Thursday, December 16, 2010

சங்கதிகள் - 17/12/10

சாமியே சரணம் 


                   வருஷத்துல முண்ணுறு நாள் டாஸ்மாக் தண்ணிலையே மிதந்துட்டு. சாமி ஊர்வலம் போகும் போது கூட தண்ணிய போட்டுட்டு குத்து டான்ஸ் ஆடிட்டு, ரோடுல போறவங்க கிட்ட எல்லாம் வம்பு பண்ணிட்டு, போலீஸ்காரனை பார்த்தா பயந்து நடுங்கி ஏதாவது வீட்டுல போய் அடஞ்சிகிட்டு. தண்ணி எடுக்க வர பொம்பளைங்க மேல விழ போய் அடிவாங்காம தப்பிச்சு அவன் குடும்பத்தையே நாறு நாரா அவங்க திட்டினதை கூட கேக்காம, அடுத்த ரவுண்டுக்கு எவன் கிட்ட ஆட்டைய போடலாம்ன்னு பார்க்கு போறவன். கார்த்திகை ஒண்ணு ஆனா சபரி மலைக்கு மாலை போட்டுட்டு சாமியே சரணம்ன்னு விடிய காலைல எழுந்து கோயிலுக்கு போறவனை சாமின்னு குப்பிட்டு ஏனோ மனசே வரல. மேலே சொன்னது எல்லாம் எங்க ஏரியால இருக்கும் ஒருத்தனை பற்றி தான்.  




ஆசை நிறைவேறுகிறது 

         எங்க ஏரியால இருக்கும் மோசமான ரோடு பத்தி நிறைய தடவை எழுதி இருக்கிறேன்.  எதிர் கட்சி ஆட்கள் அவங்க செலவில் ரோடு  சரி செய்வதாக சொல்லி இருந்தார்கள். அதுக்குள்ள ஏதோ உள்ளடி வேலை நடந்துடுச்சுன்னு நினைக்கிறன்.  அவங்க சொன்ன தேதிக்கு பிறகும் ஒரு வேலையும் நடக்கவில்லை ஒரு வாரத்துக்கு    அப்பறம் ரோடு ரெடி பண்ணிட்டு இருக்காங்க. மழை மட்டும் இல்லை என்றால் இந்த நேரம் ரோடு ரெடி ஆகி இருக்கும் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக ரோடு ரெடி பண்ணுறாங்க. எதிர் கட்சிக்கு நன்றி சொல்லுறதா இல்ல ஆளும் காட்சிக்கு நன்றி சொல்லுறதான்னு தெரியல.  ஆகா மொத்தம் ஒரு வழியா ரோடு ரெடி ஆகுது. 


பதிவர்

            குழந்தை நல மருத்துவன் என்கிற பெயரில் குழந்தைகள் நலம் பற்றி பதிவு எழுதுகிறார் டாக்டர் ராஜ்மோகன். அவரின் பதிவுகள்  எல்லாம் ரொம்ப உபயோகமான இருக்கு. ஜூனியருக்கு உடம்பு முடியலைனா இவருடன் கன்சல்ட் செய்து கொள்கிறேன்.
அதே போல தடுப்பு ஊசி பற்றி கொஞ்சம் விளக்கி சொன்னார். உங்களுக்கு ஏதேனும் குழந்தைகள் உடல் நிலை பற்றி சந்தேகம் இருந்தால் அவரின் இந்த ஈமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் rajmohandr@gmail.com

குத்து
  
            கடந்த ஒரு வாரமா  Silverstar Stallone நடிச்ச Rocky  சீரீஸ் படத்தை எல்லாம் பார்த்தேன். அதோட Cinderella man , Million Dollar baby என்று அதிரடி குத்து சண்டை படத்தை பாரதத்தின் விளைவா எவனையாவது முஞ்சை பேர்க்கணும்ன்னு கை அரிக்க ஆரமிச்சிடுச்சு.  Rocky படத்தை உண்மையில் ரசனையா ரசிச்சு பார்த்தது இப்போ தான், Silverstar Stallone நிறைய கஷ்டப்பட்டு இருக்காரு. முதல் பாகத்தில் இருந்த இளமை அடுத்த அடுத்த பாகத்தில் குறைந்து கொண்டு வந்து  கடைசியாக வந்த பக்கத்தில் சுத்தமா இல்லை என்றாலும் அந்த போர்ஸ் கொஞ்சம் கூட குறையல. Silverstar Stallone 2005ல AXN channelல "The Contender" என்று ஒரு ப்ரோக்ராம் பண்ணாரு. அந்த சமயத்தில் நான் ரொம்ப ரசிச்சி பார்த்த நிகழ்ச்சி அது. ஒவ்வொரு குத்து சண்டை வீரனும் எப்படி போட்டிக்கு ரெடி ஆகுறாங்கன்னு ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அந்த தொடர் நல்லா இருந்துச்சு. டைம் இருக்கும் போது You tubeல பாருங்க. ஒவ்வொரு அடியும் மரண அடியா இருக்கும். இதே போல ஒரு நிகழ்ச்சி யாரவது இங்க தயாரிச்சா நல்லா இருக்கும்.



