Friday, February 25, 2011

சங்கதிகள் 25-02-2011

பல்வேறு எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் அடுத்து அடுத்து வித்தியாசமான கதையம்சம்  உள்ள புத்தகங்களை படிப்பது நல்லா தான் இருக்கு. இனி புத்தகத்துக்கு முக்கிய இடம் குடுத்து பதிவு எழுதவேண்டும் என்று நினைத்து உள்ளேன். மகாவும் ஜூனியரும் 20 நாள் ஊருக்கு போய் இருந்த சமயத்துல 12  புத்தகம் படிச்சேன். அவங்க திரும்ப வந்து ஒரு மாசம் ஆகா போகுது ஒரே ஒரு புத்தகம் தான் படிச்சி முடிச்சி இருக்குறேன் :(. இதை மகா கிட்ட சொல்லி புலம்பினா இதான் சாக்குன்னு நான் வேணும்னா அம்மா விட்டுக்கு போகட்டுமான்னு கேக்குற. 


----------------------------------------------------------------------------------------------------------------------------------
  
தேகம் பதிவை சாருவிற்கு அப்படியே மெயில் பண்ணினேன் அவரின் நாவலை எப்படி வேண்டும் என்றாலும் விமர்சனம் செய்யலாம் என்று பதில் வந்தது ஆனால் அவரின் ப்ளாகில் எனது விமர்சனத்தை பற்றி மூச் விடவில்லை. ஜால்ரா அடித்தால் மட்டுமே அது எல்லாம் சாத்தியப்படும் என்று தேகத்தை நடு மண்டையில் வைத்து கொண்டாடுபவர்களின் பதிவின் லிங்க் குடுக்கும் போது தான் தெரிகிறது (இதில் லக்கி விதிவிலக்கு, தேகத்தை பற்றி அவரின் விமர்சனத்தில் நிறையவே  உடன்படுகிறேன்). பரிசல் கிருஷ்ணாவிடம் இருந்து ஒரு பின்னுடமாவது  வரும் என்று நினைத்தேன். பச் இல்லை, ஆனால் குகனின் பின்னுடத்தில் நான் வைத்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் தந்து இருக்கிறார். 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்னதுக்கும்  அதிகமா பெரும் மொக்கை போட்டு  கொண்டு இருந்த இரண்டு பதிவர்களை கூகுள் ரீடரில் பிளாக் செய்துவிட்டேன். யப்பா ஏன் இந்த கொலைவெறி என்று தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு பதிவை கண்டிப்பா போட்டே ஆகவேண்டும் என்று எதாவது வேண்டுதலா  என்று தெரியவில்லை. தினமும் கூகுள் ரீடரில் அந்த பதிவரின் புதிய பதிவின் பெயரை கண்டாலே செம எரிச்சல் ஆகிறது. ப்ளாக் என்பது ஒருவித போதை என்று கூட சொல்லலாம். முதலில் எழுத எழுத நாம் ஏதோ எழுத்தாளன் ஆகிக்கொண்டு வருகிறோம் என்று நினைப்பு வந்து அதற்கு நாம் அடிமை ஆகிவிடுகிறோம். கொஞ்ச நாள் சென்ற பிறகுதான் அவர்களின் நிலைமை புரியும். பின்னுடம் எல்லாம் போதைக்கு ஊறுகாய் என்று இப்பொது தெரியாது. தெரிந்த பிறகு நான் சொன்னது எவ்வளவு உண்மை என்று புரியும். பதிவு எழுதுங்க அது உங்கள் விருப்பம் ஆனால் உங்கள் பதிவே மற்றவர்கள் உங்களை திட்டும் அளவுக்கு தாழ்த்தி கொள்ளாதிர்கள்.  புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி.  

----------------------------------------------------------------------------------------------------------------------------------

