Saturday, August 21, 2010

சங்கதிகள் - 21-08-10

பதிவரும் பதிவுலக மார்கண்டேயன் நம்ம சித்தப்பு, பெரியப்பு, மற்றவர்களுக்கு பெரிய ஆப்பு வைக்கும் தல அருண் என்கிற வால்பையனுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கு எனது வாழ்த்துக்கள். 

அழுவாச்சி.. 


       பழைய மாதிரி மற்றவர்கள் பதிவுகளுக்கு பின்னுடம்யிட முடியாதபடி ஆபீஸ்சில் ப்ளாக் Block பண்ணிட்டாங்க :((, இப்பொது எல்லா பதிவுகளையும் கூகுள் ரீடரில் படித்துகொண்டு இருக்கிறேன். பின்னுடம் இடமுடியாமல் இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது, நண்பர்கள் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம். உங்களின் பதிவுகள் எதையும் மிஸ் பண்ணாமல் படிக்கிறேன். முடிந்தவரை மெயில் முலமாக எனது பின்னுடத்தை அனுப்பிவிடுகிறேன், வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கலாம் என்று தங்கமணியுடன் பேசி கொண்டு இருந்தேன். சென்ற முறை கரூர் சென்று இருந்த போது மச்சான் கம்ப்யூட்டரில் நான்கு மணிநேரம் இடைவிடாமல் கேம்ஸ் விளையாடியதை பார்த்ததன் விளைவாக தங்கமணி கம்ப்யூட்டர்க்கு தடா போட்டுவிட்டார். ஜூனியருக்கு எப்போது கம்ப்யூட்டர் கற்றுகொள்வாரோ அப்போது வாங்கலாம் என்று தங்கமணி சட்டம் இயற்றியுள்ளார் :(. தாஜா வேலை நடந்துகொண்டு இருக்கிறது :D .
எச்சரிக்கை..
     HIV என்கிற பாதிப்பால் உலகநாடுகள்  அலறிக்கொண்டு இருக்கிறது, சமிபத்தில் பதிவர் சங்கவியின் இந்த பதிவை படித்ததும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. தேனீயோ இல்லை அதை சுற்றிய பகுதியிலோ  இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்தில் மணப்பெண்,மணமகன் இருவரும் கண்டிப்பாக HIV  பரிசோதனை செய்து அந்த ரிப்போர்ட் தந்தால் தான் அவர்கள் அந்த மண்டபத்தில் திருமணம் செய்ய அனுமதிப்பார்கள். ஒரு கல்யாணத்தின் கடைசி நேரத்தில் மணமகனுக்கு HIV பதிப்பு இருந்ததை தெரிந்துகொண்டு அவர்களே அந்த கல்யாணத்தை நிறுத்தி வைத்தார்கள் என்கிற செய்தி படித்தேன். இவர்களை போல இன்னும் எத்தனை கல்யாண மண்டபங்கள் இந்த பரிசோதனை செய்ய சொல்லி கட்டாயபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த காலகட்டதில் இவை ரொம்ப முக்கியம் என்று நிறையபேருக்கு தெரியவில்லை. பெண்ணுக்கு மகனை பிடித்து இருந்தால் சரி கல்யாணத்துக்கு நாள் குறித்துவிடுகிறார்கள். இன்னும் எவ்வளவு விழிப்புணர்வு செய்யவேண்டும் என்று தெரியவில்லை. பதிவுலகில் வெறும் பின்னுடம்யிடும் ஒரு நண்பர் எப்பொழுதும் பெண்களை பற்றியே பேசுவார். அவருடன் சாட் செய்யும் போது எல்லாம் இந்த வாரம் இந்த பெண்ணுடன் இருந்தேன் என்று சொல்லி தனது ஆண்மையை வெளிக்காட்ட ஆசைப்படுவார். அவரிடம் ஒருநாள் இந்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னேன், கொஞ்ச நேரம் அவரிடம் இருந்து எந்த பதிலும் காணோம். இன்றைய காலகட்டதில் யாரையும் நம்புவதற்குயில்லை, உடலுறவு  என்பது ATMமில் அல்லது கோவில் கருவறையில்  கூட நடக்கும் என்பதற்கு சாட்சியாக காஞ்சிபுரத்தில் எடுத்த வீடியோவே போதும். பிள்ளைகளை நாம் கண்கொத்தி பாம்பாக பார்த்துகொண்டு இருந்தாலும் அவன் MMSசில் வரும் ஆபாச காட்சியை toliet கூட மறைந்து இருந்து பார்க்கலாம். டெக்னாலஜி வேகம் என்ன என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அட்வைஸ் பண்ணுவதை விட்டுவிட்டு அவர்கள் வழியில் சென்றால் ஓரளவு அவர்களை நாம் கடுப்படுதலாம். அது எப்படி என்றால் PLAY SAFE

