Saturday, May 22, 2010

நெம்பர் 40, ரெட்டை தெரு - இரா.முருகன்

கார்த்திக் என்னுடன் முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தவன். அவன் மட்டும் அல்ல பாலாஜி, சிமியோன், ஜின்சயத் எல்லாம் முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தோம். இந்த கார்த்தி பையன் மட்டும் எங்களை விட நன்றாக படிப்பான். கிளாஸ்ல முதல் மாணவனும் அவனே, அதனால் அவனுக்கு கொஞ்சம் அல்ல நிறையவே தலைகணம்  இருந்தது. வகுப்பின் முதல் மாணவன் என்கிற திமிரில் அவன் நிறைய ஆடினான், வகுப்பில் இருக்கும் மக்கு மற்றும் அடிமை பசங்களுக்கு எல்லாம் இவன்தான் தலைவன்.  அவனும் எங்களுடன் ஒரே காலனியில் தான் குடியிருந்தான், அவன் அப்பா இ.பியில் நல்ல  போஸ்டிங்ல இருந்ததால் வசதி வாய்ப்புக்கு குறைவில்லாமல் இருந்தான். அதாவது அப்பர் மிடில் கிளாஸ் ரேஞ்சில் இருந்தான், பையில் பணம் இல்லாமல் ஸ்கூல் வரமாட்டான். கிளாஸில் இருக்குற இவன் அடிமைகளில் முக்கியமான ஒருத்தன் இருந்தான் அவன் பெயர் மதன். பார்ப்பதற்கு சேட்டு வீட்டு பையன் போல இருப்பான்.   படிப்பதில் அவனை மாதிரி ஒரு மக்கு பையனை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விடமுடியாது. ஆனால் வாயோ அவன் அப்பாவின் கைகளில் இருக்கும் துணி அளக்கும் ஸ்கேல் மாதிரி ஒரு மீட்டர் நீளத்துக்கு இருக்கும். இவனிடம் இருக்கும் அறிவை பார்த்து கிளாஸ் டீச்சர் கார்த்திகை பார்த்து கொள்ளும்ப்படி சொல்லிவிட்டார். பாவம் அவரால் அவனை ஒரு நிலையான இடத்திற்கு கொண்டுவர முடியவில்லை. எத்தனை முறை சொல்லாலும் மேத்ஸ் என்றாலே அவன் மார்க் 10க்கு மேல் கொண்டு வரமுடியவில்லை. நான் சொல்லுவதை நீங்கள்  நம்பித்தான் ஆகவேண்டும் 8th படிக்கும் போது மற்றவர்களை போல மதன் அல்ஜிப்ரா படிக்கவில்லை 15 தாவது வாய்பாடைதான் படித்து கொண்டு இருந்தான். கார்த்திக் அவனுக்கு பாடத்தை சொல்லி கொடுத்தானோ இல்லையோ அவனின் தேவைகளை அதிகமாக பூர்த்தி செய்து கொண்டான்.  

