Thursday, September 23, 2010

எஸ்கேப் - சவால் சிறுகதை

மொட்டுக்கள் எல்லாம் விரிந்து கொண்டு இருந்த காலை நேரம், வீட்டின் முகப்பை கண்டேன். ஜிம்மி என்னை பார்த்து ஆசையுடன் கேட்டை கீறி கொண்டு இருந்தது, அவளுக்கு தெரியும் எனது கூடையில் நான்கு பட்டர் பிஸ்கட் இருக்கிறது என்று. ஜிம்மியுடன் இப்பொது நான் அதிக நேரம் செலவிடுகிறேன். காரணம் இல்லாமல் இல்லை இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இந்தியாவில் இருக்க போகிறேன். அப்பறம் லண்டன் சென்றுவிடுவேன், எல்லாம் நல்ல படியாக நடக்கவேண்டும் முருகன் அருள  வேண்டும்.  வீட்டின் அருகில் வந்த போது தலை சுற்றுவது போல்  இருந்தது, லோ பிரஷராக இருக்கலாம் வீட்டிற்கு சென்று கொஞ்சம் சக்கரை எடுத்து சாப்பிட்டால் போதும் ஆனால் அதுவரை இந்த மயக்கத்தை தாண்டி செல்லமுடியுமா என்று தெரியவில்லை தலையின் உள்ளே ரங்க ராட்டினம் சுற்றுவதை போலே இருந்தது. கீழே விழாமல்  இருக்க கேட் கதவை கைகளால் இறுக்க பிடித்து கொண்டேன், பத்மா என்று கூப்பிட வாய் திறக்கிறேன் அந்த ஒலி எனக்கு மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறது என்று எனக்கு தெரிகிறது. கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக எதிரில் இருக்கும் ஜிம்மியை மங்க செய்துகொண்டு இருந்தது, ஜிம்மியின் குரல் கூட வெகு தூரத்தில் இருந்து கத்துவதை போல இருக்கிறது...... 


கண்கள் விழித்தேன் என்னை சுற்றி சிலர் இருப்பதை போன்று இருந்தது. யார் என்று சரியாக தெரியாதவண்ணம் உருவங்கள் எல்லாம் மங்கி இருந்தது. குத்துமதிப்பாக தெரிந்த சில உருவங்களை யாராக இருப்பார்கள் என்று கொஞ்சம் யோசிக்க நினைத்தேன், நினைவுகள் என்னை வேறு ஏதோ ஒரு இடத்துக்கு அழைத்து சென்று கொண்டு இருந்தது. அப்பா, அப்பா என்று மகன் அழைக்கும் குரல் கேட்டது அவனுக்கு பதில் சொல்ல வாய் எடுக்க முடியவில்லை யாரோ எனது குரல்வளையை இறுக்கி பிடித்துகொண்டு இருந்தார்கள். நினைவுகள் தப்பியது எங்கோ யாரோ என்னை அழைத்ததை தேடி சென்று கொண்டு இருந்தேன். மீண்டும் குரல்கள் கேட்டது அதும் மிக அருகில்,

மிஸ்டர். பாலகிருஷ்ணன் நான் பேசுறது கேட்கிறதா ???
 மிஸ்டர்.பாலகிருஷ்ணன் நான் பேசுறது கேட்கிறதா??

என்னால் ம்ம் ம்ம் என்று தான் சொல்ல தோன்றியது வேறு எதும் சொல்ல முடியவில்லை.  யாரோ என்னை போட்டு உலுக்கியது  போல இருக்கிறது எனது கால்களை ஒருவரும் எனது இடுப்பு பகுதியை இருவர் எனது தலையை ஒருவர் என்று அவர்களின் கரங்களை கொண்டு தெரிந்துகொண்டேன். நான் எங்கு இருக்கிறேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது. மூக்கின் துவாரம் வழியாக ஏதோ மருந்து வாசம் வந்தது அது மிகுந்த நெடி அடித்தது அது கண்டிப்பாக பெனாயிலாக தான் இருக்கும். கண்களை மிகவும் கஷ்டப்பட்டு திறந்தேன் என்னை சுற்றியாரும் இல்லை. கண்களை  சுழற்றி சுழற்றி பார்த்தேன் என்னை ஒரு ரூமில் படுக்க வைத்து இருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது. கைகளை தூக்கி அசைத்தேன் யாரவது என்னை பார்பார்கள் என்று நினைத்தேன், எனது விரல்களை பற்றிக்கொள்ள ஒரு விரல் வந்தடைந்தது கூடவே சிறு சிறு கண்ணீர் துளிகளும். .

