Tuesday, February 1, 2011

மீண்டும் ஒரு காதல் கதை - சங்கர நாராயணன்

மீண்டும் ஒரு காதல் கதை - சங்கர நாராயணன் 


                                      

ஷரத்தா என்கிற பெண்ணை முக்கிய கதாபாத்திரமாக உலாவ விட்டு அவள் மூலம் கதையை நகர்த்தி செல்கிறார். இந்த ஷரத்தா எப்படி பட்ட பெண் என்று கிரகிக்க முடியவில்லை. முதல் அத்தியாத்தில் ஷங்கரை (கேபிள் சங்கரோ ????) முறைத்து கொண்டு சென்று விட்டு அடுத்த அத்தியாயத்தில் அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். தனது முடிவுகள் சரி என்றே நினைக்கும் ஒரு வித   மனப்பான்மை கொண்ட பெண்ணாக சித்தரித்து இருக்கிறார். வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு பிறகு வேண்டும் என்று கெஞ்சுவது. It's Like a Psycho Girl ???  அப்படி எல்லாம் சொல்லிவிட முடியாது, இவளை போல நிறைய பெண்கள் இருகிறார்கள் அவர்களை எல்லாம் Psycho என்றால் உலகத்தில் மனநல மருத்துவம் நல்ல தொரு வியாபராமாக இருக்கும். ரெண்டு கெட்டான் புத்தி உள்ளவள் என்று சொல்லலாம்.  மேல் தட்டு மோகத்தில் வாழும் ஒரு பெண்ணை நடமாடவிட்டு இருக்கிறார். 

சில பகுதிகளை படித்த பிறகு ஷங்கரின் கதாபாத்திரத்தை ஆசிரியர் கொஞ்சம் குழப்பி விட்டார் என்று சொல்லலாம். முந்தின அத்தியாயத்தில் தனது அம்மாவின் யோசனை படி ஒருவேளை சினிமாவுக்குள் செல முடியவில்லை என்றால் வேலைக்கு செல்ல தயாராக இருக்கிறான். ஆனால் அடுத்த அத்தியாயத்தில் ஷரத்தா அவனுக்கு அமெரிக்காவில் தனது அப்பாவின் கம்பெனிலே வேளை வாங்கி தருகிறேன் என்று சொல்லும் போது சினிமா கனவு தகர்ந்து போய்விடுகிறது என்று நினைக்கிறான். அதன் காரணமாக இருவரும் பிரிகிறார்கள்.  ஏன் இந்த முரண் ?? கதையை எப்படி முடிக்கலாம் என்கிற யோசனையில்  முந்தைய அத்தியாயத்தில் எழுதியதை மறந்துவிட்டாரா கேபிளார்!!!  

கேபிள் சங்கர் எங்க இருந்து தான் ஷரத்தா என்கிற பெயர் மாட்டுச்சோ !!!  சில பெயர்களை கேட்டால் மனதில் நமக்கு தெரியாமலே அது பதிந்து விடும். அது போல இந்த பெயரும் நன்றாக பதிந்துவிட்டது.. 

ஒரு நாவலை மீள் வாசிப்பு செய்யும் போது முதலில் படித்ததை விட அதை வேறு ஒரு கண்ணோட்டத்தில் வாசிக்க வாசிக்க கொஞ்சம் நெருக்கமாக, கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் (இருக்கலாம் / இல்லாமலும் போகலாம்). ஏற்கனவே கேபிளின்  வலைதளத்தில் மீண்டும் ஒரு காதல்  கதையை  படித்ததால்  இந்த குறு நாவலும் மீள் வாசிப்பு என்கிற கட்டத்தில் தான் அணுக முடிந்தது.   

மீண்டும் ஒரு காதல் கதை - something is missing don't know what's that !!! சிறுகதைகள்

 குறுநாவலை விட சிறுகதைகள் ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.  நீங்க இந்த மாதிரி  பண்ணதேயில்லையா சார் கதை நச்சுன்னு மனசுல உட்கார்ந்துவிட்டது. சிறுகதை தொகுப்பில் இது தான் ரொம்ப சின்ன கதை,  கதையின் தலைப்பை வைத்தே கடைசியில் முடித்து இருக்கிறார். படித்து முடித்தவுடன் நான் இந்த மாதிரி ஏதாவது செய்து இருக்கேனா என்று யோசித்து கொண்டு இருந்தேன். 

