Sunday, January 8, 2012

புத்தக திருவிழா :)

இந்த வருட புத்தக திருவிழாவிற்கு போகலாமா வேண்டாமா என்று நிறைய குழப்பங்கள். ஒரே ஒரு காரணம் தான் பணம். இந்த வருடத்தின் தொடக்கமே கைக்கும் வாய்க்கும் இழுத்து கொண்டு இருந்தது. இதில் இதுவேறையா என்று நினைக்க தோன்றிய தருணம். சரி போயிட்டு இருக்கிற காசுக்கு சிலதை மட்டும் வாங்கலாம் என்று கிளம்பினேன்.


சென்னையில் இருக்கும் பதிவர்கள் வருவார்கள் என்றாலும் மேவியை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் தான் அதிகமாக இருந்தது. புத்தக கண்காட்சியில் செல்லும் வழியில் இரண்டு பக்கமும் இவர்கள் எழுதிய புத்தகம் இங்கு இருக்கும் அவர்கள் எழுதிய புத்தகம் அங்கு இருக்கும் என்று நிறைய விளம்பரங்கள். அழகு குறிப்பு பற்றிய ஒரு விளபரத்தின் கீழே பளிச்சி என்று கண்ணில்பட்டது நமது டிஸ்கவரி புக் பேலஸின் பெயர். உள்ளே இந்த முறை வித்தியாசமாக பிசாவும், பர்கர் ஸ்டாலும் போட்டு இருந்தார்கள். சாயந்திரம் ஐந்து மணி அளவில் உள்ளே சென்றேன்  கூட்டம் அதிகமாக தான் இருந்தது. மேவிக்கு போன் செய்து அவரை சந்தித்தேன். சின்ன பையன் போலவே இருக்கிறார், என்னை விட வயதில் அதிகம் என்று குட்டி டின் சொன்னதாக நியாபகம் :). இருவரும் காபா, நேசமித்ரனை சந்திக்க சென்ற போது நடுவில் தல பால பாரதியை சந்தித்தேன். இது தான் முதல் சந்திப்பு என்றாலும் தல சீனியர் என்கிற கெத்து ஏதும் இல்லாமல் அன்போடும் பேசினார். போகும் போது மறக்காமல் தனது சிறுகதை தொகுப்பான சாமியாட்டம் பற்றி விளம்பரப்படுத்தினார்.

