Monday, July 19, 2010

அரசூர் வம்சம் - இரா.முருகன்

அதிகபடியான நம்பிக்கையுடன் படிக்கும் புத்தகங்கள் எல்லாம் சில நேரம் என்னை பெரும்  ஏமாற்றத்தை சந்திக்க வைக்கிறது. அந்தவகையில் அரசூர் வம்சம் இன்னும் ஒன்று, அரசூர் என்கிற ஊரில் நடக்கும் பல குடும்பத்தின் கதை தான் இந்த அரசூர் வம்சம். ராஜா, ராணி, சங்கரன், சுப்பிரமணி ஐயர், கிட்டாவய்யன்  , பனியன் சகோதர்கள், முத்த குடிகள், சுப்பம்மா கிழவி, சவகாட்டு பிராமணன்,சாமிநாதன், ஜோசியர் இத்தியாதி இத்யாதி என்று இரண்டு டஜன் மனிதர்கள் சூழ்ந்து கொண்டு வலம் வருகிறார்கள்.  அரசூர் வம்சத்தை படித்து முடிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது ஏன் என்கிற காரணத்தை பிறகு சொல்கிறேன்.

புத்தகத்தில் அமானுஷ சங்கதிகள் அதிகமாக உலாவுகிறது, எதற்கு எடுத்தாலும் அவர்கள் வந்து ஏதோ ஒன்றை பேசிக்கொண்டோ அல்லது பாடிக்கொண்டு இருகிறார்கள். வயசன் ஒருவன் அந்தரத்தில் பறந்து கொண்டே இருக்கிறார் .  புத்தகத்தில் பெரும் பகுதி எல்லா கதாபாத்திரங்களும் கற்பனையில் அதிக நேரம் பேசி கொள்கிறார்கள் அல்லது யோசித்துக்கொண்டு இருகிறார்கள்.



ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்  மூத்தக்குடி பெண்டுகள் (இறந்து போனவர்கள்)  எல்லாம் சுப்பம்மா கிழவிஅல்லது சுப்பிரமணிய ஐய்யர் நாவில் வந்து உட்கார்ந்துகொண்டு அவர்கள் இஷ்டத்துக்கு பேசிக்கொண்டு இருகிறார்கள் அல்லது நலங்கு பாடலை பாடிக்கொண்டு இருக்கீறார்கள்.  அவ்வாறு பாடுவதை மற்றவர்கள் எது ஒரு பயமும் இல்லாமல் அவர்களுடனே உரையாடி கொண்டு இருகிறார்கள்.  யந்திரம் துணைகொண்டு அவைகளை அடக்கி வைக்கிறார் ஜோசியர். அமானுஷ உலகில் நுழைந்தது போல இருந்தது முதலில், பிறகு படிக்க படிக்க அது எல்லாம் மறந்து போயி இதுகளுக்கு வேற வேலையே இல்லை என்று தான் சொல்ல தோன்றியது. 


நான் லினியர் கதைகள் நிறைய  அத்தியாயங்களில்  வருகிறது.  சங்கரன் மதராஸ் பட்டணத்துக்கு செல்லும்படி அவனின் அப்பா முன் அத்தியாயத்தில் சொல்கிறார். அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சங்கரன் கடற்கரை ஓரம் நடந்து செல்கிறான். அதற்கு பிறகு அவன் எப்படி சென்னை வந்தான் யார் வீட்டில் தங்கினான். அவரை எப்படி எப்பொழுது சந்தித்தான், வரும் வழியில் தஞ்சாவூரில் கண்ட காப்பி கடை, சுப்பம்மா பாட்டி கட்டி குடுத்த சாப்பாடு, சீவல், முறுக்கு இத்யாதி இத்யாதி. அதே போன்று புகையிலை பிராமணன் ராஜா வீட்டின் ஒரு பகுதியை எப்படி அபகரித்து கொண்டான். இன்னும் சில அத்தியாயங்கள் ரொம்ப அருமையா இருக்கு. நாவலில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் அந்த ராஜா தான். ராஜாவுக்கு நன்றாக சாப்பிடவேண்டும், சேடி பெண்ணுடன் விளையாடவேண்டும், சிக்கல் இல்லாமல் காலைக்கடனை முடிக்கவேண்டும், வாரிசை பற்றி நினைக்கவேண்டும் பிறகு புஸ்திமீசை கிழவனை திட்டிகொண்டு இருக்கவேண்டும். நாவலில் ரொம்ப சுவாரசியமான கதாப்பாத்திரம் இவர். புஸ்தி மீசை கிழவன் மண்டையை போட்ட பிறகு நடக்கும் கூத்து செம ரகளை. அதும் சேடி பெண்மீது அவன் விழுந்த போது ராஜா அடையும் அதிர்ச்சியை ஆசிரியர் சொல்லி இருக்கும் இடம் வெகு அருமை. புத்தகத்தை படிக்கும் போது நமது எண்ணங்களில் அந்த இடங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்கிற நினைப்பு வருவது தவறவில்லை. யந்திரம் என்றால் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆவல் ஆசிரியர்க்கு மெயில் பண்ணி கேட்க்கணும்.