இப்பொது  மாதிரி அல்ல அப்போ, அதாவது 16 வருசத்துக்கு முன்னால் பிரியாணி என்றால் முனியாண்டி விலாஸ், மிலிடரி ஹோட்டல் என்று அசைவ ஹோட்டல்கள்  ஐந்து கிலோ மீட்டர்க்கு ஒன்று என்று இருந்தது. இந்த நேரத்தில் புதிதாக ஹோட்டல் பாண்டியன் என்கிற பெயரில் மகாராணி தியேட்டர் அருகே ஒரு அசைவ சாப்பட்டு  கடை தொடங்கபட்டது அல்லது அப்போது தான் அப்படி ஒரு ஹோட்டல் சென்னையில்  இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும்.  கார்த்திக் வாரத்தில் மூன்று முறை அந்த ஹோட்டலில்  தான் சாப்பிடுவான். மதன் தான் லஞ்ச் நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு மாங்கு மாங்கு என்று மிதித்து சென்று வாங்கி வருவான். அந்த சிக்கன் பிரியாணி வாசம் வகுப்பறை முழுவதும் வீசும். எங்களின் சாபத்தை வாங்கி கட்டி கொண்டுதான் கார்த்திக்கின் தொண்டையில் சிக்கன் நுழையும்.  கார்த்திக் செயல் எங்களுக்கு எரிச்சலை ஊட்டியது . மதன் வேறு யாருக்கும் வாங்கிகொண்டு வரமாட்டான் என்பதால் வந்த எரிச்சல் வேறு . நாங்கள் சதிதிட்டம் எல்லாம் பண்ணுவதற்கு முன்பாகவே மதன் கார்த்திக் பிடியில் இருந்து விலகி  முரளிகிருஷ்ணனுக்கு அடிமை ஆனான். ஏன் என்று ரொம்ப நாள் தெரியாமல் இருந்த இந்த புதிருக்கு விடையை  வருட கடைசி பரிச்சையில் தான் தெரியவந்தது,  விஷயம் இதுதான் அன்று வழக்கம் போல மதன் பிரியாணி வாங்க சைக்கிளை மாங்கு மாங்கு என்று மேதித்து ஹோட்டல் பாண்டியன் சென்றுள்ளான்  அந்த நேரம் அங்கு அவன் மாமா ஒரு ஓரத்திலும் இங்கிலீஷ் வாத்தியார் ஒரு ஓரத்திலும் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். இருவரும் ஒரே நேரத்தில் பெயர் சொல்லி கூப்பிட நன்றாக மாட்டி முழித்தான். அதற்கு பிறகு தான் கார்த்திகிடம் இருந்து முரளிக்கு இடம் மாறினான், அவனுக்கு கண்டிப்பாக மண்டையில் எதுவும்  ஏறது என்று அவன் வீட்டில் முடிவு செய்ததால் அந்த வருடத்தோடு படிப்பை ஏற கட்டி வைக்க முடிவு பண்ணினார்கள்.  

அந்த வருடத்தோடு கார்த்திக் ஸ்கூலில் பிரியாணி சாப்பிடுவதை நிறுத்திவிட்டான்  கையில் பணம் இருந்தாலும் அதன் பிறகு அவனுக்கு எந்த அடிமையும் சிக்கவில்லை என்பதே அவன் பிரியாணியை சாப்பிடாமல் போனதற்கு காரணம்.   ஒரு அடிமையும் வாரம்தோறும் பிரியாணியும்ன்னு நாங்க அவங்களுக்கு பெயர் கூட வைத்தோம்.


ஏனோ ரெட்டை தெருவை படித்த பிறகு கொஞ்சம் மட்டுமே நினைவில் இருந்த பால்ய காலத்து நினைவுகள் எல்லாம் திரும்ப திரும்ப அப்டேட் ஆகி கொண்டு இருக்கிறது. அதன் வெளிபாடுதான் மேலே உள்ள சின்ன நினைவலைகள்.   

சில புத்தகங்களை படித்தால் பழைய நிலைவுகள் எல்லாம் அந்த காலகட்டத்தை கண்முன்னால் வந்து பரத நாட்டியமோ அல்லது டிஸ்கோவோ ஆடும், .  திரு.இரா.முருகன் எழுதிய நெம்பர் 40, ரெட்டை தெரு  படிக்கும் போது நமது சிறுவயதில் நடந்த எல்லா சேட்டைகளையும் எளிதில் நினைவுக்கு கொண்டு வந்துவிடுகிறது. 

ஒரு அத்தியாயம் எல்லாம் பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடினார் என்று எழுதி இருப்பார் , இன்னொரு அத்தியாயம் எல்லாம் தீபாவளி , இன்னொன்று பள்ளிகூட வாத்தியார்கள். ரெட்டை தெருவில் இருக்கும் மனிதர்கள் என்று 54 அத்தியாங்கள் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமாக இருக்கும். நிறைய மனிதர்களை அடையாளம் காட்டி இருப்பது மட்டும் அல்ல அவர்களின் அங்க அடையாளங்களை கூட சொல்லி அந்த காலகட்டத்தில் இருந்த மனிதர்களை கண்முன்னால் நிறுத்தி விடுகிறார்.

