Saturday, January 29, 2011

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா


தமிழ் பதிவர்கள் உலகில் பரிசல் கிருஷ்ணா ரொம்ப பிரபலமானவர் என்று சொல்ல வேண்டியது இல்லை. தனது அனுபவங்களை சுவைப்பட எழுதுவதில் வல்லவர். அவரின் அவியல் என்கிற பகுதியை ரொம்பவே ரசித்து படிப்பேன். 

மேலே உள்ள வரிகள் எல்லாம் அவரின் பதிவுகளால் கவரப்பட்டு எழுதியது. 

ஆனால் ஒரு புத்தகத்தின் ஆசிரியராக !!!  மிகவும் ஏமாற்றம் கொள்ள செய்துவிட்டார். 
தொகுப்பில் உள்ள பதினேழு சிறுகதைகளில் தேறுவது என்னவோ ஐந்து கூட இருக்காது என்பது வேதனை. புத்தகத்துக்கு அறிமுக உரை எழுதி இருக்கும் சுரேகா பரிசலில் நண்பர் என்கிற அளவில் எழுதி இருக்கார். அறிமுக உரை எல்லாம் நன்றாக தான் இருக்கிறது, இந்த புத்தகத்தை வேறு யாராவது ஆசிரியர் யார் என்றே தெரியாத ஒரு கவிஞரிடம் குடுத்து அறிமுக உரை எழுத சொல்லுங்கள் அதில் தான் உண்மை இருக்கும். 

புத்தகத்தை படிக்க படிக்க இவரின் பதிவுக்கும் கதைக்கும் ஆயிரத்து எட்டு சம்பந்தம் இருப்பதை போல தான் இருக்கிறது. தனித்துவம் என்பதே இல்லாமல் பதிவு எழுதுவதை போல கதைகளை எழுதி உள்ளாரா அல்லது ஒரே விதமான நடையை தாண்டி எழுத முடியவில்லையா !!!! கிருஷ்ண என்கிற பெயரை படிக்கும் போது எல்லாம் பரிசல் வாழ்கையில் நடந்த சம்பவங்களில் இதுவும் ஒன்று போல. அதையும் கதையாகி இணைத்து இருக்கிறார் என்கிற அளவில் நினைவு வருகிறது. இது கதையின் போக்கை வெகுவாக பாதிக்கிறது.  

கதைகள் எல்லாம் வாரமலர், குமுதம் புத்தகத்தில் வரும் ஒரு பக்க கதை அப்பறம் நீதி கதை போன்றவற்றுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. அந்த கதைகளை படிக்கும் போது வரும் கடுப்பை ஏன் காசு குடுத்து வாங்க வேண்டும் என்று இந்த மாதிரியான  புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தி கொண்டேன். அவைகள் விட்ட சாபம் என்று தான் நினைக்கிறேன் டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் புத்தகத்தில் மாட்டி கொண்டேன். 

பதிப்பக உரிமையாளர் குகன் பதிவர்களை மட்டுமே நம்பினாரோ என்னவோ அந்த கிருஷ்ண கடவுளுக்கு தான் தெரியும். 

புத்தகத்தில் எனக்கு பிடித்தது காதல் அழிவதில்லை, ஜெனிபர் மற்றும் பெயர் மறந்து போன இரண்டு கதைகள். அவ்வளவே !!! ஒரு கதையை படித்தால் கொஞ்ச நேரமாவது நமது மனதில் ஓட்ட வேண்டும். ஆனால் இங்கேயோ எப்போடா முடியும் அடுத்த கதைக்கு போலாம் என்கிற அவசரம் ஏற்படுகிறது.

பரிசலுக்கு இது முதல் புத்தகம் என்பதால் தவறுகளை மறப்போம் மன்னிப்போம் . ஆனால் பதினெட்டு வருஷம் எழுதி கொண்டு வருகிறார் என்கிறபோது இவ்வளவு வருஷம் எழுதி இவ்வளவு தானா முதல் புத்தகத்தில் கொண்டு வர முடிந்தது என்கிற எண்ணம் தோன்றுவதை நிறுத்த முடியவில்லை !!! 

எங்கே தவறு என்று கண்டுபுடியுங்கள் அதை எல்லாம் தவிர்த்து முற்றிலும் வேறுவிதமாக ஒரு நாவலையோ அல்லது சிறுகதை தொகுப்பையோ வெளியிடுங்கள்  வெற்றிபெறுங்கள். --
With Love
Romeo ;)Monday, January 24, 2011

தேகம் - சாரு நிவேதிதா

வதை என்பது கூட ஒரு கலைதான் அது வதைப்பதாக இருந்தால் !!! 