பாட்டு



     தா படத்தில் ஜெய ராகவன் பாடி  இருக்கும் ""ஏதோ ஒருஏக்கமோ"" சூப்பர்.. பாடல் வரிகளுக்கு முக்கியத்தவம் குடுத்து இருக்காங்க. எல்லா பாடும் ஒரு அளவு நல்லா தான் இருக்கு.


   மன்மதன் அம்பு படத்தின் பாட்டு அவ்வளவாக ஈர்க்கவில்லை, தேவிஸ்ரீபிரசாத் ஏதாவது புதுசா முயற்சி செய்து இருப்பார் என்று எதிர்பார்த்தேன்.. ஹ்ம்ம் ஏமாற்றமே மிச்சம். கமல் பாடுவதை நிறுத்திவிட்டால் நன்று ""தகுடு தத்தம்"" பாட்டு சுத்த மோசம்.

    ஈசன் கொஞ்சம் போல ஈர்த்து உள்ளது ""மெய்யான இன்பம்""  செம ராக்.

   

ரொமான்ஸ்

     என்னோட ஆல் டைம் பேவரிட் படம் மகேந்திரன்  இயக்கத்தில் ரஜினி நடித்த ஜானி தான். அது என்னவோ தெரியல இந்த படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே இல்லை. ரஜினிக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் வரும் அந்த ரொமான்ஸ் சீன் சான்சே இல்ல. எவ்வளவு இயல்பா அந்த கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் நடிப்பில் எத்தனை விதமான மாற்றங்களை கொண்டு வருவாங்க. அதும் ஸ்ரீதேவி உட்கார்ந்து கிட்டே ஒரு வித சங்கடத்தோட ஆரமிச்சு, நடுவில் அழுது, கடைசியில் சிரிச்சி வாவ் சிம்ப்ளி சூப்பர் ..






எரிச்சல்

        ஒரு நிகழ்ச்சி ஹிட் ஆச்சுனா அதைவச்சு இப்படியா நம்மளை நோகடிக்கிறது?? விஜய் டிவில சூப்பர் சிங்கர் அப்பறம் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி வந்த புதுசுல செம ஹிட். முதல் ரெண்டு சீசன்க்கு மக்களிடம் நல்லதொரு வரவேற்பு இருந்துச்சு, அதை சாக்கா வச்சிக்கிட்டு இப்படி மற்ற எந்த நிகழ்ச்சி என்றாலும் இவங்களை வச்சியே ஒப்பேத்திக்கிறது செம கடுப்பை கிளப்புது... கொஞ்சம் கூட கவலைப்படாமல் இவங்க பண்ணுற அலும்பு அசிங்கமா இருக்கு, பேசாம இந்த சேனல் பெயரை சூப்பர் டிவின்னு வச்சிடலாம். மன்மதன் அம்பு நிகழ்ச்சியை பார்க்கலாம்ன்னு ரொம்ப ஆசையா இருந்தேன் நடுவு நடுவுல வந்த ஜோடி நம்பர் 1 ஆட்களின் டான்ஸ், சூப்பர் சிங்கர் பசங்களின் பாட்டுன்னு போட்டு அந்த நிகழ்ச்சியை பார்த்துட்டு இருந்தவங்கள டர்ர்ர்ர்ர்ர் ஆகிட்டாங்க, போதும்டா சாமின்னு சிரிப்பொலி பார்த்துட்டு இருந்தேன். விஜய் டிவியை விட நிறைய காமெடி சீன் அதுல இருந்துச்சு. இவங்க கிட்ட ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர்க்கு எப்போதான் விடுதலை கிடைக்கும் ??