உங்களுக்கு ஒண்ணும் இல்ல நல்லா இருக்கீங்க. 
பத்மா நான் எங்கடி இருக்கேன் ? 

எனது குரல் எனக்கே வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். எப்பொழுதும் இருக்கும் கம்பீரம் எல்லாம் இப்போ இல்லை என்பதை நன்றாக உணர்ந்தேன். தொண்டையில் சளி கட்டி இருந்தால்  பேச்சு எப்படி இருக்குமோ அதை போன்று இருந்தது.

நம்ம நரசிம்மன் டாக்டர் கிளினிக்ல தான். 
எப்போ சேர்த்த
இன்னைக்கு காலைல தான் 
இப்போ என்ன டைம் 
8 மணி ஆச்சு
டாக்டர் என்ன சொன்னாரு ?
பிரஷர் ரொம்ப கம்மி ஆச்சு அதான் நீங்க மயங்கிடீங்க
ஹ்ம்ம் .. ரகு எங்க ?
இப்போ தான் போனான் வீட்டுல சுமதி சுமந்த்  கூட  தனியா இருப்பான்னு நான் தான் அனுப்பினேன். 

எழுந்து உட்கார வேண்டும் என்று தோன்றியது. ஆனால் முடியவில்லை பத்மா கொஞ்சம் உதவி செய்தாள் வலது கையின் துணையால் கொஞ்சம் எழுந்து உட்கார்ந்தேன்.  இடது கையில் சலைன் ஏறி கொண்டு இருந்தது. இது எத்தனாவது பாட்டில் என்று தெரியவில்லை.

என்னை எப்படி இங்கே கொண்டு வந்த ?
வீட்டு வாசல்ல ஏதோ தோப்புன்னு விழுந்தா மாதிரி ஒரு சவுண்ட் கேட்டுச்சு. ஜிம்மி ரொம்ப சத்தமா கத்துச்சு வெளிய வந்து பார்த்தா நீங்க குப்புறப்படுத்து இருந்தீங்க, ஐயோன்னு நான் போட்ட சத்தம் கேட்டு பக்கத்துக்கு வீட்டுல இருந்து நந்து வந்தான். உங்களை அப்படியே தூக்கிட்டு போய் சோப்பால போட்டுட்டு  ஒரு ஆட்டோ புடிச்சிட்டு வந்தான். அதுக்குள்ள நான் ரகுக்கு போன் பண்ணி சொன்னேன்,   ஆட்டோ வரதுக்குள்ள அவனும் வந்துட்டான். பாவம் அவன் கண்ணுல அப்படி தண்ணி நிக்கிது உங்கள அப்பா அப்பான்னு உளுக்கிட்டு இருந்தான். ஆட்டோ வந்த உடனே நானும் அவனும் நந்து  சேர்ந்து ஆட்டோல தூக்கிட்டு இங்க வந்து சேந்தோம். டாக்டர் உங்களுக்கு எதும் இல்லைன்னு சொல்லிடாரு. 
எப்போ வீட்டுக்கு போகலாமா ??
நாளைக்கு போகலாம்
சரி
வயறு எரிவதை போல இருந்தது, நேற்று இரவு சாப்பிட்டது இப்பொழுது வரை ஒரு காபி கூட குடிக்கவில்லை. ஏதாவது சாப்பிட்டால் தேவலாம் போல இருக்கு நாக்கு எல்லாம் வரண்டுவிட்டது, கொஞ்சம் தண்ணி குடித்தேன்.
   பத்மா ரொம்ப பசிக்கிது எதாவது சாப்பிடலாமா 
   இருங்க சிஸ்டர் கிட்ட கேட்டுட்டு வரேன் 


மண்டையில் ஏதோ சுருக் என்று வலித்தது, நெற்றிக்கு கொஞ்சம் மேல வீங்கியது போல இருந்தது விழுந்த போது ஏதாவது அடிப்பட்டு இருக்கலாம்.

