சென்னைக்கு திரும்பி வந்து ஐந்து வருடம் ஆடிவிட்டது. ஒரு வேலை கிடைப்பதில் இருக்கும் சிரமம் எவ்வளவு என்று இங்கு வந்த சமயத்தில் நன்றாக தெரிந்துகொண்டேன். இரண்டு மாதம் சுத்தாத இடம் இல்லை, ஏறாத கம்பெனி இல்லை. படிக்காத வேலை விளம்பரங்கள் இல்லை ஒரு வழியா இப்பொது இருக்கும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து கிட்டதட்ட நான்கரை வருடம் ஓடிவிட்டது. ஆனால் ஏதோ ஒன்று குறைவது போன்றே இருக்கிறது, சென்னை அலுத்துவிட்டது போல . திரும்ப கோயம்புத்தூர் சென்றுவிடலாம் என்று நினைத்துகொண்டு இருக்கிறேன். எல்லாம் சரி ஆனால் வேலை வேண்டுமே !!! திரும்ப வேலை தேடும் படலம் நடந்துகொண்டு இருக்கிறது. எல்லா கம்பெனி ஆட்களும் சொல்லி வைத்தது போன்று சான்றிதல் கேக்கிறார்கள், என்னிடம் இருந்தா தான் தருவதற்கு அல்லது காமிப்பதற்கு !!! கோயம்புத்தூரில் வேலை இருக்கிறது என்று ஒரு விளம்பரம் பார்த்து அந்த பெரிய கம்பெனிக்கு இண்டர்வியுக்காக சென்றேன், முதல் ரவுண்டு என்னை பற்றி பேச சொல்லி சொன்னார் நானும் சிவனே என்று எல்லாவற்றையும் ஒப்பித்தேன். சான்றிதல் இருக்கிறதா என்று கேட்டார், இல்லை என்றேன். வேலை இல்லை என்று சொல்லிவிட்டார். ஏன் சார் என்றேன், சான்றிதல் இல்லை என்றால் வேலை இல்லை என்றார்.. என்ன கொடுமை பாருங்க நான்கு வருட வேலை அனுபவம் இருந்தும் சான்றிதல் இருந்தால் தான் வேலை என்றால் என்ன பண்ணுறது??
அவரிடமே ஏன் சார் Technical Round இன்னும் நடக்கவே இல்ல, அதில் நான் பாஸ் ஆகலை என்றால் சொல்லுங்க ஒத்துக்கலாம் சான்றிதல் இல்லை என்றால் வேலை இல்லை சொல்லுறிங்களே ஏன் என்று கேட்டேன். அது கம்பெனி ரூல்ஸ்(???) என்றார். ரூல்ஸ் கிரேட் பண்ணுறதே நாம தானே சார். இப்படியே எல்லா கம்பெனி ஆளுங்க இருந்தா அப்பறம் என்ன மாதிரியான ஆளுங்களுக்கு எப்படி சார் அவங்க கனவை நிறைவேற்ற முடியும் ?? சாரி சார் எங்களுக்கு சான்றிதல் கண்டிப்பா வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டார். இன்னொரு கம்பெனியில் இருந்து போன் அழைப்பு வந்தது இண்டர்வியுக்கு வாங்க என்றார் அந்த பெண்மணி. அங்க போய் ஏன் அவமானம் படவேண்டும் என்று போனிலே என்னிடம் சான்றிதல் எல்லாம் இல்லை என்றேன். அவரும் வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்.
ஒரு டவுட் வேலை பார்க்க போவது நானா இல்லை என்னோட சான்றிதலா?? சான்றிதல் இருந்தால் தான் வேலை என்கிற மடத்தனமான சிஸ்டம் முதலில் தூக்கவேண்டும். சான்றிதல் வைத்து என்ன பண்ண போறீங்க ?? இந்த மெயில் எனக்கு அடிக்கடி வரும்,
Greetings from TCS!
With reference to your CV in the job portal, we would like to have you walk in for an interview if you meet our eligibility criteria and proficient in any one of the skill sets mentioned below.
Note- This is a bulk mail, Kindly ignore if not applicable
Skills - Desktop Support ( L2 level)
Location : Chennai
Experience : 3 to 7Years
Eligibility criteria
Experience Band - 3 to 7 Yrs of Relevant Experience
B.E./ B.Tech /M.E./ M.Tech/ MSc/ MCA/ MCM/ MS
PGDIT (2 years full time Approved by AICTE)
B.Sc./BCA/Diploma holders with 3 years of relevant functional / technical experience
Should have consistently 50% and above marks from class 10 onwards.
Should not have more than two years breaks /Gaps in career/Academics.
Candidates who have appeared for the TCS Selection Process in the last 6 months need not apply
Extended Education Will not be considered.
With reference to your CV in the job portal, we would like to have you walk in for an interview if you meet our eligibility criteria and proficient in any one of the skill sets mentioned below.
