Thursday, November 25, 2010

காடு - ஜெயமோகன்

ஏழாம் உலகம் புத்தகம் படிக்கும் வரை எனக்கு ஜெயமோகன் எழுத்தின் ஸ்பரிசம் அவ்வளவாக இல்லை. இணையதளத்தில் படிப்பதோடு நிறுத்திவிட்டேன், ஏதோ ஒரு ஊந்தலில் வாங்கிய ஏழாம் உலகம் என்னை உலுக்கி எடுத்துவிட்டது அவ்வளவு நெருக்கமாக ஒரு நாவலை நான் வாசித்தது இல்லை என்பதால் உண்டான உணர்ச்சி அது. அதற்கு எந்தவிதத்திலும் சோடை போகாத நாவல் காடு. 

     நாவலின் தலைப்பே சொல்லிவிடும் கதை எங்கு பயணிக்க போகிறது என்று. ஒரு பதிவரிடம் ஜெயமோகன் எழுத்துகள் எப்படி இருக்கும் என்று கேட்டேன். ஜெயமோகன் எழுத்தை படிக்கும் போது அவர் நமது கையை பிடித்து அந்த இடங்களை அழைத்து செல்வது போல இருக்கும் அவ்வளவு நெருக்கமான படைப்புகள் எல்லாம் என்றார். காடு படிக்கும் போதே அவர் சொன்னது அத்தனையும் உண்மை என்று புரிந்துகொண்டேன் நன்றி மணிஜி 

    கிரிதரன் தனது மகன் சிவராமனின் மகளை கட்டி குடுத்த ஊருக்கு செல்கிறார். செல்லும் வழியில் தான் வேலைசெய்த சிற்றாறு பட்டணங்கால் கால்வாய் கடக்கும் போது முன்பு அதே இடத்தில வேலை செய்த போது ஒரு கல்வெட்டில் தனது பெயரை எழுதி வைத்ததை நினைவுப்படுத்தி அங்கே சென்று பார்க்கிறான். அங்கு அவன் பெயர் மட்டும் அல்ல ஒரு மிளாவின் கால்தடமும் பதிந்து உள்ளதால் அதை காணவேண்டி அங்கே செல்கிறான். 

   கிரி வீட்டிற்கு ஒரே பிள்ளை அப்பா ஜோசியம் என்று சப்பை கட்டு கட்டிக்கொண்டு வாழ்கையை ஒட்டி கொண்டு இருப்பவர். அம்மா தான் குடும்பத்தை காப்பாற்றி கொண்டு இருக்கிறாள். தனது அண்ணனிடம் மகனை வேலைக்கு சேர்த்து விடுகிறாள். கிரிதரனை காட்டில் நடக்கும் அவரின் கட்டுமான வேலையை மேற்பார்வையிட அங்கு அனுப்பி வைக்கிறார். வந்த இடத்தில நீலி என்கிற மலைசாதி பெண்ணிடம் காதல் கொள்கிறான்,  விஷ காய்ச்சலால் நிலி மரணம் அடைகிறாள் அதன் பிறகு வேணியை கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையை வெல்ல முடியாமல் துவண்டு போய் ஒரு வழியாக முன்னேறுகிறான்.

    கிரிதரன் காடுகளில் எப்படி வாழ்ந்தான், பயந்து நடுங்கிய நாட்கள், பயமே இல்லாமல் கழித்த இரவுகள், குட்டப்பன், ரொசாலம், குருசு, நீலி என்கிற ஆதிவாசிபெண்,  மாமாவின் மனைவி, மாமனின் மகள் வேணி, ரெஜினா, சினேகம்மை, அய்யர் என்கிற என்ஜினியர்யுடன் ஏற்பட்ட நட்பு மற்றும் சிலர்..  இவர்களில் யாராவது ஒருவர் இவனுடன் பயணித்து கொண்டே இருகிறார்கள்.


