Wednesday, May 19, 2010

கொஞ்சம் படங்கள்

லேட் விமர்சனம் தான் இருந்தாலும் படிப்பிங்க என்கிற நம்பிக்கையில் பதிவேற்றம் செய்கிறேன். 

அவள் பெயர் தமிழரசி

                                                                

வாத்தியார் படத்தில் வடிவேல் ஒரு டைலாக் சொல்லுவாரு "நல்லாதானே போயிட்டு இருந்துச்சு"  அததான் இங்க சொல்லணும். ஜெய் நர்த்தகியை தேடி போயிட்டு இருந்தாரு அப்பறம் அவள கண்டுபுடிச்சாரு அப்பறம் ??? அதுக்கு பிறகு படத்தை தூக்கி நிறுத்துற மாதிரி ஒரு கிளைமாக்ஸ் இருந்துச்சுனா நல்லா இருந்து இருக்கும் பச் சப்புன்னு முடிச்சிடாறு  டைரக்டர். ரசிக்க வைக்கும் நிறைய காட்சிகள் படத்தில் இருக்கு. அந்த குண்டி ஆட்டி பறவை அழகு. இந்த படத்தில் ப்ரோமோ ரிலீஸ் அப்பவே என்னோட சிஸ்டம் வால்பேப்பரா ஜெய் ரயில் வண்டியில் உட்கார்ந்து செல்லும் படத்தை  வச்சி இருந்தேன். படத்தை பற்றி செய்தி எல்லாம் படிக்கும் போது ரொம்ப ஆவளா இருந்தேன் ரொம்ப எதிர் பார்த்தால் இப்படி தான் புஸ்ஸ்ஸ் ஆகிவிடும் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. 


அங்காடி தெரு 




வரும் ஆனா வராது ,,, அப்படி இப்படின்னு  படத்தை ரிலீஸ் பண்ணிடாங்க. ரொம்ப எதார்த்தமா தோத்து போனவனின் கதையை சொல்லி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர் வசந்தபாலன். அதை இதுலயும் காட்டி உள்ளார் அதே சமயம் எதார்த்தம் என்கிற பெயரில் திணிக்கப்பட்ட காட்சிகளால் வெயில் வசந்த பாலன் என்றே திரும்ப அழைக்கலாம் . பசுபதி இறந்த காட்சியை திணிக்கப்பட்டது என்றால் அது மிகை அல்ல, ஆனால் கனிக்கு கால் போய்விடுவதை பார்க்கும் போது கண்டிப்பாக திணிக்கப்பட்டு உள்ளது என்றே சொல்லலாம். முந்தைய படத்தில் கிடைத்த அந்த அனுதாபத்தை இதில் கொண்டு வரலாம் என்று நினைத்து இருப்பார் போல.  நாயகன் நாயகியை விட மற்ற நடிகர்கள் தான் அதிகமாக மனதில் அழுத்தி பதிந்து உள்ளார்கள். அந்த விலைமாது பெண்ணுக்கும் கால் ஊனமான குள்ள மனிதனுக்கும் பிறந்த குழந்தையை பற்றி அந்த பெண் தனது குழந்தை கணவன் மாதிரியே இருப்பதை நினைத்து பெருமை பொங்கும் போது அந்த இடத்தில பேசும் வசனம் சூப்பர் கண்டிப்பாக அவள் பேசிய வசனத்தை ஏற்று கொள்ளும் மனநிலை எல்லோருக்கும் அந்த இடத்தில இருந்து இருக்கும் ,  ஆனால் அவ்வளவு பெரிய கடையில் நாயகியை எல்லோர்   முன்னிலைலும்  சிறு அறைக்குள் வைத்து அடிப்பது பிறகு அவள் நாயகனிடம் அந்த சூப்பர்வைசர் தனது மாரை கசக்கினான் என்று சொல்லும் இடம் எல்லாம் நம்ப முடியவில்லை. ஒரு படம் முழுவதையும் பார்ப்பதை விட வெயிலின் கடைசி அரைமணிநேரம் பார்த்தாள் போதும். அதில் தான் அதிகமாக வசந்த பலனை பார்க்கலாம். 