Note- This is a bulk mail, Kindly ignore if not applicable
Skills - Desktop Support ( L2 level)
Location : Chennai
Experience : 3 to 7Years
Eligibility criteria
Experience Band - 3 to 7 Yrs of Relevant Experience
B.E./ B.Tech /M.E./ M.Tech/ MSc/ MCA/ MCM/ MS
PGDIT (2 years full time Approved by AICTE)
B.Sc./BCA/Diploma holders with 3 years of relevant functional / technical experience
Should have consistently 50% and above marks from class 10 onwards.
Should not have more than two years breaks /Gaps in career/Academics.
Candidates who have appeared for the TCS Selection Process in the last 6 months need not apply
Extended Education Will not be considered.
இதுவரைக்கும் ஐம்பதுக்கும் மேல இந்த மாதிரி மெயில் வந்து இருக்கு, எதுக்கு பதில் அனுப்பினாலும் அவர்களிடம் இருந்து பதில் வருவதே இல்லை. அப்பறம் என்ன ______க்கு எனக்கு மெயில் அனுப்பனும்??
எனக்கு கத்துக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகமா இருக்கு ஆனால் அது எல்லாம் முடியாது கற்றுக்கொண்டும் வந்து வேலை பார் என்கிறது இந்த கம்பெனி ரூல்ஸ். சிலருக்கு படித்து தெரிந்து கொள்ளவதை விட பழகி தெரிந்து கொள்ளவே பிடிக்கும். நான் இந்த வகையை சேர்ந்தவன், லெதர் டெக்னாலஜி படித்துவிட்டு கம்ப்யூட்டர் சைடுல வேலை பார்க்கிறேன். கம்ப்யூட்டர் பற்றி எதுவும் படிக்காமல் ஒரு இன்டர்நெட் சென்டர்ல வேலை பார்த்து தொழில் முறையில் கற்றுக்கொண்டேன். இந்த கம்பெனில இருந்து கூட நிறைய கற்றுக்கொண்டேன். அனுபவம் தானே ஒரு மனிதனை உருவப்படுத்துக்கிறது.
பத்து வருஷதுக்கு முன்னாடி வைத்த அர்ரியர் பேப்பர் எழுத முடியுமா என்று தெரியவில்லை. கண்முன் குடும்பம் என்று வரும் போது கண்டிப்பா எழுதவேண்டும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன். காலேஜ்ல அதுக்கு அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை கிடைத்தாலும் அர்ரியர் பேப்பர்க்கு படிக்கணும், கணக்கு பாடத்துக்கு டியூஷன் போகணும். டியூஷன் எடுக்குற வாத்தியார் என்னை விட வயசு கம்மிய இருந்தா அவரை நான் பெயர் சொல்லி குப்பிடுவேன் அது அவருக்கு பிடிக்குதோ இல்லையோ!!!, அப்பறம் கூட படிக்கிற பசங்க எல்லாம் என்னை சார்ன்னு குப்பிடுவாங்க. ஜூனியர் A, B, C, D ஒரு சைடுல படிக்க.. a + b = ab (இது கரெக்டா???)ன்னு நான் கணக்கு எழுதி படிக்க நடுவில் கிடந்தது மண்டை பிய்த்து கொள்ளபோவதோ என்னவோ தங்கமணி தான்... யப்பா இந்த தொல்லை எல்லாம் நினைச்சு பார்க்கவே டெரர்ரா இருக்கே :(. வேலை தேடும்ப்படலாம் நடந்துகொண்டு இருக்கிறது :D ....
With Love
Romeo ;)
காசு கொடுத்தால் பட்டம் கொடுக்குரவங்களும்
ReplyDeleteசமீபத்தில் கைதாகீட்டாங்க
படிச்சா அது தருவாங்களா இல்லையா?
ReplyDelete:( கண்டிப்பா ஒரு நல்ல வேலை கிடைக்கும்.
ReplyDeleteநீங்க புது டெம்பிளேட் மாத்தியதில் இருந்து உங்கள் இடுகையை சுத்தமா படிக்க முடியவில்லை தலைவரே.. எனக்கு தான் பிரச்சனையானு தெரியலை.. என்னனு பாருங்க.
ReplyDeleteசான்றிதழ் இல்லைன்னா வேலையில்லன்னு சொல்றாங்களே இதனால் பல பேர் எப்படியாவது(போலி சான்றிதழாவது) வாங்கி வேலையில் சேரனும்னு பார்க்கிறாங்க. இது ஒரு பக்கம்னா சான்றிதழ் இருந்தா மட்டும் எல்லோருக்கும் வேலை செய்ய தெரியதா? இல்லைங்கிறதுதான் உண்மை.
ReplyDeleteஎன்ன அரியர் வச்சு , நானும் யூத் அப்படின்னு சொல்ல வரீங்க போல .. சட்டு புட்டுன்னு படிச்சு , பெரிய ஆளா வாங்க பாஸ்
ReplyDeleteரோமியோ,
ReplyDeleteஎந்த வேலையாக இருந்தாலும் ,என்ன தான் அனுபவம் இருந்தாலும் படிப்பை பார்க்க தான் செய்கின்றனர்.