   ""ராத்திரியில காடு ஒரு பெரிய கொண்டாட்டமா மாறிடும். உண்மையில் ராத்திரிதான் காடு முழிச்சுக்குது. மனுஷங்க போத்திட்டு துங்குறாங்க""


   கிரிதரன் முதல் முறை காட்டில் வழிதவறி சென்றுவிடுகிறான், வழிதவறிய பிறகு அவனிடம் ஏற்படும் பயம் எப்படியாவது அங்கு இருந்து தப்பி வந்துவிட வேண்டும் என்று பதறும் இடம் நம்மையும் சேர்த்தே தோற்றி கொள்கிறது, முதலில் ஏற்பட்ட அந்த பயம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி காட்டில் இரவில் தனியாக சுற்றும் அளவுக்கு தேறிவிடுகிறான். முதலில் பன்றி கூட்டதை பார்த்து பயந்தாலும், பிறகு ஒரு இரவில் யானைகளுக்கு நடுவே மாட்டி கொண்டு சாமர்த்தியமாக தப்பித்து கொள்கிறான். காட்டில் தனியா செல்லும் அளவுக்கு தைரியத்தை நீலி மீது ஏற்ப்பட்ட காதலால் தான் என்று சொல்லலாம். இளமையில் இரவில் காட்டில் தனியா சுற்றி அலையும் கிரிதரன் வயதான பின்னால் இருட்டாக இருக்கும் சாலையை கடப்பதற்கு மிகவும் பயந்து நடுங்குகிறான். யாரவது ஒருவர் துணை இல்லாமல் அந்த இடத்தை கடந்து போக முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான்.


      அம்மா சொன்னாள் என்கிற ஒரே காரணத்திற்காக வேணியை கல்யாணம் செய்துகொள்கிறான். ஆரம்பத்தில் இருந்தே வேணியை வெறுப்பவனாக இருக்கும் கிரிதரன் சொத்துக்காக அவளை கல்யாணம் செய்ததாக மற்றவர்கள் சொல்வதை கேட்டு நிறைய குழப்பம் அடைகிறான், பிறிதொரு நாளில் அவளை கல்யாணம் செய்து கொண்ட பிறகு வேணியே இந்த கேள்வியை அவனிடம் கேட்கிறாள். வேணியை கல்யாணம் செய்துகொண்டாலும் அவளின் அம்மா கிரிதரனை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறாள்.    

        
     கிரிதரன் மற்றும் குட்டப்பன் வாயிலாக காட்டை விவரித்து இருக்கிறார் ஜெமோ. முதல் தடவை காட்டில் தொலைந்து போன போது எப்படியாவது அங்கு இருந்து தப்பிக்க வேண்டும் என்று அவன் செய்யும் முயற்சிகளை விவரித்து இருந்த இடம் அருமை.  கிரிதரனுடன் வேலைசெய்யும் குட்டப்பன் வாயிலாக காட்டை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். காட்டில் எப்படி வாழவேண்டும் என்று குட்டப்பனை கேட்கலாம் அவ்வளவு விஷயம் உள்ளவனாக காடு பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதில் வைத்து இருக்கிறான். இரவில் காடு எப்படி இருக்கும் என்று விவரித்து இருக்கும் இடம் அவ்வளவு அழகு ரொம்பவே ரசிக்கும் படியான இடங்கள் அது. காடு என்றால் கொடிய மிருகங்கள் அதிகமாக இருக்கும் இடம் என்று நினைத்தேன். ஆனால் புத்தகத்தை படித்த வரை அப்படி ஒன்றும் கொடிய மிருகங்கள் இந்த காட்டில் வாழ்ந்ததாக தெரியவில்லை. வாழ்வின் அர்த்தங்களை அய்யர் மூலம் எளிமையாக சொல்லி இருக்கிறார்.


