Saturday, May 22, 2010

நெம்பர் 40, ரெட்டை தெரு - இரா.முருகன்

கார்த்திக் என்னுடன் முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தவன். அவன் மட்டும் அல்ல பாலாஜி, சிமியோன், ஜின்சயத் எல்லாம் முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தோம். இந்த கார்த்தி பையன் மட்டும் எங்களை விட நன்றாக படிப்பான். கிளாஸ்ல முதல் மாணவனும் அவனே, அதனால் அவனுக்கு கொஞ்சம் அல்ல நிறையவே தலைகணம்  இருந்தது. வகுப்பின் முதல் மாணவன் என்கிற திமிரில் அவன் நிறைய ஆடினான், வகுப்பில் இருக்கும் மக்கு மற்றும் அடிமை பசங்களுக்கு எல்லாம் இவன்தான் தலைவன்.  அவனும் எங்களுடன் ஒரே காலனியில் தான் குடியிருந்தான், அவன் அப்பா இ.பியில் நல்ல  போஸ்டிங்ல இருந்ததால் வசதி வாய்ப்புக்கு குறைவில்லாமல் இருந்தான். அதாவது அப்பர் மிடில் கிளாஸ் ரேஞ்சில் இருந்தான், பையில் பணம் இல்லாமல் ஸ்கூல் வரமாட்டான். கிளாஸில் இருக்குற இவன் அடிமைகளில் முக்கியமான ஒருத்தன் இருந்தான் அவன் பெயர் மதன். பார்ப்பதற்கு சேட்டு வீட்டு பையன் போல இருப்பான்.   படிப்பதில் அவனை மாதிரி ஒரு மக்கு பையனை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விடமுடியாது. ஆனால் வாயோ அவன் அப்பாவின் கைகளில் இருக்கும் துணி அளக்கும் ஸ்கேல் மாதிரி ஒரு மீட்டர் நீளத்துக்கு இருக்கும். இவனிடம் இருக்கும் அறிவை பார்த்து கிளாஸ் டீச்சர் கார்த்திகை பார்த்து கொள்ளும்ப்படி சொல்லிவிட்டார். பாவம் அவரால் அவனை ஒரு நிலையான இடத்திற்கு கொண்டுவர முடியவில்லை. எத்தனை முறை சொல்லாலும் மேத்ஸ் என்றாலே அவன் மார்க் 10க்கு மேல் கொண்டு வரமுடியவில்லை. நான் சொல்லுவதை நீங்கள்  நம்பித்தான் ஆகவேண்டும் 8th படிக்கும் போது மற்றவர்களை போல மதன் அல்ஜிப்ரா படிக்கவில்லை 15 தாவது வாய்பாடைதான் படித்து கொண்டு இருந்தான். கார்த்திக் அவனுக்கு பாடத்தை சொல்லி கொடுத்தானோ இல்லையோ அவனின் தேவைகளை அதிகமாக பூர்த்தி செய்து கொண்டான்.  

இப்பொது  மாதிரி அல்ல அப்போ, அதாவது 16 வருசத்துக்கு முன்னால் பிரியாணி என்றால் முனியாண்டி விலாஸ், மிலிடரி ஹோட்டல் என்று அசைவ ஹோட்டல்கள்  ஐந்து கிலோ மீட்டர்க்கு ஒன்று என்று இருந்தது. இந்த நேரத்தில் புதிதாக ஹோட்டல் பாண்டியன் என்கிற பெயரில் மகாராணி தியேட்டர் அருகே ஒரு அசைவ சாப்பட்டு  கடை தொடங்கபட்டது அல்லது அப்போது தான் அப்படி ஒரு ஹோட்டல் சென்னையில்  இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும்.  கார்த்திக் வாரத்தில் மூன்று முறை அந்த ஹோட்டலில்  தான் சாப்பிடுவான். மதன் தான் லஞ்ச் நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு மாங்கு மாங்கு என்று மிதித்து சென்று வாங்கி வருவான். அந்த சிக்கன் பிரியாணி வாசம் வகுப்பறை முழுவதும் வீசும். எங்களின் சாபத்தை வாங்கி கட்டி கொண்டுதான் கார்த்திக்கின் தொண்டையில் சிக்கன் நுழையும்.  கார்த்திக் செயல் எங்களுக்கு எரிச்சலை ஊட்டியது . மதன் வேறு யாருக்கும் வாங்கிகொண்டு வரமாட்டான் என்பதால் வந்த எரிச்சல் வேறு . நாங்கள் சதிதிட்டம் எல்லாம் பண்ணுவதற்கு முன்பாகவே மதன் கார்த்திக் பிடியில் இருந்து விலகி  முரளிகிருஷ்ணனுக்கு அடிமை ஆனான். ஏன் என்று ரொம்ப நாள் தெரியாமல் இருந்த இந்த புதிருக்கு விடையை  வருட கடைசி பரிச்சையில் தான் தெரியவந்தது,  விஷயம் இதுதான் அன்று வழக்கம் போல மதன் பிரியாணி வாங்க சைக்கிளை மாங்கு மாங்கு என்று மேதித்து ஹோட்டல் பாண்டியன் சென்றுள்ளான்  அந்த நேரம் அங்கு அவன் மாமா ஒரு ஓரத்திலும் இங்கிலீஷ் வாத்தியார் ஒரு ஓரத்திலும் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். இருவரும் ஒரே நேரத்தில் பெயர் சொல்லி கூப்பிட நன்றாக மாட்டி முழித்தான். அதற்கு பிறகு தான் கார்த்திகிடம் இருந்து முரளிக்கு இடம் மாறினான், அவனுக்கு கண்டிப்பாக மண்டையில் எதுவும்  ஏறது என்று அவன் வீட்டில் முடிவு செய்ததால் அந்த வருடத்தோடு படிப்பை ஏற கட்டி வைக்க முடிவு பண்ணினார்கள்.  