என்னதான் புத்தகத்தை மாங்கு மாங்கு என்று படித்து ரசித்தாலும் அந்த ரெட்டை தெரு எந்த ஊரில் இருக்கிறது என்று அவர் சொல்லவேயில்லை. மதுரைக்கு பக்கத்தில் உள்ளது போல சில இடங்களில் ரெட்டை தெருவை மதுரையோடும் மேலூர்ரோடும்  தொட்டு செல்வார். படிக்க படிக்க அந்த தெருவில் இறங்கி நானும் அவரின் பால்ய வயதில் உடன் நடந்தது போல இருக்கிறது.  நாவல் அல்லது பால்ய சுயசாரிதம் நடக்கும் காலகட்டம் 1960களில், அந்த காலகட்டத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை கூட தனது பால்ய வயதில் எப்படி பார்த்தார் என்று எல்லாவற்றையும் தொட்டு செல்கிறது இந்த ரெட்டை தெரு. 

ரொம்ப நிறைவான புத்தகம், ஏக்கத்தை கூட ரொம்ப அழகா நக்கல் கலந்த நகைச்சுவையில் முடியும் அந்த வரிகளை படித்த போது வந்த சிரிப்பை என்னால் அடக்கமுடியாமல் பஸ்ஸில் சிரித்துவிட்டேன். பக்கத்தில் இருந்தவர் என்ன புத்தகம் சார் என்று கேட்டார். ஒரு அத்தியாயம் படிக்க குடுத்தேன். அவரும் என்னை போலவே யார்  பார்த்தாள் எனக்கு என்ன என்கிற ரீதியில் பலமாக சிரித்து வைத்தார்.   

இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகத்தை ஆழ்ந்து அனுபவித்து படிச்சிட்டு அப்படியே இங்க ஜம்ப் பண்ணுங்க ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் சுஜாதா வேறு ஒரு ஊரில் குடியிருந்து  எழுதியது போலவே இருக்கும் முருகனின் இந்த நெம்பர் 40, ரெட்டை தெரு


புத்தகம் கிடைக்கும் இடம் 

நெம்பர் 40, ரெட்டைத் தெரு

ஆசிரியர்: இரா.முருகன்
விலை: 125 ருபாய்
கிழக்கு பதிப்பகம், 
New Horizon Media Private Limited
33/15, Eldams Road, 
Alwarpet, Chennai 600018, 
Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601
Fax: 91 44 4300 9701



With Love
Romeo ;)

Wednesday, May 19, 2010

கொஞ்சம் படங்கள்

லேட் விமர்சனம் தான் இருந்தாலும் படிப்பிங்க என்கிற நம்பிக்கையில் பதிவேற்றம் செய்கிறேன். 

அவள் பெயர் தமிழரசி

                                                                

வாத்தியார் படத்தில் வடிவேல் ஒரு டைலாக் சொல்லுவாரு "நல்லாதானே போயிட்டு இருந்துச்சு"  அததான் இங்க சொல்லணும். ஜெய் நர்த்தகியை தேடி போயிட்டு இருந்தாரு அப்பறம் அவள கண்டுபுடிச்சாரு அப்பறம் ??? அதுக்கு பிறகு படத்தை தூக்கி நிறுத்துற மாதிரி ஒரு கிளைமாக்ஸ் இருந்துச்சுனா நல்லா இருந்து இருக்கும் பச் சப்புன்னு முடிச்சிடாறு  டைரக்டர். ரசிக்க வைக்கும் நிறைய காட்சிகள் படத்தில் இருக்கு. அந்த குண்டி ஆட்டி பறவை அழகு. இந்த படத்தில் ப்ரோமோ ரிலீஸ் அப்பவே என்னோட சிஸ்டம் வால்பேப்பரா ஜெய் ரயில் வண்டியில் உட்கார்ந்து செல்லும் படத்தை  வச்சி இருந்தேன். படத்தை பற்றி செய்தி எல்லாம் படிக்கும் போது ரொம்ப ஆவளா இருந்தேன் ரொம்ப எதிர் பார்த்தால் இப்படி தான் புஸ்ஸ்ஸ் ஆகிவிடும் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. 


