Thursday, April 22, 2010

கேஜிபி - அடி, அல்லது அழி




        USSR என்கிற அமைப்பில் இருந்து மற்ற நாடுகள் எல்லாம் பிய்த்து கொண்டு போவதற்கு முன்னால் உலக நாடுகள் பல பயத்துடன் அதிகமுறை உச்சரித்த பெயர் "கேஜிபி" .

இவர்கள் ஊடுருவாத  இடமே இல்லை என்று சொல்கிற அளவிற்கு அனைத்து இடத்திலும் ஊடுருவி எல்லா தகவல்களையும் விரல் நுனியில் வைத்து இருப்பார்கள் என்கிற அச்சம் அனைத்து நாடுகளிலும் ஒரு சேர பிரதிபலித்தது. 

திரு.என்.சொக்கன் எழுதி இருக்கும் இந்த புத்தகத்தை வெறும் சாகச பதிவாக எழுதாமல் உளவு நிறுவனத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து இருக்கிறார். 

இவான்IV ஆட்சியில் அவனுக்காக  தொடங்கப்பட்ட ஒப்ரிசினிகி என்கிற பாதுகாப்பு படை தான் கேஜிபியின்  கொள்ளு+++தாதா. ஒப்ரிசினிகியின் வேலை மன்னரை யாரும் நெருங்கி தொந்தரவு செய்யாமல் பார்த்து கொள்வதே. இவர்களுக்கு பிறகு ஒக்ரானா என்று புதிய பெயருடன் அதே வலுவுடன் ரஷ்யாவில் ஆச்சிபுரிந்து வந்த ஜார் மன்னர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு படையையே வைத்து இருந்தார்கள். 

             

உளவுத்துறை என்கிற பெயருக்கு ஏற்றவாறு நாட்டுக்குள் நடக்கும் சதிதிட்டங்கள் எல்லாம் மன்னருக்கு தெரியபடுதுவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. 

மன்னர் ஆட்சி முடிந்து போஷ்விக் அரசு நாட்டை கைப்பற்றியவுடன் உள்நாட்டு கலவரத்தை அடக்க செக்கா என்கிற ஒரு படையை உருவாகிறார்கள் அதாவது ஒக்ரானாவின் அடுத்த வெர்ஷன் என்று சொல்லலாம். இப்படியே GPU, OGPU, GUGB,NKGB,GUGB,MGB,KI,MUD,KGB என்று ஒவ்வொரு கட்டதிலும் பெயர்மாற்றம் பெறுகிறது.  பின்னர் அவர்களின் வேலை மற்றும் உளவு செய்ததை விரிவாக எழுதி இருக்கிறார். 


KGB என்கிற தலைப்பிற்கு பதில் வேறு எதாவது பெயர்வைத்து இருக்கலாம். புத்தகத்தில் KGP என்கிற அத்தியாமே 100 பக்கங்களை தாண்டிதான் வருகிறது (மொத்த பக்கங்கள் 190). 

KGBக்கு முன்னால் இருந்த மற்ற உளவு நிறுவனங்களை பற்றி அலசி, ஆராய்ந்து எழுதுவதிலையே முக்கள் வாசி பக்கங்கள் முடிந்துவிடுகிறது. உளவு நிறுவனத்தின் செயல்பாடுகளின் பட்டியல், அவர்களின் நோக்கம், அரசுக்கு சாதகமாகவும், எதிரிகளுக்கு பாதகமாகவும் செயல்பட்டது ,   இத்யாதி இத்யாதி என்று எழுதியதை பாதி பக்கங்கள் படித்து தாண்டுவதற்குள் கொட்டாவி வருவதை நிறுத்தமுடியவில்லை. 

உளவு நிறுவனத்தை பற்றி எழுதும் போது கண்டிப்பாக அவர்களின் சாகசங்களை அங்கே இங்கே என்று சொருகி இருந்தால் சுவாரசியம் கண்டிப்பாக கூடி இருக்கும் .. பச் புத்தகத்தில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.   உள்ளங்கையில் உலகம் என்கிற அத்தியாத்தில் இவர்களின் உளவு வேலை எப்படி எல்லாம் நடந்த்து என்று விரிவாக எழுதி இருக்கிறார், கொஞ்சம் ஆறுதலான பகுதி அது. 

விரிவாக எழுதியதில் சிலவற்றை சேர்த்து எழுதி இருந்தால் நன்றாகயிருந்து  இருக்கும். 

KGBயின் உளவு வேலை அனைத்து நாடுகளிலும் பரவி இருந்ததா ? 
KGBயால் செய்யமுடியாத வேலை என்று ஏதாவது இருந்தா? 
உளவு நிறுவனத்தினால் ஒரு நாட்டில் ஆட்சி  மாற்றம் கொண்டு வரமுடிந்ததா?

