Monday, January 9, 2012

புத்தக திருவிழா - 2 :)

இன்று கண்காட்சி வாயிலில் ஏகப்பட்ட போலீஸ் தலைகள் தெரிந்தது. ஞாயிற்றுகிழமை என்பதால் கூட்டத்தை கட்டுபடுத்த ஆட்களை நியமித்து இருகிறார்கள் என்று நினைத்து கொண்டே உள்ளே சென்ற போது நான்கு ஐந்து போலீஸ் வாகனங்கள் கண்ணில் தென்பட்டது. உள்ளே மக்கள் தலைகள் அதிகமாக தெரிந்தது  இடது வலது ஓரங்களில் சிலர் நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தார்கள். கையெழுத்து அழகாக பயிற்சி அளிப்பதா ஒரு விளம்பர தாள் என் கைகளில் கிடைத்தது. உள்ளே அரங்கினுள் செல்லும் போது புதிய தலைமுறை அரங்கில் அப்துல் கலாம் பேசி கொண்டு இருந்தார். ஓ இதனால்   தான் அத்தனை போலீஸ் அங்கு இருந்தார்களா.. அவர் வேலையை அவர் பார்த்து கொண்டு இருக்கும் சமயத்தில் நமது வேலை பார்க்கலாம் என்று உள்ளே சென்றேன். மேவி, MSK சரவணன், காபா டீம் காலச்சுவடில் அள்ளி கொண்டு இருந்தார்கள். அதும் MSK பெரிய வேட்டையை நிகழ்த்தி இருந்தார், புத்தகங்களை அள்ளோ அள்ளு என்று அள்ளியத்தில் அவரின் இரண்டு தோள்களும் ரெண்டு இஞ்சாவது இறங்கி இருக்கும். ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு உயிர் எழுத்து வந்தோம் அங்கு உப்பு நாய்கள் என்கிற புத்தகத்தை எழுதிய லக்ஷ்மி சரவணகுமார் அவர்களை சந்தித்தோம்,  நேசமித்திரன் அந்த புத்தகத்தை பற்றி அந்த அரங்கினுள் பேச இருப்பதாக சொன்னார். காபா ஊருக்கு செல்ல நேரம் ஆனதால் அவருடன் மேவியும் கிளம்ப நான்,  MSK, நேசமித்திரன் லிச்சி ஜூஸ் சாப்பிட்டோம். இன்றைய ஸ்பான்சர் MSK :). 

  MSK சரவணன் , மேவி


அடுத்த ரவுண்ட் அடிக்கலாம் என்று கிளம்பி டிஸ்கவரி வந்தோம் பெரிய கூட்டமே களைகட்டி கொண்டு இருந்தது, தம்பி அண்ணன் அப்துல்லா, பப்பாஷா ஷங்கர், மதார் ஜாமாவில் ஐக்கியமாகி இருந்தார். எப்பொழுதும் போல கேபிள், சுரேகா, கே.ஆர். பி டீமுடன் பேசி கொண்டு இருந்தோம்.  டிஸ்கவரி அரங்கில் தேனம்மை லட்சுமணன்  அவர்களின் புத்தக வெளியீடு நடந்தது, நேசமித்ரனின் பேச்சை கேட்ட எல்லோரும் உயிர் எழுத்து அரங்கிற்கு சென்றோம். வழியில் வாசகர்களுடன் எஸ்.ரா பேசி கொண்டு இருந்தார், அவரது பேச்சை ரசிக்க கூட்டம் அதிக அளவில் இருந்தது. திடிர் என்று ஒரு கும்பல் மலையாள மனோரமாவின் ஸ்டாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி கொண்டு இருந்தது. மே17  இயக்கத்தினரின் என்று அவர்கள் தந்த நோட்டீஸ் முலம் தெரிந்தது . 


நமது குழந்தை கவிஞர் அப்துல்லாவிற்கு திடிர்ரென்று ஒரு ஆசை வந்தது டோரா படத்திற்கு அருகில் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டும், அண்ணனின் ஆணையை நிறைவேற்றும் பொருட்டு அதன் அருகில் இருந்த பெண்ணை சைடு வாங்கி போக சொல்லிவிட்டு ஒரு புகைபடம் எடுத்து கொண்டேன். 

அண்ணனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் 

பப்பாஷா, மதாருடன் வெளியே டீ குடிக்க செல்ல நினைத்த போது எதிரில் சுகா வந்தார். அவருடன் இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பினேன். முவரும் கிழக்கில் நின்று கொண்டு இருந்த சமயத்தில் குட்டி டின் வந்தான். கையில் ஒரு புத்தக மூட்டை. பப்பாஷா வாங்கி இருந்த சுஜாதா புத்தகங்கள் அது எல்லாம். 
கடைசியாக கிடைத்த தகவலின் படி புத்தகத்தை எப்படி வாங்கி சென்றானோ அப்படியே ரிட்டன் செய்து விட்டான். 
  
பிட்ஸ் 

நேற்று நடந்த வாசகர் எழுத்தாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எழுத்தாளர் பெருமாள் முருகன் 12 வருடங்களுக்கு முன் தான் தொகுத்த கொங்கு சிறுகதைகள் புத்தகத்தை பற்றி பேசினார். தனக்கு அந்த புத்தகம் தொகுக்க எத்தனை மாதங்கள் ஆனது என்றும் அதே போல இனி என்னால் செய்ய முடியாது என்றார். அந்த தொகுப்பை இரண்டாம் பதிப்பு கூட கொண்ட வர முடியவில்லை என்று ஆதங்கப்பட்டார். இன்று பச்சையப்பா கல்லூரியில் இருந்து நடந்து வருகையில் ரோட்டு ஓரத்தில் விற்கப்பட்டு இருந்த பழைய  புத்தகங்களில் இந்த புத்தகம் கண்ணில்பட்டது. காவ்யா பதிப்பகம் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த புத்தகத்தின் விலை 200ருபாய் ஆனால் அங்கு 50ரூபாய்க்கு கிடைத்தது. கொஞ்சம் சுற்றியதில் காவியாவின் இன்னும் சில புத்தகங்கள் 20,  30 ரூபாய்க்கு போட்டு இருந்தார்கள். 


