Monday, July 19, 2010

அரசூர் வம்சம் - இரா.முருகன்

அதிகபடியான நம்பிக்கையுடன் படிக்கும் புத்தகங்கள் எல்லாம் சில நேரம் என்னை பெரும்  ஏமாற்றத்தை சந்திக்க வைக்கிறது. அந்தவகையில் அரசூர் வம்சம் இன்னும் ஒன்று, அரசூர் என்கிற ஊரில் நடக்கும் பல குடும்பத்தின் கதை தான் இந்த அரசூர் வம்சம். ராஜா, ராணி, சங்கரன், சுப்பிரமணி ஐயர், கிட்டாவய்யன்  , பனியன் சகோதர்கள், முத்த குடிகள், சுப்பம்மா கிழவி, சவகாட்டு பிராமணன்,சாமிநாதன், ஜோசியர் இத்தியாதி இத்யாதி என்று இரண்டு டஜன் மனிதர்கள் சூழ்ந்து கொண்டு வலம் வருகிறார்கள்.  அரசூர் வம்சத்தை படித்து முடிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது ஏன் என்கிற காரணத்தை பிறகு சொல்கிறேன்.

புத்தகத்தில் அமானுஷ சங்கதிகள் அதிகமாக உலாவுகிறது, எதற்கு எடுத்தாலும் அவர்கள் வந்து ஏதோ ஒன்றை பேசிக்கொண்டோ அல்லது பாடிக்கொண்டு இருகிறார்கள். வயசன் ஒருவன் அந்தரத்தில் பறந்து கொண்டே இருக்கிறார் .  புத்தகத்தில் பெரும் பகுதி எல்லா கதாபாத்திரங்களும் கற்பனையில் அதிக நேரம் பேசி கொள்கிறார்கள் அல்லது யோசித்துக்கொண்டு இருகிறார்கள்.



ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்  மூத்தக்குடி பெண்டுகள் (இறந்து போனவர்கள்)  எல்லாம் சுப்பம்மா கிழவிஅல்லது சுப்பிரமணிய ஐய்யர் நாவில் வந்து உட்கார்ந்துகொண்டு அவர்கள் இஷ்டத்துக்கு பேசிக்கொண்டு இருகிறார்கள் அல்லது நலங்கு பாடலை பாடிக்கொண்டு இருக்கீறார்கள்.  அவ்வாறு பாடுவதை மற்றவர்கள் எது ஒரு பயமும் இல்லாமல் அவர்களுடனே உரையாடி கொண்டு இருகிறார்கள்.  யந்திரம் துணைகொண்டு அவைகளை அடக்கி வைக்கிறார் ஜோசியர். அமானுஷ உலகில் நுழைந்தது போல இருந்தது முதலில், பிறகு படிக்க படிக்க அது எல்லாம் மறந்து போயி இதுகளுக்கு வேற வேலையே இல்லை என்று தான் சொல்ல தோன்றியது. 


நான் லினியர் கதைகள் நிறைய  அத்தியாயங்களில்  வருகிறது.  சங்கரன் மதராஸ் பட்டணத்துக்கு செல்லும்படி அவனின் அப்பா முன் அத்தியாயத்தில் சொல்கிறார். அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சங்கரன் கடற்கரை ஓரம் நடந்து செல்கிறான். அதற்கு பிறகு அவன் எப்படி சென்னை வந்தான் யார் வீட்டில் தங்கினான். அவரை எப்படி எப்பொழுது சந்தித்தான், வரும் வழியில் தஞ்சாவூரில் கண்ட காப்பி கடை, சுப்பம்மா பாட்டி கட்டி குடுத்த சாப்பாடு, சீவல், முறுக்கு இத்யாதி இத்யாதி. அதே போன்று புகையிலை பிராமணன் ராஜா வீட்டின் ஒரு பகுதியை எப்படி அபகரித்து கொண்டான். இன்னும் சில அத்தியாயங்கள் ரொம்ப அருமையா இருக்கு. நாவலில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் அந்த ராஜா தான். ராஜாவுக்கு நன்றாக சாப்பிடவேண்டும், சேடி பெண்ணுடன் விளையாடவேண்டும், சிக்கல் இல்லாமல் காலைக்கடனை முடிக்கவேண்டும், வாரிசை பற்றி நினைக்கவேண்டும் பிறகு புஸ்திமீசை கிழவனை திட்டிகொண்டு இருக்கவேண்டும். நாவலில் ரொம்ப சுவாரசியமான கதாப்பாத்திரம் இவர். புஸ்தி மீசை கிழவன் மண்டையை போட்ட பிறகு நடக்கும் கூத்து செம ரகளை. அதும் சேடி பெண்மீது அவன் விழுந்த போது ராஜா அடையும் அதிர்ச்சியை ஆசிரியர் சொல்லி இருக்கும் இடம் வெகு அருமை. புத்தகத்தை படிக்கும் போது நமது எண்ணங்களில் அந்த இடங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்கிற நினைப்பு வருவது தவறவில்லை. யந்திரம் என்றால் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆவல் ஆசிரியர்க்கு மெயில் பண்ணி கேட்க்கணும்.

