Tuesday, January 17, 2012

எட்றா வண்டியே - வா.மு.கோ.மு

கொங்கு குறும்பு என்பது வா.மு.கோ.முவின் கதைகளில் தவிர வேறு எங்கும் அதிகமாக பார்க்க முடியாது. எவ்வளவு சீரியஸான சம்பவம் என்றாலும்   ஜஸ்ட் லைக் தட் என்று நம்மை அந்த இடத்தை சிரித்து கொண்டே கடந்துவிடுவது போல செய்துவிடுவார். இவரின் கதைகள் வரும் முக்கியமான கதாபாத்திரம் போலதான் இவரும் பேசுகிறார், நாலு முறை போனிலும் ஒரு முறை நேரிலும் பேசி இருக்கிறேன் அவருடன் இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று நினைக்க வைத்துவிட்டார். வயப்பாடி, விஜயமங்கலம் மற்றும் அதை சுற்றிய  ஊர்கள் எப்படி இருக்கிறது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நேரில் எப்படி இருப்பார்கள் அவர்களை பார்க்க வேண்டும்  என்கிற ஆவலை துண்டிவிட்டுவிட்டார்.  





இவரது முந்தைய நாவல்களை போல இந்த நாவலையும் தனது ஊரை சுற்றி  வாழ்ந்துகொண்டு இருக்கும் சிலரில் வாழ்கையை மைய்யமாக வைத்து எழுதி இருக்கிறார். நாவலின் தொடக்கம் முடிவு எல்லாம் விஜயமங்கலத்தை சுற்றி தான் இருக்கிறது. என்னை போல கோவையை பிரிந்து வாழும் ஆட்களுக்கு கொங்கு மொழியில் அதன் சாரம் குறையாமல் புத்தகத்தை வாசிக்க வாசிக்க கோவையை ரொம்ப மிஸ் செய்கிறேனோ என்கிற கவலை ஏற்படுகிறது.

சாமிநாதன் ஒரு தலித் இளைஞன். அம்மாவை பிரிந்து வாழும் அப்பாவுடன் மூங்கில் பாளையத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். தறி ஓட்டுவது தான் பிரதான வேலை என்றாலும் ஒரு சமயம் ட்ரக்டரும் ஒட்டுவான். சாமிநாதன் அப்பா, கவுண்டர் சகோதரர்கள், சைக்கிள் கடை வைத்திருக்கும் முருகன், எதிர் வீடு சரோஜா அக்கா, அவன் வாழ்வில் குறிக்கிட்ட பெண்கள், அவனாக தேடி சென்ற பெண்கள், அவனை விட்டு பிரிந்து சென்ற பெண்கள் என்று அவனது காதல், கல்யாண கதைகளை சொல்லும் நாவல் இது.


நாவல் உள்ளே பன்னிரண்டு அத்தியாயங்கள் இருக்கிறது, சாமிநாதனை சுற்றியே தான் கதைகள் நகர்கிறது. விசுக்கென்று ஒரு காதல் ஜோடி ஒரு அத்தியாயத்தை ஆக்கிரமித்து கொண்டாலும் அதிலும் சாமிநாதன் சம்பந்தப்படுகிறான். முந்தைய நாவல்கள் போல இந்த நாவலை அவ்வளவு எளிதாக படித்து முடிக்க முடியவில்லை. பாதி புத்தகம் படிக்கும் வரை அரைச்ச மாவையே ஏன் திரும்ப அரைக்கிறார் என்கிற எண்ணம் வருகிறது. அதற்கு பின்னால் சாமிநாதனை நினைத்து கவலைகொள்ளும் விதமாக நாவல் சென்று கொண்டு இருக்கிறது.


நாவலில் முழுக்க முழுக்க தலித்து மக்களின் வாழ்கையை பற்றி சொல்லி இருக்கிறார். பணம் இல்லாதவனிடம் சிக்கன் குனியா வந்தால் எப்படி சமாளிப்பான்? தறி குடோனில் முதலாளி சாமிநாதனை அடிமையாக வேலை செய்ய வைக்க தந்திரமாக அட்வான்ஸ் பணம் கொடுப்பது. பெண் பார்க்க சென்ற வீட்டில் பெண்ணின் தகப்பனார் ஸ்வீட் சிக்கு வாசம் வருதா என்று கேட்ப்பது. தந்தையே மகனிடம் கவுண்டர் சரக்கு தந்தா வேண்டாம்ன்னு சொல்ல கூடாது அது குத்தம் என்று தண்ணி அடிக்க சொல்லுவது, வீட்டில் நுழைந்த பாம்பை வறுத்து தின்னுவது. இப்படி நாவல் கொஞ்சம் திகைப்போடு தான் செல்கிறது.