   காடு  பற்றி மட்டும் சொல்லாமல் மிஷனரிகள் செய்யும் மதமாற்று வேலையையும் இங்கே காண முடிகிறது. காட்டில் விஷ காய்ச்சல் வந்து நிறைய உயிர் இழப்புகள் நேரிடும் போது அவர்களுக்கு உதவுவதற்காக கீழே இருக்கும் வேறு ஒரு மிஷனரி மருத்துவமனை வந்து மருந்து வாங்க வருகிறான். இவனின் செயலை பார்த்து நீ மதம் மாறிக்கொள் என்று நேரடியாக கேட்கிறார்.

   இன்று நேற்று என்று நாவல் அங்கும் இங்குமாக மாறி மாறி பயணிக்கிறது உண்மையில் அட்டகாசமான திரைகதை போல உள்ளது அந்த கால மாற்றங்கள் எல்லாம். கதை நடக்கும் இடம் நாகர்கோயில் என்பதால் அந்த ஊரின் பாஷையில் தான் எல்லா கதாபாத்திரங்களும் பேசிகொள்கிறார்கள். இது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது பத்தியை படிக்கும் போது இருக்கும் வேகம் வசனங்கள் என்று வரும் போது வேகத்தடையை தாண்டும் வண்டியை போல மெதுவாக ஏறி இறங்கி செல்கிறது. ஏழாம் உலகம் படித்தால் கொஞ்சம் தடுமாற்றம் இல்லாமல் பயணிக்க முடிகிறது. 

    ஜெயமோகன் அவர்களுக்கு ஜாதிகள் மேல் ஏன் அவ்வளவு கோபமோ முடிந்த அளவு டாரு டாரா கிழிக்கிறார். உதாரணத்துக்கு "மேனன் சாதியினரில் 10ல் 9பேர் கடைந்தெடுத்த தேவிடியாபயல்கள். அந்த மீதி ஒண்ணு தெய்வம்" - இது எப்படி இருக்கு!!!!  


       இன்னும் நிறைய இருக்கிறது எழுத ஆனால் எல்லாவற்றையும் எழுதினால் நாவல் பற்றிய சுவாரசியம் குறைந்துவிடும். எந்த ஒரு நெருடலும் இல்லாமல் சுகமாக வாசிக்கலாம் அந்த அளவுக்கு அருமையானதொரு நாவல்.

   ஒரு நாவலை படித்து முடிக்கும் போது படிப்பவரின் கண்ணோட்டம் ஒவ்வொரு விதமாக இருக்கும். மேலே இருக்கும் அனைத்தும் காடு படித்து எனக்கு தோன்றியதை  எழுதி உள்ளேன். நாவல் படித்து பாருங்கள் வேறு ஒரு கண்ணோட்டத்தில் நீங்களும் எழுதலாம்.



--
With Love
Romeo ;)

Wednesday, November 24, 2010

மந்திரப்புன்னகை


பதிவர்களுக்காக இந்த படத்தை தனியாக திரையிட்டு காண்பித்தது நமக்கு எல்லாம் நல்லதொரு அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குனருக்கு நன்றி. அதே போல அண்ணன் உண்மை தமிழன் சரவணன் அவர்களுக்கும் நன்றி. 


மந்திரப்புன்னகை

        மனபிறழ்வு ஏற்ப்பட்ட ஒருவனின் வாழ்கை போராட்டமே கதை. படத்தின் களம் கொஞ்சம் புதுசு என்று சொல்ல முடியாது, சொல்லியவிதம் கொஞ்சம் புதுசு.  

