Monday, January 24, 2011

தேகம் - சாரு நிவேதிதா

வதை என்பது கூட ஒரு கலைதான் அது வதைப்பதாக இருந்தால் !!! 

சாருவின் எந்த புத்தகத்துக்கும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு தேகம் நாவலுக்கு இருந்ததை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஆள் ஆளுக்கு அவர்களில் ரைட் லெப்ட்  பார்வையில் புத்தகத்தை பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை பதிவு செய்து இருகிறார்கள். அவர்களின் ஒருவனாக நானும் எனது ரைட் லெப்ட் பார்வையில் பதிவு செய்கிறேன்.  


ஒரு நாவலின் ஆரம்பம் என்பது வாசகன்/வாசகி கொஞ்சமாவது தெம்போடு தொடங்குவதற்கும் அதே தெம்பை அட்லீஸ்ட் பாதி புத்தகத்தை தாண்டி செல்லவாவது இருப்பது நல்லது. சாரு அதில் வல்லவர் என்பது அவரின் புத்தகங்களை படித்தவர்களுக்கு நன்றாக தெரியும். மற்ற புத்தகங்களை போலவே இதிலும் ஒபெனிங் நன்றாக இருக்கிறது. பாதி பக்கம் வரை நன்றாகவே போகிறது நடுவில் வண்டி ஏதோ மலைப்பாதையில் செல்வது போல செகண்ட் கியரில் இருபது கிலோமீட்டர் வேகத்தில் கர்புர் என்று மக்கார் செய்து கொண்டு செல்கிறது.

சாரு என்ன சொல்லவருகிறார்!!! வதை என்பது எங்கும்  எப்பொழுதும்  யாரவது ஒருவர் எதன் மீதோ அல்லது எவரையோ வதைத்து கொண்டு தான் இருகிறார்கள். பசி கூட ஒரு வித வதை தான், அது யாரோ விட்ட சாபமாக கூட இருக்கலாம். இந்த நாவலில் தர்மா வதைப்படுகிறான் அதேயே வேறு வழிகளில் மற்றவர்களுக்கு வதைக்கிறான். நாமும்   கூட அதில் அடக்கம் ஆகிறோம் தேகம் என்கிற இந்த நாவலின் மூலம். 

கைதேர்ந்த டார்ச்சர் செய்யும் நபராக தர்மா இருக்கிறான். ஒருவனை எப்படி எல்லாம் வதைக்கலாம் என்று லிஸ்ட் இல்லாமல் வதைக்கிறான். அப்படியே சின்ன வயசில் பன்னி பிடிக்க போன போது என்ன நடந்தது என்று ப்ளஷ்பேக்கு செல்கிறது. அதன் தொடச்சியாக நண்பன், காதலி, செலின், நேஹா, நாய் பாஸ்கர், நீதி, பிக் பாக்கெட், பேருந்தில் உரசுவது  என்று செல்கிறது.  நிகழ்காலம், இறந்தகாலம் என்று கதை அங்கே இங்கே என்று ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருக்கிறது. ஊஞ்சல் சில சமயம் நன்றாகத்தான் ஆடுகிறது. 

நாவில் மற்றும் குறியில் வளையம் மாட்டுவதை பற்றி ஒரு அத்தியாயத்தில் வருகிறது. இதுவரை யாரும் எழுதியது இல்லை என்று நினைக்கிறேன் (எனக்கு தெரிந்து) படிக்க படிக்க கொஞ்சம் டெர்ரர் ஆகத்தான் இருக்கிறது அத்தியாயம். கொஞ்சம் ஏமாந்தால் நமக்கே வளையத்தை மாட்டி விடுவார்களோ என்கிற ஐயம் ஏற்படுகிறது.

வழக்கம் போல இதிலும் மலம் வருகிறது. சாருவிற்கும் மலத்துக்கும் என்னதான்  சம்பந்தம் இருந்தாலும் எல்லாவறிலும் மலத்தை நுழைப்பது அருவருப்பை ஏற்படுத்துகிறது. உவ்வ உவ்வ 


ஒன்றை ஒருத்தரிடம் வாங்கி மற்றவரிடம் விற்பதை போல தான் இருக்கிறான் தர்மா. வாங்கிய வதைகளை எல்லாம் வேறு ஒருவரிடம் வேறு வழியில் வதைக்கிறார்.

