Friday, July 8, 2011

சங்கதிகள் ஜூலை 08 2011


சர்ச்சை 

   இது சர்ச்சை என்று சொல்ல முடியல இருந்தாலும் இது சர்ச்சை.. லதானந்த் என்கிற பதிவர் (சத்தியமா இவரை நான் பார்த்து கூட இல்லை முக்கியாமாக இவரின் பதிவுகளை படித்து  இல்லை)  காமெடிகாக (இருக்கலாம்) செய்த ஒரு விளையாட்டை(அல்லது சீரியஸ்) இப்படி சர்ச்சையை கிளப்பும் என்று நினைக்கவில்லை.. சஞ்சய், விஜி, செல்வேந்திரன் என்று நிறைய பேரு செம கடுப்பில் இருக்கிறார்கள் அவர் அவர் கஷ்டம் அவர் அவர்களுக்கு.  எனக்கு ஒன்றே ஒன்றில் தான் வருத்தம் (அல்லது கடுப்பு) ம‌ணற்கேணி விருதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??  விருது வாங்குவதற்கு இந்த மாதிரியான ஏதாவது தகுதி இருக்கா ??? படைப்புக்களை வைத்து தானே விருதுகள் தறாங்க.  அடுத்த வருடம் யாருக்காவது விருது குடுக்கும் போது அதை அவர் தண்ணி அடித்து கொண்டு இருக்கும் சமயத்தில் அறிவித்து அதே சுதியில் எல்லோரிடமும் கோத்தா எனக்கு விருது குடுத்து இருக்காங்கன்னு சொல்ல, அதை யாராவது கொளுத்தி விட. அவர் கெட்ட வார்த்தை பேசிவிட்டார் அதனால்  அவங்களுக்கு விருது தர கூடாதுன்னு ஒரு கோஷ்டி ரெடி ஆகி வரும். 

ஒரு எழுதாளினின் எழுத்தை கொண்டாடுங்கள் போதும் அவரை கொண்டாட வேண்டியதில்லை. இதை நான் சொல்லல பாஸ் எல்லாம் படித்து பார்த்து தெரிந்து கிட்ட அறிஞ்சவங்க அறியாதவங்க சொன்னது..  

இந்த பதிவை படிச்சி பாருங்க நம்ம மோகன் சார் பாலகுமாரன் அவர்களிடம் வாங்கிய பல்பு எல்லாம்.. 





புத்தகம்

காலம் நேரம் இல்லாமல் புத்தகம் படித்துகொண்டு இருக்கிறேன். கிழக்கில் வாங்கிய புத்தகங்கள் தான் அதிகமாக இருக்கிறது. பாதிக்கும் மேல் சுயசரிதையா இருப்பதால் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது. சென்ற வாரம் மறுபடியும் கிழக்கு தள்ளுபடி விற்பனை அரங்கத்திற்கு சென்றேன்  பாண்டபுரம் என்கிற புத்தகம் கிடைத்தது. இந்த புத்தகத்தை பற்றி முரளிகுமார் அவரது தளத்தில் எழுதி உள்ளார். அதை படித்தபோதே வாங்க வேண்டும் என்று நினைத்தேன் இப்போது தான் கிடைத்தது.  முதல் அத்தியாயம் குழப்போ குழப்பு என்று குழப்பி எடுத்துவிட்டது, அடுத்து அடுத்து அத்தியாயங்கள் படிக்கும் போது மலையத்தில் இருந்து அப்படியே தமிழுக்கு மொழி மாற்றம் செய்தது போல இருக்கிறது.  

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு-ஷாராஜ் புத்தகம் பரிசளிக்கிறேன் என்று பஸ்சில் சொல்லி இருந்தேன். நல்லதொரு சிறுகதைகள் உள்ள புத்தகம், புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் உங்கள் முகவரியை romeoboy.81@gmail.com ஈமெயில்க்கு தட்டிவிடவும் இலவசமாக புத்தகம் அனுப்பி வைக்கப்படும். இது இந்தியாவிற்குள் வசிப்பவர்களுக்கு மட்டுமே. 


பல்பு வாங்கியது 

சென்ற வாரம் நான் வாங்கிய பல்பு ... 