சாருவின் எந்த புத்தகத்துக்கும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு தேகம் நாவலுக்கு இருந்ததை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஆள் ஆளுக்கு அவர்களில் ரைட் லெப்ட்  பார்வையில் புத்தகத்தை பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை பதிவு செய்து இருகிறார்கள். அவர்களின் ஒருவனாக நானும் எனது ரைட் லெப்ட் பார்வையில் பதிவு செய்கிறேன்.  


ஒரு நாவலின் ஆரம்பம் என்பது வாசகன்/வாசகி கொஞ்சமாவது தெம்போடு தொடங்குவதற்கும் அதே தெம்பை அட்லீஸ்ட் பாதி புத்தகத்தை தாண்டி செல்லவாவது இருப்பது நல்லது. சாரு அதில் வல்லவர் என்பது அவரின் புத்தகங்களை படித்தவர்களுக்கு நன்றாக தெரியும். மற்ற புத்தகங்களை போலவே இதிலும் ஒபெனிங் நன்றாக இருக்கிறது. பாதி பக்கம் வரை நன்றாகவே போகிறது நடுவில் வண்டி ஏதோ மலைப்பாதையில் செல்வது போல செகண்ட் கியரில் இருபது கிலோமீட்டர் வேகத்தில் கர்புர் என்று மக்கார் செய்து கொண்டு செல்கிறது.

சாரு என்ன சொல்லவருகிறார்!!! வதை என்பது எங்கும்  எப்பொழுதும்  யாரவது ஒருவர் எதன் மீதோ அல்லது எவரையோ வதைத்து கொண்டு தான் இருகிறார்கள். பசி கூட ஒரு வித வதை தான், அது யாரோ விட்ட சாபமாக கூட இருக்கலாம். இந்த நாவலில் தர்மா வதைப்படுகிறான் அதேயே வேறு வழிகளில் மற்றவர்களுக்கு வதைக்கிறான். நாமும்   கூட அதில் அடக்கம் ஆகிறோம் தேகம் என்கிற இந்த நாவலின் மூலம். 

கைதேர்ந்த டார்ச்சர் செய்யும் நபராக தர்மா இருக்கிறான். ஒருவனை எப்படி எல்லாம் வதைக்கலாம் என்று லிஸ்ட் இல்லாமல் வதைக்கிறான். அப்படியே சின்ன வயசில் பன்னி பிடிக்க போன போது என்ன நடந்தது என்று ப்ளஷ்பேக்கு செல்கிறது. அதன் தொடச்சியாக நண்பன், காதலி, செலின், நேஹா, நாய் பாஸ்கர், நீதி, பிக் பாக்கெட், பேருந்தில் உரசுவது  என்று செல்கிறது.  நிகழ்காலம், இறந்தகாலம் என்று கதை அங்கே இங்கே என்று ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருக்கிறது. ஊஞ்சல் சில சமயம் நன்றாகத்தான் ஆடுகிறது. 

நாவில் மற்றும் குறியில் வளையம் மாட்டுவதை பற்றி ஒரு அத்தியாயத்தில் வருகிறது. இதுவரை யாரும் எழுதியது இல்லை என்று நினைக்கிறேன் (எனக்கு தெரிந்து) படிக்க படிக்க கொஞ்சம் டெர்ரர் ஆகத்தான் இருக்கிறது அத்தியாயம். கொஞ்சம் ஏமாந்தால் நமக்கே வளையத்தை மாட்டி விடுவார்களோ என்கிற ஐயம் ஏற்படுகிறது.

வழக்கம் போல இதிலும் மலம் வருகிறது. சாருவிற்கும் மலத்துக்கும் என்னதான்  சம்பந்தம் இருந்தாலும் எல்லாவறிலும் மலத்தை நுழைப்பது அருவருப்பை ஏற்படுத்துகிறது. உவ்வ உவ்வ 


ஒன்றை ஒருத்தரிடம் வாங்கி மற்றவரிடம் விற்பதை போல தான் இருக்கிறான் தர்மா. வாங்கிய வதைகளை எல்லாம் வேறு ஒருவரிடம் வேறு வழியில் வதைக்கிறார்.