நான் போய் இட்லி வாங்கிட்டு வரேன் சிஸ்டர் வந்து இந்த குளுகோஸ் பாட்டில் நிப்பாட்டுவாங்க  அப்பறம் சாப்பிடலாம்
சரி அப்படியே கொஞ்சம் காபி வாங்கிட்டு வா
காபி எல்லாம் இப்போ சாப்பிட கூடாது, கொஞ்ச நேரம் வாய கட்டிட்டு கம்ன்னு இருங்க.

சிஸ்டர் அறைக்குள் வந்தார் அவருக்கு என்னை நன்றாக தெரியும் . நரசிம்மன் எங்க பேமலி டாக்டர் என்பதால் அடிகடி இங்கு வந்து இருக்கோம். 

என்ன சார் உடம்பு எப்படி இருக்கு ???
நீங்க தான் சொல்லணும் சிஸ்டர். வயசு ஆகிடுச்சுல அதான் முடியல. 
அப்படி எல்லாம் ஒண்ணும் பெருசா இல்ல சார் , லோ பிரஷர் தான் கொஞ்சம் கவனமா இருங்க.
சரி.. டாக்டர் இப்ப ரவுண்ட்ஸ் வருவாரா ??
பத்து மணிக்கு மேல வருவாரு சார்.

கையில் இருந்த  ஊசியை எடுத்து திரும்ப அந்த பாட்டிலில் ஏற்றினார். அவர் சென்ற கொஞ்ச  நேரத்தில் பத்மா இட்லியுடன் வந்தாள். நான்கு இட்லி சாம்பாருடன் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அது எனது வயருக்கு போதாது என்று தெரிந்தது, வேறு வழியில்லை இனி எது கேட்டாலும் பத்மா வாங்கி தரமாட்டாள். டாக்டர் வரும் வரை நான் காத்து கொண்டு தான் இருக்கவேண்டும்.

கொஞ்சம் பால் ஆவது தாயேன்

முறைத்துகொண்டே பிளாஸ்க் எடுத்துட்டு ஹோட்டல்க்கு  போனாள்.

பக்கத்தில் இருந்த கட்டிலில் யாரோ ஒருவர் படுத்து இருந்தார். அவரின் முதுகை தான் பார்க்க முடிந்தது.  வயதானர் போல இருந்தார். கண்களை லேசாக மூடி காலையில் நடந்த சம்பவங்களை திரும்ப நினைத்து கொண்டேன்.  முகத்தில் யாரோ துணியை வைத்து  பொத்தினார். கொஞ்சம் திமிரலாம் என்று பார்த்தால் அதற்குள் எனது கழுத்தில் ஒரு ஊசி ஒன்று இறங்கியது.  யாரோ முளையின்  உள்ளே கையை விட்டு சுற்றி விடுவதை போல இருந்தது. வியர்வை அதிகமாக வெளியேறியது, பத்மா என்று வாய் நீக்கி அழைக்க முடியவில்லை. கண்கள் எல்லாம் மேலே மேலே என்று சென்று கொண்டு இருக்கிறது. யாராவது ஏதாவது செய்யுங்கள் என்று உதவிக்கு அழைக்க வாயெடுக்க முடியவில்லை.

டாக்டர் அவ்வளவு சிக்கிரம் வருவார் என்று நினைக்கவில்லை நான். என்னை அவர் ஏதேதோ செய்துகொண்டு இருந்தார் என்னை சுற்றி ஆறு ஏழு பேர் இருந்தார்கள். என்னை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு இருந்தார்கள். எனது அறையை பார்த்தேன் அவளே தான்.. காமினி   

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அந்த மருத்துவமனை பின்புறம் இருந்த காரில் ஏறி டாப் கியரில் பறந்தாள் காமினி. கார் நேராக பரந்தாமன் வீட்டிற்கு சென்றது. காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றாள் அங்கே பரந்தாமனும் சிவாவும் இவள் வருகைகாக காத்துகொண்டு இருந்தார்கள். 
ஹாஸ்பிடலில் நடந்தவற்றை   வரி விடாமல் அவர்களிடம் ஒப்பித்தாள், ஏனோ இவள் சொல்லுவதை ஏதும் கேட்காமல் 


