Thursday, July 15, 2010

கொஞ்சம் விளக்கம் + சில பகிர்தல்கள் = 10/07/2010

  முதலில் விளக்கிவிடுகிறேன் எனது முந்தைய பதிவான ஏழாம் உலகம் போட்டியின் முடிவும் இன்னும் சில புத்தகங்களும் பற்றி சிலருக்கு சந்தேகம் வந்து இருக்கலாம். நான் ஜெமோவை ஆதரிக்கும் கட்சியை சார்ந்தனா என்று. உங்களுக்கு சந்தேகம் வருவதற்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு காரணமாக இருக்கலாம்.  சந்தேகம் உள்ளவர்களுக்கு எனது பதில் தான் இந்த விளக்கம். 

எழுதவே வேண்டாம் என்று முடிவு செய்து ஒரு மாதம் எழுதாமல் இருந்தேன், பிறகு எழுத ஆரமித்த போது உருப்படியா எழுதணும் என்று மட்டுமே குறிகோளுடன் எழுத ஆரமித்தேன். உருப்படினா என்ன ?? புத்தகங்கள் தான், புத்தகங்களை பற்றி அதிகமாக எழுதவேண்டும் என்கிற குறிகோளுடன் எழுத ஆரமித்தேன். நான் மட்டும் படித்தால் போதாது என்னை போல வாசிக்க ஆர்வம் உள்ள அன்பர்களும் வாசிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஒரு நொடியில் வந்தது. நான் அனைத்து எழுத்தாளர்களின் புத்தகத்தை படிப்பதில் ஆவல் உள்ளவன். எனது சுயவிருபத்தினால் தான் புத்தகங்களை பரிசளிக்க முன்வந்தேன் என்னுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சேர்ந்த அன்பர்கள் சிலரும் புத்தகங்களை பரிசளிக்க முன்வந்து உள்ளார்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஜெயமோகன் எழுதிய புத்தகத்தை மட்டும் பரிசளிக்கமாட்டார்கள், தமிழில் வெளிவந்த இலக்கிய புத்தகங்கள் எதுவாயினும் நீங்கள் விருப்பப்படும் புத்தகத்தை பரிசளிக்க தயாராக உள்ளார்கள். இதுவும் ஒருவித பகிர்தலே. புத்தகம் வேண்டும் என்பவர்கள் எனக்கு ஈமெயில் செய்யவும்.

எனது முகவரி romeoboy.81@gmail.com
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
  எங்க ஏரியா பற்றி  சொல்லணும்ன்னு ரொம்ப நாள் ஆசை. நான் குடியிருப்பது திருவொற்றியூர் பகுதியில் அதாவது வடசென்னை.  எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தான் மாநில மீன்வள அமைச்சர் கே.பி.பி.சாமி. திருவொற்றியூர் நகராட்சியின் தலைவர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர். ரைட் மேட்டர்க்கு வரேன், நகராட்சி சார்பா பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வந்துகொண்டு இருக்கிறது, ஒரு சைடுல இந்த வேலை என்றால் மறுபுறம் ரோடு ரொம்ப மோசம். நீங்க பஸ், ஆட்டோ, டூவிலர் எதில் வந்தாலும் திக்கி திணறி ஒரு வழியாகி விடுவிங்க.  விம்கோ பகுதியில் இருந்து எர்ணாவூர் மேம்பாலம் வரை பஸ்ல போய்ப்பாருங்க சி - சா மாதிரி ரைட் லெப்ட்ன்னு செம ஆட்டம் ஆடும். உங்களுக்கு வாய்வு பிடிப்பு இருந்தா ஒரு தடவை இந்த ரோட்ல வந்து போங்க, அதே மாதிரி இடுப்பு வலிருந்தாலும் உடனே நிவாரணம் கிடைக்கும் அல்லது வலி அதிகமாகும். ஷேர் ஆட்டோல போனா உங்களுக்கு  எமலோகம் எப்படி இருக்கும்ன்னு காமிப்பாங்க. டூவிலர் ஓட்டுன பசங்க எல்லாம் பேட்ச் எடுத்துக்கிட்டு பல்சர் வண்டியை ஓட்டிட்டு போற மாதிரி ஆட்டோவை ஒட்டிட்டு போவாங்க. எல்லா பஸ் ஸ்டாண்ட்லயும் டிராபிக் அதிகமா இருக்குனா இவ்வங்களும்  ஒரு காரணம். இவர்களை இப்படி திட்டினாலும் இரவு நேரத்தில் இவர்களின் தயவு தேவைப்படுகிறது என்னவோ உண்மை. கடைசி பஸ் சென்றாலும் கவலை இல்லாமல் இவர்களை நம்பி வரலாம்.     திருவொற்றியூர் ரோட்டை 60 அடி ரோடா அகலப்படுத்த எடுத்த முயற்சி எல்லாம் வீண் என்பது போல தான் இருக்கு. ஆக்கிரமிப்பை அகற்றுகிறேன் பேர்வழி என்று எல்லாத்தையும் இடிச்சு தூக்கினாங்க. கொஞ்ச நாளில் அந்த இடத்தை திரும்ப ஆக்கிரமிப்பு செய்ய ஆரமிச்சிட்டாங்க. திருவொற்றியூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ஒரு பொட்டிக்கடை இருக்கு அந்த கடை மட்டும் கொஞ்சம் போல இடிச்சிவிட்டு மத்ததை எல்லாம் துக்கிட்டங்க. எண்ணூர், மீஞ்சூர் போக மக்கள் நிக்கும் இடத்திற்கு ஒரு நிழல் குடை இல்ல. நான் ஸ்கூல் படிக்கும் போது ஒண்ணு இருந்துச்சு இப்போ அந்த இடத்தில ஒரு இளநிர் கடை  இருக்கு.  அகலப்படுத்தின ரோடுல எதாவது  ஒரு லாரி நின்னுட்டு இருக்கும். இரவு நேரத்தில் கன்டைனர் லாரி சாரமாரியா போகும் கரணம் தப்பினால் மரணம் என்பது போல பல வண்டி பாடி எல்லாம் இத்து போய் இருக்கும்,    மக்களுக்கு உபயோகமா இருக்குமோ இல்லையோ லாரிகாரங்களுக்கு நல்ல உபயோகமா இருக்கு இந்த ரோடு. கான்ட்ரக்ட் எடுத்த பினாமி சுனாமி போல 8 கால் பாய்ச்சலில் பணத்தை கறந்து கொண்டு இருகிறார். 