      முதல் பாதி வரை மனபிறழ்வு பற்றி சொல்லாமல் இரண்டாம் பாதியில் அதை பற்றி முதலே சொல்லிவிட்டது கொஞ்சம் ஆறுதல். முதல் பாதியில் இருந்த ரசனை, நையாண்டி, நகைச்சுவை எல்லாம் இரண்டாம் பாதியில் தொலைந்தது கொடுமை!! இடைவேளையில்  வெளியே வந்து படத்தை ரீவைண்ட் செய்து பார்த்தபோது  மிகவும் ரசித்தேன் என்பதற்கான காட்சிகள் இருந்தது. முடிந்த பிறகு ஏனோ அந்த நினைப்பே வரவில்லை. அம்மாவிற்கு போன் பண்ணி வீட்டுக்கு கிளம்பிட்டேன் என்று  சொன்னேன். 


     பாஸ்கர் சக்தியின் வசனங்கள் செம ஷார்ப்பாக நல்ல  ரசிக்க கூடியதாக இருக்கிறது. மகா நிறைய இடங்களில் என்னை போன்றே ரசித்தாள் என்பதற்கு  சான்றாக எனது தோள்பட்டை அடிகடி அவள் பக்கம் சென்றது. அதற்காக முக்கால் வாசி படம் வசனங்களை தாங்கி செல்வது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. உணர்ச்சி தளும்பும் இடங்களில் கூட வசனத்தை புகுத்தியது ரசிக்க முடியவில்லை. கலை இயக்குனர் ரசனை அபாரமாக உள்ளது. கதிரின் அப்பார்ட்மன்ட் போதும் கவிதையாக எல்லாவற்றையும் சொல்ல. வித்யாசாகர் இசை எல்லா விதத்திலும் அருமையாக செட் ஆகி உள்ளது. பாடல்கள் பிரிவோம் சந்திப்போம் படத்தில் கேட்டது போல இருந்தாலும் ரசிக்க முடிகிறது. என்ன குறையோ பாடலை ரொம்ப எதிர்ப்பார்த்தேன், ஆனால் பாடல் சட் என்று முடிந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது. 

   சந்தானம் நன்றாக சிரிக்க வைத்து உள்ளார். தம்பி ராமையா அவரின்  பங்களிப்பும் ஓகே. விலைமாதராக வரும் அந்த பெண்ணின் சின்ன பாத்திரமாக இருந்தாலும் இவரும் ஓகே லிஸ்ட்டில் வருகிறார். மீனாட்சியின் கதாபாத்திரத்தை உண்மையில் எங்கேயும் பார்க்க முடியாது. எவ்வளவு அவமானங்களை  தாங்கினாலும் காதலனை ஏற்று கொள்கிற காதலியை சினிமாவை தவிர வேறு எங்கே பார்க்க முடியுமா!!  க்ளோஸ் அப் காட்சிகளில் வசனம் பேசுவதை தவிர்த்து இருக்கலாம், வாய் அசைவு சரியாக இல்லை. கொஞ்சம் போல நடித்து உள்ளார், அவரின் கதாபாத்திரம் அவ்வளவு என்பதனால் கூட இருக்கலாம். கதிர் எப்பொழுது குடித்து கொண்டும், புகைத்து  கொண்டும்  இருப்பதை ரொம்பவே  தவிர்த்து இருக்கலாம். 


       கரு.பழனியப்பன் இயக்குனராக நன்றாக பிரகாசித்து உள்ளார். அவரின் முந்தைய படங்கள் எல்லாம் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கலாம் என்கிற உத்திரவாதம் இருக்கும். ஆனால் இந்த படத்தை அப்படி சொல்ல முடியாது, இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக அடித்து விட்டு இருக்கிறார்.  மற்ற படங்களை விட அவ்வளவு மோசம் இல்லை என்றாலும் அவரின் முந்தைய படங்களில் இருந்த முத்திரையை கொஞ்சம் அசைத்து பார்த்தது போல இருக்கிறது.  கரு.பழனியப்பன் இயக்குனராக பளிச்சிட்டாலும் நடிகனாக கண்டிப்பாக என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இவ்வளவு மோசமான மனிதன் எப்படி இருக்கவேண்டுமோ அதே போல உருவம் இருந்தாலும் கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாதது போல இருந்தது நடிப்பு. இயக்குனராக பிரகாசிங்கள் போதும் நடிப்பு வேண்டாம். 