எங்க ஏரியால இறந்து போன ஒரு நண்பனுக்காக அவரின் நண்பர்கள் அவருக்கு 15ஆம் நினைவு நாள் அன்று மெயின் ரோடுக்கு பக்கத்தில் எல்லோருக்கும்  கண்ணில் படுவதை போல பெரிய  ப்ளெக்ஸ் போர்டு வைத்து இருகிறார்கள்.கொடுமை என்னவென்றால் நண்பனுக்கு அஞ்சலி செய்கிறேன் என்று நினைத்து அவனை காமெடி பீஸ் ஆக்கியது தான்.   இறந்து போன அந்த இளைஞனின் வயதோ 20 கூட இருக்காது. அவரின் முகத்தை மட்டும் வெட்டி எடுத்து அழகிய தமிழ் மகன் படத்தின் இரண்டு மூன்று போடோக்களை கிராபிக்ஸ் செய்து அதை பெரிய பெரிய போர்டுகளாக்கி  மெயின் ரோட்டில் வைத்து உள்ளார்கள். ஒவ்வொரு முறை அந்த இடத்தை கடந்து செல்லும் போது எல்லாம் இது என்னடா காமெடி என்று நினைக்க தோன்றுகிறது. எனக்கு மட்டும் இல்லை எனது நண்பர்கள் சிலரும் இதை பார்த்து இது என்ன காமெடியா இருக்கே என்று சொன்னார்கள்.  முதலில் எல்லாம் கண்ணீர் அஞ்சலி என்று கருப்பு வெள்ளை போஸ்டர் சில இடத்தில் தென்படும். டெக்னாலஜி உயர உயர அஞ்சலி முறையும் மாறுகிறது. 

இவர்கள் என்று இல்லை வட சென்னை முழுக்க இந்த ப்ளெக்ஸ் போர்டு கலாசாரம் புற்றிசல் போல முளைத்து இருக்கிறது. ஒரு வீட்டில் நல்லதோ கேட்டதோ எது நடந்தாலும்  மற்றவர்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. மெயின் ரோட்டில் அந்த நிகழ்வை பற்றி ஒரு ப்ளெக்ஸ் போர்டு கண்டிப்பாக இருக்கும். கல்யாணம் என்றாலும் சரி கருமாதி என்றாலும் சரி. என்னுடன் ஸ்கூலில் ஒன்றாக படித்த நண்பனின் புகைப்படத்தை ஒரு கல்யாண மண்டபத்தின் வாசலில் பார்த்து தான் அவனுக்கு கல்யாணம் என்று தெரிந்து கொண்டேன். 

----------------------------------------------------------------------------------------------------------------------------------


இரண்டு வாரத்துக்கு முன் நடந்த தோல் பொருள் கண்காட்சியில் பங்கேற்க நண்பர்கள் எல்லாம் சென்னை வந்து இருதார்கள். அப்போ ஒரு நாள் நைட் கிண்டில இருக்குற டாஸ்மாக் ஷாப்ல எல்லோரும் மீட் பண்ணோம். ஒரு நண்பன் AC பாருக்கு போகலாம்ன்னு சொல்லிட்டு முதலில் போய் டோக்கன் வாங்கிட்டு வந்தான். ஒரு ஆளுக்கு 20 ருபாய், அதும் ஒரு மணி நேரத்துக்கு தான். அதுக்கு அப்பறம் அங்க போய் சீட்ல பத்து பேரும் உக்காந்து இருந்தோம். பார் அட்டண்டர் ஒருத்தன் வந்து என்ன வேணும்ன்னு தூய சென்னை பாஷைல பேசுனான். பீர் ஆர்டர் பண்ணணுங்க. நான் அன்னிக்கு ஆபீஸ் போயிட்டு இருந்தேன் போற வழியில இவ்வங்கள பார்க்கலாம்ன்னு தான் வந்தேன். வந்த எடத்துல இந்த கொடுமை எல்லாம் பார்கவேண்டியாத இருந்துச்சு. ஒரு பீர்ரின்  ஒரிஜினல் விலை 70 ரூபா தான், அங்கேயோ 95 ரூபா !!!.. அடபாவிங்களா இப்படி கண்ணனுக்கு முன்னாடியே கொள்ளை அடிகிறான்களேன்னு நொந்து போய்ட்டாங்க பசங்க எல்லாம். இதுக்கு பக்கத்துல இருந்த ZEN Garden போங்கடா சொல்லிட்டு வந்தேன். வைன் ஷாப் எல்லாம்  பேசாம பிரைவேட் பார்டிங்க கிட்டயே இருந்து இருக்கலாம். 


இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் " நான் தண்ணி அடிக்கிறது இல்லை" என்பது தான். 


கேட்ட செய்தி நான் சொன்னதை என்னோட நண்பர்கள் ஒருத்தனும் நம்பவே இல்ல !!!  

