Wednesday, February 15, 2012

தெர்மக்கோல் தேவதைகள் - சங்கர் நாராயண்

கேபிள் சங்கர் என்கிற அடைமொழியுடன் தான் இவர் எனக்கு அறிமுகமானார். சினிமா விமர்சனங்கள் தான் இவரது களம் என்று நினைத்து கொண்டு இருந்த காலத்தில் முதல் புத்தகமான லெமன் ட்ரீ படித்த போது தான் கதைகள் எழுதுவதிலும் வல்லவர் என்று தெரிந்து கொண்டேன். அந்த சிறுகதை தொகுப்பு அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. அதற்கான காரணங்கள் பல உண்டு நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் சிறுகதைகளை படிப்பதில் நாட்டமே இருந்ததில்லை. இப்போது வரை சிறுகதைகளை அவ்வளவாக நேசித்து படிப்பதில்லை, குறிப்பிட்ட காரணங்கள் என்று சொல்ல முடியவில்லை இதை முன்பே எனது பதிவுகளில் சொல்லிருக்கிறேன்.  சீரியஸ் புத்தகங்களை படித்து கொண்டு இருந்த நேரத்தில் ஒரு சின்ன மாறுதலுக்காக தெர்மக்கோல் தேவதைகள் படிக்கச் ஆரமித்தேன். சும்மா சொல்ல கூடாது விறு விறு என்று எல்லா கதைகளும் சீரான வேகத்தில் சென்றதால் முழு தொகுப்பையும் படித்து முடித்து தான் புத்தகத்தை கீழே வைத்தேன். 




முதல் தொகுப்பில் வந்த கதைகளுக்கும் இந்த தொகுப்பில் வந்த கதைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள். மனதில் படியாமல் சென்ற முதல் தொகுப்பு கதைகளை போல இல்லாமல் சுந்தர் கடை, கருணை, காளிதாஸ், பிரியாணி, சேச்சு பாட்டி, ராஜலட்சுமி  கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் உள்ளுக்குள் விஷுவலாக உருமாறும் போது அதன் வீச்சம் அதிகம். சேச்சு பாட்டியின் முடிவு மசாலா சினிமா படத்தின்  கிளைமாக்ஸ் போல இருந்தாலும் அதற்கு முன்பு வரை பாட்டியை ரசிக்க முடிகிறது. 

மாதவன் கதாபாத்திர படைப்பு சராசரி ஒரு டிராபிக் போலீஸ்காரரை  கண்ணில் காட்டுகிறது. ஒன்றும் செய்ய முடியாத இடத்தில இதாவது கிடைச்சுதே என்று நினைக்கும் சராசரி மிடில் கிளாஸ் மாதவனை  நினைவுபடுத்துகிறது. .



காளிதாஸ் கதையின் கடைசியில் வரும் காரணத்தை படிக்கும் போது எல்லாமே இருக்கு அனுபவிக்க தான் ஆளில்லை என்று கூறும் பெரும் பணக்காரனுக்கும், காளிதாசுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. கிளைமாக்ஸ் படித்து விட்டு கதையை திரும்ப படிக்கும்போது வலிகளை உள்ளுக்குள் வைத்து கொண்டு அந்த தகப்பன் எப்படி வாழ்த்து கொண்டு இருக்கிறான் என்று கற்பனை செய்து பார்த்தேன் இன்னும் மனதை பாரம் ஏறியதை போல உணர்ந்தேன். இந்த கதையின் இன்ஸ்ப்ரேஷன்   நான் கடவுளாக இருக்கலாம். 


மகாநதி கதையின் முடிவை எப்படி ஏற்றுகொள்வது என்று தெரியவில்லை. இதற்காகத்தான் அழுகிறாள் இல்லை இதற்காக இருக்குமோ  என்று இரண்டு முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது. 


ராஜலட்சுமி, ஜெயா,  ராஜி , பிரியா (எ) பிரியதர்ஷினி கதைகள் அருமை. அட்வைஸ் பண்ணுவதில் கொஞ்சம் அமுக்கி வாசித்திருந்தால் இன்னும்  நன்றாக இருக்கும். 

ராஜலட்சுமி கதை களம் நமக்கு அறிமுகமானது தான். ராஜலட்சுமி போல நிறைய பெண்கள் தங்கள் வாழ்கையை அதிரடியாக வாழ்வதாக நினைத்து  கொண்டாலும் அவர்களுக்குள் இருக்கும் ஆசைகளை அவ்வளவாக வெளிக்காட்டி கொள்வதில்லை. அவ்வாறு காட்டி கொண்டு அதில் ஏற்படும் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் மிகுந்த மனஉளைச்சலையும்  எதிர் கொள்ளமுடியாமல் தவறான முடிவு எடுத்துவிடுகிறார்கள்.  அடிகடி நாமும் செய்தி தாள்களில் படித்து கொண்டு தான் இருக்கிறோம், இளம்பெண் வயிற்று வலியால் தற்கொலை செய்து  கொண்டார் என்று யாருக்கு தெரியும் அது தான் உண்மையென்று !!!


சங்கர் என்கிற கேரக்டர் ஒவ்வொரு கதையிலும் நண்பனாக வந்து மற்றவர்களுக்கு அறிவுரைகளை வாரி வழங்குகிறார். பிரச்சனைகளை சமாளிக்க தீர்வுகளை சொல்கிறார். ஆகா மொத்தம் சங்கர் என்கிற கதாபாத்திரம் இல்லை என்றால் நான்கு ஐந்து கதைகள் முழுமை அடையாமல் சொதப்பி இருக்கும். அதே சமயம் எல்லா கதைகளிலும் இந்த நண்பன் என்கிற கேரக்டர் வருவதை அதிகமாக ரசிக்க முடியவில்லை. அரசர்களுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அரசவையில் இருக்கும் ராஜதந்திரி ஆட்களில் அறிவுரைகளை கேட்பது போல சங்கரை இவர்கள் உபயோகிதுள்ளார்.



தேவதைகள் என்கிற தலைப்பு ஏற்றது போல முக்கால்வாசி கதைகளில்  தேவதைகளே உலாவுகிறார்கள். புத்தகத்தை ரொம்பவும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட முடியாது என்றாலும் படிப்பதற்கும் ஒரு சின்ன செஞ் வேண்டும் என்று நினைத்து படிக்கும் போது ஏமாற்றம் தரவில்லை..



-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

No comments:

Post a Comment