ராஸ லீலா நாவலில் இருந்து சில பக்கங்களை திருத்தி எழுதியது போல தான் இருக்கிறது.  ராஸ லீலாவில் இடம்பெற்ற மின் அஞ்சல் கடிதங்களை போலவே இதிலும் பல கடிதங்கள். படிக்க படிக்க கொட்டாவி வருகிறது ஏற்கனவே படித்ததால் வந்த வினை என்று நினைக்கிறேன். அதே போல ஜீரோ டிகிரி நாவலில் முதலில் வரும் வாசகி என்ன செய்து கொண்டு இருப்பாள் என்கிற சின்ன சின்ன சம்பவங்கள் போல இதிலும் நேஹா தர்மாவிற்கு எழுதி இருக்கும் கடிதங்களில் இருந்து சிலவற்றை மட்டும் தொகுத்து உள்ளார். அதிலும் இதே போல சில இடம்பெறுகிறது. எக்சிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும் மற்றும் ஜீரோ டிகிரி நாவலின் நாயகன் சூர்யாவும் , ராஸ லீலா நாவலின் நாயகன் பெருமாலும் தான் இதில் தர்மா. ஏற்கனவே படித்ததை படித்தது போல தான் முக்கால் வாசி பக்கங்கள் இருக்கிறது. 

சாருக்கு ஒரு வேண்டுகோள். உலகம் உருண்டை என்று ஒரு அறிஞர் எப்பொழுதோ சொல்லிவிட்டார் அதை நீங்கள், நான், பாஸ்கர், கிருஷ்ணா அப்பறம் இந்த புத்தகத்தை வாங்கியவர்கள், விற்றவர்களுக்கு எல்லாம் தெரியும். அதனால் தயவு செய்து இனி மந்தைவெளி,சேரி, பாரிஸ், பீச் போன்ற அரது பழசான இடங்களை வரும் நாவல்களில் தவிர்க்கவும். அதே போல கதாபாத்திரத்தின் பெயர்களும் ஆழ்வார்,கிருஷ்ணா போன்ற பெயர்களுக்கு எப்பொழுது தான் விடிவுகாலம் பிறக்குமோ.


சாரு எழுதிய நாவல்களில் எக்சிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும் மற்றும் ஜீரோ டிகிரி எனக்கு பிடித்த நாவல்கள். இதில் ஜீரோ டிகிரி மாஸ்டர் பீஸ் என்பேன். நாவல்களை விட கட்டுரை தொகுப்பு வெகு அருமை, கடவுளும் நானும் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும் சலிக்கவே சலிக்காது. கொஞ்சம் போலவே என்னால் அந்த புத்தகத்தை பற்றிய எனது ரைட் பார்வையில் எழுதிள்ளேன். லெப்ட் பார்வையில் இன்னும் கொஞ்சம் எழுதவேண்டும்.


ஒரு புத்தகம் வாசகனை அடைவதற்கு முன்னால் பைண்டிங் எப்படி இருக்கிறது என்று உயிர்மை பதிப்பம் சோதித்தால் நன்று. தேகம் நாவலை இன்னும் இரண்டு முறை பிரித்து படித்தால் நிறைய பக்கங்கள் கையில் வந்துவிடும் என்று நினைக்கிறேன். பசை சரியாக ஒட்டவில்லை, எனது புத்தகத்தில் சில பக்கங்கள் அப்படிதான் இருக்கிறது. ராஸ லீலா புத்தகத்தின் நிலைமையோ ரொம்ப டேஞ்சர். கடைசி கால்வாசி பக்கங்கள் முதல் வாசிப்பிலே  கையில் தனியாக வந்துவிட்டது. 


சில உண்மைகளை பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும். தேகம் என்னை பொறுத்தவரை அவ்வளவு ஒர்த்து இல்லை. காமருப கதைகள் நாவலை போல.


--
With Love
Romeo ;)

Monday, January 17, 2011

சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - தமிழில் : கே.வி.ஷைலஜா

    நாற்பதாவது இயக்குனர்கள் விழாவில் பாலசந்தர் ரஜினியிடம் அவரின் சுயசாரிதம் எழுத சொல்லி கேட்டார். காந்தி போல தைரியம் இருந்தால் கண்டிப்பாக எழுதுவேன் என்று ரஜினி சொன்னார். இந்த புத்தகத்தை ரஜினி  படித்து இருந்தால் கண்டிப்பாக காந்தி பெயருடன்  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் பெயரையும் இணைத்தே சொல்லி இருப்பார்.      