இதை சிலர் எதிர்க்கலாம் அவர்கள் எல்லாம் கொஞ்சம் பிரக்டிகளா  சிந்திச்சிப்பாருங்க கண்டிப்பா இதுக்கு ஒத்துவருவிங்க.
எரிச்சல்...

    ஆகஸ்ட்15 சுதந்திர தினம் அன்று சென்னையில் நான் பார்த்த சில சுவரொட்டிகள்  ரொம்ப கஷ்டப்படுத்தியது. சுதந்திர தினத்தை புறகணிப்போம் என்று சில பதிவர்கள் புரட்சி செய்வதாக எழுதி இருந்தார்கள், உங்கள் தாயை வெறுப்பதை போன்று இருக்கிறது இவர்கள் செயல்கள். எனக்கு இங்கு வாழவே பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு ஏன் இங்கு இருக்கவேண்டும் ?? உங்களுக்கு அரசியல்வாதி தானே பிரச்சனை இந்த நாடு அல்லவே. இந்த சுதந்திரத்துக்காக எத்தனை தியாகங்கள் எத்தனை பேர் செய்திருப்பார்கள் என்று தெரிந்தும் கூட சுதந்திர தினத்தை அசிங்கப்படுத்துவது உங்கள் தாயை கீழே தள்ளி அவள் நெஞ்சில் மேதிப்பதை போன்றது. போராட்டம் + திண்டாட்டம் ...

     போன புதன்கிழமை NSC Bose ரோடு சுத்தமா பிளாக், சட்ட கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸ்காரர்கள் அடித்து நொறுக்கிவிட அவர் தற்கொலைக்கு முயல இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு கிட்டதட்ட ஆறு மணிநேரம் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தார்கள் சட்ட கல்லூரி மாணவர்கள் 400 பேர். உண்மையில் இவர்களின் ஒற்றுமை நினைத்தால் ரொம்ப மலைப்பாக இருக்கிறது. சென்னையில் ஒரு வக்கீல் தாக்கப்பட்டால் கோவையில் போராட்டம் செய்கிறார்கள். இந்த ஒற்றுமை வேறு எந்த துறை சார்ந்தவர்களுக்கும் இருப்பது இல்லை. ஆனால் எதற்கு எடுத்தாலும் மறியல் என்று குதித்தால் என்ன பயன்?? போலீஸ்க்கும் உங்களுக்கும் பிரச்சனை என்றால் நாங்கள் தான் நடுவில் கிடந்தது அல்லாடுகிறோம். கொஞ்சம் எங்களையும் நினைத்துபாருங்கள் உங்களின் கோரிக்கைகள், போராட்டங்கள் எல்லாம் சரி ஆனால் அதன் விளைவுகளில் நாங்களும் அல்லவா அவஸ்தைப்படுகிறோம். போலீஸ் செய்த செயலுக்கு மக்கள் ஏன் பலிகாடு ஆகவேண்டும் தோழர்களே.  கொஞ்சம் சிந்திங்க நாங்களும் மனிதர்கள் தானே எங்களும் எத்தனை வேலை பளு இருக்கும். எங்களை போன்ற நடுத்தரவர்கத்துக்கு பஸ் தான் எல்லாம் அதையும் நீங்கள் நிறுத்தி வைத்தால் எங்கள் நிலைமை !!!பாட்டு...

   காதல் சொல்ல வந்தேன் படத்தில் விஜய் யேசுதாஸ் பாடி இருக்கும் என்ன என்ன என்ன ஆகிறேன் என்கிற பாடல் அருமையா இருக்கு. யுவனின் அற்புதமான மெலோடி.
எந்திரன் படத்தில் இடம் பெற்று இருக்கும் இரும்பிளே ஒரு இருதயம் பாடலும் சூப்பர்.. நல்ல டான்ஸ் பிட், தலைவர் இந்த பாட்டுக்கு எப்படி டான்ஸ் பண்ணி இருக்காருன்னு பார்க்க ஆவளா இருக்கு.