        Beautiful mind (2001) Russell Crowe நடித்து வெளிவந்த அருமையான திரைப்படம் படத்தின் நாயகன் இல்லாத ஒருத்தரை இருப்பது போல கற்பனை செய்து கொண்டு வாழ்வான். இந்த கருவை வைத்து மந்திரப்புன்னகை செய்து உள்ளார். இரண்டு படங்களும் ஒரே ஒற்றுமை இல்லாத மனிதரை இருப்பது போல காட்டுவது அவ்வளவு தான் மற்றபடி வேறு எந்த ஒரு இணைப்பும் இல்லை என்பதனால் கொஞ்சம் சந்தோசம். 


டிஸ்கி : நன்றாக வரக்கூடிய ஒரு ஆப் பாயில்ளை திருப்பி போட்டு  புல் பாயில் ஆக்கியது  போல இருக்கிறது. 

Tuesday, November 16, 2010

சங்கதிகள் - 16/11/10

சுயபுராணம் 


கொஞ்ச நாளா புத்தகம் படிக்கிறதையே  நிறுத்திட்டேன். பெரிய காரணம் எல்லாம் ஒண்ணும் இல்ல புதிய புத்தகம் எதுவும் இல்லை அவ்வளவுதான். வாங்கிய புத்தகத்தை எல்லாம் எத்தனை தடவை தான் படிச்சிட்டு இருக்குறது.
நிறைய புத்தகம் வாங்கணும்ன்னு ஆசை தான் ஆனா ஒவ்வொரு மாசமும்  பத்தாம் தேதியே என்னோட பேங்க் பேலன்ஸ் ஜீரோன்னு காட்டுதே என்ன பண்ண !!! போன வருஷ புத்தக கண்காட்சியில் வாங்கிய 28 புத்தகம் ஏழு மாசம் வரைக்கும் படிக்க தேறுச்சு. எந்த ஒரு விமர்சனத்தையும் படிக்காமல் வாங்கிய புத்தகத்தை விட மற்றவர்கள் வாசித்து அதை பற்றி விமர்சனம் செய்து இருக்கும் புத்தகத்தை வாங்குவது தான் நல்லதுன்னு நினைக்கிறன்.  இந்த தடவை நடக்கும் புத்தக கண்காட்சியில் எந்த புக் வாங்கலாம்ன்னு முடிஞ்ச அளவு பதிவர்கள் கிட்ட கேட்டு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன் பார்க்கலாம் எவ்வளவு புத்தகம் தேறும்ன்னு.


444444444444444444444444444444444444444444



எல்லா பண்டிகையும் ஒரே சமயத்தில் வருவது இல்லை ஆனால் சில விசேஷ நாட்கள் மட்டும் தொடர்ந்தார் போல வந்து சந்தோஷத்தை அள்ளி குடுக்கும். போன 11ஆம் தேதி ஜூனியர் பிறந்தநாள் கொண்டாடினோம், வரும் 23ஆம் தேதி எங்களின் இரண்டாவது திருமண நாளை கொண்டாட போகிறோம். அடுத்த மாசம் 16ஆம் தேதி மகாக்கு பிறந்தநாள் அதே மாதம் 31ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள்.. இரண்டே மாசத்துல இத்தனை விசேஷ நாட்கள் பர்ஸ் தாங்கல  பாஸ் :(.