கிழக்கில் கலைவாணி ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, காலச்சுவடில் நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை இதில் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்திருந்தால் மற்றொன்றை சாய்ஸில் விட்டுவிடவும். ரெண்டும் ஒன்று போலவே தான் இருக்கிறது. குடும்பத்துக்காக பாலியல் தொழில் இறங்கி பின்பு சமூகசேவை நிறுவனத்தில் வேலை செய்து.... களம் மட்டுமே வேறு தவிர மற்றபடிக்கு வேற ஒன்றும் பெரியதான மாற்றமில்லை. திருநங்கைகள் பற்றி நான்கு ஐந்து புத்தகங்கள் இந்த முறை வந்துள்ளது. எதை வாங்கினாலும் மற்றதை லூசில் விட்டுவிடுவது நல்லது. கண்டிப்பாக வாங்கவேண்டும் என்று இருப்பவர்களுக்கு எனது சாய்ஸ் கிழக்கில் வெளிவந்து இருக்கும் நான் வித்யா-ஸ்மைலி வித்யா எழுதியது. ஓபனிங் டெர்ரரா இருக்கும் .. இந்த புத்தகத்தை பற்றிய எனது விமர்சனம் .

-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)8 comments:

 1. ந‌ல்ல‌ ப‌கிர்வுங்க‌ ரோமியோ..நேரில் க‌ண்ட‌து போல்..

  ReplyDelete
 2. ஏகப்பட்ட புகைப்படங்கள். நல்ல தொகுப்பு. இன்னும் சற்று பெரிதாக இருந்திருக்கலாம். முல்லைப்பெரியாறு பிரச்னை அங்கயுமா?

  ReplyDelete
 3. "அதும் MSK பெரிய வேட்டையை நிகழ்த்தி இருந்தார், புத்தகங்களை அள்ளோ அள்ளு என்று அள்ளியத்தில் அவரின் இரண்டு தோள்களும் ரெண்டு இஞ்சாவது இறங்கி இருக்கும்."

  அந்த மூட்டைய கொஞ்சம் நேரம் நான் தூக்கிகிட்டு இருந்தேன்... எப்பே என்ன வைட்டு. நேரவே நிக்க முடியல :)))
  =
  *"MSK, நேசமித்திரன் லிச்சி ஜூஸ் சாப்பிட்டோம். இன்றைய ஸ்பான்சர் MSK :)."*

  ஒரு குழந்தை ஓசில லிச்சி ஜூஸ் சாப்பிட எவ்வளவு நேரம் கேட்டுகிட்டு இருந்துச்சு. அது போன உடனே வாங்கி சாப்பிட்டீங்களா ???

  இந்த பிடி சாபம் - நீங்க தேடிகிட்டு இருக்குற புஸ்தகம் இன்னும் ஒரு வருஷத்துக்கு உங்களுக்கு கிடைக்காது :))))
  =
  அடே ஜோ மல்லூரி கடை போட்டிருந்தாரா ... ச்சே மிஸ் பண்ணிட்டேன், ஸ்பீக்கர் எல்லாம் போட்டு கவிதை காமெடி பண்ணுவரே ஒருத்தர் ; அவர் தானே இது ?

  ReplyDelete
 4. அருமையான பதிவு.
  எப்படி இருக்கிறீர்கள்? நலமா? நண்பர்கள் திரு அருணகிரி, தினேஷ் எப்படி இருக்கிறார்கள்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. sir ' aathimangaluthu visesangal'book vikatan la kidikuthu....nanga vanginom...

  ReplyDelete
 6. தினமும் உங்க பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  வரமுடியாத குறை ஓரளவு தீர்ந்தது.

  ReplyDelete
 7. இம்புட்டு போட்டோ எடுக்கவே நேரம் பத்தாதே!! அப்புறம் புக்கு வேற வாங்கினீகளா தம்பு? :)

  ReplyDelete
 8. @அஹமது இர்ஷாத் மிக்க நன்றி :)

  @சிவகுமார் எங்கேயும் எப்போதும் :))

  @மேவி க்கும் நான் முணு வருஷமா தேடிட்டு இருக்கேன் இன்னும் கிடைக்கல

  @Rathnavel எல்லோரும் நலம் சார் .. நீங்க நலமா :)

  @Elamparuthi நான் போனபோது அங்கே இல்லைன்னு சொல்லிடாங்க :(. தகவலுக்கு நன்றி நண்பர்களிடம் சொல்லி வைக்கிறேன்

  @துளசி கோபால் தினமும் நான் புத்தக கண்காட்சி பற்றி எழுதணும் நு தான் நினைக்கிறேன் மேடம். செல்வதற்கு நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுகிறேன் :)

  @பட்ஜெட் ப்ரோப்ளம் அண்ணா :( வெளியே பிளாட்பாரத்தில் கொங்கு சிறுகதை தொகுப்பு கிடைத்தது அதை மட்டும் வாங்கினேன்

  ReplyDelete