பிராமண பாஷையில் இருந்ததால் என்ன பேசுகிறார்கள் என்று புரிந்து கொள்வதற்கு ஒரே பத்தியை  இரண்டு அல்லது மூன்று முறை திரும்ப திரும்ப படிக்க வேண்டி உள்ளது வட்டார வழக்கு மொழி போல இது பிராமண மொழி. ஏழாம் உலகம் புத்தகமும் இதையும் சேர்ந்தே வாங்கினேன். இரண்டு வேறு வேறு தளம் வேறு வேறு நடை அத்தனையும் புதுசு என்பதால் முதல் வாசிப்பிற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

ரெட்டை தெரு நாவலை படித்த போது இவரின் அடுத்த அடுத்த நாவல்களை படித்தே தீரவேண்டும் என்று நம்பிக்கையுடன் வாங்கிய புத்தகம்.  தீவிர வாசிப்புக்கு ஏற்ற புத்தகம் இது. அதே சமயம் புத்தகத்தை படித்துவிட்டு இதை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யலாமா  வேண்டாமா என்கிற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.  நான் என்ன சொல்கிறேன் என்றால் அது உங்கள் விருப்பம். படித்துவிட்டு என்னை திட்ட கூடாது. 

நாவலின் பலகீனம் என்பது அதன் நடைதான். ரொம்ப ரொம்ப மெதுவா நகர்கிறது கதை, ராஜாவின் மாமனார் இறந்ததும் நடக்கும் சடங்கை படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும் அவ்வளவு நீட்டி இருந்து இருக்கவேண்டாம். அதே போல நிறைய இடங்களை சொல்லிக்கொண்டு செல்லலாம். பத்தி எது, சம்பாஷனை எது என்று தேடவேண்டி இருக்கிறது. உண்மையில் நான் சிலபக்கங்களை திருப்பி திருப்பி வந்தேன், நெடுந்தொடர் போல இது தான் நடந்து இருக்கும் என்று சுலபமாக யூகிக்க முடிகிறது.

நாவலை ஏன் இத்தனை நாட்கள் படித்தேன் என்றால் ஐந்து அத்தியாயங்கள் தாண்டிய போதே தெரிந்துகொண்டேன் இது நமக்கு ஏற்ற புத்தகம் அல்ல என்று. ஒவ்வொரு நாள் இரவும்  ஒரு அத்தியாயம் என்கிற கணக்கில் படிக்கலாம் என்று முடிவு செய்தேன் ஒரு அத்தியாயத்தை பாதி படிக்கும் போதே தூக்கம் கண்ணை கட்டும், விட்டா போதும்டா சாமின்னு தானவே மூடிக்கொள்ளும்.   அதனால் இரண்டு நாட்களுக்கு ஒரு அத்தியாயம் என்று ஆகிவிட்டது.

ரொம்ப எதிர்பார்த்து நாவலை படிப்பதை விட வட்டார வழக்கு தவிர பிராமண வழக்கு ஒன்றும் உள்ளது அது எப்படி இருக்கும் என்கிற ஆவலில் படிக்கவும்.

உப்பு உண்டுதான் காரம் ரொம்ப கம்மி சாரே.. 

டிஸ்கி: விஸ்வருபம் என்று இன்னொரு நாவல் இதன் தொடர்ச்சி வருகிறதாம். அதனால நான் இப்பவே எஸ்கேப் மாமே எஸ்கேப் .. 






With Love
Romeo ;)



Thursday, July 15, 2010

கொஞ்சம் விளக்கம் + சில பகிர்தல்கள் = 10/07/2010

  முதலில் விளக்கிவிடுகிறேன் எனது முந்தைய பதிவான ஏழாம் உலகம் போட்டியின் முடிவும் இன்னும் சில புத்தகங்களும் பற்றி சிலருக்கு சந்தேகம் வந்து இருக்கலாம். நான் ஜெமோவை ஆதரிக்கும் கட்சியை சார்ந்தனா என்று. உங்களுக்கு சந்தேகம் வருவதற்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு காரணமாக இருக்கலாம்.  சந்தேகம் உள்ளவர்களுக்கு எனது பதில் தான் இந்த விளக்கம். 

