Monday, October 18, 2010

சங்கதிகள் - 18/10/10சந்தோஷமான ஒரு விஷயம் நடக்க போறதா இருந்தா எவ்வளவு  சந்தோஷாமா இருக்கும். அதே போல ஒன்று நடக்க இருக்கிறது. பத்து வருடங்கள் கழித்து ஸ்கூலில் படித்த நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர போகிறோம். நண்பர்கள் நிறைய பேர் போனில் தொடர்பு இருந்தாலும் எல்லோரும் சேர்ந்தா போல பார்த்து கொண்டது இல்லை. நவம்பர் மாதத்தில் ஒரு நாள்  எல்லோரும் சந்திக்கலாம் என்று ஒரு புள்ளியாய் ஆரமித்து உள்ளோம் அதற்கு வடிவம் குடுக்க இனிதான் ஆரமிக்க வேண்டும். 

போன வாரத்தில் ஒரு நான் ஆபீஸ்க்கு ட்ரெயின்ல வந்துட்டு இருந்தேன் வண்டி சைதாபேட்ல இருந்து கிளம்பும் போது ஒரு அம்மா ஆப்பிள் வித்துட்டு வந்துச்சு கூடையில் 30 பழங்கள் இருந்து இருக்கும். அவங்களும் ஆறு பழம் முப்பது ருபாய்ன்னு கூவிட்டே வந்துச்சு, அந்த பெட்டியில  யாருமே அவங்க கிட்ட பழம் வாங்கவே இல்ல. வெறுத்துபோய் எல்லோரையும் திட்ட ஆரமிச்சிடுச்சு, பத்து ருபாய்க்கு ஆறு பழம் குடுத்த வாங்கிபீங்களான்னு அடுத்து ஒரு கேள்வி கேட்டுச்சு யாரும் பதில் சொல்லலை. பாவம் அன்னைக்கு வியாபாரம் ஆகலைன்னு புலம்பிட்டே போச்சு. 


இதும்  ட்ரெயின் மேட்டர் தான், ஒரு நாள் சென்ட்ரல் ஸ்டேஷன்ல இறங்கி பார்க் ஸ்டேஷன்க்கு நடந்து வந்துட்டு இருந்தேன். அது நல்லா பீக்ஹவர், எனக்கு முன்னாடி புள்ளதாச்சி பொண்ணு நடந்து போயிட்டு இருந்து பக்கத்துல அந்த அம்மா புருஷன்  வந்துட்டு இருந்தான். அந்த பொண்ணு என்ன சொல்லுச்சுன்னு தெரியல அவ பின்மண்டையில் பொளேர்ன்னு ஒண்ணு வச்சான், அவன் அடிச்ச சவுண்ட் கேட்டு முன்னாடி போயிட்டு இருந்தவங்க பின்னாடி வந்துட்டு இருந்தவங்க எல்லாம் ஒரு செகண்ட் நின்னு பார்த்தாங்க, அந்த பொண்ணு பார்க்க பாவமா இருந்துச்சு. இப்படி எல்லோரு முன்னாடியும் பொண்டாட்டியை அடிக்கிறதுல அந்த ஆளு என்ன சுகத்தை கண்டான்னு தெரியல.  மைனா படத்தில் நரேஷ் ஐயர் மற்றும் சாதனா சர்கம் பாடி இருக்கும் ""கைய புடி கண்ணா பாரு"" பாட்டு கேட்டு இருக்கீங்களா !!! அவ்வளவு ரசனையா இருக்கு. ஸ்லோவா ஆரமிக்கும் பாட்டு அப்படியே ஹைய் பிட்ச்ல போகும் இடம் இருக்கே சான்ஸ்சே இல்ல அவ்வளவு சூப்பர். வயோலின் இசைக்கிற இடம் அதை விட சூப்பர் .. மறக்காம கேட்டு பாருங்க இமான் கலக்கி இருக்காரு . 