   
   என்ன மனுஷயா இந்த ஆளு, இப்படி எல்லாம் கூட இருந்து இருக்கானே என்று பல சமயம் பரிதாபப்பட தோன்றுகிறது சில சமயம் ச்சேய் இவன் எல்லாம் ஒரு மனுஷன  என்று திட்டவும் தோன்றுகிறது.    
     சிதம்பரம் கோவிலில் இருந்து தொடங்குகிறது நினைவு குறிப்புக்கள். வாழ்வின் அத்தனை நல்லது கெட்டததையும்  பார்த்து சிதம்பரம் கோவிலில் உயிரை விட வேண்டும் என்கிற வைராகியத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு வயதான தம்பதியரை  சந்திக்கிறார்.  பிச்சைக்காரர் என்று முதலில் நாமும் நினைத்தாலும் அவர்கள் பின்னணியை பற்றி படிக்கும் போது எதற்கு இந்த மனித பிறவி என்கிற ஐயம் ஏற்படுகிறது.


   போக புகலிடம் எதுவும் இல்லை. நாளை பற்றிய எந்த ஒரு திட்டமும் இல்லை.  ஒரு வைராகியத்தில் பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.  கவிதை ஒன்றே சொத்து அதை தவிர வேறு ஒன்றும் இல்லை. இயற்கை வாகனமான கால்கள் கொண்டே எங்கும் செல்கிறார்.  பசியில் வாடி வதங்கி போகிறார், சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கிடைக்கும் இடத்தில் அள்ளி அள்ளி சாப்பிடுகிறார். கிடைக்காத நாட்களில் தண்ணீரே துணை என்று நடந்து கொண்டே இருக்கிறார்.  ஒரு தோசைக்காக ஐயரிடம் செவில் வீங்க அரை வாங்குகிறார். இப்படி பாலன் எதையும் மறைக்காமல் ஒப்புகொள்கிறார். 

    அத்தியாயம் தொடங்கும் போது எல்லாம் நன்றாக இருக்கிறது முடியும் போது தான் மனுஷன் நம் மனசை நோக அடிச்சிடுறாரு. ஹாப்பி எண்டிங் என்று எதுவும் இல்லை பட் ஸ்டார்டிங் உண்டு. 
    
        முதல் குழந்தையை கருவிலே கொன்றுவிடும் அந்த அத்தியாயத்தை படிக்கும் போது ஏனோ கண்களில் இருந்து நீர் வருவதை நிறுத்தமுடியவில்லை. கவிதைகள் என்றால் தொலைதூரம் சென்றுவிடுவேன். ஆனால் இந்த அத்தியாத்தில் இடம் பெற்று இருக்கும் பிறக்காத போன என் மகனுக்காக என்கிற கவிதையை தாண்டி செல்ல மனம் வராமல் படித்தேன், எப்போது அடுத்த அத்தியாயம் சென்றேன் என்றே தெரியவில்லை. அவ்வளவு கனமான ஒரு படைப்பு.  


   நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் அருந்திய ஸ்காட்ச் பற்றி எழுதி இருக்கும் அத்தியாயம் கொஞ்சம் பிசிகினாலும் தண்ணி அடிக்க மட்டுமே சென்றதாக ஆகிவிடும். அப்படி இல்லாமல் மிக நேர்த்தியாக அந்த அத்தியாயத்தை கொண்டு சென்று இருந்தது அவ்வளவு அழகு. நடிகர் திலகத்தை வர்ணித்த விதம் அவரை ஆழ்ந்து ரசித்த ஒருவனால் மட்டுமே அவரின் நடை உடை பாவனைகளை வைத்த கண் வாங்காமல் அதற்கு அர்த்தம் சொல்லுவான். அந்த தீவிர ரசிகர் இவர். 


  பாலன் அவர்களின் மனைவியை பற்றி சொல்லியே தீர வேண்டும். ஒரு வேசி பெண்ணை அவரின் வீட்டிற்கே அழைத்து வருவதும். இவர் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பெண்ணை ஜன்னல் வழியாக நோட்டம் விடுவதை பார்த்து சண்டையிடுவதை. வேறு வழியே இல்லாமல் கண்களில் கண்ணீருடன் ஆஸ்பத்திரி அறையினுள் செல்வதும்.   எதை நம்பி படிக்கும் போதே வீட்டின் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்துகொண்டார் என்கிற கேள்வி எழுகிறது. கவிஞரின் மனைவியாக இருப்பது எவ்வளவு கொடுமையானது என்று அவர் வரும் சில அத்தியாயங்கள் நம்மை உணர செய்கிறது.   