அவரிடமிருந்து விடைபெற்று நேசமித்திரன், காபா, MSK சரவணன், கேஆர்பி செந்தில் , கேபிள் சங்கர் நண்பர்களை சந்தித்தேன். எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு புத்தகங்களை பார்வையிட முதல் ஸ்டாலில் இருந்து தொடங்கினேன். என்ன புத்தகம் வாங்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டதனால் வேறு எந்த புத்தகத்தின் மேலும் காதல் கொள்ள முடியவில்லை.எப்பொழுதும் போல மொக்கை புத்தகங்களே அதிகமாக இருந்தது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகமாக இருந்தது. அவர்களின் அறிவை வளர்க்க இது எல்லாம தேவைப்படும் போல என்கிற உணர்வை தந்தது சில புத்தகங்கள். அடுத்த முறை போகும் போது ஜூனியருக்கு ஏதாவது வாங்கி செல்லவேண்டும். சில ஸ்டால்களில் குழந்தைகளின் வளர்ச்சியில்  எப்படி தங்கள் தொழில்நுட்பம் பயணப்படும் என்று பெற்றோர்களுக்கு முளை சலவை செய்து கொண்டு இருந்தார்கள்.   தமிழினி, காலச்சுவடு, வம்சி, ஆழி,  விகடன், காவ்யா இன்னும் சில உருப்படியான பதிப்பகங்களில் நேரம் செலவிட முடிந்தது. க.சி.சிவகுமாரின் ஆத்திமங்கலத்து விசேஷங்கள் புத்தகத்தை முன்றாவது வருடமாக விகடன் பதிப்பகத்தில் தேடி கொண்டு இருந்தேன், இன்னும் கிடைக்கவில்லை. மதி நிலையத்தில் சொக்கனின் மொஸார்ட் கண்ணில்பட்டது அப்பறம் வாங்கி கொள்ளலாம் என்று வந்துவிட்டேன்.   காலச்சுவடு, தமிழினி, வம்சி புத்தகங்களை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கி கொள்ளலாம் என்று வந்துவிட்டேன். கிழக்கு பக்கம் ஒரு எட்டு எட்டி பார்த்தேன் எப்பொழுதும் போல அங்கே கூட்டம் இருந்தது ஏதாவது ஒரு புத்தகம் வாங்கலாம் என்று நினைத்தேன், போன முறை பாராவின் உணவின் வரலாறு புத்தகத்தை 125 ருபாய் விலைகொடுத்து வாங்கி அந்த புத்தகம் படிப்பதற்கு முன்பே தள்ளுபடியில் 25 ரூபாயில் அவர்கள் விற்றதை நினைத்து பார்த்தேன். ஆறு மாசம் தானே அப்பறம் சல்லிசா கிடைக்கும் அப்போ வாங்கிக்கலாம் என்று வந்துவிட்டேன் . இருந்தாலும் ஒரு நப்பாசை இருந்து கொண்டு தான் இருந்தது குஷ்வந்த் சிங் எழுதிய TRAIN TO PAKISTAN நாவலை தமிழில் மொழிபெயர்த்து பாகிஸ்தான் போகும் ரயில் என்கிற பெயரில் வெளியிட்டு இருகிறார்கள். வாங்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டி இருக்கும் புத்தகம் இது.
சிறிது நேர உலாவிற்கு பிறகு டிஸ்கவரி புக் பேலஸ் செல்லலாம் என்கிற முடிவு வந்ததின் விளைவு நான்கு ரவுண்ட் அந்த ஏரியாவை சுற்ற வைத்து விட்டார்கள். ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாத வகையில் எண்கள், எது எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முகப்பு சென்றால் தான் உண்டு அல்லது சுற்றோ சுற்றோ என்று சுற்றவேண்டும். உள்ளே  புழுக்கம் என்றால்  அப்படி ஒரு புழுக்கம். வெண்டிலேஷன் இல்லாமல் வெள்ளை நிற குண்டானை கமுதி வைத்து இருந்ததை போல இருந்தது. டிஸ்கவரி சென்றால் அங்கே ஒரு  கூட்டமே நின்று கொண்டு இருந்தது, மணிஜி, Butterfly சூர்யா, உண்மை தமிழன், மயில்ராவணன், பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவகுமார், க.ரா போன்றவர்கள் இருந்தார்கள். டிஸ்கவரில் நான் கேட்ட புத்தகங்களில் பாதி இல்லை. முன்று மட்டுமே கிடைத்தது. திரும்ப தமிழினி, காலச்சுவடு, வம்சி பதிப்பகங்களுக்கு சென்றேன். வாங்க வேண்டிய புத்தகங்கள் என்று நான் எழுதி வைத்ததில் கால் வாசி அளவே வாங்க முடிந்தது.  வெளியே டீ குடிக்க வந்த போது ஒரு நபர் அவுட் ஆப்  போக்கஸில் தெரிந்தார். பார்த்த முகம் போல இருக்கிறதே என்று நினைத்தேன். அட நாம துபாய் ரிட்டர்ன் கீதப்பிரியன், ஆள் அடையாளமே தெரியவில்லை மனுஷன் ரொம்ப மெலிந்துவிட்டார். சந்தோஷமாக இருந்தது அவரை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகி இருக்கும். கையில் இரண்டு பைகளை சுமந்து கொண்டு வந்தார். குழந்தைகளுக்கு உபயோகமான சார்ட் வைத்திருந்தார், ஒரு செட் ஜூனியருக்கு வாங்க வேண்டும். அமெரிக்கா ரிட்டன் கா.ர எனக்கும் கீதப்ரியனுக்கும் காபி வாங்கி கொடுத்தார். நண்பர்கள் இதை நன்றாக கவனித்து கொள்ளவும் நாளை உங்களுக்கு இந்த செய்தி உபயோகப்படும்.


மணிஜியுடன் அரங்கு எண் F-35 சென்றேன் அங்கே எழுத்தாளர் பெருமாள் முருகன் வாசர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தி கொண்டு இருந்தார். ஒரு அன்பர் படுமொக்கையான கேள்வியொன்றை கேட்டார் அதற்கு நீண்டதொரு விளக்கத்தை அளித்தார் பெருமாள் முருகன். பின்னர் அந்த அன்பரே வந்து தான்  கேட்க வந்தது இதை தான் நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள் என்று விளக்கம் வேறு கொடுத்தார். என்ன கொடுமையா இது என்று தான் நினைக்க தோன்றியது.