அங்காடி தெரு 




வரும் ஆனா வராது ,,, அப்படி இப்படின்னு  படத்தை ரிலீஸ் பண்ணிடாங்க. ரொம்ப எதார்த்தமா தோத்து போனவனின் கதையை சொல்லி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர் வசந்தபாலன். அதை இதுலயும் காட்டி உள்ளார் அதே சமயம் எதார்த்தம் என்கிற பெயரில் திணிக்கப்பட்ட காட்சிகளால் வெயில் வசந்த பாலன் என்றே திரும்ப அழைக்கலாம் . பசுபதி இறந்த காட்சியை திணிக்கப்பட்டது என்றால் அது மிகை அல்ல, ஆனால் கனிக்கு கால் போய்விடுவதை பார்க்கும் போது கண்டிப்பாக திணிக்கப்பட்டு உள்ளது என்றே சொல்லலாம். முந்தைய படத்தில் கிடைத்த அந்த அனுதாபத்தை இதில் கொண்டு வரலாம் என்று நினைத்து இருப்பார் போல.  நாயகன் நாயகியை விட மற்ற நடிகர்கள் தான் அதிகமாக மனதில் அழுத்தி பதிந்து உள்ளார்கள். அந்த விலைமாது பெண்ணுக்கும் கால் ஊனமான குள்ள மனிதனுக்கும் பிறந்த குழந்தையை பற்றி அந்த பெண் தனது குழந்தை கணவன் மாதிரியே இருப்பதை நினைத்து பெருமை பொங்கும் போது அந்த இடத்தில பேசும் வசனம் சூப்பர் கண்டிப்பாக அவள் பேசிய வசனத்தை ஏற்று கொள்ளும் மனநிலை எல்லோருக்கும் அந்த இடத்தில இருந்து இருக்கும் ,  ஆனால் அவ்வளவு பெரிய கடையில் நாயகியை எல்லோர்   முன்னிலைலும்  சிறு அறைக்குள் வைத்து அடிப்பது பிறகு அவள் நாயகனிடம் அந்த சூப்பர்வைசர் தனது மாரை கசக்கினான் என்று சொல்லும் இடம் எல்லாம் நம்ப முடியவில்லை. ஒரு படம் முழுவதையும் பார்ப்பதை விட வெயிலின் கடைசி அரைமணிநேரம் பார்த்தாள் போதும். அதில் தான் அதிகமாக வசந்த பலனை பார்க்கலாம். 

விண்ணைத்தாண்டி வருவாயா  




வாவ்... என்ன ஒரு ரொமாண்டிக் படம். கௌதம் மேனன் படம் என்றாலே மெல்லிய காதல் அழகாக படம் முழுவதும் தெரியும். அதுவும் மேல் தட்டு காதல் தான் இவரின் டார்கெட்.  காக்க காக்க படத்தில் சூர்யா உதிர்க்கும் சின்ன சிரிப்பில் கூட அவ்வளவு அழகான காதல் வெளிப்படும், படமே காதல் என்றால் !!!! ரொம்ப ரொம்ப ரசிச்சு ரசிச்சு பார்த்த படம் அதும் அமெரிக்காவின் ஒரு பார்க் பெஞ்சில் இருவரும் அமர்ந்து பேசும் இடம் சான்சே இல்லபா. அந்த இடத்தில வரும் வசனம் எல்லாம் செம ஷார்ப். சிம்பு , த்ரிஷா இரண்டுபேரும் அவ்வளவு நிறைவா நடிச்சு இருக்காங்க. தமிழ் சினிமாவில்  ரொம்ப நாட்களாக காதல் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு யாரும் இல்லாமல் இருந்தது, அந்த இடத்தை சிம்பு, த்ரிஷா ஜோடி நிரப்பிவிட்டது. சிம்புவின் முதிர்ச்சி படம் முழுக்க ஆக்கிரமித்து இருக்கிறது. அடிகடி அவர் சொல்லும் "நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்" என்கிற கேள்விக்கு பதில்  - - - ரொம்ப சிம்பிள் "She is Cute more then You".

