காலை ஒன்பது மணிக்கு எழுந்துக்கும் போது முந்தன இரவு அடித்த மானம்கெட்ட ஓல்ட் மாங்க் தரும் எப்பெக்ட்எப்படியோ அப்படி இருந்தது ஹாங்ஓவர்.. ரொம்ப நேரம் தூங்கினால் ஏற்படும் கிர்ர்ர்ர் தான். இன்று அமாவாசை ஆதனால் வீட்டில் அசைவம் இல்லை என்கிற விதியை மாத கடைசி ஆனதால் கண்டிப்பாக இருவரும் கடைபிடித்தோம். காலை உணவு ராகி கஞ்சி ஜூனியருடன் கொஞ்சம் விளையாட்டு அப்படியே கொஞ்ச நேரம் வண்டியில் ரவுண்டு அடித்து கொண்டு இருந்தோம். மதியம் சாப்பாடு சாம்பார், ரசம், அப்பளம் அப்பறம் வீட்டின் அருகில் இருந்த மாரியம்மன் கோவிலில் ஊற்றிய கூல் வித் முருங்கை கீரை பொரியல் (இந்த காம்பினேஷன் எவன் கண்டுபுடிச்சான்னு தெரியல, எப்படி குடிச்சாலும்/ சாப்பிட்டாலும் ரெண்டும் வேறு வேறு டேஸ்ட் தான் தெரியுது) பிறகு குட்டி தூக்கம். சாயந்திரம் எங்காவது செல்வது என்று தீர்மானித்து பிறகு மாத கடைசி என்பதால் முவரும் எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் சிப்ஸ் உடன் அந்த மாலை பொழுதை கழித்தோம். சிறிது நேரம் கலைஞர் டிவியில் ராமன் தேடிய சீதை படம் பார்த்து கொண்டு இருந்தேன், படம் எனக்கு பிடித்திருந்தது மகாவுக்கு பிடிக்கவில்லை என்பதை அவள் அடிகடி படத்தை பற்றி கொடுத்த கமெண்ட் முலம் தெரிந்து கொண்டேன். இரவு எட்டு மணிக்கு தோசை என்கிற வஸ்துடன் தேங்காய் சட்னி வந்தது. பத்து மணியளவில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகி கொண்டு இருந்தது அன்றைய டைடில் சைவம் வெர்சஸ் அசைவம் அட போடாங்க ____ ... டிவியை ஆப் செய்து விட்டு கொஞ்ச நேரம் புத்தகம் படிக்கலாம் என்று ஆனந்த விகடன் எடுத்தேன் சொல்லி கொள்வது போல இந்த வாரம் சுவாரஸ்யமாக இல்லை. வேற ஏதாவது படிக்கலாம் என்று தேடிய போது சிக்கியது பணம். புத்தகத்தை பற்றி விமர்சனம் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன் . முடிந்தவரை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் செந்தில், நான் என்பது யார் என்று தான் தெரியவில்லை. இந்த நான் படுத்தும்பாடுதான் பெரும்பாடாக இருக்கிறது அதற்கு பதில் ஏதாவது கதாபாத்திரத்து பெயர் வைத்து எழுதி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஒரே அடியாக எல்லாவற்றையும் சொல்லாமல் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று எகிறி குதித்து குதித்து செல்வதால் இது என்ன வகையான புத்தகம் என்கிற சந்தேகம் வருகிறது. அடுத்ததாக வேறு புத்தகம் போடும் ஐடியா இருந்தால் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா கையாளுங்கள் . இரவு ஒரு மணியளவில் தூக்கம் வந்தது, அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கே எழுந்தேன் இப்போதும் தலை கிர்ர்ர்ர்ர் என்று சுற்றியது,
நைட் சரியா துங்கல பாஸ் அதான் :)
தூக்க கலக்கத்துல டைரில எழுத வேண்டியத பதிவா போட்டுட்டீங்க போல...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎனது டைரி இது தானே ..
ReplyDelete