காலச்சுவடு பக்கம் ஒரு புத்தகம் பார்த்தேன் என்று தொடங்கும் (புத்தகத்தின் பெயரை மறந்துவிட்டேன்:( )  அந்த புத்தகத்தை எழுதியவர் பெயர் றஷ்மி என்று இருந்தது.  இந்த றஷ்மி என்கிற பெயரை பார்த்ததும் எனக்கு சுகாவுன் முங்கில் முச்சு தொடர் தான் நினைவுக்கு வந்தது. ஒரு முறை சுகா ஷூட்டிங் லொக்கேஷன் பார்ப்பதற்காக தனது பெரியப்பா மற்றும் குஞ்சுவுடன் நாகர்கோவில் பக்கம் செல்கிறார், சென்ற இடத்தில இரவு நேரம் அதிகமாகிவிட  ஏதாவது ஒரு நல்ல சைவ ஹோட்டல் பக்கம் காரை நிறுத்த  சொல்கிறார் சுகா. குஞ்சு ஒரு ஹோட்டல் பக்கம் வண்டியை நிறுத்தி இது சைவ ஹோட்டல் தான் வாங்க சாப்பிடலாம் என்று அழைத்து செல்கிறார். உள்ளே சென்றதும் நீங்க சாப்பிட்டே இருங்க இதோ வந்துடுறேன் என்று எஸ்கேப் ஆகிவிடுகிறார். சர்வர்  வந்து என்ன சாப்பிடுறீங்க என்று கேட்க பெரியப்பா இட்லி ஆடர் செய்துவிட்டு சுகாவிடம் தெரியாத புது  ஹோட்டல் வந்தா இட்லியை முதலில் சாப்பிடுவது தான் புத்திசாலித்தனம் என்று பெருமையாக சொல்கிறார். அந்த ஹோட்டலில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை சுகா ஒரு முலையில் சாய்த்து வைத்து இருந்த தகரத்தை பார்க்கிறார். அதில் எழுதி இருந்தது "றத்த பொரியல்".  ஒருவேளை இந்த எழுத்தாளரும் நாகர்கோவில் ஆளாக இருக்கலாம் :))இன்று வாங்கி புத்தகங்கள்

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் - தமிழினி  
பீக்கதைகள் - பெருமாள் முருகன் - அடையாளம் 
நளினி ஜமீலா - குளச்சல் மு.யூசுப் - காலச்சுவடு 
திரைச்சிலை - ஓவியர் ஜீவா - திரிசக்தி 
சோளகர் தொட்டி - ச.பாலமுருகன் - எதிர் 
வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ரா
அழிக்க பிறந்தவன் - யுவகிருஷ்ணா-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

4 comments:

 1. ரெமியோ அண்ணே ... மன்னிக்க வேண்டும் என்னை. காபா உடன் புஸ்தக வேட்டையில் இருந்ததால் உங்களை கண்டுக்கவும் பேசவும் முடியல.

  பிறகு முக்கியமா பாகிஸ்தான் போகும் ரயில் - கிழக்குல வாங்காதீங்க. அதோட ஆங்கில ஒரிஜினல் வெர்ஷன் வாங்கி படிங்க.

  நீங்க கொண்டு வர சொன்னதை, என்னால் கொண்டு வர முடியல . சாரி

  பிறகு அரங்குக்கு வெளியே பிளாட்பார கடைகளில் துலாவி பார்த்தீங்களா ????

  ReplyDelete
 2. "மேவிக்கு போன் செய்து அவரை சந்தித்தேன். சின்ன பையன் போலவே இருக்கிறார், என்னை விட வயதில் அதிகம் என்று குட்டி டின் சொன்னதாக நியாபகம் :)"

  அண்ணே நான் சின்ன பையன், கல்யாணம் கூட ஆகல. இப்படி நீங்க குண்டை தூக்கி போட்ட ... என்னால் எப்புடி பிகர்களை கரெக்ட் செய்ய முடியும் ???

  ReplyDelete
 3. நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அருண்.

  ReplyDelete