  
இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்




  நல்ல ஒரு காமெடி படம் பார்த்த திருப்தி, புளித்து போன கௌபாய் கதைதான் இருந்தாலும் ஆங் ஆங்கே சின்ன சின்ன விஷயங்களை பொருத்தி அழகா படத்தை தந்து இருக்கார் டைரக்டர். ஜெய்சங்கர்புரத்தை பற்றி அந்த பெரியவர் சொல்லும் இடமே செம  டாப் காமெடி.  அப்பறம் எதற்கு 3 பெண்கள் ?? அதும் சந்தியா கேரக்டர் தேவையே இல்லை சும்மா வந்து எட்டி பார்த்துவிட்டு செல்கிறார்.  படத்தின் பின்னணி இசையை சபேஷ்-முரளி நன்றாக செய்து உள்ளார்கள் அதற்காக இப்படி ஈ அடிச்சான் காபி போல Pirates of the Caribbean  படத்தின் தீம் மியூசிக் சுடுவது ?? குடுத்த காசுக்கு நல்லா சிரிச்சிட்டு வந்தேன் , தேங்க்ஸ் டூ சிம்புதேவன்.





With Love
Romeo ;)   













Tuesday, May 18, 2010

சில விஷயங்கள் மனதில்பட்டது

போலீஸ்காரர்களுக்கு போதாத காலம் போல இருக்கு. மாசத்துக்கு ஒண்ணுன்னு யாரவது ஒருத்தர் அடிப்பட்டோ இல்லை உயிரை விட்டுடோ இருக்காங்க. சமிபத்தில் இறந்த இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் என்பவரை பற்றி அந்த மாவட்ட எஸ்.பி ரொம்ப கவலையா தன்னோட வேதனையை சொல்லி இருக்காரு. செக்யூரிட்டி வேலை என்பது ரொம்ப கஷ்ட பட்டு செய்யும் வேலை அல்ல என்பதை நிறைய பேர் அறிவார்கள். அதுவே அவர்களுக்கு சாதகமாகவும்/ பாதகமாகவும் ஆகிவிடுகிறது. எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் செக்யூரிட்டி ஆட்கள் சில நாள் 24 மணிநேரம், 36 மணிநேரம் எல்லாம் வேலைசெய்து கொண்டு இருப்பார்கள். இது எதனால் என்றால் ஒருவரை ரீலீவ் பண்ண மற்றவர் வரவில்லை என்றால் இதை போன்று அதிக நேரம் வேலை செய்வார்கள். அவர்களின் உடல்நிலையை விட மனஅழுத்தம் அதிகமாக இருக்கும். இரவு முழுவதும் தூங்காமல் அடுத்தநாள் பகலில் வேலைசெய்வது என்பது எல்லாம் அவ்வளவு எளிது அல்ல. அதும் வீட்டிற்கு செல்லாமல் வேலை செய்வதால் ரொம்ப எரிச்சலுடன் பகலில் வேலைசெய்வார்கள் சிலர். ஹ்ம்ம் இனி பேசி என்ன செய்ய ஒரு உயிர் போன பிறகுதான் நமக்கு புத்திவரும் அதுவும் கொஞ்ச நாளுக்கு தான். 