பிராமண பாஷையில் இருந்ததால் என்ன பேசுகிறார்கள் என்று புரிந்து கொள்வதற்கு ஒரே பத்தியை  இரண்டு அல்லது மூன்று முறை திரும்ப திரும்ப படிக்க வேண்டி உள்ளது வட்டார வழக்கு மொழி போல இது பிராமண மொழி. ஏழாம் உலகம் புத்தகமும் இதையும் சேர்ந்தே வாங்கினேன். இரண்டு வேறு வேறு தளம் வேறு வேறு நடை அத்தனையும் புதுசு என்பதால் முதல் வாசிப்பிற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

ரெட்டை தெரு நாவலை படித்த போது இவரின் அடுத்த அடுத்த நாவல்களை படித்தே தீரவேண்டும் என்று நம்பிக்கையுடன் வாங்கிய புத்தகம்.  தீவிர வாசிப்புக்கு ஏற்ற புத்தகம் இது. அதே சமயம் புத்தகத்தை படித்துவிட்டு இதை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யலாமா  வேண்டாமா என்கிற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.  நான் என்ன சொல்கிறேன் என்றால் அது உங்கள் விருப்பம். படித்துவிட்டு என்னை திட்ட கூடாது. 

நாவலின் பலகீனம் என்பது அதன் நடைதான். ரொம்ப ரொம்ப மெதுவா நகர்கிறது கதை, ராஜாவின் மாமனார் இறந்ததும் நடக்கும் சடங்கை படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும் அவ்வளவு நீட்டி இருந்து இருக்கவேண்டாம். அதே போல நிறைய இடங்களை சொல்லிக்கொண்டு செல்லலாம். பத்தி எது, சம்பாஷனை எது என்று தேடவேண்டி இருக்கிறது. உண்மையில் நான் சிலபக்கங்களை திருப்பி திருப்பி வந்தேன், நெடுந்தொடர் போல இது தான் நடந்து இருக்கும் என்று சுலபமாக யூகிக்க முடிகிறது.

நாவலை ஏன் இத்தனை நாட்கள் படித்தேன் என்றால் ஐந்து அத்தியாயங்கள் தாண்டிய போதே தெரிந்துகொண்டேன் இது நமக்கு ஏற்ற புத்தகம் அல்ல என்று. ஒவ்வொரு நாள் இரவும்  ஒரு அத்தியாயம் என்கிற கணக்கில் படிக்கலாம் என்று முடிவு செய்தேன் ஒரு அத்தியாயத்தை பாதி படிக்கும் போதே தூக்கம் கண்ணை கட்டும், விட்டா போதும்டா சாமின்னு தானவே மூடிக்கொள்ளும்.   அதனால் இரண்டு நாட்களுக்கு ஒரு அத்தியாயம் என்று ஆகிவிட்டது.

ரொம்ப எதிர்பார்த்து நாவலை படிப்பதை விட வட்டார வழக்கு தவிர பிராமண வழக்கு ஒன்றும் உள்ளது அது எப்படி இருக்கும் என்கிற ஆவலில் படிக்கவும்.

உப்பு உண்டுதான் காரம் ரொம்ப கம்மி சாரே.. 

டிஸ்கி: விஸ்வருபம் என்று இன்னொரு நாவல் இதன் தொடர்ச்சி வருகிறதாம். அதனால நான் இப்பவே எஸ்கேப் மாமே எஸ்கேப் .. 






With Love
Romeo ;)



12 comments:

  1. ம்ஹும் சில சமயம் அப்படித்தான் ஆயிரும்..

    ReplyDelete
  2. :))

    //
    டிஸ்கி: விஸ்வருபம் என்று இன்னொரு நாவல் இதன் தொடர்ச்சி வருகிறதாம். அதனால நான் இப்பவே எஸ்கேப் மாமே எஸ்கேப் .. //

    திண்ணையில் இப்பொழுது தொடராக வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  3. சில நாவல்கள் சிலருக்கு இப்படித்தான் சண்டித்தனம் செய்யும். சில வருடங்களுக்குப் பிறகு நேர்கிற மீள்வாசிப்பில் அது புரிதலை ஏற்படுத்தக்கூடும். அப்போதான உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன். :)

    ReplyDelete
  4. தெரியாத புத்தகம் :)

    தங்களின் பார்வையில் சொல்லிவிட்டீர்
    படித்து பார்க்க வேண்டும் :))

    ReplyDelete
  5. போன புத்தகக் காட்சி நேரத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி நல்ல விமர்சனங்கள் வந்தன. நானும் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். காப்பாத்திட்டீங்க. நன்றி ரோமியோ.

    ReplyDelete
  6. ரைட்டு!

    2 மாசம்லாம் நான் ஒரு புத்தகத்தை படித்ததே இல்லை. ஆனாலும் உங்களுக்கு பொறுமை அதிகம்!!

    ReplyDelete
  7. ரைட்...மீ டூ எஸ்கேப்...

    ReplyDelete
  8. ரொம்ப நல்ல விமர்சன பார்வை நண்பா,
    படிச்சிட்டு கமெண்ட் போடவேண்டுமென்பதால் லேட்டு

    ReplyDelete
  9. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete
  10. விமர்சனத்துக்குச் சற்றே தாமதமான நன்றி

    ReplyDelete
  11. அரசூர் -பூச்சிக்காடு என இரு ஊர்கள் அடங்கிய பகுதி ஒரு காலத்தில் ஜமீனால் ஆளப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே உள்ள இவ்வூர்களின் ஜமீன் பற்றிய விபரங்களை அறிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?

    ReplyDelete
  12. அரசூர் -பூச்சிக்காடு என இரு ஊர்கள் அடங்கிய பகுதி ஒரு காலத்தில் ஜமீனால் ஆளப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே உள்ள இவ்வூர்களின் ஜமீன் பற்றிய விபரங்களை அறிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?

    ReplyDelete