ஜூனியருக்கு மகா கஞ்சி ஊட்டிட்டு இருந்தா . தலைவரு சும்மாவே ஆட்டம் போடுவான் இதுல சாப்பாடுனா அவ்வளவு சீக்கிரத்துல இறங்குமா??? அவனை தாஜா பண்ணி டிவி எப்படி ஆன் பண்ணனும் எப்படி ஆப் பண்ணனும்ன்னு சொல்லி குடுத்துட்டு இருந்தேன். வாயில வச்சிருந்த கஞ்சியை அப்படியே டிவி ரிமோட்ல துப்பிட்டான். நான் அதை துடைக்க சங்கடபட்டுட்டு வாஷ் பேசின்ல கழுவிட்டேன் :(. கொஞ்ச நேரம் கழிச்சு சேனல் மாத்தலாம்ன்னு ரிமோட் எடுத்தா உள்ள இருந்து தண்ணியா ஊத்துது அந்த நேரம் பார்த்தா மகா வரணும்?? நல்லா டோஸ் கிடைச்சிது எனக்கு. ஐயோ ரிமோட் போச்சேன்னு அதை வேலை செய்ய வைக்க என்ன என்னமோ ட்ரை பண்ணி பார்த்தேன் ஒண்ணும் வேலைக்கு ஆகல. சரி உள்ள கழட்டி பார்க்கலாம்ன்னு ரிமோட் திறக்க பார்த்த அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு. மேல இருந்து தூக்கி போட்டேன், கீழ டாமல் டாமல்ன்னு நாலு தடவை அடிச்சி பார்த்தேன் ஒண்ணும் நடக்கல. சரி ஜூனியர்கிட்ட குடுத்து மகனே தூக்கி போடுடான்னு சொன்னா பயபுள்ள நேர எடுத்துட்டு போயி டிவி கிட்டவைக்கிறான் அதாவது அவன் திருந்திட்டான்னு சிம்பாலிக்கா சொல்லுறான். ஸ்குருவ் டிரைவர் வச்சி நெம்பி ஒருவழியா திறந்து பார்த்தா உள்ள அங்க இங்கன்னு தண்ணி இன்னும் கொஞ்சம் இருந்துச்சு. எல்லாத்தையும் தொடச்சி காயவச்சி பார்த்தாலும் ரிமோட் நிலைமை அதோ கதிதான் :((..

இதனால் சொல்லப்படும் நீதி என்னவென்றால்

1. பையன் சாப்பிடும் போது ரிமோட் பக்கத்துல வைக்காதிங்க
2. அப்படியே வச்சாலும் அதுல அவன் துப்பினாலும் ஒரு துணியை வச்சு துடையுங்க, எக்காரனது கொண்டும் தண்ணில கழுவாதிங்க
முக்கியமான நீதி
3. ஒரிஜினலை விட டுப்ளிகேட் ரொம்ப ஸ்ட்ராங் :((


பதிவு 

ஒரு நாளைக்கு 30 பதிவுகளுக்கு மேல படிக்கிறேன் அதில் தேறுவது என்னவோ அஞ்சி கூட இருக்காது. ஒரு சில பதிவுகள் அத்தி பூத்தது போல படிக்கும் போதே  அட போடவைக்கும் அந்த மாதிரியான ஒரு பதிவை படித்தேன். 

பதிவர் செல்வேந்திரனின் விருந்து என்கிற இந்த பதிவை படித்த பிறகு கொய்யால நாம வாங்கினதை திரும்ப செய்யணுமேன்னு என்கிற நினைப்பு தான் வந்துச்சு.. நல்லா இருந்துச்சு செல்வேந்திரன் :-)




பாடல் 

வாகை சுட வா... களவாணி பட இயக்குனரின் அடுத்த படைப்பு, ஜிப்ரான் என்கிற புதிய இசையமைப்பாளர் அற்புதமான பாடல்களை தந்துள்ளார். 

வைரமுத்து அவர்கள் எழுதி இருக்கும் சர சர சார காத்து பாடல் நல்லா இருக்கு அதே போல போறாளே போறாளே பாடும். சிம்போனி இசையுடன் வரும் ஆனா என்கிற பாடல் கண்டிப்பாக ஜிப்ரானுக்கு தமிழில் ஒரு இடம் காத்துகொண்டு இருப்பதை உறுதிபடுத்துகிறது.  வாழ்த்துக்கள் ஜிப்ரான் :-) 


படத்தின் ட்ரைலர் பார்த்தேன் கடைசியாக அந்த பெண் பேசும் வசனம் அப்பறம் தலையை ஆடி ஆடி பேசும் ஸ்டைல் சான்ஸ்சே இல்ல போங்க :-) ..






--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)





1 comment:

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete