Monday, December 13, 2010

டர்ர்ர்ர்ர்ர்ர் ஆனேன்



AntiChrist (2009)

        

  
       கொய்யால இந்த மாதிரி படம் எடுக்க எல்லாம் தில் வேணும், அதே போல இந்த படத்தை பார்க்கவும் கொஞ்சம் தில் வேணும். படத்தில் மொத்தமே இரண்டே கதாபாத்திரம் தான். முதல் பத்து நிமிடம் பின்னணியாக ஒரு பாடல் ஒலித்து கொண்டே கருப்பு வெள்ளையில் படம் ஆரமிக்கிறது, செம மஜாடான்னு பார்க்க ஆரமிச்சா, அடுத்த நிமிடமே நெஞ்சை பதறவைக்கும் அந்த குழந்தையின் மரணம். குழந்தை இறந்ததற்கு தான் தான் காரணம் என்று சைக்கோ ஆகும் அந்த கதாநாயகியை குணப்படுத்த அவள் கணவன் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாக போகிறது. எல்லாத்துக்கும் இவன் தான் காரணம் என்று கணவனையே கொல்ல முயலும் அந்த பெண், அவளை எப்படியாவது காப்பாற்ற முயலும் அவளின் கணவன் இவங்களுக்கு நடுவில் நடக்கும்  நீயா நானா ஆட்டம் தான் கதை. 

 படம் கொஞ்சம் போர் அடிச்சாலும் டெர்ரர் சீன் நிறைய இருக்கு. அந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு செம தில், அது என்னன்னு எல்லாம் இங்க சொல்ல  முடியாதுங்க அவ்வளவு விஷயம் இருக்கு படம் முழுக்க.  ஏனோ இந்த படம் என்னை அவ்வளவாக  ஈர்க்கவில்லை.  நிறையவே உவ்வ்வவ..


Exam (2009) 

  

   அதுவா இருக்குமா.. இதுவா இருக்குமா.. இல்ல இது தான் இருக்கும்.. இல்ல இல்ல வேற ஒண்ணு இருக்கும். ஒரு வேளை முதலில் பார்த்தது தான் இருக்கலாம். 

    இப்படி மண்டையை பிச்சிகிற மாதிரி ஒரு படம் இருக்குனா அது இது தான். ஒரு ரூம் 8 போட்டியாளர்கள், ஒரு செக்யூரிட்டி, ஒரு கேள்வி , ஒரு பதில், ஒரே ஒருவருக்கு தான் வேலை.  எல்லோரிடமும் ஒரு தாள் இருக்கும் ஆனால் கேள்வி ஏதும் அதில் இருக்காது, கேள்வியை நீங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும் அதற்கு பதிலும் வேண்டும் 80 நிமிஷம் தான் அவர்களுக்கு கேடு. 

   கண்டு பிடிச்சாங்களா இல்லையா என்பது தான் கிளைமாக்ஸ். நல்ல puzzle கேம் உள்ள படம். படம் ஒரே ரூமில் நடக்கும் கதை என்றாலும் கொஞ்சம் கூட போர் அடிக்காம போகுது. இந்த மாதிரி படத்திற்கு திரைக்கதை மிக முக்கியம் அதை சாமாத்தியமா செஞ்சு இருக்காங்க. படம் பார்த்துட்டு இருக்கும் போதே சின்னதா ஒரு க்ளு கிடைச்சுது, பட் அதுவா இருக்குமான்னு ஒரு சந்தேகத்தில் இருந்தேன் கடைசில் அதே தான். சான்ஸ் கிடச்சா மிஸ் பண்ணாம பாருங்க. 

    
The Others (2001)


   சத்தியமா என்னை டர்ர்ர்ர் ஆக்கிய படம் என்றால் அது இது தான். இந்த படம் ஒரு வீட்டினுள் நடக்கிறது Nichole Kidman அவளில் அன்னா, நிக்கோலஸ் என்று ரெண்டு குழந்தைகள் அப்பறம் வேலை ஆட்கள் முவர் அவ்வளவுதான் இந்த படத்தின் கதாபாத்திரங்கள். பதினைந்து ரூம் அதற்கு ஐம்பது சாவி, குழந்தைகளுக்கு வெளிச்சம் என்றாலே ஆகாது, வீடு எப்பொழுதும் இருட்டில் தான் இருக்கும். கொஞ்ச நாட்களாக அன்னா விக்டர் என்கிற ஒருவனை இங்கே பார்த்தேன் அங்கே பார்த்தேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறாள். இதை நம்பாத நிக்கோல் கிட்மேன் ஒரு சந்தர்ப்பத்தில் அவள் நம்பும்படி சில சம்பவங்கள் நடக்கிறது. அதற்கு யார் காரணம்?? விக்டர் என்பது யார்?? அவர் குழந்தைக்கு என்ன ஆயிற்று?? என்கிற கேள்விக்கு பதிலை படத்தை பாருங்க தெரியும்.   

  இது பேய் படம் போல இருக்கும் ஆனால் பேய் எல்லாம் இல்லை அதற்கு பதில் வேறு ஒன்று இருக்கிறது. பின்னணி இசை சான்சே இல்ல அவ்வளவு சூப்பர், படத்தில் பாதி வேலையை பின்னணி இசையாலே நம்மளை கதி கலங்க வச்சிடுறாங்க.  படத்தின் கிளைமாக்ஸ் கொய்யால கொஞ்சம் கூட நினைச்சி பார்க்க முடியல. படத்தின் கடைசி இருபது நிமிடம் தான் அட போட வைக்கிறது என்ன ஒரு ட்விஸ்ட். திரில்லர் படத்திற்க்கு என்ன வேண்டுமோ அத்தனையும் உள்ளது. Don't Miss this movie . 




--
With Love
Romeo ;)

2 comments:

  1. ரைட்டு.. நீயும் பாத்துட்டியா..?

    ReplyDelete
  2. Others மட்டும் யாரோ எழுதியிருந்தார்கள் சென்ற வாரத்தில்... Others (மற்ற படங்கள்) இப்பொழுதே கேள்விப்படுகிறேன்...

    ReplyDelete