அடுத்த தடவை எங்க ஏரியால நடக்கும் அரசியல் கூத்தை சொல்லுறேன்.  

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

மதராஸ்பட்டினம் படத்தில் வரும் ஆருயிரே ஆருயிரே பாட்டை கேட்கும் போது ஏதோ செய்யுது. சோனு நிகம் குரலில் வரும் அந்த சோகம் .. எப்படின்னு சொல்ல தெரியல அவ்வளவு புடிச்சி இருக்கு.இப்பொது எல்லாம் அந்த பாடலை தான் முனுமுனுத்து கொண்டு இருக்கிறேன். 

அதே போல வம்சம் படத்தில் மன்னாதி மன்னர் பாட்டில் நடு நடுவில் வரும் பரம்பரை பெயர்கள் எல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. புதிய இசை அமைப்பாளர் தாஜ்நூர் வித்தியாசமான கிராமிய மனம் விசும் பாடலை அளித்துள்ளார். இரண்டு மூன்று பாடல்கள் தேரும். 

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

வலைபதிவில் படிக்கும் சில பதிவுகள் எல்லாம் அவ்வளவு அருமையா இருக்கும், அகநாழிகை வாசுதேவன் அவர்கள் எழுதி உயிரோசையில் வெளிவந்த ஒரு சுய மரணம் என்கிற சிறுகதை ரொம்ப அருமையா இருந்துச்சு. சில சிறுகதைகள் படிக்கும் போதே அதனுள் நம்மை இழுத்து செல்லவேண்டும். நானும் சிறுகதை எழுதுறேன் என்று உசுரை வாங்கும் அன்பர்கள் கண்டிப்பா இந்த கதையை படிங்க சின்ன கருவை வைத்து எப்படி ஒரு சிறுகதையை இவ்வளவு சுவாரசியமா உருவாகலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். படித்து முடித்ததும் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை வாசு சார் , சிம்ப்ளி சூப்பர் சார்


கிழக்கு பதிப்பக உருமையாளர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் வலைப்பூவில் படித்த புத்தகமா, விஷப் புகையா? மற்றும் அத்தனை ஆர்டர்களும் உனக்குத்தான்  இந்த பதிவைகளை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.  சுகுமார் தாஸ் USB Publishers and Distributors பதிப்பகத்தில் வேலை செய்தபோது நடந்த சம்பவங்களை கொண்டது. ரொம்ப நாட்களுக்கு பிறகு இவ்வளவு வேகமாக, ரொம்ப சுவாரசியமான பதிவை படித்து, ஒரு திரில்லர் கதை போல அவ்வளவு வேகம். சூப்பர் சார்