காக்கை, குண்டம்மா பாட்டி,  அப்துல்லா,சிவா,டேனியல், அப்பறம் தலைப்பு மறந்து போன மூன்று கதைகள் நன்றாக இருந்தது. 

சுத்தமா பிடிக்காதது முற்றுபுள்ளி என்கிற கதைதான். கள்ளகாதல் பற்றி இவ்வளவு வழிச்சு எழுதி இருக்க வேண்டாம். படிக்க படிக்க இந்த கதை தேவையில்லாதது போல தோன்றியது. 


கிளைமாக்ஸ்

கேபிள் ஷங்கருக்கு சிறுகதைகள் நன்றாக எழுத வருகிறது அதனால் இனி இந்த மாதிரியான கதைகளை பதிவில் எழுதாமல் சிறுகதை தொகுப்பையோ அல்லது  நாவலையோ தனியாக வெளியிட்டால் நல்லது. ஒவ்வொரு கதையையும்  படிக்கும் போது ஏற்கனவே படித்ததாக  இருந்ததால் மீள் வாசிப்பு  என்கிற அளவில் தான் எல்லாவற்றையும் அணுக வேண்டி இருக்கிறது. புதிதாக ஏதும் இல்லை என்பதால் சுவாரசியம் அவ்வளவாக இல்லை. அதுவும் இல்லாமல் அவரின் வலைத்தளத்தில் இந்த கதைகள் இன்னும் இருப்பதால் எதற்கு காசு குடுத்து வாங்கி படிக்க வேண்டும் என்று நினைப்பு வருவதை நிறுத்த முடியவில்லை. 

"ழ" பதிப்பகம் சார்பாக கே.ஆர்.பி. செந்தில் பதிப்பாளர் என்கிற புது அவதாரத்தை எடுத்து உள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். புத்தகத்தின் முகப்பு நன்றாக உள்ளது அதே போல பைண்டிங் நன்றாக இருக்கிறது. புத்தகத்துக்கு 90 ருபாய் என்கிற விலை வைத்தது எதனால் என்று தெரியவில்லை.   விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.  

அவசரம் அவசரமாக ப்ரூப் பார்க்காமல் புத்தகத்தை அச்சிட்டு இருகிறார்கள் என்று ஈஸியாக தெரிந்து கொள்வதற்கு நிறைய இடங்கள் வாலண்டியராக அதுவாகவே  கண்ணில்படுகிறது . 

உதாரணத்துக்கு 

மீண்டும் ஒரு காதல் கதை - அத்தியாயம் - 3 பத்தி - இரண்டு 

இந்த பத்தியில் முதல் வரியில் ஷங்கர் பேசும் வசனத்தை தொடர்ந்து மீரா பேசுவதை போல வரும். ஆனால் அச்சிட்டு இருக்கும் வரியை படித்தால் ரொம்ப குழப்பமாக இருக்கிறது. யார் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை மீண்டும் ஒரு முறை படித்த பிறகுதான் புரிந்தது. (") இந்த மாதிரியான குறியீடுகள் தான் வசனத்தை தனியாக எடுத்து காட்டும். புத்தகத்தில் நிறைய இடத்தில் (") இந்தகுறியீடு மிஸ்ஸிங். அதனால் சில இடத்தில் இந்த குழப்பத்தை ஏற்று கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு ஏற்ப்படுகிறது. 

"ழ" பதிப்பகத்தின் அடுத்த வெளியீடாக கே.ஆர்.பி. செந்தில் அவர்களின் பணம் வரபோகிறது என்று கடைசி பக்கத்தில் அறிவிப்பு செய்து இருக்கிறார், புத்தக ஆசிரியராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  பணம்  ஏற்கனவே இவரின் பதிவில் வலையேற்றம் செய்தது தான் என்பதால் வாங்கலாமா வேண்டாமா என்று நினைத்து கொண்டு இருக்கிறேன், முடிந்தவரை பதிவில் இல்லாததை புத்தகத்தில் கொண்டு வர முயற்சி செய்யவும். அதே போல ஒன்றுக்கு மூன்று முறை ப்ரூப் பாருங்கள்.


