Saturday, January 29, 2011

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா


தமிழ் பதிவர்கள் உலகில் பரிசல் கிருஷ்ணா ரொம்ப பிரபலமானவர் என்று சொல்ல வேண்டியது இல்லை. தனது அனுபவங்களை சுவைப்பட எழுதுவதில் வல்லவர். அவரின் அவியல் என்கிற பகுதியை ரொம்பவே ரசித்து படிப்பேன். 

மேலே உள்ள வரிகள் எல்லாம் அவரின் பதிவுகளால் கவரப்பட்டு எழுதியது. 

ஆனால் ஒரு புத்தகத்தின் ஆசிரியராக !!!  மிகவும் ஏமாற்றம் கொள்ள செய்துவிட்டார். 
தொகுப்பில் உள்ள பதினேழு சிறுகதைகளில் தேறுவது என்னவோ ஐந்து கூட இருக்காது என்பது வேதனை. 



புத்தகத்துக்கு அறிமுக உரை எழுதி இருக்கும் சுரேகா பரிசலில் நண்பர் என்கிற அளவில் எழுதி இருக்கார். அறிமுக உரை எல்லாம் நன்றாக தான் இருக்கிறது, இந்த புத்தகத்தை வேறு யாராவது ஆசிரியர் யார் என்றே தெரியாத ஒரு கவிஞரிடம் குடுத்து அறிமுக உரை எழுத சொல்லுங்கள் அதில் தான் உண்மை இருக்கும். 

புத்தகத்தை படிக்க படிக்க இவரின் பதிவுக்கும் கதைக்கும் ஆயிரத்து எட்டு சம்பந்தம் இருப்பதை போல தான் இருக்கிறது. தனித்துவம் என்பதே இல்லாமல் பதிவு எழுதுவதை போல கதைகளை எழுதி உள்ளாரா அல்லது ஒரே விதமான நடையை தாண்டி எழுத முடியவில்லையா !!!! கிருஷ்ண என்கிற பெயரை படிக்கும் போது எல்லாம் பரிசல் வாழ்கையில் நடந்த சம்பவங்களில் இதுவும் ஒன்று போல. அதையும் கதையாகி இணைத்து இருக்கிறார் என்கிற அளவில் நினைவு வருகிறது. இது கதையின் போக்கை வெகுவாக பாதிக்கிறது.  

கதைகள் எல்லாம் வாரமலர், குமுதம் புத்தகத்தில் வரும் ஒரு பக்க கதை அப்பறம் நீதி கதை போன்றவற்றுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. அந்த கதைகளை படிக்கும் போது வரும் கடுப்பை ஏன் காசு குடுத்து வாங்க வேண்டும் என்று இந்த மாதிரியான  புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தி கொண்டேன். அவைகள் விட்ட சாபம் என்று தான் நினைக்கிறேன் டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் புத்தகத்தில் மாட்டி கொண்டேன். 

பதிப்பக உரிமையாளர் குகன் பதிவர்களை மட்டுமே நம்பினாரோ என்னவோ அந்த கிருஷ்ண கடவுளுக்கு தான் தெரியும். 

புத்தகத்தில் எனக்கு பிடித்தது காதல் அழிவதில்லை, ஜெனிபர் மற்றும் பெயர் மறந்து போன இரண்டு கதைகள். அவ்வளவே !!! ஒரு கதையை படித்தால் கொஞ்ச நேரமாவது நமது மனதில் ஓட்ட வேண்டும். ஆனால் இங்கேயோ எப்போடா முடியும் அடுத்த கதைக்கு போலாம் என்கிற அவசரம் ஏற்படுகிறது.

பரிசலுக்கு இது முதல் புத்தகம் என்பதால் தவறுகளை மறப்போம் மன்னிப்போம் . ஆனால் பதினெட்டு வருஷம் எழுதி கொண்டு வருகிறார் என்கிறபோது இவ்வளவு வருஷம் எழுதி இவ்வளவு தானா முதல் புத்தகத்தில் கொண்டு வர முடிந்தது என்கிற எண்ணம் தோன்றுவதை நிறுத்த முடியவில்லை !!! 

எங்கே தவறு என்று கண்டுபுடியுங்கள் அதை எல்லாம் தவிர்த்து முற்றிலும் வேறுவிதமாக ஒரு நாவலையோ அல்லது சிறுகதை தொகுப்பையோ வெளியிடுங்கள்  வெற்றிபெறுங்கள். 



--
With Love
Romeo ;)



3 comments:

  1. இடிப்பரைப் இல்லா ஏமரா மன்னனும்
    கெடுப்பா ரிலினும் கெடும்.

    பரிசலின் மேல் அக்கறை கொண்ட உண்மையான நண்பர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

    ReplyDelete
  2. உங்கள் வாசிப்பும் புத்தக விமர்சனங்களும் மலைக்க வைக்கின்றன நண்பா.தொடர்ந்து பணியாற்றவும்

    ReplyDelete
  3. // பதிப்பக உரிமையாளர் குகன் பதிவர்களை மட்டுமே நம்பினாரோ என்னவோ அந்த கிருஷ்ண கடவுளுக்கு தான் தெரியும். //

    ஒவ்வொரு புத்தகமும் ஆசிரியருக்கு மட்டுமல்ல, பதிப்பாளருக்கும் சோதனை முயற்சி தான்.

    தங்களின் நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி !

    ReplyDelete