Saturday, January 8, 2011

சங்கதிகள் - 08/01/11


சுயபுராணம்

          இப்பொழுது எல்லாம் பதிவுகளை படிக்கும் அளவுக்கு எழுதுவதில் நாட்டம் வருவது இல்லை. சிலது  எழுதலாம் என்று குறிப்பு எடுத்து வைப்பேன்  பிறகு  அவை வேண்டுமா என்கிற எண்ணம் தோன்றும். அந்த எண்ணம் வந்த போதே குறிப்புகள் எல்லாம் குப்பைக்கு சென்றுவிடுகிறது. சென்ற வாரம் சாருவின் கடவுளும் நானும் என்கிற புத்தகத்தை மீள் வாசிப்பு செய்து கொண்டு இருந்தேன். அந்த புத்தகத்தை பற்றி எழுதலாம் என்று சில குறிப்புகள் எடுத்து வைத்து உள்ளேன், அவைகளை வலையேற்றம் செய்ய இது சரியான தருணமா என்று தெரியவில்லை. தேகம் படித்து முடித்த பிறகு ஒரே பதிவாக எழுதலாம் என்று இருக்கிறேன் பார்க்கலாம். குறிப்புகள் குப்பை கூடைக்கு செல்லாமல் இருந்தால் சரி :)


வருத்தம்

               நண்பர்களை சந்திக்காமல் இருந்தது. பதிவர் கார்த்திகேயன் அவர்களை சந்திக்கலாம்  என்று எத்தனையோ முறை முயற்சி செய்தும் முடியால் போய்விட்டது :(. சாருவின் புத்தக வெளியிட்டு விழாவில் சந்திக்கலாம் என்று முயற்சி செய்தேன், வேலை பளுவின் காரணாமாக செல்ல முடியவில்லை. நண்பா அடுத்தமுறை கண்டிப்பாக சந்திப்போம். 

               பதிவர்கள் புத்தக வெளியீடு விழாவுக்கு செல்ல முடியாமல் போனது கூட கவலையை தந்தது. கேபிளின் மீண்டும் ஒரு காதல் கதை படித்து கண்டிப்பாக விமர்சனம் எழுத வேண்டும். 
அதே போல பின்னுடம் போட முடியாத அளவுக்கு ஆபீசில் ஆப்பு வச்சிடாங்க. எல்லா பதிவையும் படிச்சாலும் பின்னுடம் போட முடியலையேன்னு ஒரு ஏக்கம் இருக்கு. நண்பர்கள் மன்னிக்கவும்.
  
சந்தோஷம்

       இந்த வருட புத்தக கண்காட்சி தொடங்கி விட்டது. வரும் திங்கள் அன்றுதான் கண்காட்சிக்கு செல்வேன் என்று நினைக்கிறேன். வாங்க வேண்டிய புத்தகங்கள் லிஸ்ட் பெருசாக இருக்கிறது. எதை வாங்குவது எதை விடுவது என்று தெரியவில்லை முடிந்த அளவு அள்ளவேண்டும் என்று மட்டும் நினைத்து இருக்கிறேன். மகா கிட்ட இதை பற்றி பேசிட்டு இருந்தேன். அம்மிணி கண்காட்சிக்கு வரேன் என்று சொல்லி இருக்கிறாள், அவளின் விருப்பம் கண்டிப்பா சமையல் புத்தகம் மற்றும் குழந்தைகள் புத்தகம் தான் இருக்கும், ஒருவேளை அவள் வரவில்லை என்றாலும் இரண்டும் கண்டிப்பாக வாங்கி வரவேண்டும் என்று ஆர்டர் போட்டு இருக்காங்க.



அரசியல் 

               இந்த வாரம் எங்க தொகுதி மீன்வள துறை அமைச்சர் சாமி பற்றி ஆனந்த விகடன் புத்தகத்தில் வந்து உள்ளது. உள்ளதை உள்ளபடி எழுதி இருகிறார்கள் என்று சொல்லலாம். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்கிற பழமொழிக்கு ஏற்ப தம்பிகளை அதிகமாக நம்பியதின் விளைவு என்ன என்று வரும் தேர்தலில் அவருக்கே  சீட் கிடைத்தால் தெரியும். கொஞ்ச நாளா எனக்கு ஒரு டவுட் இருந்துச்சு. அமைச்சர் பேரு K.P.P. சாமி, அவர் தம்பி பேரு K.P.சங்கர் இனிசியல் வித்தியாசமா இருக்கேன்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன். நேத்துதான் அதுக்கு விடை கிடைச்சிது. அமைச்சரின் முழு பெயர் பக்கிரிசாமி. பக்கிரியை சுருக்கி இனிசியல்யோட சேர்த்து  K.P.P. சாமி ஆகிட்டாரு :))



திருட்டு 
                 படங்களை காப்பி அடிப்பது பற்றி நல்லா தெரியும் அதே மாதிரி பாடல்களை காப்பி அடிப்பதும் நடக்கிறது. கீழே உள்ள Youtube பார்த்து நீங்களே தெரிஞ்சிகோங்க. யாரை பார்த்து யார் காப்பி அடிச்சி இருக்கான்னு. 


1.





2.










சாப்பாட்டு கடை


              
           கேபிள்சங்கர் நல்ல சாப்பாடு கடையா பார்த்து நமக்கு அறிமுகம் செய்றாரு ஏதோ  எனக்கு  தெரிஞ்ச கேவலமான ஒரு சாப்பாடு கடையை பத்தி எழுதுறேன் படிச்சி பார்த்து அந்த கடைல போய் சாப்பிடாதிங்க.

          கிண்டி போலீஸ் ஸ்டேஷன்க்கு எதிரில் அடுத்து அடுத்து இருக்கும் ரெண்டு ஹோட்டல மட்டும் தயவு செஞ்சு சாப்பிடாதிங்க. அங்க கிடைக்கும் பரோட்டா காஞ்சி போய் இருக்கும் தொட்டுக்க சால்னா குடுப்பாங்க பாருங்க அவ்வளவு கேவலமா இருக்கும், முடிஞ்சா அளவு அங்க சாப்பிடாதிங்க. அந்த கடையை தாண்டி கொஞ்ச நடந்து போனா இன்னொரு கடை இருக்கும் அங்க கொஞ்சம் பரவால (நல்லா படிங்க பரவால). பக்கத்துலையே தலப்பாகட்டு பிரியாணி கடை இருக்கு அங்க மட்டன் மட்டும் சாப்பிடாதிங்க. பிரியாணி விட பிரைட் ரைஸ் நல்லா இருக்கும்.
   


-- 

With Love

Romeo ;)

3 comments:

  1. கமல், உத்தமபுத்திரன் இசையமைப்பாளர் அவரின் அடுத்த படத்திற்கு இசை அமைத்தால், இவர்தான், இளையராஜாவிற்கு அடுத்து என்று சொல்லுவார்.

    ReplyDelete
  2. இப்படி ஒரு காபியா...அட...

    ReplyDelete
  3. உறுபசி கேட்டேன். ஸ்டாக் இல்லையாம்

    ReplyDelete