டைமண்டு எங்கே?? என்று மட்டும் சிவா கேட்டான்.
அதன் சொனேன்ல அந்த ஆளை கடத்தி கொண்டுவருவதற்குள்ள டாக்டர் வந்துட்டார்ன்னு. 
அப்போ டைமண்டு உங்கிட்ட இல்ல ?? 
இல்ல சிவா என்னை நம்பு ஒரு நிமிஷம் இரு அந்த ஆளு இப்ப எங்க இருக்கான்னு தெரிஞ்சிக்கிறேன். 
ஹலோ டாக்டர் நரசிம்மன் கிளினிக்கா 
ஆமா சொல்லுங்க 
அங்க பாலகிருஷ்ணன்னு ஒருத்தர் அட்மிட் ஆகி இருக்காரு அவர்கிட பேச முடியுமா ??
நீங்க யாரு 
அவங்க கஸின் 
சாரிங்க அவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் இறந்துட்டார், சிவியர் ஹார்ட் அட்டாக்.  பாடிய அவங்க வீட்டுக்கு எடுத்துட்டு போய்டாங்க நீங்க அங்க போய்ப்பாருங்க.     
காமினியின் கண்கள் குளம் போல் தேங்கி இருந்தது, இனி நான் என்ன செய்வேன் அந்த டைமண்டு அவ்வளவு தான. அப்போ ரவி நிலைமை ??  
சார் பாலகிருஷ்ணன் இறந்து போய்ட்டாராம்.
வாட் ?? பரந்தாமன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளனர்

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
 



சிவா கொஞ்சம் பொறுமையா இரு என்றார் பரந்தாமன். காமினி அந்த வைரம் எப்படியும் பாலகிருஷ்ணன் வீட்டுல தான் இருக்கும். அவன்  சாகாமல் இருந்தால் எப்படியும் அதை அவனிடம் இருந்து வாங்கிடலாம் பச் போய்ட்டான். 

அவனுக்கு லோ பிரஷர் மட்டும் இல்லைனா எப்படியாவது கடத்திட்டு வந்து இருப்பேன் சார். மயக்க ஊசி தானே போட்டேன் அதுக்கே ஆள் அவுட் ஆகிட்டானே. 


சரி நடந்ததை மறந்துவிடு எப்படியும் பத்து பதினைந்து நாள் அவன் வீட்டில் யாரவது ஒருவர் இருந்து கொண்டே தான் இருப்பாங்க. ஸோ இனி கொஞ்சம் பொறுமையாதான் இதை ஹன்ட்ல் பண்ணனும். 

என்ன டாட் எதுக்கு எடுத்தாலும் பொறுமை பொறுமைன்னு பேசிட்டு. ஏய் உண்மைய சொல்லுடி அந்த ஆளு கிட்ட தான் டைமண்டு இருக்கா இல்ல நீயெ  அதை மறைச்சி  வச்சி இருக்கியா ?? 

சிவா திரும்ப அவளை நோக்கி துப்பாக்கியை தூக்கினான். 

சிவா ஏன் லூசு மாதிரி பிகேவ்  பண்ணுற. அவ நம்ம கிட்ட எத்தனை நாள் வேலை செய்யுற ஏதாவது ஒரு தப்பு பண்ணி இருப்பாளா, அவன் செஞ்ச தப்புக்கு இவ என்ன செய்வா. 

ரெண்டு பேரும்  தானே போய் அந்த டைமண்டு அடிச்சிங்க அப்பறம் எனக்கு தெரியாது உனக்கு தெரியாதுன்னு ஆளாளுக்கு கதை சொல்லுரிங்க. இதோ பார் காமினி அந்த பாலகிருஷ்ணன் எங்களுக்கு ஏதோ பெரிய செக் வச்சி இருக்கீங்க அது மட்டும் நல்லா தெரியுது.  அந்த டைமண்டு அவன் கிட்ட இருந்தா அதை கண்டிப்பா வேற யாருக்கோ கைமாத்தி விட்டாலும் விடுவான். அப்பா என்னதான் பெரிய ஆளா இருந்தாலும் அவன் கிட்ட இருக்குற அந்த டைமண்டுக்காக ரொம்ப பொறுமையா டீல் பண்ணுறார். அப்பவே அவனை நாலு தட்டு தட்டினா எல்லாம் சொல்லிடுவான்னு சொன்ன இவர் கேட்கல இப்போ யார் அந்த பார்ட்டிக்கு பதில் சொல்லுறது. 

டேய் அவன் அப்படிப்பட்டவன்  இல்லைன்னு மனசுக்குள்ள ஏதோ சொல்லிட்டு இருந்துச்சு. உன்னோட பேச்சை கேட்டு அவனை தூக்கிட்டு வரலாம்ன்னு பார்த்தா அந்த சாதாரண ஊசிக்கே அவன் செத்துட்டான்.  