அந்த வருடத்தோடு கார்த்திக் ஸ்கூலில் பிரியாணி சாப்பிடுவதை நிறுத்திவிட்டான்  கையில் பணம் இருந்தாலும் அதன் பிறகு அவனுக்கு எந்த அடிமையும் சிக்கவில்லை என்பதே அவன் பிரியாணியை சாப்பிடாமல் போனதற்கு காரணம்.   ஒரு அடிமையும் வாரம்தோறும் பிரியாணியும்ன்னு நாங்க அவங்களுக்கு பெயர் கூட வைத்தோம்.


ஏனோ ரெட்டை தெருவை படித்த பிறகு கொஞ்சம் மட்டுமே நினைவில் இருந்த பால்ய காலத்து நினைவுகள் எல்லாம் திரும்ப திரும்ப அப்டேட் ஆகி கொண்டு இருக்கிறது. அதன் வெளிபாடுதான் மேலே உள்ள சின்ன நினைவலைகள்.   

சில புத்தகங்களை படித்தால் பழைய நிலைவுகள் எல்லாம் அந்த காலகட்டத்தை கண்முன்னால் வந்து பரத நாட்டியமோ அல்லது டிஸ்கோவோ ஆடும், .  திரு.இரா.முருகன் எழுதிய நெம்பர் 40, ரெட்டை தெரு  படிக்கும் போது நமது சிறுவயதில் நடந்த எல்லா சேட்டைகளையும் எளிதில் நினைவுக்கு கொண்டு வந்துவிடுகிறது. 

ஒரு அத்தியாயம் எல்லாம் பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடினார் என்று எழுதி இருப்பார் , இன்னொரு அத்தியாயம் எல்லாம் தீபாவளி , இன்னொன்று பள்ளிகூட வாத்தியார்கள். ரெட்டை தெருவில் இருக்கும் மனிதர்கள் என்று 54 அத்தியாங்கள் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமாக இருக்கும். நிறைய மனிதர்களை அடையாளம் காட்டி இருப்பது மட்டும் அல்ல அவர்களின் அங்க அடையாளங்களை கூட சொல்லி அந்த காலகட்டத்தில் இருந்த மனிதர்களை கண்முன்னால் நிறுத்தி விடுகிறார்.

என்னதான் புத்தகத்தை மாங்கு மாங்கு என்று படித்து ரசித்தாலும் அந்த ரெட்டை தெரு எந்த ஊரில் இருக்கிறது என்று அவர் சொல்லவேயில்லை. மதுரைக்கு பக்கத்தில் உள்ளது போல சில இடங்களில் ரெட்டை தெருவை மதுரையோடும் மேலூர்ரோடும்  தொட்டு செல்வார். படிக்க படிக்க அந்த தெருவில் இறங்கி நானும் அவரின் பால்ய வயதில் உடன் நடந்தது போல இருக்கிறது.  நாவல் அல்லது பால்ய சுயசாரிதம் நடக்கும் காலகட்டம் 1960களில், அந்த காலகட்டத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை கூட தனது பால்ய வயதில் எப்படி பார்த்தார் என்று எல்லாவற்றையும் தொட்டு செல்கிறது இந்த ரெட்டை தெரு. 