வா.மு.கோ.முவிற்கு செல்போன் மீது அப்படி என்ன ஒரு காதலோ அல்லது கோபமோ சாமிநாதன் கதாபாத்திரத்துக்கு இணையாக உடன் பயணிப்பது இந்த செல்போன் தான். யாரவது ஒருத்தர் இந்த செல்போனில் பேசி கொண்டே இருகிறார்கள். அதும் ஏர்செல் தான் எல்லோரிடமும் இருக்கிறது. இந்த நாவல் என்றில்லை முந்தைய நாவல் சாந்தாமணி நாவலிலும் செல்போன் வைத்து பெரிய கதையையே சொல்லி இருப்பார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் எவ்வளவு அவசியமானது என்று எல்லோருக்கும் தெரியும் அதை நாவலின் உள்ளே புகுத்தி அதையும் ஒரு கதாபாத்திரமாக செய்துவிட்டார்.

கள்ளி, சாந்தாமணியில் இருந்த  பாலியல் வேட்டை(வேட்கை) இதில் இல்லை. எள்ளல், துள்ளல் அதிகமில்லாமல் அடக்கியே வாசித்து இருக்கிறார். மற்ற நாவல்களை விட இந்த நாவல் கொஞ்சம் வித்தியாசம் தான். நாவல் முடிந்ததும் சாமிநாதன் பற்றிய கவலை தான் என்னை தொற்றிகொண்டது.


நாவலை படித்துவிட்டு வா.மு.கோ.முவிடம் பேசினேன். நாவல் எப்படி என்னை கொண்டு சென்றது, சாமிநாதன் என்ன ஆனான் என்று நிறைய கேள்விகள் கேட்டு பதிலையும் பெற்றேன். வா.மு.கோ.மு வருத்தப்பட்ட ஒரு விஷயம் இந்த நாவலை இவ்வளவு நேர்த்தியாக கொண்டு வர பாடுபட்ட நஞ்சுண்டன் பெயரை மனுஷபுத்திரன் மறைத்தது. நாவல் வெளிவருவதற்கு முன்பே அவர் நான்கு ஐந்து தடவை  நஞ்சுண்டன் பெயரை புத்தகத்தில் பதிய சொல்லி இருந்தும் அதை செய்யாதது பற்றி ரொம்ப வருத்தப்பட்டார். 


எட்றா வண்டியே - சங்கடபடாமல்  வாங்கி படிக்கலாம் :) 




-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Monday, January 9, 2012

புத்தக திருவிழா - 2 :)

இன்று கண்காட்சி வாயிலில் ஏகப்பட்ட போலீஸ் தலைகள் தெரிந்தது. ஞாயிற்றுகிழமை என்பதால் கூட்டத்தை கட்டுபடுத்த ஆட்களை நியமித்து இருகிறார்கள் என்று நினைத்து கொண்டே உள்ளே சென்ற போது நான்கு ஐந்து போலீஸ் வாகனங்கள் கண்ணில் தென்பட்டது. உள்ளே மக்கள் தலைகள் அதிகமாக தெரிந்தது  இடது வலது ஓரங்களில் சிலர் நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தார்கள். கையெழுத்து அழகாக பயிற்சி அளிப்பதா ஒரு விளம்பர தாள் என் கைகளில் கிடைத்தது. உள்ளே அரங்கினுள் செல்லும் போது புதிய தலைமுறை அரங்கில் அப்துல் கலாம் பேசி கொண்டு இருந்தார். ஓ இதனால்   தான் அத்தனை போலீஸ் அங்கு இருந்தார்களா.. அவர் வேலையை அவர் பார்த்து கொண்டு இருக்கும் சமயத்தில் நமது வேலை பார்க்கலாம் என்று உள்ளே சென்றேன். மேவி, MSK சரவணன், காபா டீம் காலச்சுவடில் அள்ளி கொண்டு இருந்தார்கள். அதும் MSK பெரிய வேட்டையை நிகழ்த்தி இருந்தார், புத்தகங்களை அள்ளோ அள்ளு என்று அள்ளியத்தில் அவரின் இரண்டு தோள்களும் ரெண்டு இஞ்சாவது இறங்கி இருக்கும். ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு உயிர் எழுத்து வந்தோம் அங்கு உப்பு நாய்கள் என்கிற புத்தகத்தை எழுதிய லக்ஷ்மி சரவணகுமார் அவர்களை சந்தித்தோம்,  நேசமித்திரன் அந்த புத்தகத்தை பற்றி அந்த அரங்கினுள் பேச இருப்பதாக சொன்னார். காபா ஊருக்கு செல்ல நேரம் ஆனதால் அவருடன் மேவியும் கிளம்ப நான்,  MSK, நேசமித்திரன் லிச்சி ஜூஸ் சாப்பிட்டோம். இன்றைய ஸ்பான்சர் MSK :). 

