Tuesday, March 26, 2013

சங்கதிகள் - 25/03/2013

சங்கதிகள் என்கிற தலைப்பில் சின்ன சின்னதா சில பத்திகள் எழுதி கொண்டு இருந்தேன். ப்ளாக் எழுதுவதில் இருந்த ஆர்வம் குறைந்தால் இதை அப்படியே நிறுத்திவிட்டேன் இனி தொடரலாம் என்கிற ஐடியா இருக்கிறது பார்க்கலாம். 


 ----------------------------------------------------------------------------

 அநியாயத்துக்கு இங்கே மின்வெட்டு, யார் எப்படி போனால் என்ன என்கிற நினைப்பில் இருக்கிறார்கள் போல. கடந்த 1 வாரத்தில் இரவுகளில் ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை மின் தடை. புழுக்கம், கொசுகடியால்  தூக்கம் போய் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன். அதிகாலை 6 மணி முதல் 9 மணிவரை மின்சாரம் இருக்காது. இந்த நேரத்தை தேர்ந்தெடுத்த நாதேறி எவன் என்று தெரியவில்லை. வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்க வேண்டுமே என்னை செய்ய ?? திரும்ப அம்மிகல்லுக்கும் அட்டாங்கல்லுக்கும் வேலை வைத்துவிட்டார்கள் இந்த ஆட்சியாளர்கள். மின்சாரத்தை நம்பி தொழில் செய்பவர்களுக்கு செம அடி என்று சொல்லலாம். அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன் இதை போன்ற மின்வெட்டால் தமிழ்நாடே சிக்கி திணறி கொண்டு இருந்தது. இங்கே தமிழ்நாடு என்பது சென்னையை தாண்டிய பகுதிகள். சென்னை என்றோ தமிழ்நாட்டில் இருந்து விடுபட்டு தனி மாநிலமாக இருக்கிறது.


 ----------------------------------------------------------------------------

தமிழனுக்கு என்ன தேவை என்பதை ஹிந்திகாரன் நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறான்.  பெரிய பெரிய நிறுவனங்கள் முதல்  பஞ்சு மிட்டாய் வியாபாரம்  அவர்கள் உள்ளே புகுந்து கிடைத்த வரை லாபம் என்கிற கணக்கில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் .

நேற்று காலை வீட்டில் இருந்து கிளம்பும் போது ஹிந்திகாரன் ஒருவன் சிம்மினி விளக்கு விற்று கொண்டு வந்தான். எதிர் வீட்டு மாமி அவனிடம் பேரம் பேசி கொண்டு இருந்தார். அவர்கள் வீட்டில் UPS வசதி இருக்கிறதே அப்பறம் எதுக்கு சந்தேகத்தை அவரே நிவர்த்தி செய்தார். பேட்டரி சார்ஜ் செய்வதற்கு கூட கரண்ட் இருப்பதில்லையே.  

 ----------------------------------------------------------------------------


வெயில் இங்கே  செம காட்டு காட்டுது. இரண்டு நாட்களுக்கு முன்  வண்டியில் கோயம்புத்தூர்  இருந்து மேட்டுபாளையம் போயிருந்தேன் 40 கிலோமீட்டர் தான். அன்னூர் போயி கட் பண்ணிக்கலாம்ன்னு அக்குடியா, அன்னூர் போறவரைக்கும் கூட அவ்வளவா வெயில் தெரியல. அங்கே இருந்து மேட்டுபாளையம் 20 கிலோமீட்டர்  30 நிமிஷத்துல போயிட்டேன் ஆனா மொட்டை வெயிலில் போறது தான் பெரும் பாடாகி போச்சு. போற வழியெல்லாம் எவனாவது சைட் பிரிச்சி போட்டு அங்கேயே ஒரு குடுசையும் போட்டு இளிச்சவாயன் எவனாவது சிக்குவானான்னு தேவுடு காத்துட்டு இருக்காங்க. இவர்கள் ரொம்ப சாமார்த்தியமாக சில வேலைகளை செய்கிறார்கள். சைட் பிரித்ததும்  கொஞ்ச நாட்களுக்கு பிறகு அங்கே இரண்டு முன்று வீடுகளை இவர்களே கட்டி வருபவர்களிடம் எல்லாம் அந்த இடத்தின் சொந்தகாரர் வீடு கட்டுறார் என்று பொய் சொல்லி இடத்தை விற்றுவிடுகிறார்கள். அன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை இப்படி என்றால் மேட்டுபாளையத்தில் இருந்து காரமடை (மெயின் ரோடு இல்லை ஊருக்குள் சுற்றோ சுற்றென்று சுற்றி வரணும)  வரும் வழியில் நிறைய இடங்களை சைட் பிரித்து இருக்கிறார்கள். எனது அத்தை ஒருவர் அந்த மாதிரியான அத்துவான காட்டில் ஒரு வீடு கட்டி கொண்டு இருக்கிறார். யானைகள் தொல்லை அதிகம் என்பதால் அதை வாடகைக்கு மட்டுமே விட இருக்கிறார்.  உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி ஜூஸா என்றதுக்கு அவரால்  பதில் சொல்ல முடியவில்லை.   