444444444444444444444444444444444444444444

ஜூனியர் அப்டேட் மாதிரி மகா அப்டேட் இது. என்னோட தோழி ஒருத்தி காதல் கல்யாணம் செய்துகொள்ள போகிறாள். பையன் வீட்டில் இந்த கல்யாணத்திற்கு  சம்மதம்  கிடைக்கவில்லை, ஆனால் பெண் வீட்டில் ஓகே, இதை மகா கிட்ட சொன்னேன் எல்லாத்தையும் கேட்டுட்டு அப்போ இவங்க ஓடி போய் கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு சொல்லுங்க என்றாள், இது எப்படி ஓடி போய் கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு சொல்லுறன்னு கேட்டேன், அதான் பையன் வீட்டில் சம்மதிக்கலையே அவன் ஓடி வந்து தானே கல்யாணம் பண்ண போறான் @@@@ இது கேட்டதுல இருந்து நான் ங்ங்ங்ங்ங்ங்ங்ங் .

444444444444444444444444444444444444444444


டிவி

கொஞ்ச நாளா மொக்கை டிவி சேனல் எல்லாம் பார்த்துட்டு இருக்கேன். தமிழன் டிவி, வின் டிவி, இமயம் டிவி, கார்ட்டூன் சேனல்ன்னு. ஏன் எதற்குன்னு  தெரியல ஆனா அதில் வரும் ப்ரோக்ராம் எல்லாம் ரொம்ப புதுசா இருக்கு. எனக்கு தெரிஞ்சு தமிழன் டிவில மொத்தமே நாலு விளம்பரம் தான் இடம் பேரும். அதையேதான்  திரும்ப திரும்ப  ஒளிபரப்புவாங்க. ரியல் கோல்ட் வாஷிங் பவுடர், ரோப் ஜிம், இண்டக்ஷன் ஸ்டவ்

அப்பறம் ஒரு புளி விளம்பரம். இமயம் டிவில வரும் சில தொகுப்பாளி எல்லாம் எப்படி தேர்ந்து எடுத்தாங்கன்னு தெரியல அவ்வளவு கலரா இருக்காங்க, அப்பறம் அவங்க வாய்ஸ், டிரெஸ்ஸிங் சென்ஸ் எல்லாம்.. வேண்டாம் முடியல:(.
வின் டிவி பார்க்கா ஆரமிச்சா கொடுமையின் அடுத்த கட்டத்துக்கு போகலாம் குழல் எடுப்போம் குரல் கொடுப்போம்ன்னு ஒரு நிகழ்ச்சி வின் டிவி ஒனர் தேவநாதன் நடத்தும் யாதவ எழுச்சி பேரவையின் அருமை பெருமைகளை சொல்லி கண்ணில் நீரை வரவச்சிடுவாங்க. தினமும் ஏதாவது ஒரு நேரத்துல இந்த நிகழ்ச்சி கண்டிப்பா ஒளிபரப்புவாங்க.  இது எல்லாம் ஓகே டிஸ்கவரி சேனல் செய்யுற அழும்புதான் தாங்க முடியல. தமிழில் ஒளிபரப்பு செய்ய ஆரமிச்சு இத்தனை நாள் ஆச்சு இருந்தாலும் அவங்க விளம்பரம் எல்லாம் ஹிந்தில தான் வருது.. எதுக்கு தமிழ் சேனல்ல ஹிந்தி விளம்பரம் ?? வேற தமிழ் சேனல் எல்லாம் ஷாருகான் கூட தமிழ் பேசுறாரு, இவங்க எப்போ மாத்த போறாங்கன்னு தெரியல .           

