Tuesday, May 11, 2010

ஐ மிஸ் யூ :(


உறவுக்காரர் ஒருவரின் வீட்டு விசேஷத்துக்கு குடும்பத்துடன் கரூர் சென்று வந்தேன், வெள்ளிகிழமை இரவு அன்று மங்களூர் செல்லும் ரயில் வண்டியில் மனைவி மற்றும் மகன் ஸ்ரீஹீத் உடன் சென்றேன் . மூன்று மாதங்களுக்கு பிறகு தாய் வீட்டிற்கு செல்கிற சந்தோஷத்தை என்னவளில் முகத்தில்  தெரிந்த அந்த பளீர் வெளிச்சம் காட்டி குடுத்தது. இரவு 10 மணிக்கு கிளம்பியது வண்டி மகனை தூங்க வைக்கலாம் என்று நாங்கள் எடுத்த எல்லா அஸ்திரங்களும் அவன் தவிடு பொடியாக்கி வண்டியில் இருந்த அனைவரின் தூக்கத்தையும் ஒரு மணிநேரம் கேடுத்தான், அப்படி இப்படி என்று இரவு பன்னிரண்டு மணியளவில் உறங்க சென்றான். திரும்ப எழுந்துவிடுவானோ என்கிற பயத்தில் எனக்கு தூக்கமே வரவில்லை. உறக்கம் வரும் வரை கொஞ்சநேரம் புத்தகம் படிக்கலாம் என்று "என்பெயர் எஸ்கோபர்" எடுத்து வாசிக்க ஆரமித்தேன். விறு விறுப்பான நடையில் சுவாரசியமாக பத்து அத்தியாங்கள் படித்து முடித்தபிறகு உறங்க சென்றேன். எந்த தொந்தரவும் அதற்கு மேல் செய்யாமல் நல்லபடியாக அடுத்தநாள் காலையில் கண்விழித்தான்.  விசேஷம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் எல்லோருக்கும் சந்தோசம்.  ஞாயிறு இரவு அன்று வெகு நேரம் தூங்காமல் அழுதுகொண்டு இருந்தான், ஆள் ஆளுக்கு ஏதேதொ செய்து பார்த்தோம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. இரவு 11 மணியளவில் பைக்கில் ஒரு ரவுண்டு அடித்தோம் ந்ன்றாக தூங்கிவிட்டான். சக்சஸ் அவனை தூங்கவைக்க இன்னொரு உத்தி கண்டுபிடித்துவிட்டேன் ஹி ஹி ஹி . 


மனைவி, மகனை கோடை காலத்தை அங்கே கழிக்கும் படி சொல்லிவிட்டு தனியே திங்கள் அன்று ரயில் மூலம் சென்னை வந்து அடைந்தேன். வீட்டுக்கு வந்தால் ஏதோ வெறுமையான சூழ்நிலை நிலவியது. அப்பா அம்மா உடன் இருந்தாலும் மகனின் அழுகை, சந்தோஷ குரல் கேட்காமல் ரொம்ப தனிமையானாக உணர்ந்தேன்.

I MISS YOU DA  :(
   


/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

அலுவலகம் வந்தால் தினமலர் வலைதளத்துக்கு சென்று அன்றைய செய்திகளை படிப்பேன். இன்று இரவு அதே போன்று வலைதளத்தை மேய்ந்துகொண்டு இருந்தேன் மனதை கனக்க செய்த ஒரு வீடியோ பார்த்த போது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. உண்மையில் முன்பின் தெரியாத ஒருவருக்காக இதுவரை  அழுதது இல்லை, ஆனால் இன்று மனதில் ஏதோ ஒன்று அழுத்தியதால் கட்டுபடுத்த முடியாமல் அழுதுவிட்டேன் :((  

பரிதாப பச்சிளங்குழந்தை இறைவனடி சேர்ந்தது என்கிற இந்த வீடியோவை பார்த்ததும் ஏன் எதற்கு என்று தெரியாமல் கண்ணீர் வந்தது. 
இந்த ஐந்து மாத குழந்தை பற்றி வந்த முதல் ஊடக செய்தியில் இருந்து மருத்துவர்களால் ஏதேனும் நல்ல செய்தி வரும் என்று எதிர்ப்பார்த்தேன்  பச்.. தலையில் நீர் அதிக அளவில் இருந்ததால் உடல் உபாதைகள் காரணமாக அவன் இறந்துவிட்டான்.  ஏனோ இதை டைப் செய்யும் போது கூட அந்த பிஞ்சின் மிரண்டு மிரண்டு முழிக்கும் அந்த கண்களும் அந்த சிணுங்கலும் தான் நினைவுக்கு வந்து மனதை அழுத்துகிறது.  


I MISS YOU DEAR :((With Tears
Romeo :(

6 comments:

 1. ம்ம்ம்ம்...... பேச வார்த்தையே வரவில்லை.

  ReplyDelete
 2. //I MISS HIM YOU DA :(//

  "I MISS YOU DA" - இது தான் கரக்ட். தயவு செய்து சரி பண்ணுங்க.

  ReplyDelete
 3. :(
  கேபிள் சங்கர்

  ReplyDelete
 4. சில‌ விச‌ய‌ங்க‌ள் இப்ப‌டித்தான்...

  ReplyDelete
 5. மகன் அழுதால்,விசிலடியுங்கள்,(தெரியுமா/)அல்லது தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டோ,ஆட்டுக்குட்டியை அணைத்துக்கொள்வதுபோலோ வேகமாக அங்குமிங்கும் நடங்கள்,இல்லை நீங்கள் ஓவென கத்துங்கள்.விசிறியெடுத்து வீசுங்கள்,இதெல்லாம் மீறினால் நான் பைக்கில் வைத்து ரவுண்ட் அடிப்பேன்.

  =============
  உண்மையிலேயே நானும் அந்த இளம்பிஞ்சுக்காக பிரார்த்திக்கிறேன்.புத்திரசோகம் மிகவும் கொடியது.

  ReplyDelete
 6. @Chitra
  எழுத முடியாமல் எழுதினேன்

  @என். உலகநாதன்
  கரெக்ட் பண்ணிட்டேன் சார்

  @கேபிள் சங்கர்
  :((

  @நாடோடி
  அது தான் ஏன் என்று தெரியவில்லை ..

  @கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

  நீங்க சொல்லியதை எல்லாம் நான் செய்து கொண்டு இருக்கிறேன் பாஸ். அது எல்லாம் கொஞ்ச நாளுக்கு தான் அப்பறம் அது எல்லாம் அவனுக்கு பழகிடும்.. அப்பறம் அடுத்த டெக்னிக் கண்டு புடிக்கணும்

  ReplyDelete