  MSK சரவணன் , மேவி


அடுத்த ரவுண்ட் அடிக்கலாம் என்று கிளம்பி டிஸ்கவரி வந்தோம் பெரிய கூட்டமே களைகட்டி கொண்டு இருந்தது, தம்பி அண்ணன் அப்துல்லா, பப்பாஷா ஷங்கர், மதார் ஜாமாவில் ஐக்கியமாகி இருந்தார். எப்பொழுதும் போல கேபிள், சுரேகா, கே.ஆர். பி டீமுடன் பேசி கொண்டு இருந்தோம்.  டிஸ்கவரி அரங்கில் தேனம்மை லட்சுமணன்  அவர்களின் புத்தக வெளியீடு நடந்தது, நேசமித்ரனின் பேச்சை கேட்ட எல்லோரும் உயிர் எழுத்து அரங்கிற்கு சென்றோம். வழியில் வாசகர்களுடன் எஸ்.ரா பேசி கொண்டு இருந்தார், அவரது பேச்சை ரசிக்க கூட்டம் அதிக அளவில் இருந்தது. திடிர் என்று ஒரு கும்பல் மலையாள மனோரமாவின் ஸ்டாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி கொண்டு இருந்தது. மே17  இயக்கத்தினரின் என்று அவர்கள் தந்த நோட்டீஸ் முலம் தெரிந்தது . 


நமது குழந்தை கவிஞர் அப்துல்லாவிற்கு திடிர்ரென்று ஒரு ஆசை வந்தது டோரா படத்திற்கு அருகில் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டும், அண்ணனின் ஆணையை நிறைவேற்றும் பொருட்டு அதன் அருகில் இருந்த பெண்ணை சைடு வாங்கி போக சொல்லிவிட்டு ஒரு புகைபடம் எடுத்து கொண்டேன். 

அண்ணனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் 

பப்பாஷா, மதாருடன் வெளியே டீ குடிக்க செல்ல நினைத்த போது எதிரில் சுகா வந்தார். அவருடன் இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பினேன். முவரும் கிழக்கில் நின்று கொண்டு இருந்த சமயத்தில் குட்டி டின் வந்தான். கையில் ஒரு புத்தக மூட்டை. பப்பாஷா வாங்கி இருந்த சுஜாதா புத்தகங்கள் அது எல்லாம். 
கடைசியாக கிடைத்த தகவலின் படி புத்தகத்தை எப்படி வாங்கி சென்றானோ அப்படியே ரிட்டன் செய்து விட்டான். 








































  




பிட்ஸ் 

நேற்று நடந்த வாசகர் எழுத்தாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எழுத்தாளர் பெருமாள் முருகன் 12 வருடங்களுக்கு முன் தான் தொகுத்த கொங்கு சிறுகதைகள் புத்தகத்தை பற்றி பேசினார். தனக்கு அந்த புத்தகம் தொகுக்க எத்தனை மாதங்கள் ஆனது என்றும் அதே போல இனி என்னால் செய்ய முடியாது என்றார். அந்த தொகுப்பை இரண்டாம் பதிப்பு கூட கொண்ட வர முடியவில்லை என்று ஆதங்கப்பட்டார். இன்று பச்சையப்பா கல்லூரியில் இருந்து நடந்து வருகையில் ரோட்டு ஓரத்தில் விற்கப்பட்டு இருந்த பழைய  புத்தகங்களில் இந்த புத்தகம் கண்ணில்பட்டது. காவ்யா பதிப்பகம் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த புத்தகத்தின் விலை 200ருபாய் ஆனால் அங்கு 50ரூபாய்க்கு கிடைத்தது. கொஞ்சம் சுற்றியதில் காவியாவின் இன்னும் சில புத்தகங்கள் 20,  30 ரூபாய்க்கு போட்டு இருந்தார்கள். 


