ஆங்கில மோகம் நம்மை சிறுவயதில் இருந்தே பிடித்து கொண்டு இருக்கிறது. ஆங்கில பாடம், ஆங்கில படம் என்று ஆங்கிலம் நம்மை அறியாமலே உள்ளே புகுந்து கொள்கிறது. கேபிள் டிவியின் புண்ணியத்தில் ஸ்டார் டிவியின் உபயத்தில் புரியாத வார்த்தைகளை கேட்டு கேட்டு ஓரளவுக்கு இப்போது புரிந்து கொள்ள முடிகிற சூழ்நிலையில் இருக்கிறேன். என்ன போலவே நிறைய பேர் இருப்பதால் இருக்கிறோம் என்று கூட படிக்கலாம்.
AXN தொலைக்காட்சி வந்த புதியதில் நிறைய படங்களை ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தார்கள். கொஞ்ச நாட்களில் அந்த தொலைகாட்சியை பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்போது சில மாதங்களாக எங்கள் ஏரியாவில் தெரிகிறது ஆனால் பழைய AXN இப்போது இல்லை. படங்கள் போடுவதே வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ தான் மற்றபடி அமெரிக்க, இங்கிலாந்த் நாட்டில் சக்கை போடு போட்டு கொண்டு இருந்த இருக்கும் நிகழ்ச்சியை தான் ஒளிபரப்பு செய்கிறார்கள். முடிந்து போன நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் போது அதன் வீடியோ YOUTUBE வெப்சைட்டில் முழுவதுமாக பார்த்து விடலாம். அதனால் அந்த நிகழ்ச்சியின் டெம்போ குறைந்து விடுகிறது, ஆனால் தற்சமயம் The X- Factor என்கிற நிகழ்ச்சியை அமெரிக்காவில் ஒளிபரப்பு ஆனா அடுத்த நாளே இங்கு பார்க்க முடிகிறதால் அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் போல தான் ஆனால் வயது வரம்பு கிடையாது. முதலில் நடத்தப்படும் ஆடிஷனில் தேர்வாகும் நபர்களை அடுத்து Boot Campக்கு செல்கிறார்கள். இதில் நான்கு பிரிவு பிரிக்கபடுகிறது,
BOYS
GILRS
GROUPS
OVER 30'S
இதில் இருந்து எட்டு பேர் தேர்ந்துடுக்கப்பட்டு Judge House செல்கிறார்கள் அதில் இருந்து ஒவ்வொரு பிரிவில் இருந்தும் நான்கு பேர் அடுத்து அடுத்து லைவ் ஷோ நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் Mentor என்று ஒருவர் இருப்பார். அவர் இவர்களை வழிநடத்தி அடுத்த அடுத்த போட்டிகளுக்கு தயார்படுதுவார்.
முதல் நாள் போட்டியாளர்கள் லைவ் ஷோவில் தங்கள் திறமையை காட்ட அதற்கு பொதுமக்களிடம் இருந்து வரும் வாக்கு பொறுத்து அடுத்த கட்டத்துக்கு நகருவார்கள். வாரம் ஒருவர் வெளியேறி கொண்டு இருப்பார்கள், சில வாரம் பழைய போட்டியாளர் ஒருவர் திடீர் என்று உள்ளே புகுந்து கொள்வார். இப்படியே கடைசி போட்டியில் வெற்றிபெறும் நபருக்கு ஐந்து மில்லியன் மதிப்புள்ள ஆல்பம் தயாரிக்க வாய்ப்பு தரப்படும்.
நான்கு ஐந்து வருடங்களாக நடைபெற்று கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சி முதல் முறையாக தற்சமயம் அமெரிக்காவில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரமித்தது முதல் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. நிகழ்ச்சியில் முக்கியமானவர் SIMON என்கிறவர். இந்த நிகழ்ச்சியை பங்குபெற்றவர்கள், பார்த்தவர்கள், தோல்வியுற்றவர்கள் எல்லோர் பாராட்டும் சாபமும் பெற்ற நபர். தற்சமயம் இங்கிலாந்த் நாட்டிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜட்ஜஸ் செய்யும் அழிச்சாட்டியம் போல இங்கே இல்லை. சுருதி சரியில்லை அது சரியில்லை இது சரியில்லை என்று லொட்டு லொசுக்கு வேலை எல்லாம் இவர்கள் செய்வது இல்லை. யார் இருக்கவேண்டும் யார் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்வது மக்களே.
அமெரிக்காவில் நடைபெற்று கொண்டு இருக்கும் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிறையவே கிளம்பி உள்ளது . எனது யூகப்படி
Melanie Amaro
Melanie Amaro
Josh Krajcik
Rachel Crow
Rachel Crow
இவர்களின் யாரோ ஒருவர் வெற்றிபெறுவார் என்று நினைக்கிறேன்.
இங்கிலாந்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் எனது சாய்ஸ்
Craig Colton
இங்கிலாந்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் எனது சாய்ஸ்
Craig Colton
கடைசியாக Lady Gaga பாடலான Paparazzi பாடி இருப்பார். அட்டகாசமாக இருக்கும்.
டைம் இருந்த யூடுப்பில் பாருங்கள் அட்டகாசமான குரல்வளம் உள்ளவர்களில் வீடியோ கிடக்கிறது.
--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)
டைம் இருந்த யூடுப்பில் பாருங்கள் அட்டகாசமான குரல்வளம் உள்ளவர்களில் வீடியோ கிடக்கிறது.
--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)
No comments:
Post a Comment