  மொத்த 21 அத்தியாங்கள் உள்ள நினைவு குறிப்புகள் இதில் தொகுத்து உள்ளார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், வேசியுடன் கடற்கரையில் கழித்த ஒரு இரவு, லைலாவுடன் அருந்திய ஜின், ஓணம் பண்டிகை அன்று பிச்சைகாரன் போல ஒரு வீட்டில் சாப்பிட்டது, கையில் காசு இல்லாமல் ரத்தத்தை விற்றது, ஊறுகாய் விற்க வந்த பெண்ணிடம் அடிவாங்கியது என்று தனது வாழ்வில் நடந்த சில சம்பவங்களை மறைக்காமல் சொல்லி இருக்கிறார்.     மிக இயல்பான நடையில் வாசிக்க வாசிக்க புத்தகத்தை கீழே வைக்க மனம் வராமல் அவரின் நினைவுகளில் அவருடன் நாமும் ஒரு நண்பனாய் சேர்ந்து கொண்டு அந்த நினைவுகளின் பின்னாலே பயணித்து கொண்டு இருக்கிறோம்.  தமிழில் மொழி பெயர்த்த
கே.வி.ஷைலஜா அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொல்வது என்று தெரியவில்லை.    கண்காட்சியில் வாங்கி புத்தகங்களில் எதை முதலில் படிப்பது என்று தெரியாமல் இருந்தேன். நண்பர் மயில் முதலில் இந்த புத்தகத்தை படியுங்கள் என்று பரிந்துரைத்தார். நல்லவேளை கேபிள் சங்கருக்கு முதலில் ஏற்ப்பட்ட தடுமாற்றம் எனக்கு அமையவில்லை. அதற்காக ஸ்பெஷல் நன்றி மயில்ராவணன் அண்ணன் அவர்களுக்கு.

சிதம்பர நினைவுகள் - கண்டிப்பாக படித்தே தீரவேண்டிய புத்தகங்களில் ஒன்று. படித்து பாருங்கள் நான் சொன்னதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று நீங்கள் உணருவீர்கள்.சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - தமிழில் : கே.வி.ஷைலஜா
வம்சி பதிப்பகம் 
விலை :- 100 ருபாய் --
With Love
Romeo ;)

Monday, January 10, 2011

புத்தக கண்காட்சி


ரெண்டு வருஷமா பண்டிகை தினம், விடுமுறை தினம், பிறந்தநாள் தினம் போன்ற எதுவும் இவ்வளவு மகிழ்ச்சிகரமான நாளாக இருந்தது இல்லை எனக்கு. ஆனால் புத்தக கண்காட்சி தொடங்கும் நாளில் மட்டும் எங்கு இருந்து தான் இவ்வளவு மகிழ்ச்சி வருமோ தெரியாது. அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் அங்கு செல்லும் போது. 

கண்காட்சி தொடங்கி நாளில் இருந்து எதாவது ஒரு வேலை வந்து கண்காட்சிக்கு செல்ல  முடியாமல் போய் விட்டது. இன்று தான் அங்கு செல்வதற்கு நேரம் கிடைத்தது. 

மதியம் மூன்று மணி அளவில் அரங்கத்துக்கு சென்றேன் வாங்க போகும் புத்தகங்கள் முக்கால் வாசி இலக்கிய சம்பந்தப்பட்டதாக  இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே தான் சென்றேன். அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன் என்று நினைக்கிறேன். 

உயிர்மை, வம்சி, காலசுவடு போன்ற புத்தக கடைகளில் அதிகமான நேரம் கழிந்தது. 

அரங்கு எண்: 338 காவ்யா புத்தக கடையில் நிழலிரவு கண்ணில்பட்டது பதிவர் தமயந்தி எழுதிய புத்தகம் -  வாங்கிவிட்டேன் 

ஆண்டாள் திரிசக்தியில் பரிசலின் டைரி குறிப்பும் காதல் மறுப்பும் மற்றும் கேபிளின் மீண்டும் ஒரு காதல் கதை புத்தகம் கிடைத்தது - வாங்கிவிட்டேன்

எப்பொழுதும் போல கிழக்கு நன்றாக கல்லா கட்டி கொண்டு இருந்தது. 