இவைகளை பற்றிய உண்மை சம்பவங்களை கொஞ்சம் விரிவாக எழுதி இருந்தால் சுவாரசியம் கூடி இருக்கும். 

KGB பற்றி ரஷ்சியர்கள் சொல்லும் அந்த நகைச்சுவை படிக்க தமாஷாகவும் அதே சமயம் தும்புறுத்தல் என்கிற பெயரால் நடக்கும் கொடுமைகளை வெளிபடுத்துகிறது. 




KGB -  ரொம்ப எதிர்ப்பார்த்து சிறிது ஏமாற்றத்துடன் முடிவதை எழுதாமல் இருக்க முடியவில்லை. சுவாரசியம் கம்மியே தவிர உலகையே முணுமுணுக்க வைத்த ஒரு உளவு நிறுவனத்தின் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்ளலாம். 




புத்தகம் கிடைக்கும் இடம் 

கேஜிபி - அடி, அல்லது அழி
என்.சொக்கன்
விலை: ருபாய்: 120
New Horizon Media Private Limited
33/15, Eldams Road, 
Alwarpet, Chennai 600018, 
Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601
Fax: 91 44 4300 9701




With Love
Romeo ;)









Friday, April 16, 2010

மூட நம்பிக்கை அல்லது கொலைவெறி



சென்ற வாரமே இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் அந்த பக்கத்தை திருப்பும் போது எல்லாம் எனது மகனின் முகம் தான் நினைவுக்கு வந்தது.  



ஸ்ரீஹித்க்கு (எனது மகன் பெயர்)  உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டி இருந்தது. மருத்துவமனையில் சேர்த்த பொழுது அவன் கையில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கு வலது கையில் உள்ள நரம்பில் ஒரு ஊசி ஏற்றினார்கள். அதை ஏற்றும் முன் என்னையும் எனது மனைவியையும் வெளியே இருக்க சொன்னார்கள்.  கையில் ஏற்றப்பட்ட ஊசியின் வலிதாங்கமல் அவன் அழுத அழுகையை கேட்க முடியாமல் நானும் எனது மனைவியும் ரொம்ப தவித்து போய்விடும். அந்த அழுகை குரலை கேட்பதற்கு முடியாமல் நான் அங்கு இருந்து வந்துவிட்டேன், சிறிது நேரம் கழித்து குழந்தையை சமாதனம்படுத்த சொல்லி செவிலியர்கள் சொன்னார்கள். உள்ளே சென்றதும் வலியின் தீவிரத்தால் அவன் அழுவதை பார்க்க முடியாமல் எங்கள் கண்களில் கண்ணீர் வருவதை கட்டுபடுத்த முடியவில்லை. எனது மனைவிக்கு ஆறுதல் சொல்ல தெரியாமல் நானும் அழுது கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் அவனுக்கு வலி நின்று அழுகையை நிறுத்தினான். எங்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. 

இது ஒரு சின்ன விஷயம் தான் ஆனால் அதை கூட எங்களால் தாங்க முடியவில்லை.  ஆனால் இந்த பத்தியில் இருக்கும் அடுத்த செய்திகளை படித்து பாருங்கள். எவ்வளவு கொடூரமான மக்கள் இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டு இருகிறார்கள் என்று புரியும். இதை படித்த பார்த்த போது ஐயோ பாவம் அந்த குழந்தை என்று எங்கோ இருக்கும் அந்த குழந்தைக்கு பரிதாப்படுகிறேன்.


சென்ற வார ஜூனியர் விகடன் பத்திரிகையின் வெளிவந்த செய்தி இது






(படத்தை சொடுக்கி பெரிதுப்படுத்தி பார்க்கவும்) 


1
2




(நன்றி ஜூனியர் விகடன்)




சாதாரண ஊசிக்கே எங்கள் மகனின் அழுகையை  தாங்க முடியாமல் நாங்கள் எவ்வளவு அவதிபட்டோம் ஒன்றுமே அறியாத அந்த பிஞ்சு குழந்தையின் மேல் கொதிக்கும் பாயசத்தை ஊற்றி அதன் சுடு தாங்காமல் எங்கும் ஓட முடியாமல் புரண்டு படுக்க வழியில்லாமல் அவதிப்படும் வேதனையை நினைக்கும் போது பூசாரி என்கிற அந்த நாதேரியின் வாயில் ஈயத்தை காய்ச்சி ஊற்றி பழிவாங்க வேண்டும் என்கிற வெறி ஏற்ப்படுகிறது. . 


அப்போதாவது இந்த மாதிரியான காட்டு மிராண்டி தனத்துக்கு ஒரு முற்றுபுள்ளி கிடைக்குமா ???
ஆத்திகம் என்கிற பெயரால் நடக்கும் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் என்று தீர்வு கிடைக்கும்??  அந்த சின்ன குழந்தையின் வேதனை புரியுமா அந்த காவி வேட்டி அணிந்த நாதேரிக்கு??