போலீஸ் மேட்டர் இப்படினா விசாரணை கைதிகள் நிலைமையை ரொம்ப மோசமா இருக்கு. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 44 லாக் அப் மரணங்கள் நடந்து உள்ளதாக மனித உரிமை கழகம் ஒன்று பட்டியல் இடுகிறது. போலீஸ்ன் வரைமுறை இல்லாதா விசாரணைதான் இத்தனை மரணங்கள் நடந்து உள்ளது. சென்னை என்றால் என்ன கன்யாகுமரி என்றால் என்ன எங்கேயும் எப்போதும் அவர்கள் கைகளில் இருக்கும் அந்த லட்டியை சுழற்றி சுழற்றி அடித்தால் உண்மை வந்துவிடும் என்று நினைத்து செய்கிறார்கள்.  அடித்தே உண்மையை வாங்கிவிடலாம் என்பது ஒரு வழி, அல்லது குடும்ப உறுப்பினர்களை வைத்து டார்ச்சர் பண்ணி உண்மையை வாங்கிவிடலாம் என்பது ஒரு வழி.  அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி விழுந்தால் அவன் புதைக்குள் தான் செல்வான். இத்தனை மரணகளுக்கு இவர்கள் மட்டுமே பொறுப்பு அல்ல, இவர்களை ஆட்டி வைக்கும் பணமும்  ஒரு வகையில் பொறுப்பு. கைநீட்டும்  இன்ஸ்பெக்டராக இருந்தால் அவர் ஓய்வு பெரும் நேரத்தில் கண்டிப்பாக 3 - 5 வீடுகள் இருக்கும் (சின்ன வீடு இல்லைங்க கல் வீடுங்க). அரசானை என்ன சொல்கிறது ?? அரசு ஊழியர்கள் தாங்கள் வாங்கும் எந்த பொருளையும் கண்டிப்பாக அதை பற்றி அரசுக்கு தெரியப்படுத்த  வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருப்பது ஒரு குற்றமாக கருதப்படுகிறது, இங்கே யார் எல்லாம் இதை பின்பற்றுகிறார்கள் ???  தினமும் கையுட்டு வாங்கி கைதாகும்  அதிகாரிகளை பற்றி செய்தி தாள்களில் படித்து கொண்டு தான் இருக்கிறோம் இருந்தும் என்ன ப்ரோஜனம்!! புதிது புதிதாக ஒரு வழியை கண்டுபிடித்து காசு வாங்கி கொண்டுதான் இருகிறார்கள். மக்கள் கண்டிப்பாக பணம் குடுக்க மாட்டேன் என்று சொல்லி பழகவேண்டும், எங்கேயும் எப்போதும். 


ஒரு வழியா சிங்கமுதுவை கைது பண்ண வச்சிட்டாரு வைகை புயல். முதல்வரை சந்தித்த அடுத்த நாள் சிங்கமுத்து கைது செய்து இருப்பதை பார்க்கும் போது கண்டிப்பா ஏதோ ஒன்று இவ்வளவு நாளாக சிங்கமுத்துவை நெருங்க முடியாமல் செய்து இருக்கிறது என்று தெரிகிறது. அதனால் தான் வைகை புயல் முதல்வரை சந்தித்து முறையிடும் அளவுக்கு வந்து இருக்கிறார். காமெடி பண்ணியது போதும் கொஞ்சம் வில்லத்தனம் பண்ணி பார்க்கலாம் என்று நினைத்து விட்டார் போல. ஆனால் இவர் முதல்வரை ஏன் சந்தித்தார் என்றால் கவிஞர் விஜய் நடிக்கும் இளைஞன் படத்தில் இவரும் நடிகிறாராம் அதனால் வந்து சந்தித்தாரம்!! இது எவ்வளவு பெரிய காமெடி !!!!!! வந்த வேலை முடிந்தது என்கிற சந்தோஷத்தில் கண்டிப்பா குறட்டை விட்டு தூங்கி இருந்து இருபார் புயல். 