444444444444444444444444444444444444444444


ரேடியோ



டிவி ப்ரோக்ராம் ஒரு பக்கம் இப்படினா ரேடியோ தொல்லை அதுக்கு மேல!!! சென்னைல இருக்கும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகள் பேசுறத கேக்குற மாதிரி வேற ஒரு
கஷ்டகாலம் இப்போதைக்கு இல்ல. பிக் எப்.எம் நிகழ்ச்சில வரும் தொகுப்பாளி எல்லாம் அவங்க பேருக்கு முன்னாடி பிக்ன்னு சொல்லுவாங்க. அதாவது பிக் அகிலா, பிக் பாஸ்கின்னு இதுல எனக்கு தெரிஞ்சி இம்சை அரசி மட்டும் தான் உண்மையாலுமே பிக்கா இருப்பாங்க ஆனா அவங்க பேசுறதை கேட்கத்தான் முடியல அவ்வளவு கர்ண கொடூரமா இருக்கு வாய்ஸ். தீனா பேசுறது நல்லா இருக்கும் டைமிங் சென்ஸ்சோட   ஜோக் அடிக்கிறது எல்லாம் நல்லா இருக்கு,  பாஸ்கி சிரியஸா பேசுறாரா இல்ல ஜோக் அடிகிறாரான்னு தெரியல அவ்வளவு மொக்கை ப்ரோக்ராம் அது. ரேடியோ ஒன்ல அருண்ன்னு ஒருத்தர் பேசுவாரு எதுக்கு எடுத்தாலும் உங்க அரும் உங்க அருண்ன்னு பிட் போடுவாரு. அது என்னங்க  உங்க அருண்??? இவரு என்ன என்னோட சொந்தகாரா இல்ல நண்பேன்டான்னு சொல்லிகிற மாதிரியான நண்பனா ??? இவங்களை எல்லாம் விட சூர்யன்  எப்.எம் நைட் யாழ் சுதாகர்ன்னு  ஒருத்தர் பேசுவாரு தமிழில் அவ்வளவு அழகா பேசுறாரு. தீபா வெங்கட் ஒரு ப்ரோக்ராம்ல ரீயாக்ஷன் (இதுவான்னு கரெக்ட்டா தெரியல)  என்ன தமிழ் அர்த்தம்ன்னு தெரியாம முழிச்சாங்க. காலைல சொல்லி வச்சா மாதிரி எல்லாம் ரேடியோ ஸ்டேஷலையும் ஏதாவது ஒரு சாமி பாட்டு பாடுது. ரேடியோ ஜாக்கிஸ் நிறைய பேருக்கு பேச தெரியுமே தவிர சுவாரசியமா பேச தெரியாது என்பது தான் உண்மை. இவங்க எப்படி பேசினா நமக்கு என்ன ஒரு சேனல்ல ஒருத்தர் பேசினா அப்படியே அடுத்த சேனல் மாதி பாட்டு கேட்டுட்டு போகலாம். எல்ல சேனலையும் பேசுறாங்களா இருக்கவே இருக்கு ரெயின்போ எப்.எம் யாரவது ஒருத்தர் கண்டிப்பா கங்கிரா மீட்டிட்டு இருப்பாரு இல்ல ஆஆஅன்னு சத்தம் போட்டு பாடிட்டு இருப்பாரு. 


 444444444444444444444444444444444444444444

போட்டோ

ஜல் புயல் அடிச்சிட்டு இருந்த நேரத்தில் நானும் ஜூனியரும் வீட்டு பால்கனில நின்னு மழையை ரசிச்சிட்டு இருந்தோம் அப்போ எங்களுக்கே தெரியாம மகா எடுத்த போட்டோ.  




444444444444444444444444444444444444444444

டான்ஸ் 
பனிவிழும் மலர்வனம் பாட்டு கேட்க எவ்வளவு அருமையா இருக்கும் ஆனால் அதை படம் ஆகிய விதம் சுத்த மொக்கை . இந்த வீடியோ பாருங்க கார்த்திக்கும், அந்த பொண்ணுக்கும் ஒரே  டான்ஸ் ஸ்டெப்ஸ் தான் கொஞ்சம் உற்று பாருங்க டான்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம் கதாநாயகிக்கு உருவாக்கினது போல இருக்கும். ஆனா கார்த்திக் தான் டான்ஸ்ல ஸ்கோர் பண்ணி இருப்பாரு அதும் அந்த நீச்சல் குளத்துக்கு பக்கத்துல நின்று கொண்டு  தன்னோட இடுப்பை பிடிச்சிகிட்டு  ஆடுவாரு பாருங்க ஒரு ஆட்டம் செம கலக்கல் .. ஹி ஹி ஹி ..