எழுதவே வேண்டாம் என்று முடிவு செய்து ஒரு மாதம் எழுதாமல் இருந்தேன், பிறகு எழுத ஆரமித்த போது உருப்படியா எழுதணும் என்று மட்டுமே குறிகோளுடன் எழுத ஆரமித்தேன். உருப்படினா என்ன ?? புத்தகங்கள் தான், புத்தகங்களை பற்றி அதிகமாக எழுதவேண்டும் என்கிற குறிகோளுடன் எழுத ஆரமித்தேன். நான் மட்டும் படித்தால் போதாது என்னை போல வாசிக்க ஆர்வம் உள்ள அன்பர்களும் வாசிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஒரு நொடியில் வந்தது. நான் அனைத்து எழுத்தாளர்களின் புத்தகத்தை படிப்பதில் ஆவல் உள்ளவன். எனது சுயவிருபத்தினால் தான் புத்தகங்களை பரிசளிக்க முன்வந்தேன் என்னுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சேர்ந்த அன்பர்கள் சிலரும் புத்தகங்களை பரிசளிக்க முன்வந்து உள்ளார்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஜெயமோகன் எழுதிய புத்தகத்தை மட்டும் பரிசளிக்கமாட்டார்கள், தமிழில் வெளிவந்த இலக்கிய புத்தகங்கள் எதுவாயினும் நீங்கள் விருப்பப்படும் புத்தகத்தை பரிசளிக்க தயாராக உள்ளார்கள். இதுவும் ஒருவித பகிர்தலே. புத்தகம் வேண்டும் என்பவர்கள் எனக்கு ஈமெயில் செய்யவும்.

எனது முகவரி romeoboy.81@gmail.com
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
  எங்க ஏரியா பற்றி  சொல்லணும்ன்னு ரொம்ப நாள் ஆசை. நான் குடியிருப்பது திருவொற்றியூர் பகுதியில் அதாவது வடசென்னை.  எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தான் மாநில மீன்வள அமைச்சர் கே.பி.பி.சாமி. திருவொற்றியூர் நகராட்சியின் தலைவர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர். ரைட் மேட்டர்க்கு வரேன், நகராட்சி சார்பா பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வந்துகொண்டு இருக்கிறது, ஒரு சைடுல இந்த வேலை என்றால் மறுபுறம் ரோடு ரொம்ப மோசம். நீங்க பஸ், ஆட்டோ, டூவிலர் எதில் வந்தாலும் திக்கி திணறி ஒரு வழியாகி விடுவிங்க.  விம்கோ பகுதியில் இருந்து எர்ணாவூர் மேம்பாலம் வரை பஸ்ல போய்ப்பாருங்க சி - சா மாதிரி ரைட் லெப்ட்ன்னு செம ஆட்டம் ஆடும். உங்களுக்கு வாய்வு பிடிப்பு இருந்தா ஒரு தடவை இந்த ரோட்ல வந்து போங்க, அதே மாதிரி இடுப்பு வலிருந்தாலும் உடனே நிவாரணம் கிடைக்கும் அல்லது வலி அதிகமாகும். ஷேர் ஆட்டோல போனா உங்களுக்கு  எமலோகம் எப்படி இருக்கும்ன்னு காமிப்பாங்க. டூவிலர் ஓட்டுன பசங்க எல்லாம் பேட்ச் எடுத்துக்கிட்டு பல்சர் வண்டியை ஓட்டிட்டு போற மாதிரி ஆட்டோவை ஒட்டிட்டு போவாங்க. எல்லா பஸ் ஸ்டாண்ட்லயும் டிராபிக் அதிகமா இருக்குனா இவ்வங்களும்  ஒரு காரணம். இவர்களை இப்படி திட்டினாலும் இரவு நேரத்தில் இவர்களின் தயவு தேவைப்படுகிறது என்னவோ உண்மை. கடைசி பஸ் சென்றாலும் கவலை இல்லாமல் இவர்களை நம்பி வரலாம்.     திருவொற்றியூர் ரோட்டை 60 அடி ரோடா அகலப்படுத்த எடுத்த முயற்சி எல்லாம் வீண் என்பது போல தான் இருக்கு. ஆக்கிரமிப்பை அகற்றுகிறேன் பேர்வழி என்று எல்லாத்தையும் இடிச்சு தூக்கினாங்க. கொஞ்ச நாளில் அந்த இடத்தை திரும்ப ஆக்கிரமிப்பு செய்ய ஆரமிச்சிட்டாங்க. திருவொற்றியூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ஒரு பொட்டிக்கடை இருக்கு அந்த கடை மட்டும் கொஞ்சம் போல இடிச்சிவிட்டு மத்ததை எல்லாம் துக்கிட்டங்க. எண்ணூர், மீஞ்சூர் போக மக்கள் நிக்கும் இடத்திற்கு ஒரு நிழல் குடை இல்ல. நான் ஸ்கூல் படிக்கும் போது ஒண்ணு இருந்துச்சு இப்போ அந்த இடத்தில ஒரு இளநிர் கடை  இருக்கு.  அகலப்படுத்தின ரோடுல எதாவது  ஒரு லாரி நின்னுட்டு இருக்கும். இரவு நேரத்தில் கன்டைனர் லாரி சாரமாரியா போகும் கரணம் தப்பினால் மரணம் என்பது போல பல வண்டி பாடி எல்லாம் இத்து போய் இருக்கும்,    மக்களுக்கு உபயோகமா இருக்குமோ இல்லையோ லாரிகாரங்களுக்கு நல்ல உபயோகமா இருக்கு இந்த ரோடு. கான்ட்ரக்ட் எடுத்த பினாமி சுனாமி போல 8 கால் பாய்ச்சலில் பணத்தை கறந்து கொண்டு இருகிறார். 