நாமக்கல் மாவட்டம் வேலூரில் சென்றவாரம் நடந்த ஒரு விழாவிற்கு சென்று இருந்தேன். ரொம்ப தாகம் எடுத்ததால் பக்கத்தில் இருந்த ஒரு கடையில் குளிர்பானம்  வாங்கி குடித்தேன். அதன் உண்மையான விலையோ 9 ருபாய், ஆனால் அந்த கடைகாரர் 12 ருபாய் என்று வாங்கி கொண்டார். எனக்கும் அவருக்கும் சிறிது வாக்கு வாதம் நடந்தது அவர் சொல்லிய எந்த பதிலும் எதற்கு இந்த விலை ஏற்றம் என்பதற்கு காண  பதிலே இல்லை. அவரின் இஷ்டத்துக்கு விலைவைத்து விற்பாரம் ரொம்ப எரிச்சலுடம் அங்கு இருந்து நகர்ந்தேன். சென்னை பற்றி எவ்வளவு கேவலமாக பேசினாலும் மற்ற மாவட்டங்களை விட மலிவாக எந்த பொருளையும் சில்லறை கடைகளில் வாங்கிவிடலாம். இதே குளிர் பானம் 9 அல்லது 10 ருபாய்க்கு எல்லா கடைகளிலும் கிடைக்கும்.  முன்பு எல்லாம் அம்மா அடிகடி சொல்லுவாங்க சென்னைல  20 ருபாய் இருந்தா போதும் ஒரு நாள் மூன்று வேலை  மீன் குழம்புடன் சூப்பரான சாப்பாடு பொங்கி சாப்பிடலாம் என்று, அதையே கொஞ்சம் மாற்றி 40 ருபாய் என்று வைத்து கொள்ளலாம் இப்பொது.

சென்ற திங்கள் அன்று ஈரோடில் இருந்து சென்னைக்கு மதியம் கிளம்பும் கோவை எக்ஸ்பிரஸ் வண்டியில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் பயணித்து கொண்டு வந்தேன். நான் இருந்தது D10  அதாவது அந்த வண்டியில் முன்பதிவு செய்யப்பட்ட கடைசி பெட்டி அது, அதற்கு பிறகு முன்பதிவு செய்யாத பொது பெட்டி இருந்தது. வண்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பொது பெட்டியில் பயணம் செய்பவர்கள் எல்லாம் எல்லாம் எங்கள் பேட்டியில் ஏறி கொண்டார்கள். கூட்டம் ஒருபுறம் இருந்தாலும் டிக்கெட் பரிசோதகர் என்று ஒருவரும் வரவில்லை எங்கள் பகுதியில். நான் இதே வண்டியில் இரண்டாவது முறையாக செல்கிறேன் அதுவும் இதே பெட்டியில்,  இரண்டு முறையும் டிக்கெட் பரிசோதகர் கடைசி பெட்டிக்கு வரவே இல்லை. ஒரு பயணி தனது டிக்கெட் கன்பார்ம் ஆனதா என்று தெரிந்து கொள்ள அவர் இருந்த D2 பெட்டிக்கு சென்று வந்தார். ரயில்வே லாபகரமாக தான் ஓடுகிறது அதற்காக இவர்கள் வேலையை செய்யாமல் சம்பளம் வாகுவது எந்தவிதத்தில் நியாயம் ??? டிக்கெட் சிஸ்டமில் வேறு ஒரு மாறுதல் கொண்டு வரவேண்டும். அன்றைய பயணத்தில் டிக்கெட் பரிசோதகர் கண்டிப்பாக ஒவ்வொரு பயனியிடனும் டிக்கெட் பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என்று  இருந்தால் நன்றாக இருக்கும். 



இன்னைக்கு மேட்டர் இவ்வளவு தாங்க அடுத்த பதிவில் மனதில்பட்ட சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.  

 


With Love 
Romeo ;)