444444444444444444444444444444444444444444






மகனின் ஆசை 


என்னை ரொம்ப நெகிழவைத்த ஒரு வீடியோ..  






பாட்டு


   மந்திர புன்னகை மற்றும் எங்கேயும் காதல் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் எல்லாம் அருமையா இருக்கு. மந்திர புன்னகை கவிஞர் அறிவுமதி எழுதி இருக்கும் என்ன குறையோ அட்டகாசம், வார்த்தை ஜாலங்கள் எல்லாம் சூப்பர்.  ரொம்ப நாள் கழித்து பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்து இருக்கும் மந்திர புனைகை அருமை.  எங்கேயும் காதல் படத்தில் வரும் நெஞ்சில் நெஞ்சில் அப்பறம் திம்மு திம்மு பாடல்கள் அருமையா இருக்கு. மைக்கல் ஜாக்சன் பாடலை இமிட்டே செய்து இருக்கும் பாடல் கூட நல்லா இருக்கு.


444444444444444444444444444444444444444444



காமெடி

சேரனின் டுரிங் டாகீஸ் படிச்சிட்டு இருந்த போது ஒரு பத்தி செம சிரிப்பை வரவழைத்தது.

புளி சோறு என்ற ஒரு வஸ்து இருக்கிறதே.. அதற்கு தமிழர்களின் வாழ்வுக்கும் அப்படி ஒரு பந்தம் உண்டு. நீல் ஆம்ஸ்ட்ராங் மட்டும் தமிழனாக இருந்தால், நிலவுக்கு செல்லும்போது நிச்சயம் அவர் அம்மா புளிச் சோறுதான் கட்டி கொடுத்திருக்கும். 





444444444444444444444444444444444444444444



--

With Love

Romeo ;)

Wednesday, November 10, 2010

முதலாம் பிறந்தநாள்





நாளை ஜூனியர்க்கு முதலாம் பிறந்தநாள். மஹாக்கு கூட டிரஸ் எடுத்துடலாம் போல ஜூனியர்க்கு டிரஸ் எடுக்குறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு. அப்பறம் கேக், எனக்கு இந்த கேக் வெட்டி தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இல்லை ஆனா மஹாக்கு அவ்வளவு ஆசை, வேறு வழி இல்லாமல் எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லிவிட்டேன். 



ஜூனியர் பிறந்த போது நான் எழுதிய இந்த இடுக்கையை ஒரு முறை ரீவைன்டு பண்ணி பார்த்தேன். இப்போ தான் எழுதியது போல இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஆச்சு ஜூனியர் பிறந்து.

11/11/10 இன்னும் ஒரு முக்கியமான நாள் தான் எங்களுக்கு .



--
With Love
Romeo ;)

Wednesday, November 3, 2010

சிரிக்காதிங்க ப்ளீஸ்


ஹலோ பதிவின் தலைப்பை படிச்சீங்களா இல்லைனா மறுபடியும் படிங்க பதிவின் தலைப்பை போல நடந்துக்கணும் ஓகே .... 

ஜூனியர் விகடன் முழுக்க முழுக்க அரசியல் மற்றும் புலனாய்வு சம்பந்தப்பட்ட செய்திகளை தாங்கி வரும் பத்திரிகை. வாரம் இருமுறை வெளியிடப்படும் இந்த பத்திரிகையில் சில சமயம் காமெடி மேட்டர் எல்லாம் சீரியஸா எழுதி கலக்குவாங்க அப்படிப்பட்ட ஒரு மேட்டர் தான் நீங்க படிக்கபோறிங்க.. திரும்பவும் சொல்லுறேன் சிரிக்காதிங்க ப்ளீஸ் .. 



  



--
With Love
Romeo ;)