ஏழு மாத குழந்தை எப்படி அவதிப்படும் என்று ஐந்து மாத குழந்தையின் அப்பா என்கிற முறையில் எனக்கு தெரியும்


ஆத்திரத்தை கட்டுபடுத்த  முடியவில்லை.






WITH ANGER  
ROMEO 

Wednesday, April 14, 2010

How to Train Your Dragon

அனிமேஷன் படங்கள் என்றால் ரொம்ப யோசித்து விமர்சனம் எல்லாம் படித்து தான் படம் பார்க்க செல்வேன், ஏனோ How to Train Your Dragon படத்தின் டிரைலர் பார்த்த போது கண்டிப்பாக படத்தை  பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தேன்.

அதற்கு ஏற்றார்போல கனவுகளின் காதலன் எழுதிய இந்த விமர்சனத்தை படித்த பிறகு ஆவல் அதிகமாகியது. நம்ம ஊரில் படம் இனிதான் வெளியாகும் என்பதனால்  நண்பன் ஒருவனிடம் படத்தை நெட்டில் இருந்து உருவி கொடுக்க சொல்லி பார்த்தேன்.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் படம் AWESOME....

அனிமேஷன் படங்களில் எனக்கு ரொம்ப பிடித்தது ICE AGE SERIES , KUNG FU PANDA அப்பறம் PIXAR STUDIOS சில படங்கள். இந்த வரிசையில் இப்பொது இந்த படமும் இடம் பெற்றுள்ளது.


 How to Train Your Dragon கண்டிப்பாக குழந்தைகளுக்கு இந்த சம்மரில் கிடைத்த அருமையான பொழுதுபோக்கு படம்.


    டிராகன் தொந்தரவால் தீவில் வாசிக்கும் மக்கள்  நிம்மதி இழந்து இருக்கிறது. அந்த தீவின் நாட்டாமை/அரசன் (நாயகனின் அப்பா) மற்றும் அந்த தீவின் உள்ள மக்கள் டிராகன் கூட்டதை அழிக்க பெரும் பாடுபடுகிறார்கள். கதையின் நாயகன் ஒரு கொல்லரிடம் வேலை செய்கிறான். அவனே புதியதாக ஒரு கருவியை கண்டுபுடித்து அதை கொண்டு NIGHT FURY என்கிற இது வரை யாரும் பார்க்காத ஒரு டிராகனை பிடிக்கிறான் .

    நாயகனோ அந்த டிராகனை கொல்லாமல் அதனுடன் நட்பாக இருக்கிறான். அந்த டிராகன் கூட்டதை அழிக்க ஊரில் உள்ளவர்கள் நாயகனின் அப்பா தலைமையில் அதை தேடி செல்கிறார்கள். இவர்கள் சென்ற பிறகு நாயகன் தானும் ஒரு வீரன் ஆகா வேண்டும் என்கிற வெறியில் டிராகனை அடக்கும் பயிற்சிக்கு செல்கிறான். இதற்கு பிறகு நடக்கும் கதைகளம் அத்தனையும் கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் செம விறு விறுப்பாக செல்கிறது. அனிமேஷன் படம் என்கிற தகுதியை தாண்டி படம் அருமையாக எடுக்கபட்டு உள்ளது.

கிளைமாக்ஸ் காட்சி பார்க்கும் போது ICE AGE - 3 படத்தை பில்டர் பண்ணி குடுத்தது போல இருக்கிறது.  ஆனால் அந்த வேகம் படத்திற்கு கண்டிப்பாக வேண்டும் இல்லை என்றால் சென்டிமெண்டில் முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

TOOTHLESS  என்கிற பெயருடைய அந்த Night Fury டிராகன் செய்யும் சாகசங்கள் எல்லாம் அருமையாக எடுக்கப்பட்டு உள்ளது. படத்தில் இடம் பெற்று இருக்கும் அனிமேஷன் பற்றி ஹாலிவுட் பாலா விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.

முதலில் இருந்து கடைசி வரை கொஞ்சம் கூட அலுப்பு இல்லாமல் படத்தை ஜெட் வேகத்தில் செலுத்தி இருகிறார்கள்.

சென்னையில் இந்த வாரம் படம் ரிலீஸ், கண்டிப்பா பாருங்க அதும் 3Dல பாருங்க நல்ல படத்தை பார்த்த திருப்தி ஏற்படும்.. நானும் இன்னொரு முறை படத்தை 3Dல பார்க்கணும்ன்னு ஆவலாய் இருக்கிறேன் (அவதார் படத்தை 3Dல பார்த்து மூக்கு வலியால் அவதிப்பட்டது நினைவுக்கு வருகிறது இருந்தாலும் கண்டிப்பாக பார்த்துடுவேன்).  


How to Train Your Dragon  :  I Love this Dragon  


டிஸ்கி:  யாரவது How to train your Wife படம் எடுப்பாங்களா ??




With Love
Romeo ;)