----------------------------------------------------------------------------------------------------------------------------------
சித்த வைத்தியம் என்றாலே அஜால் குஜால் மேட்டருக்கு வைத்தியம் பார்க்குறதுன்னு ஒரு தோற்றம் உருவாகிவிட்டது போல இருக்கே இல்ல இந்த சேலம் வைத்தியர் சித்த வைத்தியம் என்றாலே அதுக்கு தான் என்பது போல டிவில பேசி பேசி மக்களை அந்த மனநிலைக்கு கொண்டு வந்துட்டாங்களா!!!!. ராத்திரி பத்து மணிக்கு மேல முக்காவாசி டிவில சித்த வைத்தியம் பத்தி தான் பேசிட்டு இருக்காங்க. முக்கியமா அஜால் குஜால் மேட்டர் தான். எல்லாத்துக்கும் டிவி சேனல் வந்தது மாதிரி இவங்களுக்கும் ஒரு சேனல் வந்துட்டா நல்லா இருக்கும்.




சினிமா தெரியுமா நிகழ்ச்சியை போல தினமும் ஜோதிட பலன்னு ஒரு நிகழ்ச்சி ராஜ் டிவில  போடுறாங்க. ஒரு அம்மிணி கைல பெரிய சீட்டு கட்டை வச்சி போன் பேசுறவங்க கிட்ட பேரு, வயசு, இடம் எதுவும் கேக்குறது இல்ல. அவங்க கிட்ட பிரச்னையை மட்டும் சொன்னா போதும் அங்க முன்னாடி பரப்பி வச்சி இருக்கும் சீட்டு கட்டுல இருந்து நாலு கார்ட்டை உருவி  அவங்க பலன் சொல்ல ஆரமிச்சிடுவாங்க. இது என்னடா டகால்டின்னு கொஞ்ச நேரம் பார்த்தேன், புளுகு முட்டையை அவுத்து விடுறாங்க பாருங்க கேக்க கேக்க டெர்ரரா இருக்கு. தமிழ்நாடு ஆளுங்க பார்த்தா என்ன கேணயனா தெரியுதா ?? விட்டா உங்க பட்டாப்பட்டி கலர் மட்டும் சொல்லுங்க உங்க எதிர் காலம் எப்படி இருக்குன்னு அடுத்து வேற எவனாவது சொன்னாலும் சொல்லுவாங்க. இந்த மாதிரியான வெத்துவேட்டு  நிகழ்ச்சியை ஒளிபரப்பி தங்கள் நிறுவனத்தின் பெயரை ராஜ் டிவி கெடுத்துட்டு இருக்குறாங்க.   










--
With Love
Romeo ;)

5 comments:

  1. பகிர்வுக்கு நன்றி. சாரு எப்போவுமே அப்படித் தான். .. அதனாலே பேசப்படுகிறார். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நண்பா
    நல்லாருக்கு,இதுபோல வாரம் ஒண்னு எழுதிடவும்,ஆமாம் யாரு அந்த பிரபல பதிவர்கள் இருவர்?எனக்கு மட்டும் சொல்லுங்க.என்ன?மேலும் அந்த ஃப்லெக்ஸ் போர்டை போட்டொ எடுத்து பகிர்ந்தால் நன்றாயிருக்கும்.லேட்டஸ்ட் கூத்துகள் பற்றி அப்டேட் கொடுங்க என்ன?

    ReplyDelete
  3. நண்பா,
    சாரு என இல்லை,தான் கொஞ்சம் பிரபலம் என்று தன்னை எண்ணிக்கொண்டிருக்கும் யாருமே நெகடிவ் விமர்சனங்களை எதிர்கொள்ள மாட்டார்கள்.நண்பா தேகம் புத்தகம் பற்றி ஒரு மதிப்புரையை நான் படித்தேன்,http://koodu.thamizhstudio.com/nool_thiranaaivu_21.php அதன் பின்னர் அதை மீண்டும் வாசியுங்கள்,உங்களுக்கு என்ன தோணுகிறது என பட்டென சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. புரிந்தது புரிந்தது. இனிமேல் உளறலை குறைக்கிறேன். மற்றபடி பதிவு அருமை.
    //இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் " நான் தண்ணி அடிக்கிறது இல்லை" என்பது தான்.//
    ஒரு கெட்டபழக்கமாவது அவசியம் மனுழனுக்கு. பாத்து செய்ங்க. ;-)

    ReplyDelete
  5. /இது என்னடா டகால்டின்னு கொஞ்ச நேரம் பார்த்தேன், புளுகு முட்டையை அவுத்து விடுறாங்க பாருங்க கேக்க கேக்க டெர்ரரா இருக்கு./
    ட்ரரா???செம காமெடியா இருக்கு!

    ReplyDelete