Monday, January 10, 2011

புத்தக கண்காட்சி


ரெண்டு வருஷமா பண்டிகை தினம், விடுமுறை தினம், பிறந்தநாள் தினம் போன்ற எதுவும் இவ்வளவு மகிழ்ச்சிகரமான நாளாக இருந்தது இல்லை எனக்கு. ஆனால் புத்தக கண்காட்சி தொடங்கும் நாளில் மட்டும் எங்கு இருந்து தான் இவ்வளவு மகிழ்ச்சி வருமோ தெரியாது. அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் அங்கு செல்லும் போது. 

கண்காட்சி தொடங்கி நாளில் இருந்து எதாவது ஒரு வேலை வந்து கண்காட்சிக்கு செல்ல  முடியாமல் போய் விட்டது. இன்று தான் அங்கு செல்வதற்கு நேரம் கிடைத்தது. 

மதியம் மூன்று மணி அளவில் அரங்கத்துக்கு சென்றேன் வாங்க போகும் புத்தகங்கள் முக்கால் வாசி இலக்கிய சம்பந்தப்பட்டதாக  இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே தான் சென்றேன். அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன் என்று நினைக்கிறேன். 

உயிர்மை, வம்சி, காலசுவடு போன்ற புத்தக கடைகளில் அதிகமான நேரம் கழிந்தது. 

அரங்கு எண்: 338 காவ்யா புத்தக கடையில் நிழலிரவு கண்ணில்பட்டது பதிவர் தமயந்தி எழுதிய புத்தகம் -  வாங்கிவிட்டேன் 

ஆண்டாள் திரிசக்தியில் பரிசலின் டைரி குறிப்பும் காதல் மறுப்பும் மற்றும் கேபிளின் மீண்டும் ஒரு காதல் கதை புத்தகம் கிடைத்தது - வாங்கிவிட்டேன்

எப்பொழுதும் போல கிழக்கு நன்றாக கல்லா கட்டி கொண்டு இருந்தது. 

இந்த வாரம் மறுபடியும் செல்வேனோ மாட்டேனோ அதனால் முடிந்த அளவு அள்ளிவிட்டேன். 

இன்று வாங்கிய புத்தகங்கள் எல்லாம் இந்த  ஒரு வருடம் (அதற்கு முன்பே)  படித்துவிடுவேன். வாங்கிய புத்தகங்களை படித்து அதை பற்றி விமர்சனம் எழுதவேண்டும். 


கோபல்ல கிராமம் - கி.ரா
கோபல்லபுரத்து மக்கள் - கி. ரா
அந்தமான் நாயக்கர் - கி. ரா
டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா 
மீண்டும் ஒரு காதல்கதை - கேபிள்
சினிமா வியாபாரம் - கேபிள் 
உணவின் வரலாறு - பா.ரா
முதல் உலகப்போர் - மருதன் 
முன்றாம் பிறை - மம்முட்டி - தமிழில் : கே.வி.ஷைலஜா
சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் கள்ளிக்காடு - தமிழில் : கே.வி.ஷைலஜா ௦
கள்ளி - வா.மு.கோமு
மண் பூதம் - வா.மு.கோமு
ஊமைச் செந்நாய் - ஜெயமோகன் 
தேகம் - சாரு 
வெட்டுப்புலி - தமிழ்மகன் 
நிழலிரவு - தமயந்தி 
ஏறக்குறைய உண்மைக் கதை - ரா. ஸ்ரீனிவாசன்
நெரிக்கட்டு - அழகிய பெரியவன்
நிழல் முற்றம் - பெருமாள் முருகன் 
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - வைக்கம் முகமது பஷீர் - தமிழில்: குளச்சல் மு. யூசுப் 
மதில்கள் -  வைக்கம் முகமது பஷீர் - தமிழில்: சுகுமாரன் 
சப்தங்கள் - வைக்கம் முகமது பஷீர் - தமிழில்: குளச்சல் மு. யூசுப்
பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் - தமிழில்:குளச்சல் மு. யூசுப்


 
-- 
With Love
Romeo ;) 



   

8 comments:

  1. சில புத்தகங்களைத் தவிர மற்ற அனைத்தும் எனக்கு புதியதே. உங்களின் விமர்சனத்திற்கு காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. @பின்னோக்கி உங்க நம்பர் எனக்கு மெயில் பண்ணுங்க . உறுபசி என்கிட்ட இருக்கு

    ReplyDelete
  3. விரைவில் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. நல்ல கலெக்ஷன்...படித்து விட்டு எழுதுங்கள்...

    ReplyDelete
  5. எப்ப வந்தீங்க ரோமியோ? சொல்லவே இல்லை...

    ஆண்டாள் திரிசக்தில இன்னொரு புக்கு வாங்கலையா?

    ‘நீங்கதான் சாவி’ சுரேகா எழுதியது!! :(
    என்ன பண்றது? சொல்லிச்சொல்லி விக்கவேண்டியிருக்கு!!

    ReplyDelete
  6. @ Chitra
    நன்றிங்க

    @ Cable
    கண்டிப்பா வரும் ..

    @ ஸ்ரீராம்
    நிச்சயமாக எழுதுகிறேன்


    @ சுரேகா
    அண்ணே நான் புத்தக கண்காட்சிக்கு எப்போ வருவேன்னு எனக்கே தெரியல. நான் வச்சி இருந்த லிஸ்ட்ல சில புத்தகங்கள் மிஸ் ஆகிடுச்சு. அதுல உங்க புத்தகமும் ஒண்ணு.
    புளியமரம்
    ஜே. ஜே. சில குறிப்புக்கள்
    ஜமீலா
    உங்க புத்தகம். இந்த வாரம் போனாலும் போவேன், கண்டிப்பா வாங்கி படிக்கிறேன்.

    ReplyDelete