Wednesday, April 14, 2010

How to Train Your Dragon

அனிமேஷன் படங்கள் என்றால் ரொம்ப யோசித்து விமர்சனம் எல்லாம் படித்து தான் படம் பார்க்க செல்வேன், ஏனோ How to Train Your Dragon படத்தின் டிரைலர் பார்த்த போது கண்டிப்பாக படத்தை  பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தேன்.

அதற்கு ஏற்றார்போல கனவுகளின் காதலன் எழுதிய இந்த விமர்சனத்தை படித்த பிறகு ஆவல் அதிகமாகியது. நம்ம ஊரில் படம் இனிதான் வெளியாகும் என்பதனால்  நண்பன் ஒருவனிடம் படத்தை நெட்டில் இருந்து உருவி கொடுக்க சொல்லி பார்த்தேன்.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் படம் AWESOME....

அனிமேஷன் படங்களில் எனக்கு ரொம்ப பிடித்தது ICE AGE SERIES , KUNG FU PANDA அப்பறம் PIXAR STUDIOS சில படங்கள். இந்த வரிசையில் இப்பொது இந்த படமும் இடம் பெற்றுள்ளது.


 How to Train Your Dragon கண்டிப்பாக குழந்தைகளுக்கு இந்த சம்மரில் கிடைத்த அருமையான பொழுதுபோக்கு படம்.


    டிராகன் தொந்தரவால் தீவில் வாசிக்கும் மக்கள்  நிம்மதி இழந்து இருக்கிறது. அந்த தீவின் நாட்டாமை/அரசன் (நாயகனின் அப்பா) மற்றும் அந்த தீவின் உள்ள மக்கள் டிராகன் கூட்டதை அழிக்க பெரும் பாடுபடுகிறார்கள். கதையின் நாயகன் ஒரு கொல்லரிடம் வேலை செய்கிறான். அவனே புதியதாக ஒரு கருவியை கண்டுபுடித்து அதை கொண்டு NIGHT FURY என்கிற இது வரை யாரும் பார்க்காத ஒரு டிராகனை பிடிக்கிறான் .

    நாயகனோ அந்த டிராகனை கொல்லாமல் அதனுடன் நட்பாக இருக்கிறான். அந்த டிராகன் கூட்டதை அழிக்க ஊரில் உள்ளவர்கள் நாயகனின் அப்பா தலைமையில் அதை தேடி செல்கிறார்கள். இவர்கள் சென்ற பிறகு நாயகன் தானும் ஒரு வீரன் ஆகா வேண்டும் என்கிற வெறியில் டிராகனை அடக்கும் பயிற்சிக்கு செல்கிறான். இதற்கு பிறகு நடக்கும் கதைகளம் அத்தனையும் கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் செம விறு விறுப்பாக செல்கிறது. அனிமேஷன் படம் என்கிற தகுதியை தாண்டி படம் அருமையாக எடுக்கபட்டு உள்ளது.

கிளைமாக்ஸ் காட்சி பார்க்கும் போது ICE AGE - 3 படத்தை பில்டர் பண்ணி குடுத்தது போல இருக்கிறது.  ஆனால் அந்த வேகம் படத்திற்கு கண்டிப்பாக வேண்டும் இல்லை என்றால் சென்டிமெண்டில் முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

TOOTHLESS  என்கிற பெயருடைய அந்த Night Fury டிராகன் செய்யும் சாகசங்கள் எல்லாம் அருமையாக எடுக்கப்பட்டு உள்ளது. படத்தில் இடம் பெற்று இருக்கும் அனிமேஷன் பற்றி ஹாலிவுட் பாலா விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.

முதலில் இருந்து கடைசி வரை கொஞ்சம் கூட அலுப்பு இல்லாமல் படத்தை ஜெட் வேகத்தில் செலுத்தி இருகிறார்கள்.

சென்னையில் இந்த வாரம் படம் ரிலீஸ், கண்டிப்பா பாருங்க அதும் 3Dல பாருங்க நல்ல படத்தை பார்த்த திருப்தி ஏற்படும்.. நானும் இன்னொரு முறை படத்தை 3Dல பார்க்கணும்ன்னு ஆவலாய் இருக்கிறேன் (அவதார் படத்தை 3Dல பார்த்து மூக்கு வலியால் அவதிப்பட்டது நினைவுக்கு வருகிறது இருந்தாலும் கண்டிப்பாக பார்த்துடுவேன்).  


How to Train Your Dragon  :  I Love this Dragon  


டிஸ்கி:  யாரவது How to train your Wife படம் எடுப்பாங்களா ??




With Love
Romeo ;)

3 comments:

  1. /யாரவது How to train your Wife படம் எடுப்பாங்களா ??/

    தங்கமணி How to tame your Hubby கோர்ஸ்ல ஜாயின் பண்ணியிருக்கப் போறாங்க. பார்த்து. :))

    ReplyDelete
  2. புது ப்லாக் - புது template - புது ஐடியா - கலக்குற, romeo
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இல்லை.. உங்களை கட்டிக்கிட்டவங்க,,
    How to Train your Dragon படம் பார்த்தா தான் சரியா இருக்கும்.. பின்ன அவங்க கட்டிக்கிட்டது.. ஒரு ....... புரியுதா?

    ReplyDelete