Monday, June 28, 2010

ஏழாம் உலகம் டிரெயிலர்




நெருங்கிய உறவினரின் மகள் திருமணத்துகாக மேல்மலையனூர் சென்று இருந்தேன். ஏனோ கோவிலை சுற்றி படம் எடுக்க மனமே வரவில்லை, அங்கு பிச்சை எடுத்து கொண்டு இருந்த இந்த மனிதர்களை தான் சுற்றி சுற்றி வந்து படம் எடுத்து கொண்டு இருந்தேன். வீடுகாரம்மாக்கு செம கோவம் ஏன் இப்படி பிச்சைகாரர்களை படம் எடுத்துட்டு இருக்கீங்க என்று வசை விழுந்தது. ஏழாம் உலகம் புத்தகம் படிச்சி இருக்கியா என்று கேட்டேன். இல்லை என்றவளுக்கு வீட்டிற்கு வந்தவுடன் புத்தகத்தை எடுத்து குடுத்தேன் படிக்க சொல்லி. இரண்டு அத்தியாயம் தாண்டியவள் ஜெமோவின் எழுத்து வீச்சில் சிக்கி கொண்டு சிரமப்பட்டாள்.  அதற்கு மேல் படிக்க முடியாது என்று நிறுத்திவிட்டாள், உண்மையில் அந்த வட்டார வழக்கு பேச்சில் அரண்டுவிட்டாள் என்பதே உண்மை.  





























 புத்தகத்தை படித்து முடிக்க ஒரு வாரம் ஆனது. சிரிப்பும், துயரமும், ஆச்சரியமும் கலந்து கட்டி படி அளந்து இருக்கிறார் ஜெமோ. 

புத்தகத்தை பற்றிய விமர்சனம் அடுத்த பதிவில். 


With Love
Romeo ;)



14 comments:

  1. ஜெயமோகனின் ஏழாவது உலகம் படித்துவிட்டு என்னால் நான்கு நாட்கள் தூங்க முடியவில்லை..

    ReplyDelete
  2. கோவில்க‌ளில் இவ‌ர்க‌ளின் குர‌ல்க‌ள் தான் அதிக‌ம்... புத்த‌க‌ விம‌ர்ச‌ன‌ம் சீக்கிர‌ம் போடுங்க‌..

    ReplyDelete
  3. ம்ம். விமரிசனம் பார்க்கலாம்:)

    ReplyDelete
  4. நானும் படித்ததில்லை....வாங்குறேன்..

    ReplyDelete
  5. ரொம்ப கஷ்டமாருக்கு நண்பா,
    பெத்தவங்கள இப்புடி பிச்சையெடுக்க விடறானுங்களே!!!
    கொடுமக்காரனுங்க.

    ஏழாம் உலகம் புத்தகம் படித்தமைக்கு மகிழ்ச்சி,தமிழின் அருமையான டார்க்ஹ்யூமர் ஆக்கம் அது.நிறைய பேசுவோம் நண்பா உங்க விமர்சனத்தில்.
    சின்ன விளம்பரம்,
    http://geethappriyan.blogspot.com/2009/06/100-ways-you-can-improve-environment.html

    ReplyDelete
  6. ஏழாம் உலகம் மறக்க முடியாத நாவல். பாதிப்பேற்படுத்திய எழுத்து அது. நினைவுபடுத்தியமைக்கு நன்றி ரோமியோ.

    ReplyDelete
  7. மனதை பிழியும் படங்கள்.

    ReplyDelete
  8. நீங்க திரும்பி வந்த விஷயமே தெரியாது. வருக. வருக.
    படம் பார்த்தே ரொம்ப ஃபீல் ஆகிட்டேன். புத்தகம் படிக்கற அளவுக்கு சக்தியில்லைங்க.

    ReplyDelete
  9. படங்கள் வலிக்க வைக்கிறதே நண்பா

    ReplyDelete
  10. படங்கள் கண்ணீரை வரவழைக்கின்றன. எனக்கு யாரோ எழுதிய கவிதைதான் ஞாபகம் வருது...

    “குஞ்சுகள் மிதித்த எத்தனையோ கோழிகள்
    ஆதரவற்றோர் ஆசிரமத்தில்”

    ReplyDelete
  11. படங்கள் பார்த்ததும் ஒரு வித மௌனம் தான் நிலவியது

    புத்தகம் வாங்க வேண்டும் - ஏழாவது உலகம்

    நன்றி நண்பரே

    ReplyDelete
  12. விமர்சனம் போடுங்க ரோமி!

    //ஜெட்லி... said...
    நானும் படித்ததில்லை....வாங்குறேன்..//

    வாங்கின உடனே இங்கிட்டு அனுப்பிடுங்க தல! :)

    ReplyDelete
  13. பின்னுடம்யிட்ட அனைத்து அன்பர்களுக்கும் நன்றி .. விமர்சனம் இன்னும் இரண்டு நாளில்

    ReplyDelete