Friday, June 15, 2012

தடையறத் தாக்க


அருண் விஜயிடம் எல்லா திறமைகள் இருந்தும் தமிழ் திரையுலகில் நிலையான ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் இருக்கிறார். பதினைந்து வருட போராட்டத்தில்  இந்த படத்தின் முலம் செமையான பிரேக் கிடைத்து இருக்கிறது. இதே போல படங்களை தேர்வு செய்து நடித்து வந்தால் கண்டிப்பாக நட்சத்திர நடிகராக வலம் வர நல்ல வாய்ப்புள்ளது.  நேற்றைய ஆனந்த விகடனில் பதினைத்து வருட போராட்டம் பற்றி சுருக்கமாகவும் ரொம்ப நேர்மையாகவும் அவர் அளித்திருந்த பேட்டி அருமையாக இருந்தது.



 




 


படத்தில் எனக்கு பிடித்தது 

நீயே சொல்லு லட்டு நல்லவா இருக்கு,
சாரிக்கு ஸ்பெல்லிங் சொல்லு,
1 2 3 என்று ரவுடி கோஷ்டி சொல்லிய பிறகு அருண் அவர்களை  நோக்கி ஓட்டுவது,
முன்னர் நடந்த சம்பவங்களை நட்பு சம்பவத்துடன் கோர்த்து இருந்தது,
மகாவின் கீப் பின்னணி 
ஒபெனின் சீனில் அருண்விஜய் பெண் கேட்பது, உங்க அப்பா ராஜ்பவன் தானே போறார் போற வழியில இறக்கி விடுறேன் பாதி காசு தர சொல்லு என்பது. 
மம்தா விற்கும் அருணுக்கும்  இடையான காதல் காட்சிகள் 
அண்ணன் தம்பி வில்லன்கள்
தமனின் தட  தட  இசை
யூகிக்க முடியாத திரைக்கதை


இப்படி சொல்லி கொண்டே செல்லலாம்
இரண்டாம் பாதி தான் படத்தின் ஹைலைட். நல்ல கலவையில் உருவான படம்  ராக்கெட் வேகத்துக்கு கொண்டு செல்கிறது.  

ஒரு படம் வெற்றியடைந்தால் அதை வேறு
மொழியில்  சுடசுட  ரீமேக் செய்வது என்பது இப்போதைய டிரெண்ட், முக்கியமாக கன்னட படவுலகில் இது தான் முக்கால்வாசி நடந்து கொண்டு இருக்கிறது. வேறு ஒரு இயக்குனர் இந்த படத்தை  இயக்குவதை விட மகிழ்திருமேனியே  இயக்கினால்  படத்தை இன்னும் ஸ்பெஷலாக  கொண்டு வரலாம். நம்ம எஸ்.ஜே.சூர்யா குஷியை வைத்து இந்தியா முழுக்க சுற்றினாலும் தெலுங்கில் மட்டுமே பம்பர் ஹிட் அடிக்க முடிந்தது, ஹிந்தியில் மண்ணை கவ்வியது. தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற  படங்களில் அதிரடி படங்களே அதிகமாக வெற்றிபெற்று இருக்கிறது அந்த வருசையில் இந்த படத்தின் ரீமேகில் இளம் நடிகர் யாராவது நடித்தால் கண்டிப்பாக பிளாக் பாஸ்டர் படமாக இருக்கும்.


திரில்லர் படம் என்கிற வரிசையில் கண்டிப்பாக இந்த படத்திற்கு இடம் உண்டுஅடுத்த லிங்குசாமியாக வர வாழ்த்துக்கள் மகிழ் :)




--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

2 comments:

  1. சார் நீங்க பதிவு எல்லாம் எழுதுவீங்களா? சொல்லவே இல்ல? :))

    ReplyDelete
  2. @மோகன் குமார் அப்போ அப்போ எழுதுவேன் சார் :))

    ReplyDelete