Thursday, February 14, 2013

மறுவீடு

பெண் குழந்தை பிறந்ததும் மகாலட்சுமி வீட்டுக்கு வந்துவிட்டாள் என்று சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருப்பார்கள்.  அந்த குழந்தை குமரி ஆகி  அவள் மற்றொரு வீட்டுக்கு மருமகளாக போகும் நேரம் எவ்வளவு வேதனையை அனுபவிப்பார்கள். எனது அக்கா  கல்யாணம் முடியும் போது நான் சிறுவன், அக்காவிற்கு 17 வயதிலே கல்யாணம் முடிந்துவிட்டது. அப்போதெல்லாம் உறவுகள் பற்றிய சிந்தனைகள்  ஒன்றும்  தோன்றியதில்லை. அதுவும் அக்கா தங்கையை பற்றிய நினைவுகள் வந்ததே இல்லை. ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா விளையாட்டு அவ்வளவு தான்.

எனது தங்கையின் கல்யாணத்தில் தான் பிரிவின் வேதனையை புரிந்து கொண்டேன். கல்யாணம் முடிந்து மண்டபத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல நேரம் வந்துவிட்டது. உறவுகள் அத்தனையும் ஒன்றாக மண்டபத்தில் இருக்க முதல் விசும்பல் யாரிடம் இருந்து ஆரமித்தது என்று தெரியவில்லை அடுத்தடுத்து அந்த விசும்பல் பெரும் கண்ணீராக எல்லோருடைய கண்களில் இருந்து வந்து கொண்டு இருந்தது. சந்தோஷத்துடன் துடங்கிய அந்த நாள் ஒரு பிரிவை தாங்கி கொள்ள முடியாமல் கண்ணீரில் முடிந்தது. எனது தங்கையின் பக்கத்தில் நான் போகவே இல்லை, அவளருகில் சென்றால் கண்டிப்பாக நானும் அழுதுவிடுவேன்  என்று தெரிந்ததால் சமையல்கட்டு பக்கமாக சென்றுவிட்டேன்.  விதி யாரைவிட்டது அவள் மறு வீட்டுக்கு அழைத்து சென்ற டாட்டா சுமோ வண்டியின் பின்புறத்தில் என்னையும் எனது சித்தப்பா மகனையும் ஏத்தி விட்டுவிட்டார்கள். 

நான் பார்த்த வரை பல கல்யாணத்தில் மணப்பெண் தாலி கட்டும் போதே கண்ணில் நீர் வர ஆரமித்துவிடுகிறது,  நடிகை சிநேகா கூட இதுக்கு  விதிவிலக்கு அல்ல என்று அவரது கல்யாண வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன்.   ஆனால் இன்று பார்த்த கல்யாணம் மனதுக்கு சந்தோஷத்தை தந்தது. சுரேஷ் எனது ஆருயிர் நண்பன் எனது வளர்ச்சியின் மீது பெரிதும் அக்கறை உள்ளவன் அவனுக்கு தான் இன்று திருமணம் நடந்தது, திருமணத்தை மணமேடைக்கு அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் மணமக்களை பார்த்து கொண்டு இருந்தேன் இருவர் முகத்திலும் எந்த சலனமும் இல்லை சந்தோசம் மிகுதியாக இருந்தது.  தாலி கட்டி வேறு சில சம்பிரயாதங்கள் எல்லாம் முடிந்தது அந்த பெண்ணின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம். உறவினர்களுடன் நிறைய புகைப்படங்கள் எடுத்து கொண்டார்கள் சுரேஷ் கூட ஏதோ அசதியில் இருந்த முகம் போல போஸ் கொடுத்து கொண்டு இருந்தான் மணப்பெண் முகத்தில் அவ்வளவு புத்துணர்ச்சி. என் மனைவிடம் அதை சுட்டி காட்டினேன், அவளும் ஆச்சரியபட்டாள். எப்படி இந்த பெண் இவ்வளவு சந்தோஷமா இருக்கா !! வருத்தமே இல்லையா திரும்ப திரும்ப ஒலித்த கேள்விகள். என்ன சொல்வதென்று  தெரியவில்லை ஆனால் மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. 


இன்று சாயந்திரம் அவள் மறுவீடு செல்வாள் அப்போது கச்சேரி ஆரமித்து  இருந்தாலும் இருக்கும்.



--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)



3 comments:

  1. ஆமாம் .. கண்டிப்பா கச்சேரி தான் ! எல்லா பெண்களும் அழ மாட்டாங்க ! நானெல்லாம் அப்டி ஒன்னும் அழுதுடல :) ..என் டாடி அழுறாங்களேன்னு லைட்டா அழுது காமிச்சேன்! :)))) ..நல்லா எழுதியிருக்கீங்க .

    ReplyDelete
  2. பிறந்தவிட்டைவிட்டுச் செல்லும்போது அழாத பெண்ணும் இல்லை,அவள் வீட்டாரும் இல்லை!

    ReplyDelete
  3. சில உண்மையான உணர்வுகளை மறக்கவும் மறைக்கவும் முடியாது...

    ReplyDelete