காமினி இன்னும் ஒரு மாசத்துல அந்த டைமண்டு எங்க கைல இருக்கணும். நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது, இப்போ நீ போகலாம். நினைவுல வச்சிக்கோ உன்னோட குடுமி எங்க கைல தான் இருக்கு. மைன்ட்  இட்.


“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.


ஆமா சார், தெரியாத்தனமா அந்த ஆளு சாகும் போது யாரோ என்னை கொள்ள பார்த்தாங்கன்னு சொல்லி தொலைச்சிட்டன் அதுல இருந்து அவங்க வீட்டு சைடுல போலீஸ் வண்டி ஏதாவது வந்துட்டு போயிட்டு இருக்கு. அந்த அம்மா கிட்ட ஏதாவது பேசலாம்ன்னு பார்த்தா அவங்க வீட்டை விட்டு வெளியவே வரல. சரி ஏதாவது பண்ணலாம்ன்னு சோப்பு விக்கிறவள் போல  போனா கூட அந்த அம்மா வெளிய வரல. நாய் மட்டும் கத்திட்டே இருந்துச்சு, அத திரும்பி பார்த்தா அதோட கழுத்துல இருக்குற பெல்ட்ல நம்ம டைமண்டு. அப்படியே வெளிய வந்துட்டேன், 
இன்னைக்கு மதியம் ரெண்டு மணிக்கு அந்த நாய்க்கு மயக்க மருந்து தடவின பிஸ்கட் 
குடுத்து எடுத்துட்டு வரப்போ போலீஸ் வந்துடுச்சு. அவங்க கிட்ட சோப்புபை 
காமிச்சு சிரிச்சு , வழிஞ்சி நாலு சோப்பு வித்துட்டு அப்படியே இதையும் சுட்டுட்டு  
வந்துட்டேன். 

வெல்டன் ஸ்வீட் ஹார்ட். பாத்தியாட இது தான் காமினி.  சரி எங்க அந்த டைமண்டு??

இருக்கு சார், முதலில் என்னோட அமௌன்ட் செட்டில் பண்ணுங்க. 

இந்த உன்னோட சம்பளம் பத்து  லட்சம்,
பரந்தாமன் அவளிடம் பத்து லட்சத்துக்கான காசோலையை தந்தார்.  

இது பத்தாது எனக்கு இருபது  லட்சம் வேணும் 

என்ன விளையாடுறியா காமினி ?? 

இல்ல பரந்தாமன்!!! இந்த டைமண்டு மதிப்பு நாலு கோடி. உயிரை   பணயம் வச்சு நானும் பாலகிருஷ்ணனும் கொள்ளை அடிச்சோம், அவர் பங்கையும் சேர்த்தே எனக்கு வேணும் 

இல்லைனா

டைமண்டு இல்ல. 

அப்பா அப்பவே இவள போட்டு இருந்தா இந்த அளவுக்கு பேசுவாளா ?? 

டேய் சிவா நிறுத்து, ஓவரா பேசாதா, ஏசி ரூம்ல உக்காந்துகிட்டு டிலிங் பேசிட்டு இருக்காத வெளிய வந்து வேலை செஞ்சு பாரு அப்பறம் தெரியும் எங்களோட கஷ்டம். கன் வச்சிட்டு இருந்தா பெரிய ஆள்ன்னு நினைப்போ !!! இங்க பார் காமினியின் உடலை சுற்றி வெடிகுண்டு நிரம்பி இருந்தது. சிவாவும் பரந்தாமனும் பயந்து அவளை விட்டு சில அடிகள் பின்னே சென்றார்கள். 

ரவியை இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள வீட்டுல விட்டடனும்  இல்ல இந்த இடமே காலியாகிடும். சிவா என்னோட அக்கௌன்ட்ல இருபது லட்சம் இன்னும் ஒரு மணி நேரத்துல  டெபொசிட் பண்ணிடு இல்ல பாலகிருஷ்ணன் போன இடத்துக்கே நாம போகணும். 

  காமினி ஏன் இப்படி பண்ணுற?? உனக்கு நான் எத்தனை நல்லது பண்ணி     
 இருப்பேன். என்னை பத்தி தெரிஞ்சும் நீ விளையாடுறியா ?? 