ரொம்ப நிறைவான புத்தகம், ஏக்கத்தை கூட ரொம்ப அழகா நக்கல் கலந்த நகைச்சுவையில் முடியும் அந்த வரிகளை படித்த போது வந்த சிரிப்பை என்னால் அடக்கமுடியாமல் பஸ்ஸில் சிரித்துவிட்டேன். பக்கத்தில் இருந்தவர் என்ன புத்தகம் சார் என்று கேட்டார். ஒரு அத்தியாயம் படிக்க குடுத்தேன். அவரும் என்னை போலவே யார்  பார்த்தாள் எனக்கு என்ன என்கிற ரீதியில் பலமாக சிரித்து வைத்தார்.   

இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகத்தை ஆழ்ந்து அனுபவித்து படிச்சிட்டு அப்படியே இங்க ஜம்ப் பண்ணுங்க ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் சுஜாதா வேறு ஒரு ஊரில் குடியிருந்து  எழுதியது போலவே இருக்கும் முருகனின் இந்த நெம்பர் 40, ரெட்டை தெரு


புத்தகம் கிடைக்கும் இடம் 

நெம்பர் 40, ரெட்டைத் தெரு

ஆசிரியர்: இரா.முருகன்
விலை: 125 ருபாய்
கிழக்கு பதிப்பகம், 
New Horizon Media Private Limited
33/15, Eldams Road, 
Alwarpet, Chennai 600018, 
Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601
Fax: 91 44 4300 9701With Love
Romeo ;)

13 comments:

 1. அறிமுகத்துக்கு நன்றி. வாங்கிப்படிக்கிறேன்.

  ReplyDelete
 2. ஓக்கே லிஸ்ட்ல போட்டுடறேன்! நன்றி ரோமி! :)

  ReplyDelete
 3. ப‌டிக்க‌ வேண்டிய‌ ஆர்வ‌த்தை தூண்டிவிட்டீர்க‌ள்... ப‌கிர்விற்கு ந‌ன்றி,,

  ReplyDelete
 4. படிக்கணும்.. அதுக்கு புக்கு வாங்கணும்.. வாங்கி படிக்கிறேன்..

  ReplyDelete
 5. நண்பா,
  உங்களுக்கு புத்தக விமர்சனம் மிகவும் அருமையாக எழுத வருகிறது,நீங்க என்ன உணர்ந்து கொண்டீரோ அதை பகிர முடிந்தது,இந்த புத்தகம் ஊருக்கு போகையில் வாங்கி விடுகிறேன்.புத்தக அட்டை ஓவியம் மிகவும் அழகு.

  ReplyDelete
 6. நண்பா,
  உங்களுக்கு புத்தக விமர்சனம் மிகவும் அருமையாக எழுத வருகிறது,நீங்க என்ன உணர்ந்து கொண்டீரோ அதை பகிர முடிந்தது,இந்த புத்தகம் ஊருக்கு போகையில் வாங்கி விடுகிறேன்.புத்தக அட்டை ஓவியம் மிகவும் அழகு.

  ReplyDelete
 7. நல்ல விமர்சனம் செய்யறீங்க ரொமோ..

  ReplyDelete
 8. @சின்ன அம்மிணி
  வாங்க வாங்க ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க. உங்க கருத்துக்கு நன்றி

  @♫ஷங்கர்..】
  லிஸ்ட்ல மறக்காம எழுதிகோங்க.

  @நாடோடி
  படிச்சு பாருங்க நான் சொல்லுறதை கண்டிப்பா நீங்க ஏத்துபீங்க

  @கேபிள் சங்கர்
  படிச்சு பார்த்து சொல்லுங்க தல

  @கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
  ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுறேன் பாஸ் . உங்களுக்கு ஒரு புக் ரெடியா இருக்கு


  @பிரேமா மகள்
  ரொம்ப நன்றிங்க. புத்தகம் கிடைத்தால் படிங்க .

  ReplyDelete
 9. அருமையான பதிவு நண்பா. உங்கள் பால்யகால நினைவுகளை விமர்சனத்தோடு இணைத்தது நல்ல எழுத்து தொழில்நுட்பம்! வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. உங்கள் பால்ய நினைவுகளை விமர்சனத்தோடு இணைத்த யுக்தி அபாரம். அருமையான பதிவு நண்பா!

  ReplyDelete
 11. படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்!

  ReplyDelete
 12. @ யுவகிருஷ்ணா

  உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா ..

  @வால்பையன்
  அந்தவகையில் எனக்கு சந்தோசமே. கண்டிப்பா படிச்சி பாருங்க .

  ReplyDelete
 13. படிக்கும்போது அந்த எழுத்துகளோடு ஒன்றி நாமும் அந்த இடத்தில் இருப்பது போல உணர்வு தோன்றுவது எழுத்தின் வெற்றி. நல்ல விமர்சனம்.

  ReplyDelete