அடுத்த தடவை எங்க ஏரியால நடக்கும் அரசியல் கூத்தை சொல்லுறேன்.  

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

மதராஸ்பட்டினம் படத்தில் வரும் ஆருயிரே ஆருயிரே பாட்டை கேட்கும் போது ஏதோ செய்யுது. சோனு நிகம் குரலில் வரும் அந்த சோகம் .. எப்படின்னு சொல்ல தெரியல அவ்வளவு புடிச்சி இருக்கு.இப்பொது எல்லாம் அந்த பாடலை தான் முனுமுனுத்து கொண்டு இருக்கிறேன். 

அதே போல வம்சம் படத்தில் மன்னாதி மன்னர் பாட்டில் நடு நடுவில் வரும் பரம்பரை பெயர்கள் எல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. புதிய இசை அமைப்பாளர் தாஜ்நூர் வித்தியாசமான கிராமிய மனம் விசும் பாடலை அளித்துள்ளார். இரண்டு மூன்று பாடல்கள் தேரும். 

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

வலைபதிவில் படிக்கும் சில பதிவுகள் எல்லாம் அவ்வளவு அருமையா இருக்கும், அகநாழிகை வாசுதேவன் அவர்கள் எழுதி உயிரோசையில் வெளிவந்த ஒரு சுய மரணம் என்கிற சிறுகதை ரொம்ப அருமையா இருந்துச்சு. சில சிறுகதைகள் படிக்கும் போதே அதனுள் நம்மை இழுத்து செல்லவேண்டும். நானும் சிறுகதை எழுதுறேன் என்று உசுரை வாங்கும் அன்பர்கள் கண்டிப்பா இந்த கதையை படிங்க சின்ன கருவை வைத்து எப்படி ஒரு சிறுகதையை இவ்வளவு சுவாரசியமா உருவாகலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். படித்து முடித்ததும் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை வாசு சார் , சிம்ப்ளி சூப்பர் சார்


கிழக்கு பதிப்பக உருமையாளர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் வலைப்பூவில் படித்த புத்தகமா, விஷப் புகையா? மற்றும் அத்தனை ஆர்டர்களும் உனக்குத்தான்  இந்த பதிவைகளை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.  சுகுமார் தாஸ் USB Publishers and Distributors பதிப்பகத்தில் வேலை செய்தபோது நடந்த சம்பவங்களை கொண்டது. ரொம்ப நாட்களுக்கு பிறகு இவ்வளவு வேகமாக, ரொம்ப சுவாரசியமான பதிவை படித்து, ஒரு திரில்லர் கதை போல அவ்வளவு வேகம். சூப்பர் சார்

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

ஜூனியர் நல்லா தவழ ஆரமித்துவிட்டார், கீழே எந்த பொருளையும் வைக்க பயமா இருக்கு. பயபுள்ள எதுகிடைச்சாலும் வாயில் எடுத்து வச்சிகுறான். போன வாரத்தில் ஒருநாள் ஆபீஸ்க்கு கிளம்பி வீட்டைவிட்டு வெளியே வந்தேன், கிய முயானுன்னு சவுண்ட் குடுத்தே ஜூனியர் பின்னாடி தவழ்ந்து  கொண்டு வந்தான், வாடா ராஜான்னு தூக்கி கொஞ்சினேன், கரெக்ட்டா ஷர்ட் பாக்கெட்ல சொய்ய்ய்ன்னு சுஸு போய்ட்டான். ஐயையோ டிரஸ் நனைஞ்சிடுமேன்னு கீழே இறக்கி விடலாம்ன்னு  பார்த்தா பக்கத்தில் இருந்த வீட்டுகாரமா கயா முயான்னு கத்துறாங்க. இப்போ கீழே இறக்கி விட்டா அவன் அப்படியே நிறுத்திடுவான் ஆனது ஆகிடுச்சு இன்னும் கொஞ்சம் தான் முடிஞ்சிடும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லுறாங்க.  இந்த நேரத்துல டிவில உன்குத்தமா என்குத்தமான்னு பாட்டு வேற பாடுச்சு.. ஒரு டெரர் பார்வை பார்த்தா பொக்கைவாய் கொண்டு அவ்வளவு அழகா சிரிக்கிறான்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