       ராஜ் டிவி அப்பறம் எஸ்எஸ் மியூசிக் சேனல்லையும் வரும் சினிமா தெரியுமா நிகழ்ச்சி ரொம்ப கேவலமா இருக்கு. நம்ம கண் முன்னாடி எப்படி எல்லாம் நம் காசை கொள்ளை அடிக்கிறாங்கன்னு பார்க்கும் போது வரும் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியல. மொக்கையான கேள்விக்கு பதில் சொன்ன Rs.35000  பரிசுன்னு சொல்லி யாராவது ஒரு ஹீரோ அப்பறம் ஒரு ஹீரோயின் பாதி முகத்தை மட்டும் இணைச்சி கேள்வி கேட்பாங்க. ரொம்ப ஈஸியான அந்த கேள்விக்கு பதில் சொல்ல லைன்ல வரவங்க தப்பா பத்தி சொல்லுவாங்க. வர எல்லோரும் தப்பா பதில் சொல்லி சொல்லி அந்த அமௌன்ட் கடைசியா Rs.3000 வந்து நிக்கும். அப்போ லைன்ல வர ஒருத்தர் கரெக்டா பதில் சொல்லுவாரு. இது எப்படின்னு தான் தெரியல !!!! இது போக ரெகார்ட் பண்ண நிகழ்ச்சியை வேற அடிகடி ஒளிபரப்புறாங்க. அதை பார்த்து எத்தனை பேரு பணத்து ஆசையால போன் பண்ணி அவங்க காசை விட்டாங்கன்னு தெரியல.  கொய்யால எங்களை பார்த்தா என்ன கேணையனா தெரியுதா உங்களுக்கு ??  




அலச்சியம்


    ஜூனியர்க்கு உடம்பு சரி இல்லைனா தண்டையார்பேட்டையில் இருக்கும் எழில் மருத்துவமனைல தான் தூக்கிட்டு போவோம் . போன மாசம் ஜூனியர்க்கு காய்ச்சல் வந்த போது அந்த  மருத்துவமனைல தான் பார்த்தோம். டாக்டர் எழுதி குடுத்த மருந்து வாங்க மருந்து கடைக்கு போனேன். அந்த கடை  ஓரத்தில் சிரஞ்சி, நீடில் ரெண்டு மூணு இருந்துச்சு சின்ன பசங்க அதை எடுத்து விளையாடி எதாவது காயம் ஆகிடுமோன்னு அந்த கடைக்காரரை எச்சரிக்கை செய்தேன், அப்போ சரி சரின்னு மண்டையை ஆடினார். இந்த மாசம் போன போது அதே இடத்தில் அதே போல இன்னும் சிலது இருந்துச்சு, ஒரு சின்ன பையன் அதை எடுத்து விளையாட போனான் அதற்குள்ள அவங்க அம்மா அவன இழுத்துட்டு போயிட்டாங்க. திரும்ப அந்த கடைகாரர்கிட்ட இதை எல்லாம் கிளியர் பண்ணுங்கன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன், அடுத்த தடவை போனா தான் தெரியும் என்ன பண்ணி வச்சி இருக்காங்கன்னு. எத்தனை தடவதான் சொல்லுறது, எவ்வளவு அலச்சியம். அடுத்த தடவை பார்த்த பேசாம அந்த  மருத்துவமனை டைரக்டர்க்கு கம்ப்ளைண்ட் பண்ண வேண்டியது தான்.


விளம்பரம்

          தமிழ்மணம் விருதுகள் 2010யில் நானும் கலந்து கொண்டு உள்ளேன்.  இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டு உள்ளேன் ஒன்று நூல் விமர்சனம், அறிமுகம் பிரிவில் 
ஏழாம் உலகம் - விமர்சனம் மற்றும் பரிசு போட்டி மற்றொன்று எது என்று எனக்கே தெரியவில்லை :(. எங்கயாவது என்னோட பேரு பார்த்திங்கனா அப்படியே ஒரு ஓட்டு போடுங்க சாமியோ, ஓட்டு போடுங்க ..



                   
--
With Love
Romeo ;)

3 comments:

  1. கலக்கல் பதிவு..... அந்த மருந்து கடையில் ஊசிகளை இப்படி கவனக்குறைவாக வைத்து இருப்பது, ஒரு பொறுப்பற்ற செயலே.

    ReplyDelete
  2. நம்ம ஏரியா மேல ரொம்ப கோபமா இருக்கீங்க போல...

    குழந்தை நல மருத்துவர் அறிமுகம் நன்று...

    ஈசன் படத்தின் "ஜில்லா விட்டு ஜில்லா வந்த..." பாடலை கேட்டு பாருங்க...

    சினிமா தெரியுமா? நிகழ்ச்சி பத்தி நானும் எழுதலாம்னு நினைச்சேன்... அது ஒரு பிக்காளித்தனமான நிகழ்ச்சி...

    ReplyDelete