கேபிள் சங்கரின் குளிச்சா.. குத்தாலம் -2  பதிவை படிச்ச போது பார்டர் கடைக்கு போகலைன்னு சொல்லி இருந்தாரு அப்படி என்ன இருக்கு அந்த கடையில்ன்னு கூகுள் ஆண்டவர் கிட்ட கேட்டாப்போ அவர் குடுத்த லிங்க்ல ஒன்னை  புடிச்சு போனேன். அது பதிவர் அந்தணன் அவரின் ப்ளாக் கொண்டு சேர்த்தது எதையோ படிக்க போய் அவர் ப்ளாக் முழுக்க படிச்சேன் .. செம சூப்பரா எழுதி இருக்காரு என்ன ஒரு காமெடி சென்ஸ் சினிமா மேட்டர் எல்லாம் அவ்வளவு சுவாரசியமா எழுதி இருக்காரு. நீங்களும் போய் படிச்சி பாருங்க நான் சொன்னது எவ்வளவு உண்மைன்னு தெரியும்.  


கல்யாணம் பண்ணிக்க போற ரங்கமணிகளுக்கு எல்லாம் ஒரு அட்வைஸ். எப்பயும் சாப்பிட்ட பிறகு தங்கமணிக்கிட்ட சண்டை போடுறது நல்லது, இல்லேன்னா சாப்பாடு கிடைக்காது. அதே மாதிரி பொய் பேசுறதுக்கு பதில் உண்மையை பேசிடுங்க, நமக்கு கிட்ட பொய் எல்லாம் ரொம்ப நேரம் தங்காது. அவங்களுக்கு உண்மை தெரிஞ்சா அப்பறம் அவஸ்தைப்படவேண்டம்.ஜூனியருக்கு கொஞ்சம் கொஞ்சம் விவரம் தெரிய ஆரமிச்சிடுச்சு. டிவி ரிமோட் குடுத்தா அதை டிவிக்கு நேர எடுத்து காமிக்கிறார், போன் குடுத்தா காதில் வைக்கிறார், பவுடர் அடிக்கும் ஸ்பான்ச் குடுத்தா அதை முகத்தில் வைத்து அழுத்துகிறார். பார்க்க பார்க்க சந்தோசமா இருக்கு :)
    
  
--
With Love
Romeo ;)


7 comments:

 1. நண்பா
  நல்லா எழுதுறீங்க,இதுபோல தொகுப்பா வாரம் ஒண்ணாவது பகிருங்க,எங்களுக்கும் சென்னை மேட்டர் அப்டேட்+இசை அப்டேட் கிடைக்கிது.

  ====
  இந்த கால குழந்தைகள் செம ப்ரில்லியண்டா இருக்காங்க,

  ReplyDelete
 2. பள்ளி நண்பர்கள் சந்திப்பு.... மிக அருமையாக இருக்கும்.

  வாழ்த்துகள்

  ReplyDelete
 3. ஆகட்டும்டா தமிபி ராஜா..நடத்து ராஜா...

  ReplyDelete
 4. ஜூனியருக்கு கொஞ்சம் கொஞ்சம் விவரம் தெரிய ஆரமிச்சிடுச்சு. டிவி ரிமோட் குடுத்தா அதை டிவிக்கு நேர எடுத்து காமிக்கிறார், போன் குடுத்தா காதில் வைக்கிறார், பவுடர் அடிக்கும் ஸ்பான்ச் குடுத்தா அதை முகத்தில் வைத்து அழுத்துகிறார். பார்க்க பார்க்க சந்தோசமா இருக்கு :)

  .... so cute! :-)

  ReplyDelete
 5. தொகுப்பு அருமை! நன்றி!

  ReplyDelete
 6. நல்ல தொகுப்பு... உங்கள் முகத்தைப் பார்த்தால் என் கல்லூரி நண்பரின் சாயல் தெரிகிறது...

  ReplyDelete
 7. @|கீதப்ப்ரியன்|Geethappriyan| - ரொம்ப நன்றி பாஸ்

  @ ஈரோடு கதிர் - நான் அந்த இனிய நாளை நோக்கி தான் இருக்கிறேன்.

  @மணிஜீ...... - சரிங்க அண்ணே ..

  @Chitra .. - ஆமாங்க பையன் பண்ணுற சேட்டை எல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு

  @எஸ்.கே ... - ரொம்ப நன்றிங்க ..

  @philosophy prabhakaran .. - \\ உங்கள் முகத்தைப் பார்த்தால் என் கல்லூரி நண்பரின் சாயல் தெரிகிறது//

  அது என்னன்னு தெரியல நிறைய பேரு என்னை பார்த்தவுடன் இதையே தான் சொல்லுறாங்க .. உங்கள் வருகைக்கு நன்றி ..

  ReplyDelete