  அடுத்த மாத விமர்சனம்+பரிசு ஜீரோ டிகிரி. சாருவின் நாவல்களில் மிக முக்கியமான புத்தகம்.



With Love
Romeo ;)



Monday, July 12, 2010

ஏழாம் உலகம் போட்டியின் முடிவும் இன்னும் சில புத்தகங்களும்


ஏழாம் உலகம் புத்தகம் போட்டிக்கு 20 பின்னுடங்கள் வந்து உள்ளது. அதில் இரண்டு பேர் அவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதே போல இருவர் ஏற்கனவே புத்தகத்தை படித்து விமர்சனமும் செய்து உள்ளார்கள். 






முடிவில் 16 பேரில் இருவரை சிட்டு எழுதி போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்து எடுத்துள்ளேன்.  பரிசு பெற்றவர்கள் 

































இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். புத்தகங்கள் நேரிலோ அல்லது கூரியர் மூலமாகவோ இந்த வாரத்துக்குள் உங்களுக்கு வந்தடையும். புத்தகம் படித்து முடித்ததும் உங்கள் விமர்சனத்தை எழுத தவறாதிர்கள் நண்பர்களே.. 



                         

எனது முந்தைய ஏழாம் உலகம் விமர்சனம் மற்றும் பரிசு போட்டியின் பதிவை படித்து விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை சேர்ந்த அன்பர் ஒரு கடிதம் அனுப்பினார். என்னை போல இலக்கிய புத்தகங்கள் பகிர்ந்துகொள்வதில் அவருக்கும் மிக ஆவல். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக அவரும் புத்தகங்களை பரிசளிப்பதற்கு ஆவலாக இருக்கிறார். 







இந்த முறை பரிசு பெற்றவர்கள்களான  ஷங்கர்   மற்றும் அகல்விளக்கு இருவருக்கும் இன்னும் ஒரு ஆச்சரியமாக, இந்த   புத்தகத்தை  பற்றிய உங்கள் விமர்சனம் வெளிவந்த பிறகு உங்களுக்கு வேறு ஏதேனும் புத்தகம் வேண்டும் என்றால் எனக்கு மெயில் செய்யவும் உங்களுக்கு ஒரு செலவும் வைக்காமல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.  உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது அந்த புத்தகத்தின் விமர்சனம் மட்டுமே. 

இந்த பரிசுத்திட்டம் இவர்களுக்கு மட்டும் அல்ல மற்ற அன்பர்களுக்கும் சேர்த்தே. நீங்க ஏதேனும் புத்தகத்தை படித்து அதை பற்றி விமர்சனம் செய்ய ஆவலாக உள்ளீர் என்றால் உங்களுக்கும் புத்தகம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். தமிழ் இலக்கியத்தை மற்றவர்களிடனும் எளிதாக கொண்டுசெல்ல எங்களால் ஆனா சிறு முயற்சி இது. 



மாதம் இருவருக்கு இதே போன்று புத்தகங்கள் பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன். நான் படித்து ரசித்த புத்தகத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த முயற்சி. இலக்கியம் மட்டும் அல்ல வரலாறு, சுயசாரிதம் என்று எல்லா வகை புத்தகங்களின் விமர்சனம் மற்றும் பரிசு காத்துகொண்டு இருக்கிறது. 



புத்தகம் படிக்க ஆவலாக உள்ள அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் படித்த புத்தகத்தை பற்றி உங்கள் பார்வையில் மற்றவர்களுக்கு அந்த புத்தகத்தை பற்றி எடுத்து சொல்லவேண்டும் அதே போன்று உங்களின் வலைபூவில் புத்தகத்தின் விமசர்னம் இடம்பெற வேண்டும் என்பது எங்களின் சின்ன கோரிக்கை. உங்களின் விமர்சனத்தை படித்து இன்னும் இருவர் அந்த புத்தகத்தை வாங்கி படித்தால்   போதும் அதுவே  எங்களுக்கு மகிழ்ச்சி. 