----------------------------------------------------------------------------

வீட்டுக்கு போகும் வழியில் நுங்கு விற்று கொண்டு இருப்பார் ஒருவர். 10 ரூவா கொடுத்தா 3 நுங்கு கொடுக்குறாங்க.. அவ்வ்வ் அநியாயமா இருக்கே சென்னைல ரூவாய்க்கு 1 இல்லைனா 10 ரூவாய்க்கு 8 நூங்கு கிடைக்கும்.  தெளுவு (பன மரத்தில் இருந்து எடுக்கப்படும்) 1 லிட்டர் 40 ருவாயம்... பனை மரத்துக்கு எந்த உரமும் வேண்டாம் தண்ணி கூட வேண்டாம் அதுபாட்டுக்கு வளந்து நிக்கும். அங்கேயிருந்து பறித்துக்கொண்டு வந்து கொள்ள லாபத்துல விக்கிறாங்க, இதற்கு நேர் மாறாக  தர்பூசணி விலை அநியாயத்துக்கு எறங்கி போயி கேடக்குது ஒரு கிலோ 8 ரூவாயிக்கு விக்கிறாங்க. பெரிய பழம் எப்படியும் 4-5 கிலோ வரும் 5 பேர் கொண்ட குடும்பம் ஒண்ணு ரவுண்டு கட்டி திங்கலாம், ஜூஸ் போடலாம். ஜூனியர் ஸ்கூல் மிஸ் தர்பூசணி சாப்பிடுவது நல்லதுன்னு சொல்லிட்டாங்களாம் டெய்லி ரெண்டு அல்லது முன்று துண்டுகளை உள்ளே தள்ளிட்டு இருக்கான்.

----------------------------------------------------------------------------


இப்போ எல்லாம் 1 ரூபா சில்லறை இல்லை என்று சொல்வது பேஷன் இல்லை போல, 5 ரூபா சில்லறை இல்ல இந்தாங்க பூஸ்ட் பாக்கெட் என்று கையில் திணிக்கிறார்கள்.. அவனிடமே அதை திரும்ப தந்துவிட்டு அடுத்த முறை வரும் போது வாங்கிக்கிறேன் என்பது எனது வாடிக்கை ஆகி கொண்டு இருக்கிறது.  இன்னைக்கு காலைல மெடிக்கல் ஷாப்பில் ஜூனியருக்கு மருந்து வாங்கிவிட்டு  சில்லறை 7 ரூபா இல்ல ஷாம்பு தரட்டுமா என்ற பெண்ணிடம் இருங்க வரேன் என்று வீட்டுக்கு சென்று 50 பைசா சில்லறையை 3 ரூபாய்க்கு எடுத்துட்டு வந்து கொடுத்தேன். 50 பைசா எல்லாம் வாங்குவதில்லை என்ற பெண்ணிடம் அப்பறம் எதுக்கு 50 பைசா சாக்லேட் விக்கிறீங்க என்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் சில்லறையை கல்லாவில் போட்டுவிட்டு  10 ருபாய் நோட்டை தந்தார் ## கொய்யால யாரு கிட்டா.. ஊட்டுல 50 பைசா காயின் நிறைய வச்சி இருக்கேன் :)

----------------------------------------------------------------------------

இந்த மாத முதல் வாரத்தில் திருப்பூரில் இருக்கும் மாமா வீட்டுக்கு சென்று வந்தேன். அப்படியே இந்த புகைப்படத்தையும் எடுத்தேன்.


எனது கூகுள் +, மற்றும் Facebook பக்கத்தில் இந்த படத்தை பகிர்ந்து இருந்தேன். ராஜன் நெல்லை என்கிறவன் இந்த படத்தை எடுத்து அதில் அவனது பெயரை போட்டு அவன் எடுத்ததை போல Facebookக்கில் போட்டு இருக்கிறான். கொடுமை என்னவென்றால் இந்த புகைப்படம் எனது தம்பி வேறு ஒரு க்ருப்பில் இருந்ததை பார்த்து அவனது பக்கத்தில் ஷேர் செய்து இருந்தான். அதை பார்த்து தான் இந்த ராஜன் நெல்லை என்கிற கபோதி செய்த திருட்டு தனம் தெரிந்தது.  அவனது Facebook பக்கம் சென்று கேள்வி கேட்டதும் உடனே படத்தை  எடுத்துவிட்டான். அவன் பக்கத்தில் இருந்தது எல்லாம் வேறு ஒரு  இடத்தில இருந்து உருவியது தான்.  இந்த படத்துக்கு ஏண்டா இவ்வளவு சீன் போடுறானே என்று நினைப்பீர்கள். உங்கள் கைக்குட்டை சின்னது தான் அதை மற்றொருவன் எடுத்து சென்றால் பார்த்துட்டு  சும்மாவா இருப்பீங்க ??அன்புடன் 
ரோமியோ 1 comment:

  1. Really rocking post.. That last picture is showing the "CURRENT" Situation in Tamil Nadu..

    ReplyDelete