ராஸ லீலா நாவலில் இருந்து சில பக்கங்களை திருத்தி எழுதியது போல தான் இருக்கிறது.  ராஸ லீலாவில் இடம்பெற்ற மின் அஞ்சல் கடிதங்களை போலவே இதிலும் பல கடிதங்கள். படிக்க படிக்க கொட்டாவி வருகிறது ஏற்கனவே படித்ததால் வந்த வினை என்று நினைக்கிறேன். அதே போல ஜீரோ டிகிரி நாவலில் முதலில் வரும் வாசகி என்ன செய்து கொண்டு இருப்பாள் என்கிற சின்ன சின்ன சம்பவங்கள் போல இதிலும் நேஹா தர்மாவிற்கு எழுதி இருக்கும் கடிதங்களில் இருந்து சிலவற்றை மட்டும் தொகுத்து உள்ளார். அதிலும் இதே போல சில இடம்பெறுகிறது. எக்சிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும் மற்றும் ஜீரோ டிகிரி நாவலின் நாயகன் சூர்யாவும் , ராஸ லீலா நாவலின் நாயகன் பெருமாலும் தான் இதில் தர்மா. ஏற்கனவே படித்ததை படித்தது போல தான் முக்கால் வாசி பக்கங்கள் இருக்கிறது. 

சாருக்கு ஒரு வேண்டுகோள். உலகம் உருண்டை என்று ஒரு அறிஞர் எப்பொழுதோ சொல்லிவிட்டார் அதை நீங்கள், நான், பாஸ்கர், கிருஷ்ணா அப்பறம் இந்த புத்தகத்தை வாங்கியவர்கள், விற்றவர்களுக்கு எல்லாம் தெரியும். அதனால் தயவு செய்து இனி மந்தைவெளி,சேரி, பாரிஸ், பீச் போன்ற அரது பழசான இடங்களை வரும் நாவல்களில் தவிர்க்கவும். அதே போல கதாபாத்திரத்தின் பெயர்களும் ஆழ்வார்,கிருஷ்ணா போன்ற பெயர்களுக்கு எப்பொழுது தான் விடிவுகாலம் பிறக்குமோ.


சாரு எழுதிய நாவல்களில் எக்சிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும் மற்றும் ஜீரோ டிகிரி எனக்கு பிடித்த நாவல்கள். இதில் ஜீரோ டிகிரி மாஸ்டர் பீஸ் என்பேன். நாவல்களை விட கட்டுரை தொகுப்பு வெகு அருமை, கடவுளும் நானும் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும் சலிக்கவே சலிக்காது. கொஞ்சம் போலவே என்னால் அந்த புத்தகத்தை பற்றிய எனது ரைட் பார்வையில் எழுதிள்ளேன். லெப்ட் பார்வையில் இன்னும் கொஞ்சம் எழுதவேண்டும்.


ஒரு புத்தகம் வாசகனை அடைவதற்கு முன்னால் பைண்டிங் எப்படி இருக்கிறது என்று உயிர்மை பதிப்பம் சோதித்தால் நன்று. தேகம் நாவலை இன்னும் இரண்டு முறை பிரித்து படித்தால் நிறைய பக்கங்கள் கையில் வந்துவிடும் என்று நினைக்கிறேன். பசை சரியாக ஒட்டவில்லை, எனது புத்தகத்தில் சில பக்கங்கள் அப்படிதான் இருக்கிறது. ராஸ லீலா புத்தகத்தின் நிலைமையோ ரொம்ப டேஞ்சர். கடைசி கால்வாசி பக்கங்கள் முதல் வாசிப்பிலே  கையில் தனியாக வந்துவிட்டது. 


சில உண்மைகளை பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும். தேகம் என்னை பொறுத்தவரை அவ்வளவு ஒர்த்து இல்லை. காமருப கதைகள் நாவலை போல.


--
With Love
Romeo ;)

7 comments:

  1. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம், பயனுள்ள பதிவு

    ReplyDelete
  3. அதைத்தான் நான் முன்னமே சொன்னேனே...

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  4. நண்பா,
    சூப்பரான விமர்சனம்.
    இதே தான் என் கருத்தும்,ஆனால் இது ஆட்டொஃபிக்‌ஷன்,நிறைய முறை மீள்வாதிப்பு செய்தால் தான் புரியும் என்கிறார்கள்.அதையும் பார்ப்போம்.

    ReplyDelete
  5. @Gopi Ramamoorthy - உங்கள் கருத்துக்கு நன்றி பாஸ் .

    @ராம்ஜி_யாஹூ - உங்கள் கருத்துக்கு நன்றி பாஸ் .

    @ Cable - கரெக்ட் தான் தலைவரே

    @ கீதப்ப்ரியன் - இல்ல பாஸ், ஒரு முறைக்கு மேல் இதை மீள் வாசிப்பு செய்தாலும் பழைய புத்தகங்கள் தான் நியாபகத்துக்கு வருகிறது. ஆட்டோ பிக்சன் என்றாலும் மனதில் கொஞ்சம் கூட ஒட்டவில்லை.

    ReplyDelete
  6. சொன்னத கேக்காம கண்டத படிச்சா இப்படித்தேன் :)

    ReplyDelete