புத்தகம் படிக்கும் வாசகர்கள் வட்டம் எவ்வளவு பெரியது என்று தெரிந்துகொள்ளவே கேள்விகள் இல்லாத சின்ன போட்டி வைத்தேன் ஆனால் வந்ததோ மிக குறைவான பின்னுடங்கள் தான். குலுக்கல் முறை என்பதை மாற்றி வேறு ஏதேனும் ஒரு போட்டி வைக்கலாம் என்று இருக்கிறேன்.   நண்பர்களே உங்களிடம் இருந்து யோசனைகள் வரவேற்கப்படுகிறது. 












With Love
Romeo ;)





Tuesday, July 6, 2010

ஏழாம் உலகம் - விமர்சனம் மற்றும் பரிசு போட்டி


சென்ற முறை நடந்த புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்க முடியாமல் போனது. தமிழினி பதிப்பகத்தில் புத்தகம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். நண்பரும் பதிவருமான கார்த்திகேயன் தன்னிடம் இருந்த புத்தகத்தை எனக்கு தருவதாக சொன்னார், சென்ற முறை அவர் இந்தியா வந்த பொழுது அவரை சந்திக்க முடியாம போனதால் கொஞ்சம் ஏமாற்றம் மிஞ்சியது. கிழக்கு பதிபக்கதில் ஏதேனும்  புதிய வரவுகள் வந்து இருக்கிறதா என்று பார்க்க சென்ற போது பெரும் ஆச்சரியம் காத்து கொண்டு இருந்தது எனக்கு. ஏழாம் உலகம் புதிய பதிப்பை வெளியிட்டு இருந்தார்கள். முகப்பு அட்டையில்  ஒரு மனித முகம் உருகுவது போல இருக்கிறது, புத்தகத்தை படித்த பிறகு அதில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வும் இதே போல தான் உருகி கொண்டு இருக்கிறது என்கிற உண்மை தோன்றியது. படித்து முடித்து இரண்டு நாட்களாக முத்தமையின் கதறலில் இருந்து விடுபடமுடியவில்லை.

முதல் அத்தியாயம் படிக்கும் பொழுது மிக சிரமமாக இருந்தது, நாகர்கோயில் வட்டார வழக்கில் சிக்கி திணறி ஐயோ முதல் அத்தியாயமே இவ்வளவு கஷ்டமா இருக்கே என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். அடுத்தநாள் மீண்டும் முதலில் இருந்து படிக்க ஆரமித்தேன் கொஞ்சம் போல புரிய ஆரமித்தது. மீள் வாசிப்பின் முலமே சில அத்தியாங்கள் எனக்கு புரியவந்தது. புத்தகத்தை படித்து முடிகையில் கடைசி பக்கத்தில் அகராதி இருக்கிறது, வட்டார வழக்கில் இருக்கும் சொற்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அதன் அர்த்தங்களை வகைப்படுத்தி உள்ளார்கள். இது தெரியாமல் நாகர்கோவிலில் இருக்கும் நண்பனுக்கு போன் பண்ணி அர்த்தம் புரியாத வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டு கேட்டு அவன் உயிரை வாங்கினேன்.



நாவலில் உள்ள சில கதாபத்திரங்களை இங்கே அறிமுகம் (வேண்டாம் ஹ்ம்ம் இருக்கட்டும்) அறிமுகமே செய்கிறேன். 

பண்டாரம் இந்த நாவலின் கதாநாயகனும் வில்லனும் அவனே. முழுநேர தொழில் உடல் குறைபாடு உள்ளவர்களை பிச்சை எடுக்க வைத்து அவர்களின் மூலம் தன்னை  வளர்த்து கொண்டவன். பண்டாரத்துக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள். மகள்கள் மேல் அதிக பாசம் உள்ளவன், சின்னவள் கேட்ட வளயலுக்காக ஆசாரி வீட்டுக்கு நாடு இரவில் சென்று வாங்கி வருவதும், இரண்டாவது மகளை பார்க்க கால்கடுக்க நிற்பதும், அவளின் அலைசிய பார்வையை கண்டு ஒரு அப்பனாக உருகுவதும்.  மூத்த மகள் திருமண நாள் அன்று அவள் கேட்ட மாங்கா வைத்த நெக்லஸ் அப்பறம் வாங்கி தருவதாக கெஞ்சுவது. முத்தமையின் பிள்ளையை பாலிதீன் கவரில் போட்டு வைத்து பக்கத்தில் துணியை விரித்து வைப்பது.  எதற்கு எடுத்தாலும் அப்பனே முருகா,  ஞானபண்டிதா என்று உருகுவது. எல்லா வகை உணர்ச்சிகளையும் ஒரே மனிதனை கொண்டு ஆசிரியர் அசத்தியுள்ளார்.