Tuesday, May 11, 2010

ஐ மிஸ் யூ :(


உறவுக்காரர் ஒருவரின் வீட்டு விசேஷத்துக்கு குடும்பத்துடன் கரூர் சென்று வந்தேன், வெள்ளிகிழமை இரவு அன்று மங்களூர் செல்லும் ரயில் வண்டியில் மனைவி மற்றும் மகன் ஸ்ரீஹீத் உடன் சென்றேன் . மூன்று மாதங்களுக்கு பிறகு தாய் வீட்டிற்கு செல்கிற சந்தோஷத்தை என்னவளில் முகத்தில்  தெரிந்த அந்த பளீர் வெளிச்சம் காட்டி குடுத்தது. இரவு 10 மணிக்கு கிளம்பியது வண்டி மகனை தூங்க வைக்கலாம் என்று நாங்கள் எடுத்த எல்லா அஸ்திரங்களும் அவன் தவிடு பொடியாக்கி வண்டியில் இருந்த அனைவரின் தூக்கத்தையும் ஒரு மணிநேரம் கேடுத்தான், அப்படி இப்படி என்று இரவு பன்னிரண்டு மணியளவில் உறங்க சென்றான். திரும்ப எழுந்துவிடுவானோ என்கிற பயத்தில் எனக்கு தூக்கமே வரவில்லை. உறக்கம் வரும் வரை கொஞ்சநேரம் புத்தகம் படிக்கலாம் என்று "என்பெயர் எஸ்கோபர்" எடுத்து வாசிக்க ஆரமித்தேன். விறு விறுப்பான நடையில் சுவாரசியமாக பத்து அத்தியாங்கள் படித்து முடித்தபிறகு உறங்க சென்றேன். எந்த தொந்தரவும் அதற்கு மேல் செய்யாமல் நல்லபடியாக அடுத்தநாள் காலையில் கண்விழித்தான்.  விசேஷம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் எல்லோருக்கும் சந்தோசம்.  ஞாயிறு இரவு அன்று வெகு நேரம் தூங்காமல் அழுதுகொண்டு இருந்தான், ஆள் ஆளுக்கு ஏதேதொ செய்து பார்த்தோம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. இரவு 11 மணியளவில் பைக்கில் ஒரு ரவுண்டு அடித்தோம் ந்ன்றாக தூங்கிவிட்டான். சக்சஸ் அவனை தூங்கவைக்க இன்னொரு உத்தி கண்டுபிடித்துவிட்டேன் ஹி ஹி ஹி . 


மனைவி, மகனை கோடை காலத்தை அங்கே கழிக்கும் படி சொல்லிவிட்டு தனியே திங்கள் அன்று ரயில் மூலம் சென்னை வந்து அடைந்தேன். வீட்டுக்கு வந்தால் ஏதோ வெறுமையான சூழ்நிலை நிலவியது. அப்பா அம்மா உடன் இருந்தாலும் மகனின் அழுகை, சந்தோஷ குரல் கேட்காமல் ரொம்ப தனிமையானாக உணர்ந்தேன்.

I MISS YOU DA  :(
   


/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

அலுவலகம் வந்தால் தினமலர் வலைதளத்துக்கு சென்று அன்றைய செய்திகளை படிப்பேன். இன்று இரவு அதே போன்று வலைதளத்தை மேய்ந்துகொண்டு இருந்தேன் மனதை கனக்க செய்த ஒரு வீடியோ பார்த்த போது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. உண்மையில் முன்பின் தெரியாத ஒருவருக்காக இதுவரை  அழுதது இல்லை, ஆனால் இன்று மனதில் ஏதோ ஒன்று அழுத்தியதால் கட்டுபடுத்த முடியாமல் அழுதுவிட்டேன் :((  

பரிதாப பச்சிளங்குழந்தை இறைவனடி சேர்ந்தது என்கிற இந்த வீடியோவை பார்த்ததும் ஏன் எதற்கு என்று தெரியாமல் கண்ணீர் வந்தது. 




இந்த ஐந்து மாத குழந்தை பற்றி வந்த முதல் ஊடக செய்தியில் இருந்து மருத்துவர்களால் ஏதேனும் நல்ல செய்தி வரும் என்று எதிர்ப்பார்த்தேன்  பச்.. தலையில் நீர் அதிக அளவில் இருந்ததால் உடல் உபாதைகள் காரணமாக அவன் இறந்துவிட்டான்.  ஏனோ இதை டைப் செய்யும் போது கூட அந்த பிஞ்சின் மிரண்டு மிரண்டு முழிக்கும் அந்த கண்களும் அந்த சிணுங்கலும் தான் நினைவுக்கு வந்து மனதை அழுத்துகிறது.  


I MISS YOU DEAR :((







With Tears
Romeo :(