 போதும் டயலாக் பேசுனது எல்லாம், எனக்கு ரவி விடுதலை ஆகணும், பணம் 
என்னோட அக்கௌன்ட்ல போடணும்.  ஹ்ம்ம் சிவா கிளம்பு இல்ல எல்லோரும் 
இப்பவே செத்துடுவோம். இன்னும் ஒரு மணி நேரம் தான் உனக்கு கேடு. இல்ல போலீஸ்க்கு போன் பண்ணி சொல்லிட்டு நானும், பரந்தாமனும் பரலோகம் போயிடுவோம். நீ ஜெயில்க்கு போவ 
உனக்கு டைமண்டு வேணுமா இல்ல ஜெயிலுக்கு போகணுமா ???
 எது வேணும்ன்னு நீயே செலக்ட் பண்ணு


சிவா பயத்துடன் அங்கு இருந்து கிளம்பி சென்ற அரை மணி நேரத்தில் எனது மொபைல்க்கு பேங்கில் இருவது லட்சம் ருபாய் டெபாசிட் செய்ததற்கு ஆதாரமாக ஒரு எஸ்எம்எஸ் வந்தது
.



கொஞ்சம் அந்த பக்கம் திரும்புங்க பரந்தாமன் என்னோட டிரஸ் சரி பண்ணனும். 
பரந்தாமன் திரும்பிய நொடி அவரின் கழுத்தில் ஒரு ஊசியை இறக்கினாள் காமினி, 

சாரி பரந்தாமன் நான் கிளம்புறேன் இது வெடி எல்லாம் இல்லை, எனக்கு வேற வழி தெரியல ரவியை நீ விடுதலை பண்ணமாட்டன்னு எனக்கு தெரியும். அடுத்த நடக்க போற டைமண்டு எக்ஸிபிஷன்ல கண்டிப்பா ஏதாவது கொள்ளை அடிக்க சொல்லுவ, இப்படியே நீ சொல்லுற எல்லாத்தையும் நான் பண்ணிட்டு இருக்க முடியாது.     என் கூட பிறந்தான் என்கிற காரணத்துக்காக முளை வளர்ச்சி இல்லாத ஒருத்தனை பிணயகைதியா  வச்சி இருந்திங்க. அவனுக்காக தான் நீங்க சொன்னதுக்கெல்லாம் மறுப்பே சொல்லாம வேலை செய்ஞ்சி முடிச்சேன். போதும் பரந்தாமன்  இனி நாங்க இங்க இருக்க முடியாது.  இப்போ நானும் ரவியும்  இந்தியா விட்டு கிளம்புறோம். முடிஞ்சா அடுத்த ஜன்மத்தில் மீட் பண்ணலாம். அந்த டைமண்டு இனி எனக்குதான். வெளிநாடு போறதுக்கு காசு வேணும்ல அதான் உங்கிட்ட அதை குடுக்குற மாதிரி நடிச்சேன்.

பரந்தாமன் கண்கள் முடியபடி அமைதியாக உலகத்தை விட்டு பிரிந்து போனார். காமினி அங்கு இருந்து கிளம்பி சிட்டாக பரந்தாமன் காரில் ஏர்போர்ட் நோக்கி பறந்தாள். 
அங்கு நந்து ரவியுடன் பிரிட்டிஷ் ஏர்வேசில் காமினியுடன் செல்ல காத்துகொண்டு இருந்தான்.

மிஸ்டர் பாலகிருஷ்ணன் இப்போ தெரியுதா காமினி என்ன பண்ணிட்டு இருக்கான்னு!!! இவருக்கு பதில் சொல்லலாம் என்று வாய் திறந்தேன் முடியவில்லை
விடுங்க சார் ரொம்ப ட்ரை பண்ணாதிங்க உங்களுக்கு ரெண்டு சாய்ஸ் குடுத்தேன் ஒண்ணு இந்த மேல் உலகத்துல பேசிட்டு இருக்கலாம் இல்ல நீங்க பார்க்கணும்னு நினைக்கிற நபரை இப்போ  என்ன பண்ணிட்டு இருக்காங்க என்பதை  பார்க்கலாம்.  நீங்க ரெண்டாவதை செலக்ட்  பண்ணிங்க ஸோ இனி உங்களால பேச முடியாது. ஏய் யாருப்பா அங்க இவரோட ரூம் காடுங்க. போங்க சார் இன்னும் நிறைய பேரு லைன்ல இருக்காங்க.  