-

புத்தகம்..

       விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்யிடம் இருந்து நேற்று  ஜெமோவின் காடு புத்தகம் வந்தடைந்தது. 450+ பக்கங்கள் உள்ளது இன்னும் படிக்க ஆரமிக்கவில்லை அடுத்த வாரத்துக்குள் படித்துவிடுவேன் என்று நினைக்கிறன். ரொம்ப எதிர்பார்த்து வாங்கும் புத்தகங்கள் சில காலைவாரிவிடும் என்பதற்கு அரசூர் வம்சம் சாட்சியாக இருந்தது. அதை போன்று இல்லாமல் இருக்கவேண்டும் என்று எங்கள் குலதெய்வத்திடம்      பிராத்தனை செய்யவேண்டும்.திருவொற்றியூர் செய்திகள்... 

    ஏற்கனவே சொல்லி இருந்தேன் எங்க ஏரியால பாதாள சாக்கடை வேலை நடந்து கொண்டு வருவதால் ஏற்படும் இடற்பாடு என்ன என்று. போன தடவை பெய்த மழையில் சாலை எல்லாம் அநியாயத்துக்கு நாசமாகி இருக்கு. எனக்கு தெரிந்த ஒரு கவுன்சிலர் தம்பியிடம் இதை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன், நகராட்சியில் ஏற்பட்டு உள்ள நிதிநெருக்கடி தான் இதற்கு எல்லாம் காரணம் என்றார். வரும் தேர்தலுக்குள் வேலையை முடித்துவிடவேண்டும் என்று நினைத்தாலும் அது நடக்குமா என்று தெரியவில்லை. நடந்தால் ஆளும் கட்சி இதை வைத்தே வரும் தேர்தலில் ஜெயிபதற்கு நிறைய வாய்புகள் உள்ளது. இல்லையே அவர்களுக்கு இதுவே பாதகம் ஆகிவிடும். 
ஜூனியர் சேட்டை..

    ரெண்டு வாரத்துக்கு முன்னாள் கோவை சென்று இருந்தேன், நான் , தங்கமணி அப்பறம் ஜூனியர். தங்கமணி எப்பயும் ஜூனியர் தூக்கிட்டு இருக்கவேண்டி இருக்கும் அதனால் இருந்த மூன்று லகேஜ்யும் நானே சுமந்து கொண்டு வந்தேன், சென்ட்ரல் ஸ்டேஷன் நுழைவாயில் செக்கிங் பண்ணிட்டு இருந்தாங்க. அங்கு இருந்த போலீஸ்சிடம் லகேஜ் எல்லாம் திறந்து காட்டி அங்க இருந்து கிளம்பினேன். கொஞ்சம் முன்னாள் வந்தால் பெண் போலீஸ் ஒருவர் திரும்ப செக் பண்ணனும்ன்னு சொல்லி எல்லாத்தையும் திறக்க  சொன்னங்க. எல்லா லகேஜ்யும் நானே சுமந்து கொண்டு வந்ததால் ஏற்கனவே கடுப்பில் இருந்தேன் திரும்ப செக்கிங் என்றவுடன் எரிச்சலுடன் சரி என்று எல்லாவற்றையும் திரும்ப திறந்து காட்டினேன். அவர் குனிந்து செக் பண்ணி கொண்டு இருந்தார் தங்கமணி ஜூனியரை கையில் வைத்துகொண்டு அவர் அருகில் இருந்தார். முதல் பையை சோதனை செய்து கொண்டு இருந்த போது சாடார் என்று ஜூனியர் அந்த பெண் போலீஸ்சின் தொப்பியை கையில் பிடிங்கிவிட்டான். நான் டேய் டேய் என்று சவுண்ட் விடுவதற்குள் அந்த தொப்பி அவன் கையில் வந்துவிட்டது. அவரும் கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போனார், முதலில் யார் எடுத்தது என்று தெரியாததால் அவருக்கு சந்தேகம் வந்து இருக்கும், ஜூனியர் கையில் தொப்பியை பார்த்ததும் சிரித்துவிட்டார். ஏனோ அதுக்கு அப்பறம் அவர் அடுத்த லகேஜ் எதையும் சோதனை செய்யவில்லை. எங்களை போங்க என்று அனுப்பிவிட்டார்.  திரும்ப அடுத்த லகேஜ் செக் செய்யும் போது ஜூனியர் திரும்ப தொப்பியை பிடிங்கினாலும் பிடிங்கிடுவான் என்று கூட இருக்கலாம்.