கிழக்கில் கலைவாணி ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, காலச்சுவடில் நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை இதில் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்திருந்தால் மற்றொன்றை சாய்ஸில் விட்டுவிடவும். ரெண்டும் ஒன்று போலவே தான் இருக்கிறது. குடும்பத்துக்காக பாலியல் தொழில் இறங்கி பின்பு சமூகசேவை நிறுவனத்தில் வேலை செய்து.... களம் மட்டுமே வேறு தவிர மற்றபடிக்கு வேற ஒன்றும் பெரியதான மாற்றமில்லை. 



திருநங்கைகள் பற்றி நான்கு ஐந்து புத்தகங்கள் இந்த முறை வந்துள்ளது. எதை வாங்கினாலும் மற்றதை லூசில் விட்டுவிடுவது நல்லது. கண்டிப்பாக வாங்கவேண்டும் என்று இருப்பவர்களுக்கு எனது சாய்ஸ் கிழக்கில் வெளிவந்து இருக்கும் நான் வித்யா-ஸ்மைலி வித்யா எழுதியது. ஓபனிங் டெர்ரரா இருக்கும் .. இந்த புத்தகத்தை பற்றிய எனது விமர்சனம் .





-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)



















Sunday, January 8, 2012

புத்தக திருவிழா :)

இந்த வருட புத்தக திருவிழாவிற்கு போகலாமா வேண்டாமா என்று நிறைய குழப்பங்கள். ஒரே ஒரு காரணம் தான் பணம். இந்த வருடத்தின் தொடக்கமே கைக்கும் வாய்க்கும் இழுத்து கொண்டு இருந்தது. இதில் இதுவேறையா என்று நினைக்க தோன்றிய தருணம். சரி போயிட்டு இருக்கிற காசுக்கு சிலதை மட்டும் வாங்கலாம் என்று கிளம்பினேன்.


சென்னையில் இருக்கும் பதிவர்கள் வருவார்கள் என்றாலும் மேவியை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் தான் அதிகமாக இருந்தது. புத்தக கண்காட்சியில் செல்லும் வழியில் இரண்டு பக்கமும் இவர்கள் எழுதிய புத்தகம் இங்கு இருக்கும் அவர்கள் எழுதிய புத்தகம் அங்கு இருக்கும் என்று நிறைய விளம்பரங்கள். அழகு குறிப்பு பற்றிய ஒரு விளபரத்தின் கீழே பளிச்சி என்று கண்ணில்பட்டது நமது டிஸ்கவரி புக் பேலஸின் பெயர். உள்ளே இந்த முறை வித்தியாசமாக பிசாவும், பர்கர் ஸ்டாலும் போட்டு இருந்தார்கள். சாயந்திரம் ஐந்து மணி அளவில் உள்ளே சென்றேன்  கூட்டம் அதிகமாக தான் இருந்தது. மேவிக்கு போன் செய்து அவரை சந்தித்தேன். சின்ன பையன் போலவே இருக்கிறார், என்னை விட வயதில் அதிகம் என்று குட்டி டின் சொன்னதாக நியாபகம் :). இருவரும் காபா, நேசமித்ரனை சந்திக்க சென்ற போது நடுவில் தல பால பாரதியை சந்தித்தேன். இது தான் முதல் சந்திப்பு என்றாலும் தல சீனியர் என்கிற கெத்து ஏதும் இல்லாமல் அன்போடும் பேசினார். போகும் போது மறக்காமல் தனது சிறுகதை தொகுப்பான சாமியாட்டம் பற்றி விளம்பரப்படுத்தினார்.