நேக்ஸ்ட் யாருப்பா .... 

பரந்தாமன்னு பேரு சார் இவரும் காமினி இப்போ எங்க இருக்கான்னு தெரிஞ்சிக்க  ஆசைப்படுகிறார்.. 

நம்ம ரூல்ஸ் எல்லாம் சொல்லிட்டியா ??

சொல்லிட்டேன் சார்  

வா ராசா வா அந்த சேர்ல உட்காரு.  




எழுத்து பிழை அதிகமாக இருந்து இருக்கும். முடிந்த அளவு சரி செய்து இருக்கிறேன் மற்றபடி எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்.  






-- 

With Love


Romeo ;)

Saturday, September 18, 2010

ரூல்ஸ் + சான்றிதல் = வேலை

சென்னைக்கு திரும்பி வந்து ஐந்து வருடம் ஆடிவிட்டது.  ஒரு வேலை கிடைப்பதில் இருக்கும் சிரமம் எவ்வளவு என்று இங்கு வந்த சமயத்தில் நன்றாக  தெரிந்துகொண்டேன். இரண்டு  மாதம் சுத்தாத இடம் இல்லை, ஏறாத கம்பெனி இல்லை. படிக்காத வேலை விளம்பரங்கள்  இல்லை ஒரு வழியா இப்பொது இருக்கும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து கிட்டதட்ட நான்கரை வருடம் ஓடிவிட்டது. ஆனால் ஏதோ ஒன்று குறைவது போன்றே இருக்கிறது, சென்னை அலுத்துவிட்டது போல . திரும்ப கோயம்புத்தூர் சென்றுவிடலாம் என்று நினைத்துகொண்டு இருக்கிறேன். எல்லாம் சரி ஆனால் வேலை வேண்டுமே !!! திரும்ப வேலை தேடும் படலம் நடந்துகொண்டு இருக்கிறது. எல்லா கம்பெனி ஆட்களும் சொல்லி வைத்தது போன்று  சான்றிதல் கேக்கிறார்கள், என்னிடம் இருந்தா தான் தருவதற்கு அல்லது காமிப்பதற்கு !!! கோயம்புத்தூரில் வேலை இருக்கிறது என்று ஒரு விளம்பரம் பார்த்து அந்த பெரிய கம்பெனிக்கு இண்டர்வியுக்காக  சென்றேன், முதல் ரவுண்டு என்னை பற்றி பேச சொல்லி சொன்னார் நானும் சிவனே என்று எல்லாவற்றையும் ஒப்பித்தேன். சான்றிதல் இருக்கிறதா என்று கேட்டார், இல்லை என்றேன். வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்.  ஏன் சார் என்றேன், சான்றிதல் இல்லை என்றால் வேலை இல்லை என்றார்.. என்ன கொடுமை பாருங்க நான்கு வருட  வேலை அனுபவம் இருந்தும் சான்றிதல் இருந்தால் தான் வேலை என்றால் என்ன பண்ணுறது?? 


அவரிடமே ஏன் சார் Technical Round இன்னும் நடக்கவே இல்ல, அதில் நான் பாஸ் ஆகலை என்றால் சொல்லுங்க ஒத்துக்கலாம் சான்றிதல் இல்லை என்றால் வேலை இல்லை சொல்லுறிங்களே  ஏன் என்று  கேட்டேன். அது கம்பெனி ரூல்ஸ்(???) என்றார். ரூல்ஸ் கிரேட் பண்ணுறதே நாம தானே சார். இப்படியே எல்லா கம்பெனி ஆளுங்க இருந்தா அப்பறம் என்ன மாதிரியான ஆளுங்களுக்கு எப்படி சார் அவங்க கனவை நிறைவேற்ற முடியும் ?? சாரி சார் எங்களுக்கு சான்றிதல் கண்டிப்பா வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டார்.  இன்னொரு கம்பெனியில் இருந்து போன் அழைப்பு வந்தது இண்டர்வியுக்கு வாங்க என்றார் அந்த பெண்மணி. அங்க போய் ஏன் அவமானம் படவேண்டும் என்று போனிலே என்னிடம் சான்றிதல் எல்லாம் இல்லை என்றேன். அவரும் வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்.   


