Wednesday, November 24, 2010

மந்திரப்புன்னகை


பதிவர்களுக்காக இந்த படத்தை தனியாக திரையிட்டு காண்பித்தது நமக்கு எல்லாம் நல்லதொரு அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குனருக்கு நன்றி. அதே போல அண்ணன் உண்மை தமிழன் சரவணன் அவர்களுக்கும் நன்றி. 


மந்திரப்புன்னகை

        மனபிறழ்வு ஏற்ப்பட்ட ஒருவனின் வாழ்கை போராட்டமே கதை. படத்தின் களம் கொஞ்சம் புதுசு என்று சொல்ல முடியாது, சொல்லியவிதம் கொஞ்சம் புதுசு.  

      முதல் பாதி வரை மனபிறழ்வு பற்றி சொல்லாமல் இரண்டாம் பாதியில் அதை பற்றி முதலே சொல்லிவிட்டது கொஞ்சம் ஆறுதல். முதல் பாதியில் இருந்த ரசனை, நையாண்டி, நகைச்சுவை எல்லாம் இரண்டாம் பாதியில் தொலைந்தது கொடுமை!! இடைவேளையில்  வெளியே வந்து படத்தை ரீவைண்ட் செய்து பார்த்தபோது  மிகவும் ரசித்தேன் என்பதற்கான காட்சிகள் இருந்தது. முடிந்த பிறகு ஏனோ அந்த நினைப்பே வரவில்லை. அம்மாவிற்கு போன் பண்ணி வீட்டுக்கு கிளம்பிட்டேன் என்று  சொன்னேன். 


     பாஸ்கர் சக்தியின் வசனங்கள் செம ஷார்ப்பாக நல்ல  ரசிக்க கூடியதாக இருக்கிறது. மகா நிறைய இடங்களில் என்னை போன்றே ரசித்தாள் என்பதற்கு  சான்றாக எனது தோள்பட்டை அடிகடி அவள் பக்கம் சென்றது. அதற்காக முக்கால் வாசி படம் வசனங்களை தாங்கி செல்வது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. உணர்ச்சி தளும்பும் இடங்களில் கூட வசனத்தை புகுத்தியது ரசிக்க முடியவில்லை. கலை இயக்குனர் ரசனை அபாரமாக உள்ளது. கதிரின் அப்பார்ட்மன்ட் போதும் கவிதையாக எல்லாவற்றையும் சொல்ல. வித்யாசாகர் இசை எல்லா விதத்திலும் அருமையாக செட் ஆகி உள்ளது. பாடல்கள் பிரிவோம் சந்திப்போம் படத்தில் கேட்டது போல இருந்தாலும் ரசிக்க முடிகிறது. என்ன குறையோ பாடலை ரொம்ப எதிர்ப்பார்த்தேன், ஆனால் பாடல் சட் என்று முடிந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது. 

   சந்தானம் நன்றாக சிரிக்க வைத்து உள்ளார். தம்பி ராமையா அவரின்  பங்களிப்பும் ஓகே. விலைமாதராக வரும் அந்த பெண்ணின் சின்ன பாத்திரமாக இருந்தாலும் இவரும் ஓகே லிஸ்ட்டில் வருகிறார். மீனாட்சியின் கதாபாத்திரத்தை உண்மையில் எங்கேயும் பார்க்க முடியாது. எவ்வளவு அவமானங்களை  தாங்கினாலும் காதலனை ஏற்று கொள்கிற காதலியை சினிமாவை தவிர வேறு எங்கே பார்க்க முடியுமா!!  க்ளோஸ் அப் காட்சிகளில் வசனம் பேசுவதை தவிர்த்து இருக்கலாம், வாய் அசைவு சரியாக இல்லை. கொஞ்சம் போல நடித்து உள்ளார், அவரின் கதாபாத்திரம் அவ்வளவு என்பதனால் கூட இருக்கலாம். கதிர் எப்பொழுது குடித்து கொண்டும், புகைத்து  கொண்டும்  இருப்பதை ரொம்பவே  தவிர்த்து இருக்கலாம். 


       கரு.பழனியப்பன் இயக்குனராக நன்றாக பிரகாசித்து உள்ளார். அவரின் முந்தைய படங்கள் எல்லாம் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கலாம் என்கிற உத்திரவாதம் இருக்கும். ஆனால் இந்த படத்தை அப்படி சொல்ல முடியாது, இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக அடித்து விட்டு இருக்கிறார்.  மற்ற படங்களை விட அவ்வளவு மோசம் இல்லை என்றாலும் அவரின் முந்தைய படங்களில் இருந்த முத்திரையை கொஞ்சம் அசைத்து பார்த்தது போல இருக்கிறது.  கரு.பழனியப்பன் இயக்குனராக பளிச்சிட்டாலும் நடிகனாக கண்டிப்பாக என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இவ்வளவு மோசமான மனிதன் எப்படி இருக்கவேண்டுமோ அதே போல உருவம் இருந்தாலும் கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாதது போல இருந்தது நடிப்பு. இயக்குனராக பிரகாசிங்கள் போதும் நடிப்பு வேண்டாம். 

        Beautiful mind (2001) Russell Crowe நடித்து வெளிவந்த அருமையான திரைப்படம் படத்தின் நாயகன் இல்லாத ஒருத்தரை இருப்பது போல கற்பனை செய்து கொண்டு வாழ்வான். இந்த கருவை வைத்து மந்திரப்புன்னகை செய்து உள்ளார். இரண்டு படங்களும் ஒரே ஒற்றுமை இல்லாத மனிதரை இருப்பது போல காட்டுவது அவ்வளவு தான் மற்றபடி வேறு எந்த ஒரு இணைப்பும் இல்லை என்பதனால் கொஞ்சம் சந்தோசம். 


டிஸ்கி : நன்றாக வரக்கூடிய ஒரு ஆப் பாயில்ளை திருப்பி போட்டு  புல் பாயில் ஆக்கியது  போல இருக்கிறது. 

4 comments:

  1. பதிவர்களுக்காக இந்த படத்தை தனியாக திரையிட்டு காண்பித்தது நமக்கு எல்லாம் நல்லதொரு அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கிறது.//

    சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாதிக்க வேண்டும்

    ReplyDelete
  2. அப்ப... கோழி முட்டையே போட்டிருக்க வேணாம்னு சொல்றீங்களா?

    ReplyDelete
  3. வெல்டன் நண்பா

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்.. Beautiful mind (2001) ஒரு நிஜக்கதையின் பின்னனியில் உருவான படம்.. மிகவும் அருமையான ஸ்கிரீன் பிளே அது...

    ReplyDelete