Thursday, July 14, 2011

பாண்டவபுரம் - சேது (தமிழில் - குறிஞ்சிவேலன்)

கற்பனையா அல்லது நிஜமா என்று யூகிக்கமுடியாத ஒரு முடிவை கொடுத்து படித்த நம்மை நட்டாற்றில் விட்டு செல்லும் ஒரு புத்தகம். 



தேவி தனது கணவன் குஞ்ஞுகுட்டனால் கைவிடப்பட்டவள்,  இது வரை அந்த ஊரைவிட்டு எங்கும் செல்லாமல் ஒவ்வொரு நாள் மாலையிலும் அந்த ஊரில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ஒருவரின் வருகைகாக காத்துகொண்டு இருக்கிறாள். யாருக்காக என்று எவருக்கும் தெரிவில்லை, ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு நாள் அவளிடம் தயங்கி தயங்கி யாருக்காக காத்துகொண்டு இருக்கிறாள் என்பதையும் கேட்கிறார்,  புன்னகையை மட்டுமே பதிலாக தந்துவிட்டு நகர்ந்துவிடுகிறாள்.

ஒருநாள் குஞ்ஞுகுட்டனுடன் வேலைசெய்பவன் என்று ஒருவன் வருகிறான். அந்த ஊரில் இருக்கும் உன்னிமேனன் என்கிற களரி மாஸ்டர் முலம் அவன்  குஞ்ஞுகுட்டனுடன் பாண்டபுரத்தில் வேலை செய்ததாகவும் தற்போது அவன் வீட்டுக்கு வந்ததாகவும் கூருகிறான்.  வீட்டை காட்டும் உன்னி மாஸ்டர் தேவியிடம் அவனை ஒப்படைத்துவிட்டு அங்கு இருந்து நகர்ந்துவிடுகிறார்.


தேவியிடம் பாண்டவபுரத்தில் அவளை சந்தித்த நாட்கள் மற்றும்  சில சம்பவங்களை கூருகிறான். இதை எல்லாம் நம்ப மறுக்கும் தேவி தான் இந்த ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என்றும் தாங்கள் கூறுவது அனைத்தும் பொய் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறாள். அடுத்த அடுத்த நாட்களில் அவனும் அந்த வீட்டில் ஒருவனாக உலாவருகிறான், தேவியில் மகன் ரகுவுடன் ஊர் சுற்றுகிறான். அவன் அந்த வீட்டில் இருப்பதை உன்னி மாஸ்டர் விருபவில்லை ஆண் துணையில்லாத வீட்டில் யாரோ ஒருவன் வந்து தங்கி இருக்கிறது இந்த ஊர் ஏற்காது என்று சொல்லி அவனை வீட்டில் இருந்து கிளம்ப சொல்லுகிறார், முடியாது என்று அவரிடம் சொல்லிவிட்டு இவன் தேவி வீட்டுக்கு வந்துவிடுகிறான். குஞ்ஞுகுட்டன் தங்கை ஷாமளாவும்  அவனை வெளியேற சொல்லுகிறாள்.  தேவி சொன்னால் தான் அங்கு இருந்து செல்வதாக சொல்லும் இவனை தேவி தன்னால் அவ்வாறு சொல்ல முடியாது என்று சொல்லி விடுகிறாள்.  


ஒரு நாள் இரவில் அவனின் அறைக்கு வரும் தேவி தான் பாண்டவபுரத்தில் வாழ்ந்ததை ஒப்பு கொள்கிறாள், அவனுக்கு தான் வந்த காரியம் நிறைவேறியதாக நினைக்கிறான்.  அடுத்த நாள் தான் செய்தது தவறு என்று நினைக்கும் அவனிடம் தேவி பாண்டவபுரத்து நாட்களை சொல்லுகிறாள் இப்போது அவன் இது அத்தனையும் பொய் என்று சொல்லுகிறான். உங்களுக்காகத்தான் தினமும் ரயில்வே ஸ்டேஷனில் காத்துகொண்டு இருந்ததாகவும்  ஒரு நாள் நீங்கள் வருவீர்கள் என்று தெரியும் என்கிறாள். 

அவன் எதுக்கு அங்கு வந்தான் ?? தேவி சொல்வது பொய்யா அல்லது அவன் சொல்லுவது பொய்யா ??
குஞ்ஞுகுட்டன் என்ன ஆனான் ?? இப்படி எல்லா கேள்விகளுக்கும் கடைசில் பதில் இருக்கிறது.
மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்த நூல். இந்த நூலுக்காக  கேரளா அரசின் சாகித்திய அகாடமி விருது வாங்கி இருக்கிறார், விருது வாங்க தகுதியான புத்தகம்.

இந்த புத்தகத்தை முதலில் வாசிக்கும் போதும் எனக்கு குழப்பமே மிஞ்சியது :-(. முதல் பத்து பக்கங்களை படிக்கும் போது குழப்பமோ குழப்பம் தான். முரளி ட்விஸ்ட் போல போல எழுதி இருந்தாரே ஒண்ணுமே காணோம் என்று சந்தேகத்துடனே படித்தேன் உள்ளே செல்ல செல்ல தான் நாவலின் வீரியம் அகப்பட்டது. முதல் வாசிப்பில் ஏற்பட்ட குழப்பம் எல்லாம்  இரண்டாம் வாசிப்பில் தான் அகலும், புதியதொரு எழுத்துநடை பாதி பக்கங்களுக்கு பிறகு வாசிக்க வாசிக்க எது உண்மை  எது புனைவு என்கிற தடுமாற்றம் வருகிறது. 

நாவலில் அந்த விருந்தாளி முக்கிய கதாபாத்திரம் ஆனால் அவருக்கு பெயர் இல்லை, யாருமே பெயர்  கேட்டகவும் இல்லை  சொல்லி அழைக்கவும் இல்லை  ரகு மட்டுமே அவனை மாமா என்று அழைக்கிறான்.  நாவல் முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரத்தின் வாயிலாக சொல்லபட்டு இருக்கிறது. பெயரில்லாமல் ஒரு கதாபாத்திரம் நாவல் முழுக்க வருவதை இப்போதான் படிக்கிறேன், பிரமிப்பு தரும் படைப்பு இது. 
கண்டிப்பாக வாசிக்கவேண்டிய புத்தகம்.


 
பாண்டவபுரம்
ஆசிரியர் -  சேது
கிழக்கு பதிப்பகம்
சென்னை



--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)




3 comments:

  1. எளிமையான தெளிவான அறிமுகம், நான் கொஞ்சம் குழப்பியிருப்பேன். இல்லையா?

    ReplyDelete
  2. படிக்கணும் நண்பா... நல்ல அறிமுகம்..

    ReplyDelete