எடுத்துக்காட்டு:-
நான் டிப்ளொமா சிவில் எஞ்சினிரிங்
ஆனால் வேலைபார்ப்பதோ ஆர்கிடெக்ட் ஆஃபீஸ்.அது கன்ஸ்ட்ரக்ஷன்,இது டிசைனிங்,இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறை,தவிர எனக்கு 14வருட அனுபவத்தால் நானே டிசைன்களை பிரித்து மேய்வேன்,இருந்தாலும் பி.ஆர்க் படித்தால் தான் ஆர்கிடெக்ட்.ஆகவே எப்படியாவது சான்றிதழ் வாங்க பார்க்கவும்.
====
உங்களுக்கு விருப்பமிருந்தால் தாம்பரம் எம்சிசி கல்லூரியின் ஒரு ஆண்டு கோர்சான டிசிஏ சேரவும்.
http://www.mcc.edu.in/mcc2010/index.php/academics/school-of-continuing-education#PGDCA
====
Post Graduate Diploma in Computer Applications (PGDCA)
This application-oriented course is designed to train students by professionals in Digital Electronics; Microprocessor; Computer Architecture; Computer Software & Elements of Hardware in order to qualify them for jobs in Computer Organizations. The course is administered through lectures and practicals in Software & Hardware. The course content includes: - Computer Languages such as C, C++, JAVA, Packages such as MS Office-Web Design, Oracle-VB, TALLY, MS Dos-Windows as Operating System , Photo Shop, Page Maker, Illustrator, Corel Draw, Indesign System Analysis & Data Processing. At the end of the second semester, the students are required to submit a project report. Many past students are working in reputed software companies.
* Duration : One year (Two Semesters)
* Eligibility : Graduates from any recognized University
* Course Fee : Rs. 5000/- per semester inclusive of Laboratory fee
====
Diploma in Computer Applications (DCA)
This two semester course is specially designed to train the students to handle independently various categories of computers and programming. The course content comprises of Computer Programming in C, C++ and JAVA ; Packages such as Oracle-VB,MS Office-Web Design and Tally with Ms Dos and Windows as operating systems. The Course is administered by professionals, through regular lectures and practicals, with computer systems.
* Duration : One year (Two Semesters)
* Eligibility : +2 pass
* Course Fee : Rs. 4000/- per semester
நண்பா
ReplyDeleteகமெண்ட் கருமம் எரர்ல போய்டிச்சி.
படிச்சா தான் பெரிய கம்பெனில நுழைய முடியும்.
இல்லாட்டி சின்ன சின்னதுல தான் லைஃப் போகும்.
===
நானும் டிப்ளமா சிவில்+ஆர்கிடெக்ட் ஆஃபிஸ் 14வருஷம் அனுபவம்,இருந்தாலும் பிஆர்க் க்வாலிஃபிகேஷன் இல்லாததால ஆர்கிடெக்ட் இல்ல,
படிப்பு +சான்றிதழ் மிக முக்கியம்.
====
என்னைக்கேட்ட்டால்
அந்த டிப்ளமாவை எழுதுவதற்கு புதிதாய் படிக்கலாம்.
இது தாம்பரம் எம்சிசி பார்ட்டைம்
http://www.mcc.edu.in/mcc2010/index.php/academics/school-of-continuing-education#PGDCA
Diploma in Computer Applications (DCA)
This two semester course is specially designed to train the students to handle independently various categories of computers and programming. The course content comprises of Computer Programming in C, C++ and JAVA ; Packages such as Oracle-VB,MS Office-Web Design and Tally with Ms Dos and Windows as operating systems. The Course is administered by professionals, through regular lectures and practicals, with computer systems.
* Duration : One year (Two Semesters)
* Eligibility : +2 pass
* Course Fee : Rs. 4000/- per semester
தவிர இக்னூவிலும் ட்ரை செய்யவும்.ப்ராஸ்பெக்டஸ் டவுன்லோட் செய்து பார்க்கவும்
ReplyDeletePost Graduate Diploma in Computer Applications (PGDCA)
ReplyDeleteThis application-oriented course is designed to train students by professionals in Digital Electronics; Microprocessor; Computer Architecture; Computer Software & Elements of Hardware in order to qualify them for jobs in Computer Organizations. The course is administered through lectures and practicals in Software & Hardware. The course content includes: - Computer Languages such as C, C++, JAVA, Packages such as MS Office-Web Design, Oracle-VB, TALLY, MS Dos-Windows as Operating System , Photo Shop, Page Maker, Illustrator, Corel Draw, Indesign System Analysis & Data Processing. At the end of the second semester, the students are required to submit a project report. Many past students are working in reputed software companies.
* Duration : One year (Two Semesters)
* Eligibility : Graduates from any recognized University
* Course Fee : Rs. 5000/- per semester inclusive of Laboratory fee
இதுவும் உண்டு
அண்ணாமலை யுனிவர்சிட்டியில் தயவுசெய்து சேர வேண்டாம்,ஃபைவ்ஸடார் ஹோட்டல் போல பில் போடுகின்றனர்.
ReplyDelete