Sunday, March 24, 2013

பரதேசி



வாழ்கையில் இனி எக்காரணத்து கொண்டும் அதிகபடியான விமர்சனங்களை படித்து படம் பார்ப்பதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன் ###  பரதேசி விமர்சனம் தேடி தேடி படித்து எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் படம் பார்த்து தொலைத்தேன் :((... இரண்டு சீன் மட்டும் ஆணி அடிச்சது போல நெஞ்சில் ஒட்டிகிச்சு  1. இடைவேளை சமயத்தில் இறக்க போறவனின்  கை.... 2 . கடைசி சீனில் அங்கமாவை பார்த்து கதறும் ராசா.



இடலாக்குடி ராசாக்கும் இந்த படத்தின் ராசாக்கும் என்ன சம்பந்தம் ??? இடலாக்குடி ராசா ஒரு கோட்டிகாரன்  இதில் அதர்வா ஒண்ணும் அப்படிபட்டவன் இல்லையே. ராசா என்கிற பெயரும்.. ராசா வண்டியை விட்டுடுவேன் என்கிற வசனமும் தான் உபயோகப்படுத்தி இருக்கார். அதுக்குள்ளே அந்த கதையையும் இதுல இழுத்து விட்டு ஆஹா ஓஹா பேஷ் பேஷ்னு பேசிட்டு இருக்காங்களே !!!  G.V. பிரகாஷ் சுத்தம் என்ன எழவுக்கு  பாலா இவன் கூட எல்லாம் கூட்டணி   வச்சிகிட்டார்.. பின்னணி இசையை எங்கேயோ கேட்டது போலவே இருக்கு இளையராஜாவை ரொம்ப மிஸ் பண்ணிய படம்.

தனிஷ்கா நெம மெர்சலான இருக்கு,,  நல்லாவே நடிக்கிது..

எரியும் பனிக்காடு என்கிற நாவலின் களத்தை மட்டும் எடுத்து கொண்டு இந்த படத்தை எடுத்தார் என்கிற வாதம் எல்லாம் தூக்கி போடுங்க.. இடைவேளைக்கு பிறகு வரும் கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க அந்த நாவலில் இருந்து உருவி எடுத்தது தான்.

பாராட்ட எவ்வளவோ இருக்கு எழுதுவதற்கு தான் ஒண்ணும் இல்லை. இந்த ஒருவாரத்தில் படத்தை பவர் சோப்பு   போட்டு அடியோ அடியென்று அடித்து டங்குவெரு கிழிந்து தொங்குகிறது. இதில் நானும் சேர வேணுமா !!!!


-------

ரோமியோ

5 comments:

  1. டைட்டில் கார்டு ல முத கார்டே நாவலுக்கு நன்றி சொல்லுற கார்டு தான் அண்ணே

    ReplyDelete
  2. விமர்சன ஆர்வலர்களின் ஆர்வம் தாங்க முடியவில்லை.. படம் வெளியாகி அடுத்த வினாடியே அடித்து துவைக்க இல்லை கதை சொல்ல தொடங்கி விடுகிறார்கள் ஆர்வம் தாங்க முடியாமல் வாசிக்காமல் இருக்க முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. அதே தான் இங்கேயும் .

      Delete
  3. படம் ரொம்ப கேவலமோ?

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் சொல்ல முடியாது .விமர்சனங்களை அதிகமாக படித்ததின் விளைவு படத்தை இரண்டாவது முன்றாவது முறையாக பார்ப்பது போல இருந்தது .

      Delete