அவரிடமிருந்து விடைபெற்று நேசமித்திரன், காபா, MSK சரவணன், கேஆர்பி செந்தில் , கேபிள் சங்கர் நண்பர்களை சந்தித்தேன். எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு புத்தகங்களை பார்வையிட முதல் ஸ்டாலில் இருந்து தொடங்கினேன். என்ன புத்தகம் வாங்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டதனால் வேறு எந்த புத்தகத்தின் மேலும் காதல் கொள்ள முடியவில்லை.எப்பொழுதும் போல மொக்கை புத்தகங்களே அதிகமாக இருந்தது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகமாக இருந்தது. அவர்களின் அறிவை வளர்க்க இது எல்லாம தேவைப்படும் போல என்கிற உணர்வை தந்தது சில புத்தகங்கள். அடுத்த முறை போகும் போது ஜூனியருக்கு ஏதாவது வாங்கி செல்லவேண்டும். சில ஸ்டால்களில் குழந்தைகளின் வளர்ச்சியில்  எப்படி தங்கள் தொழில்நுட்பம் பயணப்படும் என்று பெற்றோர்களுக்கு முளை சலவை செய்து கொண்டு இருந்தார்கள்.   தமிழினி, காலச்சுவடு, வம்சி, ஆழி,  விகடன், காவ்யா இன்னும் சில உருப்படியான பதிப்பகங்களில் நேரம் செலவிட முடிந்தது. க.சி.சிவகுமாரின் ஆத்திமங்கலத்து விசேஷங்கள் புத்தகத்தை முன்றாவது வருடமாக விகடன் பதிப்பகத்தில் தேடி கொண்டு இருந்தேன், இன்னும் கிடைக்கவில்லை. மதி நிலையத்தில் சொக்கனின் மொஸார்ட் கண்ணில்பட்டது அப்பறம் வாங்கி கொள்ளலாம் என்று வந்துவிட்டேன்.   காலச்சுவடு, தமிழினி, வம்சி புத்தகங்களை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கி கொள்ளலாம் என்று வந்துவிட்டேன். கிழக்கு பக்கம் ஒரு எட்டு எட்டி பார்த்தேன் எப்பொழுதும் போல அங்கே கூட்டம் இருந்தது ஏதாவது ஒரு புத்தகம் வாங்கலாம் என்று நினைத்தேன், போன முறை பாராவின் உணவின் வரலாறு புத்தகத்தை 125 ருபாய் விலைகொடுத்து வாங்கி அந்த புத்தகம் படிப்பதற்கு முன்பே தள்ளுபடியில் 25 ரூபாயில் அவர்கள் விற்றதை நினைத்து பார்த்தேன். ஆறு மாசம் தானே அப்பறம் சல்லிசா கிடைக்கும் அப்போ வாங்கிக்கலாம் என்று வந்துவிட்டேன் . இருந்தாலும் ஒரு நப்பாசை இருந்து கொண்டு தான் இருந்தது குஷ்வந்த் சிங் எழுதிய TRAIN TO PAKISTAN நாவலை தமிழில் மொழிபெயர்த்து பாகிஸ்தான் போகும் ரயில் என்கிற பெயரில் வெளியிட்டு இருகிறார்கள். வாங்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டி இருக்கும் புத்தகம் இது.












சிறிது நேர உலாவிற்கு பிறகு டிஸ்கவரி புக் பேலஸ் செல்லலாம் என்கிற முடிவு வந்ததின் விளைவு நான்கு ரவுண்ட் அந்த ஏரியாவை சுற்ற வைத்து விட்டார்கள். ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாத வகையில் எண்கள், எது எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முகப்பு சென்றால் தான் உண்டு அல்லது சுற்றோ சுற்றோ என்று சுற்றவேண்டும். உள்ளே  புழுக்கம் என்றால்  அப்படி ஒரு புழுக்கம். வெண்டிலேஷன் இல்லாமல் வெள்ளை நிற குண்டானை கமுதி வைத்து இருந்ததை போல இருந்தது. டிஸ்கவரி சென்றால் அங்கே ஒரு  கூட்டமே நின்று கொண்டு இருந்தது, மணிஜி, Butterfly சூர்யா, உண்மை தமிழன், மயில்ராவணன், பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவகுமார், க.ரா போன்றவர்கள் இருந்தார்கள். டிஸ்கவரில் நான் கேட்ட புத்தகங்களில் பாதி இல்லை. முன்று மட்டுமே கிடைத்தது. திரும்ப தமிழினி, காலச்சுவடு, வம்சி பதிப்பகங்களுக்கு சென்றேன். வாங்க வேண்டிய புத்தகங்கள் என்று நான் எழுதி வைத்ததில் கால் வாசி அளவே வாங்க முடிந்தது.  வெளியே டீ குடிக்க வந்த போது ஒரு நபர் அவுட் ஆப்  போக்கஸில் தெரிந்தார். பார்த்த முகம் போல இருக்கிறதே என்று நினைத்தேன். அட நாம துபாய் ரிட்டர்ன் கீதப்பிரியன், ஆள் அடையாளமே தெரியவில்லை மனுஷன் ரொம்ப மெலிந்துவிட்டார். சந்தோஷமாக இருந்தது அவரை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகி இருக்கும். கையில் இரண்டு பைகளை சுமந்து கொண்டு வந்தார். குழந்தைகளுக்கு உபயோகமான சார்ட் வைத்திருந்தார், ஒரு செட் ஜூனியருக்கு வாங்க வேண்டும். அமெரிக்கா ரிட்டன் கா.ர எனக்கும் கீதப்ரியனுக்கும் காபி வாங்கி கொடுத்தார். நண்பர்கள் இதை நன்றாக கவனித்து கொள்ளவும் நாளை உங்களுக்கு இந்த செய்தி உபயோகப்படும்.


