அதை அவர் தண்ணி அடித்து கொண்டு இருக்கும் சமயத்தில் அறிவித்து அதே சுதியில் எல்லோரிடமும் கோத்தா எனக்கு விருது குடுத்து இருக்காங்கன்னு சொல்ல, அதை யாராவது கொளுத்தி விட. அவர் கெட்ட வார்த்தை பேசிவிட்டார் அதனால்  அவங்களுக்கு விருது தர கூடாதுன்னு ஒரு கோஷ்டி ரெடி ஆகி வரும். 

ஒரு எழுதாளினின் எழுத்தை கொண்டாடுங்கள் போதும் அவரை கொண்டாட வேண்டியதில்லை. இதை நான் சொல்லல பாஸ் எல்லாம் படித்து பார்த்து தெரிந்து கிட்ட அறிஞ்சவங்க அறியாதவங்க சொன்னது..  

இந்த பதிவை படிச்சி பாருங்க நம்ம மோகன் சார் பாலகுமாரன் அவர்களிடம் வாங்கிய பல்பு எல்லாம்.. 





புத்தகம்

காலம் நேரம் இல்லாமல் புத்தகம் படித்துகொண்டு இருக்கிறேன். கிழக்கில் வாங்கிய புத்தகங்கள் தான் அதிகமாக இருக்கிறது. பாதிக்கும் மேல் சுயசரிதையா இருப்பதால் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது. சென்ற வாரம் மறுபடியும் கிழக்கு தள்ளுபடி விற்பனை அரங்கத்திற்கு சென்றேன்  பாண்டபுரம் என்கிற புத்தகம் கிடைத்தது. இந்த புத்தகத்தை பற்றி முரளிகுமார் அவரது தளத்தில் எழுதி உள்ளார். அதை படித்தபோதே வாங்க வேண்டும் என்று நினைத்தேன் இப்போது தான் கிடைத்தது.  முதல் அத்தியாயம் குழப்போ குழப்பு என்று குழப்பி எடுத்துவிட்டது, அடுத்து அடுத்து அத்தியாயங்கள் படிக்கும் போது மலையத்தில் இருந்து அப்படியே தமிழுக்கு மொழி மாற்றம் செய்தது போல இருக்கிறது.  

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு-ஷாராஜ் புத்தகம் பரிசளிக்கிறேன் என்று பஸ்சில் சொல்லி இருந்தேன். நல்லதொரு சிறுகதைகள் உள்ள புத்தகம், புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் உங்கள் முகவரியை romeoboy.81@gmail.com ஈமெயில்க்கு தட்டிவிடவும் இலவசமாக புத்தகம் அனுப்பி வைக்கப்படும். இது இந்தியாவிற்குள் வசிப்பவர்களுக்கு மட்டுமே. 


பல்பு வாங்கியது 

சென்ற வாரம் நான் வாங்கிய பல்பு ... 

ஜூனியருக்கு மகா கஞ்சி ஊட்டிட்டு இருந்தா . தலைவரு சும்மாவே ஆட்டம் போடுவான் இதுல சாப்பாடுனா அவ்வளவு சீக்கிரத்துல இறங்குமா??? அவனை தாஜா பண்ணி டிவி எப்படி ஆன் பண்ணனும் எப்படி ஆப் பண்ணனும்ன்னு சொல்லி குடுத்துட்டு இருந்தேன். வாயில வச்சிருந்த கஞ்சியை அப்படியே டிவி ரிமோட்ல துப்பிட்டான். நான் அதை துடைக்க சங்கடபட்டுட்டு வாஷ் பேசின்ல கழுவிட்டேன் :(. கொஞ்ச நேரம் கழிச்சு சேனல் மாத்தலாம்ன்னு ரிமோட் எடுத்தா உள்ள இருந்து தண்ணியா ஊத்துது அந்த நேரம் பார்த்தா மகா வரணும்?? நல்லா டோஸ் கிடைச்சிது எனக்கு. ஐயோ ரிமோட் போச்சேன்னு அதை வேலை செய்ய வைக்க என்ன என்னமோ ட்ரை பண்ணி பார்த்தேன் ஒண்ணும் வேலைக்கு ஆகல. சரி உள்ள கழட்டி பார்க்கலாம்ன்னு ரிமோட் திறக்க பார்த்த அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு. மேல இருந்து தூக்கி போட்டேன், கீழ டாமல் டாமல்ன்னு நாலு தடவை அடிச்சி பார்த்தேன் ஒண்ணும் நடக்கல. சரி ஜூனியர்கிட்ட குடுத்து மகனே தூக்கி போடுடான்னு சொன்னா பயபுள்ள நேர எடுத்துட்டு போயி டிவி கிட்டவைக்கிறான் அதாவது அவன் திருந்திட்டான்னு சிம்பாலிக்கா சொல்லுறான். ஸ்குருவ் டிரைவர் வச்சி நெம்பி ஒருவழியா திறந்து பார்த்தா உள்ள அங்க இங்கன்னு தண்ணி இன்னும் கொஞ்சம் இருந்துச்சு. எல்லாத்தையும் தொடச்சி காயவச்சி பார்த்தாலும் ரிமோட் நிலைமை அதோ கதிதான் :((..

இதனால் சொல்லப்படும் நீதி என்னவென்றால்

1. பையன் சாப்பிடும் போது ரிமோட் பக்கத்துல வைக்காதிங்க
2. அப்படியே வச்சாலும் அதுல அவன் துப்பினாலும் ஒரு துணியை வச்சு துடையுங்க, எக்காரனது கொண்டும் தண்ணில கழுவாதிங்க
முக்கியமான நீதி
3. ஒரிஜினலை விட டுப்ளிகேட் ரொம்ப ஸ்ட்ராங் :((


பதிவு 

ஒரு நாளைக்கு 30 பதிவுகளுக்கு மேல படிக்கிறேன் அதில் தேறுவது என்னவோ அஞ்சி கூட இருக்காது. ஒரு சில பதிவுகள் அத்தி பூத்தது போல படிக்கும் போதே  அட போடவைக்கும் அந்த மாதிரியான ஒரு பதிவை படித்தேன். 

பதிவர் செல்வேந்திரனின் விருந்து என்கிற இந்த பதிவை படித்த பிறகு கொய்யால நாம வாங்கினதை திரும்ப செய்யணுமேன்னு என்கிற நினைப்பு தான் வந்துச்சு.. நல்லா இருந்துச்சு செல்வேந்திரன் :-)




பாடல் 

வாகை சுட வா... களவாணி பட இயக்குனரின் அடுத்த படைப்பு, ஜிப்ரான் என்கிற புதிய இசையமைப்பாளர் அற்புதமான பாடல்களை தந்துள்ளார். 

வைரமுத்து அவர்கள் எழுதி இருக்கும் சர சர சார காத்து பாடல் நல்லா இருக்கு அதே போல போறாளே போறாளே பாடும். சிம்போனி இசையுடன் வரும் ஆனா என்கிற பாடல் கண்டிப்பாக ஜிப்ரானுக்கு தமிழில் ஒரு இடம் காத்துகொண்டு இருப்பதை உறுதிபடுத்துகிறது.  வாழ்த்துக்கள் ஜிப்ரான் :-) 


படத்தின் ட்ரைலர் பார்த்தேன் கடைசியாக அந்த பெண் பேசும் வசனம் அப்பறம் தலையை ஆடி ஆடி பேசும் ஸ்டைல் சான்ஸ்சே இல்ல போங்க :-) ..






--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)