எந்த ஒரு தொடர்கதையோ அல்லது சிறுகதையோ முதலில் வாசிக்கும் போது தான் நன்றாக இருக்கும். அடுத்து என்ன அடுத்து என்ன என்கிற ஆவலை தூண்டும்.  மீள் வாசிப்பு செய்யும்  போது அதில் இருக்கும் நிறை குறைகள் தான் முக்கால் வாசி கண்களில் தென்படும்  அதை  போல இந்த புத்தகத்தை படிக்கும் போது எங்கே நிறை எங்கே குறை என்று மனதில் வந்து அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருந்தது. இதை தவிர்க்க நினைத்தாலும்  முடியவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.  -- 
With Love
Romeo ;)

7 comments:

 1. நண்பா
  விமர்சனம் அருமை
  நல்ல முன்னேற்றம் தெரிகிறது,கலக்குங்க

  ReplyDelete
 2. உங்கள் விமர்சனமும் கருத்துக்களும் நன்றாக தொகுக்கப்பட்டு இருக்கிறது.

  ReplyDelete
 3. நன்று... கேபிள்ஜி பின்னூட்டத்திற்காக follow up...

  ReplyDelete
 4. இதுவரை புத்தகமாய் வந்த எந்த கதைகளும் இணையத்தில் கிடையாது.. எனவே.. காசு கொடுத்து வாங்குவது தவறில்லை..:))

  கேபிள் சங்கர் (சங்கர் நாராயண்)

  ReplyDelete
 5. //சில பகுதிகளை படித்த பிறகு ஷங்கரின் கதாபாத்திரத்தை ஆசிரியர் கொஞ்சம் குழப்பி விட்டார் என்று சொல்லலாம். முந்தின அத்தியாயத்தில் தனது அம்மாவின் யோசனை படி ஒருவேளை சினிமாவுக்குள் செல முடியவில்லை என்றால் வேலைக்கு செல்ல தயாராக இருக்கிறான். ஆனால் அடுத்த அத்தியாயத்தில் ஷரத்தா அவனுக்கு அமெரிக்காவில் தனது அப்பாவின் கம்பெனிலே வேளை வாங்கி தருகிறேன் என்று சொல்லும் போது சினிமா கனவு தகர்ந்து போய்விடுகிறது என்று நினைக்கிறான். அதன் காரணமாக இருவரும் பிரிகிறார்கள். ஏன் இந்த முரண் ?? கதையை எப்படி முடிக்கலாம் என்கிற யோசனையில் முந்தைய அத்தியாயத்தில் எழுதியதை மறந்துவிட்டாரா கேபிளார்!!!
  //

  ரோமியோ.. நன்றாக கவனித்தால் ஷங்கர் இங்கு தான் வேலை செய்து கொண்டே சினிமாவுக்கு முயற்சி செய்வதாய் சொல்லியிருப்பேன். ஆனால் அமெரிக்கா போய்விட்டால்.. திரும்ப முடியாது என்ற நம்பிக்கையில் தான் வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பான். அது மட்டுமில்லாது.. முரண் தானே வாழ்க்கை..

  சங்கர்நாராயண்

  ReplyDelete
 6. நன்றி.. உங்களது விமர்சனத்துக்காகவும்.. எனக்கு சிறுகதை நன்றாக எழுத வருகிறது என்பதை குறிப்பிட்டு சொல்லி பாராட்டியமைக்காகவும்..:))

  சங்கர் நாராயண்(கேபிள் சங்கர்)

  ReplyDelete
 7. மிக்க நன்றி தலைவரே..

  'பணம்' தொடர் என் வலைபக்கத்தில் வந்தது கொஞ்சமே, புத்தகத்தில் நிறைய விசயங்களை சேர்த்திருக்கிறேன்,,,

  ReplyDelete