போத்தி -  பண்டாரம் செல்லும் முருகன் கோவில் பூசாரி. கோவில் கருவறையில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது அதற்கு இவர் சொல்லும் காரணம் எல்லாம் படிக்கும் போது இனி சுவாமிக்கு செய்யும் எந்த ஒரு தீர்த்ததையும் கையில் கூட தொட கூடாது என்று முடிவு செய்தேன். பண்டாரம் மிகவும் கவலையா இருக்கும் சமயத்தில் அவருக்கு ஆறுதல் சொல்லி அவரை தேர்த்துவதும், கல்யாண மண்டபத்தில் பெண்ணின் அம்மையை அதட்டி அடக்கி வைப்பது என்று ஒரு தேர்ந்த நண்பனை போல பண்டாரத்தின் உடன் வந்து அனைத்தையும் முன்னின்று நடத்துகிறார். முத்தமையை முழுவதுமாக பார்க்கவும் ஆசைப்படுகிறார்.

முத்தம்மை.... என்னில் நீங்காமல் இருக்கும் அற்ப ஜீவன். முத்தமையை உருவத்தை ஆசிரியர் இப்படி வர்ணிக்கிறார் ( ஒரு மிகபெரிய வினோத பிராணி போலிருந்தாள். ஒரு கையும் ஒரு காலும் பெரிதாக திடமாக இருந்தன. இன்னொரு கையும் காலும் சூம்பி ஒரு வயது குழந்தையின் கைகால்கள் போல. முடியற்ற மிக பெரிய தலை ஒரு பக்கமாக சப்பியிருந்தது. ஒரே கண்தான். மறு கண்குழியில் ததும்பும் வெறும் சதையுருளை. முக்குக்குப் பதில் இரு சிறுகுழிகள். பெரிய வாயில் நான்கு பாக்கணும் சிதறிப் பரவிய நீண்ட மஞ்சள் பற்கள். வயிறு பெரிதாக உப்பி பளபளப்புடன் சற்று தழைந்து நின்றது. தொப்புள் விரிந்து ஒரு கறைபோல ஆகிவிட்டிருந்தது) இந்த பத்தியை படித்து கொஞ்ச நேரம் கண்ணை மூடி கொண்டு அந்த தோற்றம் எப்படி இருக்கும் என்று  யோசித்து பார்த்தேன் உடல் ஏதோ ஒரு வித அதிர்வலையை சந்தித்தது. ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் எதற்கு பெற்றோம், பெற்றது எல்லாம் எங்கே  என்றும் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு சவம். பண்டாரத்தின் அட்சயபாத்திரம், பதினெட்டு வருடங்களில் பதினேழு பிள்ளைகளை பெற்றுடுத்து ஒன்று கூட தன்னுடன் இல்லாது நினைத்து நினைத்து ஏங்குகிறாள். கடைசியாக பிறந்த ரசினிகாந்த் கூட சில நாட்களில் பண்டாரம் வேறு ஒருவனிடம் விற்றுவிடுகிறான். மனதை கனக்க செய்யும் கடைசி அத்தியாத்துக்கு முந்தினது படித்து முடித்த போது முத்தம்மை என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டாள்.  படித்து முடித்து மூன்று நாட்கள் என்னால் அவளின் கதறலில் இருந்து விடுபடமுடியவில்லை. மனதை அழுக செய்த கொடுரம் அது. 


பெருமாள், வண்டிமலை, சிடேன் நாயர்,  அகமதுகுட்டி, ராமப்பன், நாயர், எருக்கு, ரசினிகாந்த், குருவி, குய்யன், தாணுபிள்ளை, மாங்காண்டி சாமி, கூனன், பிக் பாக்கெட் ஆசாமி, கொச்சன் என்று நிறைய நபர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள். அனைவரை பற்றியும் தனி தனியா சொல்லி கொண்டு இருந்தால் நாவலின் சுவாரஸ்யம் போய்விடும்.

அவர்கள் பேசுவதை பக்கத்தில் இருந்து கேட்டுகொண்டு இருந்தது போல, பார்த்துகொண்டு இருப்பதை போல அவ்வளவு நெருக்கத்தில் உள்ளது ஜெமோவின் எழுத்துகள். இந்த தொழில் செய்யும் மனிதர்கள் தங்களது வருவாயை பெருக்க உருப்படிகளை எப்படி வாங்கி விக்கிறார்கள் என்றால்  ஏதோ மாட்டு சந்தையில் கறவை மாடு வாங்குவது போல இருக்கும் அவர்களின் பேசுக்கள். கேரளா ஆள் ஒருவன் அதில் வக்கீல் வேறு.