விண்ணைத்தாண்டி வருவாயா  




வாவ்... என்ன ஒரு ரொமாண்டிக் படம். கௌதம் மேனன் படம் என்றாலே மெல்லிய காதல் அழகாக படம் முழுவதும் தெரியும். அதுவும் மேல் தட்டு காதல் தான் இவரின் டார்கெட்.  காக்க காக்க படத்தில் சூர்யா உதிர்க்கும் சின்ன சிரிப்பில் கூட அவ்வளவு அழகான காதல் வெளிப்படும், படமே காதல் என்றால் !!!! ரொம்ப ரொம்ப ரசிச்சு ரசிச்சு பார்த்த படம் அதும் அமெரிக்காவின் ஒரு பார்க் பெஞ்சில் இருவரும் அமர்ந்து பேசும் இடம் சான்சே இல்லபா. அந்த இடத்தில வரும் வசனம் எல்லாம் செம ஷார்ப். சிம்பு , த்ரிஷா இரண்டுபேரும் அவ்வளவு நிறைவா நடிச்சு இருக்காங்க. தமிழ் சினிமாவில்  ரொம்ப நாட்களாக காதல் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு யாரும் இல்லாமல் இருந்தது, அந்த இடத்தை சிம்பு, த்ரிஷா ஜோடி நிரப்பிவிட்டது. சிம்புவின் முதிர்ச்சி படம் முழுக்க ஆக்கிரமித்து இருக்கிறது. அடிகடி அவர் சொல்லும் "நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்" என்கிற கேள்விக்கு பதில்  - - - ரொம்ப சிம்பிள் "She is Cute more then You".

  
இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்




  நல்ல ஒரு காமெடி படம் பார்த்த திருப்தி, புளித்து போன கௌபாய் கதைதான் இருந்தாலும் ஆங் ஆங்கே சின்ன சின்ன விஷயங்களை பொருத்தி அழகா படத்தை தந்து இருக்கார் டைரக்டர். ஜெய்சங்கர்புரத்தை பற்றி அந்த பெரியவர் சொல்லும் இடமே செம  டாப் காமெடி.  அப்பறம் எதற்கு 3 பெண்கள் ?? அதும் சந்தியா கேரக்டர் தேவையே இல்லை சும்மா வந்து எட்டி பார்த்துவிட்டு செல்கிறார்.  படத்தின் பின்னணி இசையை சபேஷ்-முரளி நன்றாக செய்து உள்ளார்கள் அதற்காக இப்படி ஈ அடிச்சான் காபி போல Pirates of the Caribbean  படத்தின் தீம் மியூசிக் சுடுவது ?? குடுத்த காசுக்கு நல்லா சிரிச்சிட்டு வந்தேன் , தேங்க்ஸ் டூ சிம்புதேவன்.





With Love
Romeo ;)   













6 comments:

  1. // அப்பறம் எதற்கு 3 பெண்கள் ?? //

    அப்புறம் அந்த மொக்கை பாடல்களை என்ன பண்ணுவது....
    அதுக்கு தான் அந்த மூணு பேரு...

    ReplyDelete
  2. அங்காடி தெரு ப‌ற்றிய‌ உங்க‌ளின் பார்வைதான் என‌க்கும்... நிறையா கேள்விக‌ள் தோன்றிய‌து.. இதில் எல்லாம் கொடுமை இந்த‌ ப‌ட‌த்திற்கு பிற‌கு வ‌ச‌ந்த‌பால‌ன் க‌லைஞ‌ர் டீவியில் கொடுத்த‌ பேட்டிக‌ள்..

    ReplyDelete
  3. எனக்கு என்னவோ.. அங்காடித் தெரு எதார்த்தம் நிறைஞ்ச படம்ன்னு தோணுது...

    அதே சமயம் கால் உடையற மாதிரி காட்டியிருக்க வேண்டாம்ன்னுதான் நானும் நினைச்சேன்...

    ReplyDelete
  4. oru வழியா பார்த்து முடிச்சிட்டீங்க

    ReplyDelete
  5. நண்பா ஷார்ட் அண்ட் ஸ்வீட் விமர்சனம்

    ReplyDelete