மணிஜியுடன் அரங்கு எண் F-35 சென்றேன் அங்கே எழுத்தாளர் பெருமாள் முருகன் வாசர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தி கொண்டு இருந்தார். ஒரு அன்பர் படுமொக்கையான கேள்வியொன்றை கேட்டார் அதற்கு நீண்டதொரு விளக்கத்தை அளித்தார் பெருமாள் முருகன். பின்னர் அந்த அன்பரே வந்து தான்  கேட்க வந்தது இதை தான் நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள் என்று விளக்கம் வேறு கொடுத்தார். என்ன கொடுமையா இது என்று தான் நினைக்க தோன்றியது.

காலச்சுவடு பக்கம் ஒரு புத்தகம் பார்த்தேன் என்று தொடங்கும் (புத்தகத்தின் பெயரை மறந்துவிட்டேன்:( )  அந்த புத்தகத்தை எழுதியவர் பெயர் றஷ்மி என்று இருந்தது.  இந்த றஷ்மி என்கிற பெயரை பார்த்ததும் எனக்கு சுகாவுன் முங்கில் முச்சு தொடர் தான் நினைவுக்கு வந்தது. ஒரு முறை சுகா ஷூட்டிங் லொக்கேஷன் பார்ப்பதற்காக தனது பெரியப்பா மற்றும் குஞ்சுவுடன் நாகர்கோவில் பக்கம் செல்கிறார், சென்ற இடத்தில இரவு நேரம் அதிகமாகிவிட  ஏதாவது ஒரு நல்ல சைவ ஹோட்டல் பக்கம் காரை நிறுத்த  சொல்கிறார் சுகா. குஞ்சு ஒரு ஹோட்டல் பக்கம் வண்டியை நிறுத்தி இது சைவ ஹோட்டல் தான் வாங்க சாப்பிடலாம் என்று அழைத்து செல்கிறார். உள்ளே சென்றதும் நீங்க சாப்பிட்டே இருங்க இதோ வந்துடுறேன் என்று எஸ்கேப் ஆகிவிடுகிறார். சர்வர்  வந்து என்ன சாப்பிடுறீங்க என்று கேட்க பெரியப்பா இட்லி ஆடர் செய்துவிட்டு சுகாவிடம் தெரியாத புது  ஹோட்டல் வந்தா இட்லியை முதலில் சாப்பிடுவது தான் புத்திசாலித்தனம் என்று பெருமையாக சொல்கிறார். அந்த ஹோட்டலில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை சுகா ஒரு முலையில் சாய்த்து வைத்து இருந்த தகரத்தை பார்க்கிறார். அதில் எழுதி இருந்தது "றத்த பொரியல்".  ஒருவேளை இந்த எழுத்தாளரும் நாகர்கோவில் ஆளாக இருக்கலாம் :))



இன்று வாங்கி புத்தகங்கள்

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் - தமிழினி  
பீக்கதைகள் - பெருமாள் முருகன் - அடையாளம் 
நளினி ஜமீலா - குளச்சல் மு.யூசுப் - காலச்சுவடு 
திரைச்சிலை - ஓவியர் ஜீவா - திரிசக்தி 
சோளகர் தொட்டி - ச.பாலமுருகன் - எதிர் 
வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ரா
அழிக்க பிறந்தவன் - யுவகிருஷ்ணா



-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)