Monday, July 12, 2010

ஏழாம் உலகம் போட்டியின் முடிவும் இன்னும் சில புத்தகங்களும்


ஏழாம் உலகம் புத்தகம் போட்டிக்கு 20 பின்னுடங்கள் வந்து உள்ளது. அதில் இரண்டு பேர் அவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதே போல இருவர் ஏற்கனவே புத்தகத்தை படித்து விமர்சனமும் செய்து உள்ளார்கள். 






முடிவில் 16 பேரில் இருவரை சிட்டு எழுதி போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்து எடுத்துள்ளேன்.  பரிசு பெற்றவர்கள் 

































இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். புத்தகங்கள் நேரிலோ அல்லது கூரியர் மூலமாகவோ இந்த வாரத்துக்குள் உங்களுக்கு வந்தடையும். புத்தகம் படித்து முடித்ததும் உங்கள் விமர்சனத்தை எழுத தவறாதிர்கள் நண்பர்களே.. 



                         

எனது முந்தைய ஏழாம் உலகம் விமர்சனம் மற்றும் பரிசு போட்டியின் பதிவை படித்து விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை சேர்ந்த அன்பர் ஒரு கடிதம் அனுப்பினார். என்னை போல இலக்கிய புத்தகங்கள் பகிர்ந்துகொள்வதில் அவருக்கும் மிக ஆவல். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக அவரும் புத்தகங்களை பரிசளிப்பதற்கு ஆவலாக இருக்கிறார். 







இந்த முறை பரிசு பெற்றவர்கள்களான  ஷங்கர்   மற்றும் அகல்விளக்கு இருவருக்கும் இன்னும் ஒரு ஆச்சரியமாக, இந்த   புத்தகத்தை  பற்றிய உங்கள் விமர்சனம் வெளிவந்த பிறகு உங்களுக்கு வேறு ஏதேனும் புத்தகம் வேண்டும் என்றால் எனக்கு மெயில் செய்யவும் உங்களுக்கு ஒரு செலவும் வைக்காமல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.  உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது அந்த புத்தகத்தின் விமர்சனம் மட்டுமே. 

இந்த பரிசுத்திட்டம் இவர்களுக்கு மட்டும் அல்ல மற்ற அன்பர்களுக்கும் சேர்த்தே. நீங்க ஏதேனும் புத்தகத்தை படித்து அதை பற்றி விமர்சனம் செய்ய ஆவலாக உள்ளீர் என்றால் உங்களுக்கும் புத்தகம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். தமிழ் இலக்கியத்தை மற்றவர்களிடனும் எளிதாக கொண்டுசெல்ல எங்களால் ஆனா சிறு முயற்சி இது. 



மாதம் இருவருக்கு இதே போன்று புத்தகங்கள் பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன். நான் படித்து ரசித்த புத்தகத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த முயற்சி. இலக்கியம் மட்டும் அல்ல வரலாறு, சுயசாரிதம் என்று எல்லா வகை புத்தகங்களின் விமர்சனம் மற்றும் பரிசு காத்துகொண்டு இருக்கிறது. 



புத்தகம் படிக்க ஆவலாக உள்ள அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் படித்த புத்தகத்தை பற்றி உங்கள் பார்வையில் மற்றவர்களுக்கு அந்த புத்தகத்தை பற்றி எடுத்து சொல்லவேண்டும் அதே போன்று உங்களின் வலைபூவில் புத்தகத்தின் விமசர்னம் இடம்பெற வேண்டும் என்பது எங்களின் சின்ன கோரிக்கை. உங்களின் விமர்சனத்தை படித்து இன்னும் இருவர் அந்த புத்தகத்தை வாங்கி படித்தால்   போதும் அதுவே  எங்களுக்கு மகிழ்ச்சி. 





புத்தகம் படிக்கும் வாசகர்கள் வட்டம் எவ்வளவு பெரியது என்று தெரிந்துகொள்ளவே கேள்விகள் இல்லாத சின்ன போட்டி வைத்தேன் ஆனால் வந்ததோ மிக குறைவான பின்னுடங்கள் தான். குலுக்கல் முறை என்பதை மாற்றி வேறு ஏதேனும் ஒரு போட்டி வைக்கலாம் என்று இருக்கிறேன்.   நண்பர்களே உங்களிடம் இருந்து யோசனைகள் வரவேற்கப்படுகிறது. 












With Love
Romeo ;)





7 comments:

  1. அகலுக்கும்,ஷங்கர் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள் :)
    ரொம்ப சந்தோசம்

    //புத்தகம் படிக்க ஆவலாக உள்ள அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் படித்த புத்தகத்தை பற்றி உங்கள் பார்வையில் மற்றவர்களுக்கு அந்த புத்தகத்தை பற்றி எடுத்து சொல்லவேண்டும்//

    கண்டிப்பா செய்வோம் :)

    ஏழாவது உலகம் புத்தகம் எனக்கும் வேண்டும்

    இலக்கியமெல்லாம் எனக்கு தெரியாது,ஆனால் என் பார்வையில் புத்தகத்தை விமர்சிக்க முயல்வேன் ,அதான்

    தங்களின் இந்த அருமையான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    என்றும் உங்களுடன்-யோகேஷ்

    ReplyDelete
  2. உங்க‌ளின் ந‌ல்முய‌ற்ச்சிக்கு வாழ்த்துக்க‌ள்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சங்கர் மற்றும் அகல்விளக்கு.

    புத்தகங்களைப் படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டும் இந்த திட்டம் நன்று.

    ReplyDelete
  4. தேர்வுக்கு மிக்க மகிழ்ச்சி நண்பா...

    உங்களின் நன்முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்...

    நிச்சயம் எனது பார்வையில் விமர்சனமிடுகிறேன்...
    நானும் இந்த புத்தகத்தை அடுத்த பதிவர்களுக்கு பரிசளித்து தொடர்ந்து வாசிப்பனுபவத்தை கூட்ட முயற்சிக்கிறேன்...
    :-)

    ReplyDelete
  5. நல்வாழ்த்துகள் ரோமியோ... சிறப்பான செயல். ஜெமோவுடன் நின்றுவிடாமல் மற்றயோரின் படைப்புகளைப் பற்றியும் விமர்சித்தால் மகிழ்வோம்...

    ReplyDelete
  6. வாழ்க்கையிலே முதல் முறையா பரிசு விழுந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும் புத்தகப் பகிர்தலுக்கான அழகான ஒரு வழிமுறை உங்களால் உண்டாக்கப்பட்டதில் மகிழ்ச்சி ரோமி!! மிக்க நன்றி இதுவரை ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களை படித்ததில்லை. நிச்சயம் எனது புரிதலை பகிர்கிறேன்.:)

    இது மேலும் பரவுவதில் மிக்க மகிழ்ச்சி. அகல்விளக்கு அவர்களுக்கும் வாழ்த்துகள். உங்களுக்கு மீண்டும் நன்றி.:)

    ReplyDelete
  7. நீங்க மேலும் இதுபோல பல சேவைகளை செய்யனும்,அதற்கான ஊக்கங்கள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்தறேன் நண்பா.
    விஷ்ணுபுரம் தான் கிடைக்கவேயில்லை,ஊருக்கு வரும்போது நான் கடைல வாங்கிக்கிறேன்.

    ReplyDelete