சனிக்கிழமை வீட்டுக்குள் போன போதே மகாகிட்ட இன்னைக்கு கண்டிப்பா போட்டோ எடுக்க போறோம்ன்னு சொன்னேன். ஏதோ பெரிய ஆச்சரியம் போல என்னைய பார்த்தா. விஷயம் இல்லமா இல்ல, ஜூனியர் பிறந்து ரெண்டு வருஷம் ஆகா போகுது. இந்த இடப்பட்ட காலத்துல மகா எத்தனையோ முறை சொல்லிட்டா. ஒரு பேமிலி போட்டோ எடுக்கணும், அதை ப்ரேம் பண்ணி வீடு ஹால்ல மாட்டி வைக்கணும்ன்னு. நானும் இதோ அதோன்னு சொல்லி ரொம்ப நாள் கடத்திட்டேன். நிறைய நாள் மறந்துட்டேன் என்பது தான் உண்மை. சாயந்திரம் குடும்பத்தோட போட்டோ எடுத்துட்டு பிக் பஜார் போயி வீட்டுக்கு வேண்டியது எல்லாம் தூக்க முடியாம தூக்கிட்டு வந்தோம். வரும் போது திருவொற்றியூர்ல இருக்கும் ஹைதராபாத் பிரியாணி கடைல கிரில் சிக்கன், பட்டர் நான் அப்பறம் எக் செட்டிநாடு கிரேவி வாங்கிட்டு வந்தோம்.
ஒரு நாள் நானும் பிரபாகரும் படத்துக்கு போகும் போது சொன்னான் மச்சி அந்த கடைல வாங்கி சாப்பிட்டு பாரு நல்லா இருக்கும். வாரத்துக்கு ரெண்டு இல்ல முணு நாள் நான் பசங்களோட அங்க போயி சாப்பிடுவேன்னு. கோயம்புத்தூர்ல இருந்த வரைக்கும் நானும் சுரேஷும் அடிகடி ஹோப் காலேஜ் பக்கத்துல இருக்குற கிரில் சிக்கன் கடைல போயி சாப்பிடுவோம். நூறு ரூபா இருந்தா போதும் ஒரு முழு சிக்கனை பாதி பாதி வெட்டி முழுங்கிடுவோம். ரொம்ப நாளா அந்த சந்தர்பம் கிடைக்கல, கோவை போனாலும் ஏதாவது வேலையா போகவேண்டி இருக்கு அது முடியவே நேரம் ஆகிடும் அதனால அதிகமா அந்த சைடு போறதுக்கு டைம் இருக்கிறது இல்ல. போன முறை போன போ எப்படியாவது சாப்பிடனும்ன்னு நினைச்சேன், அந்த நேரம் பார்த்து காசு இல்ல. ஆனா சுரேஷ் இருந்தான். வாடா நண்பா ஒரு கோழியை முழுங்கிட்டு வரலாம்ன்னு அவனை இழுத்துட்டு சரவணம்பட்டில இருந்த ஒரு கடைக்கு போனேன். அது ஒரு மலையாளத்தான் நடத்துற கடை, ஒரு கிரில் சிக்கன் ரேட் கேட்டா இருநுறு ரூவான்னு சொல்லுறான். என்னடா ரேட் எல்லாம் தாறு மாறா ஏறி இருக்கேன்னு அவன் கிட்ட கேட்டேன். கடைசியா எப்போடா சாப்பிட்டன்னு அவன் கேக்க யோசிச்சி பார்த்து அஞ்சு வருஷம் இருக்கும்ன்னு சொன்னேன். என்னைய முறைச்சி பார்த்தான், சரி விடுடான்னு டாபிக் மாத்திட்டேன், பயபுள்ள இல்லைனா ஹோட்டல்ன்னு கூட பார்க்காம அசிங்க அசிங்கமா திட்டி இருப்பான். ஒரு கோழியை வாங்கி ரெண்டு பேரும் சாப்பிட்டோம், ஆஹா என்ன டேஸ்ட் என்ன டேஸ்ட், ஒரு வித ஜூசியா வாயில ஊரும் பாருங்க அட்டகாசமா இருக்கும்.
அந்த நியாபகத்துல இங்க வாங்கின கிரில் சிக்கனில் ஒரு பர்சன்டேஜ் கூட இந்த கடைல இல்ல. ஏதோ மசாலாவை தடவி இருக்கானே தவிர அது நல்லா முத்தின கோழி போல நல்லாவே இல்ல. ஏன்டா வாங்கினோம்ன்னு வெறுப்பா இருந்துச்சு. கடைசில எங்க டம்மிக்கு அன்னைய நைட் நல்ல வேட்டையா இருந்துச்சு. சாப்பிட்டு பிரபாகருக்கு போன் பண்ணேன், லைன்ல வாடா மவனே உனக்கு இருக்குன்னு. அவன் போன் எடுக்கவே இல்ல சரின்னு விட்டுட்டேன்.
நேத்து காலைல பிரபாவே போன் பண்ணி இருந்தான். டேய்ன்னு சவுண்ட் விட்டேன் ஆனா அவனோட வாய்ஸ் ரொம்ப மாறி இருந்துச்சு, என்னடா உடம்புக்கு முடியலையான்னு கேட்டேன். பெரிய ஆஸ்பத்திரில இருக்கேன்டா, ரெண்டு முணு நாளைக்கு முன்னால அப்பாக்கு சீரியஸ் ஆகிடுச்சு. அதனால அப்பா கூட இருக்கேன்னு சொன்னான். பிரபாக்கு அம்மா இல்ல, அவன் அம்மாக்கு சுகர் இருந்துச்சு அதனால ஹார்ட் அட்டாக் வந்து இறந்த சமயத்துல அந்த அதிர்ச்சி தாங்க முடியாம அவன் அப்பாக்கு ஸ்டோக் வந்துடுச்சு. முளைல எதோ பாதிப்பு ஏற்பட்டு ரொம்ப முடியாம இருந்தாரு, போன வாரம் பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததுல இப்போ திரும்ப அந்த பாதிப்பு வந்துடுச்சு. அஞ்சு நாளா ஹாஸ்பிட்டல இருக்காரு எந்த முன்னேற்றமும் இல்ல கேக்கவே கஷ்டமா இருந்துச்சு.
சிக்கன் பத்தி பேச நினைச்சு போன் பண்ணே, ஆனா இப்படி ஒரு நிலைமைல இருப்பான்னு நான் நினைச்சி கூட பார்க்கல. இன்னைக்கு மதியம் அவங்க அப்பாவை பார்க்க போறேன் ஆண்டவா அவர் நலம் பெற அருள்புரியும்.
--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)
பிரார்த்தனைகள்!
ReplyDeleteசுவாரசியமாக தொடங்கி கவலையில் முடித்து விட்டீர்களே. இருப்பினும் வாழ்க்கையின் உண்மை நிலை தேற்றிகொள்வதை தவிற வேறு வழி இல்லை!!!
ReplyDeleteWe pray for his speedy recovery. Keep us posted.
ReplyDelete