ஒரு டவுட் வேலை பார்க்க போவது நானா இல்லை என்னோட சான்றிதலா?? சான்றிதல் இருந்தால் தான் வேலை என்கிற மடத்தனமான சிஸ்டம் முதலில் தூக்கவேண்டும்.  சான்றிதல் வைத்து என்ன பண்ண போறீங்க ??  இந்த மெயில் எனக்கு அடிக்கடி வரும், 



Greetings from TCS!

With reference to your CV in the job portal, we would like to have you walk in for an interview if you meet our eligibility criteria and proficient in any one of the skill sets mentioned below.

Note- This is a bulk mail, Kindly ignore if not applicable

Skills - Desktop Support ( L2 level)

Location : Chennai

Experience : 3 to 7Years

Eligibility criteria

Experience Band - 3 to 7 Yrs of Relevant Experience
B.E./ B.Tech /M.E./ M.Tech/ MSc/ MCA/ MCM/ MS
PGDIT (2 years full time Approved by AICTE)
B.Sc./BCA/Diploma holders with 3 years of relevant functional / technical experience
Should have consistently 50% and above marks from class 10 onwards.
Should not have more than two years breaks /Gaps in career/Academics.
Candidates who have appeared for the TCS Selection Process in the last 6 months need not apply
Extended Education Will not be considered.

இதுவரைக்கும் ஐம்பதுக்கும் மேல இந்த மாதிரி மெயில் வந்து இருக்கு, எதுக்கு பதில் அனுப்பினாலும் அவர்களிடம் இருந்து பதில் வருவதே இல்லை. அப்பறம் என்ன ______க்கு  எனக்கு மெயில் அனுப்பனும்??

எனக்கு கத்துக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகமா இருக்கு ஆனால் அது எல்லாம் முடியாது கற்றுக்கொண்டும் வந்து வேலை பார் என்கிறது இந்த கம்பெனி ரூல்ஸ். சிலருக்கு படித்து தெரிந்து கொள்ளவதை விட பழகி தெரிந்து கொள்ளவே பிடிக்கும். நான் இந்த வகையை சேர்ந்தவன், லெதர் டெக்னாலஜி படித்துவிட்டு கம்ப்யூட்டர் சைடுல வேலை பார்க்கிறேன். கம்ப்யூட்டர் பற்றி எதுவும் படிக்காமல் ஒரு இன்டர்நெட் சென்டர்ல வேலை பார்த்து தொழில் முறையில் கற்றுக்கொண்டேன்.  இந்த கம்பெனில இருந்து கூட நிறைய கற்றுக்கொண்டேன். அனுபவம் தானே ஒரு மனிதனை உருவப்படுத்துக்கிறது. 

பத்து வருஷதுக்கு முன்னாடி வைத்த அர்ரியர் பேப்பர் எழுத முடியுமா என்று தெரியவில்லை. கண்முன் குடும்பம் என்று  வரும் போது கண்டிப்பா எழுதவேண்டும்  என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன். காலேஜ்ல அதுக்கு அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை கிடைத்தாலும் அர்ரியர் பேப்பர்க்கு படிக்கணும், கணக்கு பாடத்துக்கு டியூஷன் போகணும். டியூஷன் எடுக்குற வாத்தியார் என்னை விட வயசு கம்மிய இருந்தா அவரை நான் பெயர் சொல்லி குப்பிடுவேன் அது அவருக்கு பிடிக்குதோ இல்லையோ!!!, அப்பறம் கூட படிக்கிற பசங்க எல்லாம் என்னை சார்ன்னு குப்பிடுவாங்க. ஜூனியர் A, B, C, D ஒரு சைடுல படிக்க.. a + b = ab (இது கரெக்டா???)ன்னு நான் கணக்கு எழுதி  படிக்க நடுவில் கிடந்தது மண்டை பிய்த்து கொள்ளபோவதோ என்னவோ தங்கமணி தான்...  யப்பா இந்த தொல்லை எல்லாம் நினைச்சு பார்க்கவே டெரர்ரா இருக்கே :(. வேலை தேடும்ப்படலாம் நடந்துகொண்டு இருக்கிறது :D ....


  

With Love
Romeo ;)





  
  

Sunday, September 12, 2010

ஒளிப்பதிவு இயக்குனர் - ரோமீயோ


போன வாரம் திருப்பூர் சென்று இருந்த போது எடுத்த புகைப்படங்கள் .










With Love
Romeo ;)