வரும் செப்டம்பர் 3ஆம் தேதி கோவையில் ஜூனியர்க்கு மொட்டை அடித்து காத்து குத்துறோம்.காமெடி...


    நேத்து ட்ரெயின்ல இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துகொண்டு இருந்தேன், எனக்கு முன்னால் ஒரு பெரியம்மா  வயது எப்படியும் அறுபதுக்கு மேல் இருக்கும் உடன் ஒரு பெண்மணியும் நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்,இருவரும் ஏதோ குடும்ப பிரச்சனை போல சத்தம் போட்டு யாரையோ ஏசிட்டு இருந்தாங்க. அந்த வயதான பெண்மணி ட்ரெயின் உரசி கொண்டு நடந்துகொண்டு வந்தார். ட்ரெயின் கிளம்பியதும் அருகில் இருந்த மற்றொரு பெண்மணி அவரை தான் பக்கம் இழுத்து ஓரமா வாங்க ட்ரெயின் இடிச்சிட போகுது  என்று சொன்னார். அதற்கு அவங்க சொல்லுறாங்க அவன அந்த சைடுல ஒட்டிட்டு போக சொல்லு நான் தான் நடக்குறேன்னு தெரியும்ல என்றார். அந்த பெரியாம்மா சொன்ன பதில் கேட்டு கொள் என்று நானும் இன்னொரு  பெண்மணியும் சிரித்தோம். விட்டா ட்ரெயின் டிரைவரை இழுத்து வச்சி அடிச்சாலும் அடிச்சிடுவாங்க போல அந்த மாதிரியான கோவம் அவர்களிடம் இருந்தது.
With Love
Romeo ;)

7 comments:

 1. ப்ளாக் படிக்க விடலையா ? என்ன கொடுமை சரவணன் இது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.. வேறு வழியில் தொடர்பு கொள்ளுங்கள்.

  ஃபாதரான வாலுக்கு வாழ்த்துக்கள் :). இனி அவர் சேட்டை கொஞ்சம் குறையும் :)

  ReplyDelete
 2. நீங்க கெட்டது போதாதுன்னு, லேடி போலீஸ்கிட்ட ஜீனியர் வம்பு பண்ண வெச்சுட்டீங்களே :)

  ReplyDelete
 3. Junior is so cute!

  last one.... "terror"iffic!

  ReplyDelete
 4. // சுதந்திர தினத்தை அசிங்கப்படுத்துவது உங்கள் தாயை கீழே தள்ளி அவள் நெஞ்சில் மேதிப்பதை போன்றது.//

  இதுல ’மே’திப்பதைன்னு இருக்கே எதுனா குறியீடா பாஸ்? :) போன் ஸ்விட்ச்ட் ஆஃப்லயே இருக்கே ஒரு மெயில் பண்ணுங்க.

  ReplyDelete
 5. நண்பா
  இதுல பல விஷயம் அருமையா எழுதிருக்கீங்க,செண்ட்ரல் ஸ்டேஷன் மேட்டர் கோவமும் சிரிப்பும் வந்தது.பயலை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க,செம வாலு போல.வாலுக்கு வாழ்த்துக்கள்.கூகிள் பஸ்ஸில் பின்னூட்டவழியிருக்கு,அதை ட்ரை பண்ணிபாருங்க,என்னைபொருத்தவரை படித்துவிட்டு பின்னூட்டாவிட்டாலும் தப்பில்லை,அதில் இணைய வேகம்,லாகின் பிரச்சனை,என நிறைய சம்பந்தபட்டிருக்கு,நானே இதுபோல நிறைய பின்னூடாமல் வருத்தப்பட்டிருக்கேன்.சோ டோண்ட் ஒர்ரி

  ReplyDelete