இந்த வாரம் மறுபடியும் செல்வேனோ மாட்டேனோ அதனால் முடிந்த அளவு அள்ளிவிட்டேன். 

இன்று வாங்கிய புத்தகங்கள் எல்லாம் இந்த  ஒரு வருடம் (அதற்கு முன்பே)  படித்துவிடுவேன். வாங்கிய புத்தகங்களை படித்து அதை பற்றி விமர்சனம் எழுதவேண்டும். 


கோபல்ல கிராமம் - கி.ரா
கோபல்லபுரத்து மக்கள் - கி. ரா
அந்தமான் நாயக்கர் - கி. ரா
டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா 
மீண்டும் ஒரு காதல்கதை - கேபிள்
சினிமா வியாபாரம் - கேபிள் 
உணவின் வரலாறு - பா.ரா
முதல் உலகப்போர் - மருதன் 
முன்றாம் பிறை - மம்முட்டி - தமிழில் : கே.வி.ஷைலஜா
சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் கள்ளிக்காடு - தமிழில் : கே.வி.ஷைலஜா ௦
கள்ளி - வா.மு.கோமு
மண் பூதம் - வா.மு.கோமு
ஊமைச் செந்நாய் - ஜெயமோகன் 
தேகம் - சாரு 
வெட்டுப்புலி - தமிழ்மகன் 
நிழலிரவு - தமயந்தி 
ஏறக்குறைய உண்மைக் கதை - ரா. ஸ்ரீனிவாசன்
நெரிக்கட்டு - அழகிய பெரியவன்
நிழல் முற்றம் - பெருமாள் முருகன் 
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - வைக்கம் முகமது பஷீர் - தமிழில்: குளச்சல் மு. யூசுப் 
மதில்கள் -  வைக்கம் முகமது பஷீர் - தமிழில்: சுகுமாரன் 
சப்தங்கள் - வைக்கம் முகமது பஷீர் - தமிழில்: குளச்சல் மு. யூசுப்
பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் - தமிழில்:குளச்சல் மு. யூசுப்


 
-- 
With Love
Romeo ;)    

Saturday, January 8, 2011

சங்கதிகள் - 08/01/11


சுயபுராணம்

          இப்பொழுது எல்லாம் பதிவுகளை படிக்கும் அளவுக்கு எழுதுவதில் நாட்டம் வருவது இல்லை. சிலது  எழுதலாம் என்று குறிப்பு எடுத்து வைப்பேன்  பிறகு  அவை வேண்டுமா என்கிற எண்ணம் தோன்றும். அந்த எண்ணம் வந்த போதே குறிப்புகள் எல்லாம் குப்பைக்கு சென்றுவிடுகிறது. சென்ற வாரம் சாருவின் கடவுளும் நானும் என்கிற புத்தகத்தை மீள் வாசிப்பு செய்து கொண்டு இருந்தேன். அந்த புத்தகத்தை பற்றி எழுதலாம் என்று சில குறிப்புகள் எடுத்து வைத்து உள்ளேன், அவைகளை வலையேற்றம் செய்ய இது சரியான தருணமா என்று தெரியவில்லை. தேகம் படித்து முடித்த பிறகு ஒரே பதிவாக எழுதலாம் என்று இருக்கிறேன் பார்க்கலாம். குறிப்புகள் குப்பை கூடைக்கு செல்லாமல் இருந்தால் சரி :)


வருத்தம்

               நண்பர்களை சந்திக்காமல் இருந்தது. பதிவர் கார்த்திகேயன் அவர்களை சந்திக்கலாம்  என்று எத்தனையோ முறை முயற்சி செய்தும் முடியால் போய்விட்டது :(. சாருவின் புத்தக வெளியிட்டு விழாவில் சந்திக்கலாம் என்று முயற்சி செய்தேன், வேலை பளுவின் காரணாமாக செல்ல முடியவில்லை. நண்பா அடுத்தமுறை கண்டிப்பாக சந்திப்போம். 

               பதிவர்கள் புத்தக வெளியீடு விழாவுக்கு செல்ல முடியாமல் போனது கூட கவலையை தந்தது. கேபிளின் மீண்டும் ஒரு காதல் கதை படித்து கண்டிப்பாக விமர்சனம் எழுத வேண்டும். 
அதே போல பின்னுடம் போட முடியாத அளவுக்கு ஆபீசில் ஆப்பு வச்சிடாங்க. எல்லா பதிவையும் படிச்சாலும் பின்னுடம் போட முடியலையேன்னு ஒரு ஏக்கம் இருக்கு. நண்பர்கள் மன்னிக்கவும்.
  