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

ஜூனியர் நல்லா தவழ ஆரமித்துவிட்டார், கீழே எந்த பொருளையும் வைக்க பயமா இருக்கு. பயபுள்ள எதுகிடைச்சாலும் வாயில் எடுத்து வச்சிகுறான். போன வாரத்தில் ஒருநாள் ஆபீஸ்க்கு கிளம்பி வீட்டைவிட்டு வெளியே வந்தேன், கிய முயானுன்னு சவுண்ட் குடுத்தே ஜூனியர் பின்னாடி தவழ்ந்து  கொண்டு வந்தான், வாடா ராஜான்னு தூக்கி கொஞ்சினேன், கரெக்ட்டா ஷர்ட் பாக்கெட்ல சொய்ய்ய்ன்னு சுஸு போய்ட்டான். ஐயையோ டிரஸ் நனைஞ்சிடுமேன்னு கீழே இறக்கி விடலாம்ன்னு  பார்த்தா பக்கத்தில் இருந்த வீட்டுகாரமா கயா முயான்னு கத்துறாங்க. இப்போ கீழே இறக்கி விட்டா அவன் அப்படியே நிறுத்திடுவான் ஆனது ஆகிடுச்சு இன்னும் கொஞ்சம் தான் முடிஞ்சிடும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லுறாங்க.  இந்த நேரத்துல டிவில உன்குத்தமா என்குத்தமான்னு பாட்டு வேற பாடுச்சு.. ஒரு டெரர் பார்வை பார்த்தா பொக்கைவாய் கொண்டு அவ்வளவு அழகா சிரிக்கிறான்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

  அடுத்த மாத விமர்சனம்+பரிசு ஜீரோ டிகிரி. சாருவின் நாவல்களில் மிக முக்கியமான புத்தகம்.With Love
Romeo ;)10 comments:

 1. மதராஸ்பட்டிணம் பாட்டு இன்னும் கேக்கலை. கேட்டு பாக்கறேன்

  ReplyDelete
 2. கொஞ்சுறதுக்கு தூக்குவேன் சுசூன்னா இறக்குவேன்னா எப்புடி. குதிரை கொள்ளுக்கு வாய் திறக்கும் கடிவாளம்னா கடிச்சுக்கும்பாங்களே அப்புடியா:))

  ReplyDelete
 3. அப்ப அடுத்த மாசத்துக்கு வெயிட்டிங் பண்ண ஆரம்பிச்சாச்சி ;-) ஜூப்பரு ;-)

  ReplyDelete
 4. வடசென்னை எப்போதுமே இப்படித்தான்.. விடிவே இல்லை போல! கடல் அரிப்பு எப்படி இருக்கிறது ரோமி?

  ஹி ஹி சுசூ செம சூடு! :))

  ReplyDelete
 5. ஐயையோ டிரஸ் நனைஞ்சிடுமேன்னு கீழே இறக்கி விடலாம்ன்னு பார்த்தா பக்கத்தில் இருந்த வீட்டுகாரமா கயா முயான்னு கத்துறாங்க. இப்போ கீழே இறக்கி விட்டா அவன் அப்படியே நிறுத்திடுவான் ஆனது ஆகிடுச்சு இன்னும் கொஞ்சம் தான் முடிஞ்சிடும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லுறாங்க"//

  :))))

  ReplyDelete
 6. உங்க‌ ஏரியா ப‌க்க‌ம் அடிக்க‌டி டுவீல‌ரில் வ‌ந்திருக்கிறேன்... அசோக் லைல‌ண்ட்க்கு வ‌ருவேன்... அந்த‌ பால‌ம் வேலை முடிஞ்சுதா?...

  ReplyDelete
 7. வம்சம் பாடல்களில் இசைமைப்பாளர் நூர் ரஹ்மானின் உதவியாளராமே, நல்லாயிருக்கு நானும் கேட்டேன்

  அப்பரம் ஜீனியர் ரோமியோ தவழ்வதையும்,பொக்க வாயையும் ரசித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி :))

  ReplyDelete
 8. சின்ன அம்மிணி said...
  மதராஸ்பட்டிணம் பாட்டு கேட்டீங்களா

  T.V.ராதாகிருஷ்ணன் said...
  ப்ரெசென்ட் மட்டும் சொன்ன போதாது சார். என்ன புக் வேணும் ??

  வானம்பாடிகள் said...
  குதிரை கொள்ளுக்கு வாய் திறக்கும் கடிவாளம்னா கடிச்சுக்கும்பாங்களே அப்புடியா:))

  ஹி ஹி ஹி ,, பழமொழி என்னவோ ஒத்து போற மாதிரி இருக்கு தல.

  கருந்தேள் கண்ணாயிரம்
  விமர்சனம் எப்படின்னு சொல்லுங்க தல .

  【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

  கடல் அரிப்பு கொஞ்சம் பரவால. எண்ணூர் ஏரியா தான் ரொம்ப கஷ்டப்படுத்து.


  ஸ்ரீராம். said...
  என்ன சார் ஸ்மைலி மட்டும் போடு எஸ்கேப் ஆகிடீங்க.

  நாடோடி said...
  கலைஞர் வந்து தொறந்து ஒரு வருஷம் ஆகபோது பாஸ் ..

  ReplyDelete
 9. ஜில்தண்ணி - யோகேஷ்

  நானும் கேள்விப்பட்டேன்.. ஒரு படத்தை வைத்து எந்த முடிவையும் சொல்லமுடியாது .. பார்க்கலாம் .. ஜூனியர் வாழ்த்துக்கு நன்றி :)

  ReplyDelete