நாவலில் வலிகள் அதிகமாக இருக்கிறது யாரவது ஒருவர் அழுதுகொண்டோ, அடிவாங்கிகொண்டோ இருகிறார்கள். நக்கலுக்கும் நையாண்டிக்கும் வஞ்சனை இல்லாமல் அள்ளி தெளித்து உள்ளார் . பிச்சைகாரர்கள் தானே என்று இருந்துவிடாமல் அவர்களிடம் இருக்கும் நையாண்டி, அழுகை, தெரிந்து வைத்துள்ள சட்டம் சில விஷயங்களை பற்றி பேசும் போது அவர்கள் பிச்சை எடுப்பவர்களா என்கிற சந்தேகம் வருகிறது.  முத்தமைக்கு பிறந்த குழந்தையை ரசினிகாந்த் என்று அழைப்பதும், அவளை புணரும் அந்த ஒத்தவிரல் கூனனை கமல்காசன் என்று தமிழ் சினிமா ஹீரோகளை சிலரை ஆங்காங்கே நாவலில் இழுத்து விட்டு இருக்கிறார். ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வை இவ்வளவு நெருக்கத்தில் இருந்து பதிவு செய்து இருப்பதே மிக பெரிய ஆச்சரியம், ஜெமோ அதை அற்புதமாக செய்துள்ளார்.  

நாவலின் குறை அந்த வட்டார வழக்கு நடைதான் ஆனால் அதுவே நிறைவும் கூட.  நிறைய இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்று படித்து புரிந்துகொள்வதற்கே பெரும் போராட்டமாக இருக்கிறது. முதலில் படிப்பவர்கள் புத்தகத்தின் கடைசியில் இருக்கும் அகராதியை முழுவதுமாக படித்து (முடிந்தால்) மனப்பாடம் செய்துவிட்டால் கொஞ்சம் சவ்கரியமாக இருக்கும் நாவல் படிக்கும் போது. கதாபாத்திரங்கள் பேசும் போது வாட்டர வழக்கில் இருக்கும் சம்பாஷனை, பத்தி என்று வரும் போது சாதாரண உரைநடையில் இருக்கிறது இது கொஞ்சம் ஆறுதல் தரும் விஷயமும் கூட.


மாங்காண்டி சாமி பாடும் இந்த பாடலுடன் நாவல் நிறைவுப்பெருகிறது.

வெண்ணிலா அறியாதோ
    வெந்துருகும் எம்மனசை?
விண்ணுக்குப் போகாதோ
    விம்மி அழுவதெல்லாம்?
சொன்ன சொல்லை மறப்பாரோ
    சொந்தமிதை விடுவாரோ
என்னவென்று எண்ணியெண்ணி
    ஏங்கிடுவேன் வெண்ணிலாவே'
 
முத்தமையின் கதறலுடன் துவங்கிய கதை அவளின் கதறலுடன்  முடிவடைகிறது. 



நான் பெற்ற இன்பம் பெறட்டும் இந்த வையகம். பின்னுடம் இடும் நண்பர்கள் யாரவது இருவருக்கு இந்த நாவலை பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன். நாவல் வேண்டுபவர் பின்னுடத்தின் தெரிவிக்கவும் குலுக்கல் முறையில் இருவருக்கு நாவல் பரிசளிக்கப்படும். வெளிநாடு என்றாலும் அனுப்பி வைக்கப்படும்.


புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புவர்கள் இங்கே சொடுக்கவும்
With Love 
Romeo ;)

Monday, July 5, 2010

செம்மொழியான தமிழ்மொழியே - வேறு ஒரு கோணத்தில்



ஆபீஸ்ல ரெண்டு நாள் லீவ் கிடைச்சுது சரி அப்படியே செம்மொழி மாநாடுக்கு போயிட்டு வருவோம்ன்னு குடும்பத்துடன் கிளம்பினேன். பதிவுலக யூத் வானம்பாடி பாலா அண்ணன் ட்ரெயின் டிக்கெட் கன்பார்ம் பண்ணி குடுத்தார் , அவருக்கு ஒரு நன்றியை சொல்லி நமது கடமையை சரி வர செய்துவிடுவோம். சில புகைப்படங்கள் இங்கே .






மாநாடு வெளியே ஒரு கிராமத்தில் நடக்கும் சந்தையை போல அனைத்து இடமும் யாரோ ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டு இருந்தது. 





With Love
Romeo ;)