சந்தோஷம்

       இந்த வருட புத்தக கண்காட்சி தொடங்கி விட்டது. வரும் திங்கள் அன்றுதான் கண்காட்சிக்கு செல்வேன் என்று நினைக்கிறேன். வாங்க வேண்டிய புத்தகங்கள் லிஸ்ட் பெருசாக இருக்கிறது. எதை வாங்குவது எதை விடுவது என்று தெரியவில்லை முடிந்த அளவு அள்ளவேண்டும் என்று மட்டும் நினைத்து இருக்கிறேன். மகா கிட்ட இதை பற்றி பேசிட்டு இருந்தேன். அம்மிணி கண்காட்சிக்கு வரேன் என்று சொல்லி இருக்கிறாள், அவளின் விருப்பம் கண்டிப்பா சமையல் புத்தகம் மற்றும் குழந்தைகள் புத்தகம் தான் இருக்கும், ஒருவேளை அவள் வரவில்லை என்றாலும் இரண்டும் கண்டிப்பாக வாங்கி வரவேண்டும் என்று ஆர்டர் போட்டு இருக்காங்க.அரசியல் 

               இந்த வாரம் எங்க தொகுதி மீன்வள துறை அமைச்சர் சாமி பற்றி ஆனந்த விகடன் புத்தகத்தில் வந்து உள்ளது. உள்ளதை உள்ளபடி எழுதி இருகிறார்கள் என்று சொல்லலாம். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்கிற பழமொழிக்கு ஏற்ப தம்பிகளை அதிகமாக நம்பியதின் விளைவு என்ன என்று வரும் தேர்தலில் அவருக்கே  சீட் கிடைத்தால் தெரியும். கொஞ்ச நாளா எனக்கு ஒரு டவுட் இருந்துச்சு. அமைச்சர் பேரு K.P.P. சாமி, அவர் தம்பி பேரு K.P.சங்கர் இனிசியல் வித்தியாசமா இருக்கேன்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன். நேத்துதான் அதுக்கு விடை கிடைச்சிது. அமைச்சரின் முழு பெயர் பக்கிரிசாமி. பக்கிரியை சுருக்கி இனிசியல்யோட சேர்த்து  K.P.P. சாமி ஆகிட்டாரு :))திருட்டு 
                 படங்களை காப்பி அடிப்பது பற்றி நல்லா தெரியும் அதே மாதிரி பாடல்களை காப்பி அடிப்பதும் நடக்கிறது. கீழே உள்ள Youtube பார்த்து நீங்களே தெரிஞ்சிகோங்க. யாரை பார்த்து யார் காப்பி அடிச்சி இருக்கான்னு. 


1.

2.


சாப்பாட்டு கடை


              
           கேபிள்சங்கர் நல்ல சாப்பாடு கடையா பார்த்து நமக்கு அறிமுகம் செய்றாரு ஏதோ  எனக்கு  தெரிஞ்ச கேவலமான ஒரு சாப்பாடு கடையை பத்தி எழுதுறேன் படிச்சி பார்த்து அந்த கடைல போய் சாப்பிடாதிங்க.

          கிண்டி போலீஸ் ஸ்டேஷன்க்கு எதிரில் அடுத்து அடுத்து இருக்கும் ரெண்டு ஹோட்டல மட்டும் தயவு செஞ்சு சாப்பிடாதிங்க. அங்க கிடைக்கும் பரோட்டா காஞ்சி போய் இருக்கும் தொட்டுக்க சால்னா குடுப்பாங்க பாருங்க அவ்வளவு கேவலமா இருக்கும், முடிஞ்சா அளவு அங்க சாப்பிடாதிங்க. அந்த கடையை தாண்டி கொஞ்ச நடந்து போனா இன்னொரு கடை இருக்கும் அங்க கொஞ்சம் பரவால (நல்லா படிங்க பரவால). பக்கத்துலையே தலப்பாகட்டு பிரியாணி கடை இருக்கு அங்க மட்டன் மட்டும் சாப்பிடாதிங்க. பிரியாணி விட பிரைட் ரைஸ் நல்லா இருக்கும்.
   


-- 

With Love

Romeo ;)